காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வேறுபாடு!

Posted By:
Subscribe to Boldsky

வீடு வாடகைக்கு கிடைக்கிறதோ இல்லையோ, இன்றைய சமூகத்தில் இளைஞர்கள் மத்தியில் இதயம் காதலுக்கு கிடைக்கிறது. இன்றைய நாட்களில் காதல் என்று பெயர் வைத்துக்கொண்டு காமத்தோடு சுற்றுபவர்கள் தான் அதிகம். பிரேக்-அப் என்ற வார்த்தைக்கு பிறகு இப்போதெல்லாம் காதல் கைக்கூடுவதே இல்லை. மொத்தத்தையும் முடித்துக் கொண்டு, மொத்தத்தையும் மறந்துவிடுகின்றனர். காதலை சின்ன சின்ன சண்டைகள் தான் வளர்க்கும் என கவிஞர்.நா.முத்துகுமார் அவர்கள் எழுதினார். ஆனால், இப்போது உள்ளவர்கள் அந்த சின்ன சின்ன சண்டையை தான் காதல் முறிவுக்கு காரணம் காட்டுகின்றனர். ஏனெனில், இவர்கள் காதலிக்கவில்லை காதல் என்ற பெயரில் சுற்றித் திரிகின்றனர்.

முன்பெல்லாம் இப்படி கிடையாது. காதல் ஒரு ஓவியமாக வார்க்கப்பட்டு, காவியமாக பாவிக்கப்பட்ட காலங்கள் அது. வருடக்கணக்கில் காத்திருந்து, கோபத்தினால் பிரிந்திருந்து பின் கைகோர்த்த ஜோடிகள் எல்லாம் இருந்திருகின்றனர். காதலுக்காக மரியாதையும், கோட்டைகளும் கட்டிய நமது ஊரில், இன்று வெறும் மன்மத கூட்டங்கள் மட்டுமே உலா வருகின்றனர். எது காதல், எது காமம் என்ற வேறுபாடு தெரியாமல் மேற்கத்திய கலாச்சாரம் என்ற பெயரில் கண்டதை செய்து திரிகின்றது இன்றைய சமூகம்.

ஒரு மெலிசான கோடு! கோட்டுக்கு இந்த பக்கம் இருந்தீங்கனா காதல், அந்த பக்கம் போனீங்கனா காமம், தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒளிவுமறைவு இன்றி

ஒளிவுமறைவு இன்றி

காதலில், உங்களை பற்றிய விஷயங்கள் மற்றும் கடந்த கால நினைவுகள் என எதையும் உங்களது காதல் துணையிடம் மறைக்க விரும்பமாட்டீர்கள். பயமும் இருக்காது.

காமத்தில், தயக்கம் இருக்கும். உங்களைப் பற்றி பேசும் போதும், உங்கள் காதல் துணையைப் பற்றி பேசும் போதும் தயக்கமும் பயமும் இருக்கும். உங்களை பற்றிய கடந்த கால நினைவுகள் வார்த்தை தவறி கூட வெளிவந்துவிட கூடாது என்கிற அச்சம் உரையாடல் தொடங்கியதில் இருந்து முடியும் வரை இருந்துக் கொண்டே இருக்கும்.

வாக்குவாதம்

வாக்குவாதம்

காதலில், வாக்குவாதம் ஏற்படும் போது தயக்கம் தலை தூக்காது. நினைத்ததை எல்லாம் பேசிவிடுவார்கள். ஆனால், கடைசியில் ஒரு கருத்தில் உடன்பாடு ஏற்படும்.

காமத்தில், எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேச்செடுத்தாலும் மறைத்து மறைத்து பேசுவதிலேயே நேரம் முடிந்துவிடும். கடைசி வரை எந்த உடன்பாடும் இல்லாமல், பதற்றம் மட்டுமே பாக்கி இருக்கும்.

நேர்மை

நேர்மை

காதலில், ஒருவருக்கு ஒருவர் நேர்மையாக இருப்பார்கள். எந்த ஒரு செயலாக இருந்தாலும், காதலரிடம் கூறிவிட்டு செய்யும் பழக்கம் இருக்கும்.

காமத்தில், உணர்வளவில் நெருக்கம் பாராட்டமாட்டார்கள். எப்படி மறைப்பதென்ற நோக்கம் மட்டுமே இருக்கும். நேர்மைக்கு அங்கு இடப்பற்றாக்குறை மட்டுமே இருக்கும்.

ஆதரவு

ஆதரவு

காதலில், எந்த ஒரு பிரச்சனை என்றாலும் ஆதரவு கரம் நீட்ட உங்கள் காதல் துணை உடனிருப்பார்கள்.

காமத்தில், பிரச்சனை வந்தால் காரணம் காட்டிப் பிரிந்து போக மட்டுமே முற்படுவர்.

தியாகம்

தியாகம்

காதலில், தியாகம் என்பது பொதுவான ஒன்று. தங்களுக்கு பிடித்த விஷயங்கள் கூட காதல் துணைக்கு மன அளவில் சிறிது துன்பம் தந்துவிடும் என தோன்றினால் கூட அதை தியாகம் செய்துவிடுவார்கள்.

காமத்தில், சின்ன சின்ன விஷயமாக இருந்தால் கூட, மனம் ஒத்துபோகாமல் பிரிந்து சென்றுவிடுவார்கள்.

ரகசியங்கள்

ரகசியங்கள்

காதலில், ரகசியங்கள் என்பது இருவர் மத்தியில் பாதுகாக்கப்படும். இருவரும் ஒளிவுமறைவு இன்றி இருப்பார்கள்.

காமத்தில், தங்களைப் பற்றிய எந்த ஒரு ரகசியங்களும் கசிந்துவிடக்கூடாது என எண்ணுவார்கள்.

பொருத்தம்

பொருத்தம்

காதலில், உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பொருத்தமாக இருப்பார்கள்.

காமத்தில், எப்போதாவது பொருத்தம் ஏற்படும் அதுவும் உடல் ரீதியான விஷயங்களுக்காக மட்டும். மற்றபடி பொருத்தம் என்பது இங்கு மொத்தம் ஏழரை தான்.

நம்பிக்கை

நம்பிக்கை

காதலில், நம்பிக்கை என்பது தான் வேர். அது வலிமையாக இருக்கும். அது இல்லையெனில் அது காதலே இல்லை.

காமத்தில், ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கையாக உள்ளதாக காட்டிக்கொள்ள மிக மிக போராடுவார்கள். ஆனால், அனைத்தும் ஒரு தருணத்தில் உடைந்துவிடும்.

ஏற்றுகொள்வது

ஏற்றுகொள்வது

காதலில், தவறுகளும் ஏற்றுகொள்ளப்படும். பின் நாட்களில் அதை காதல் திருத்திவிடும்.

காமத்தில், தவறுகள் சுட்டிக்காட்டப்படும். மிக பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். பிரிவில் போய் முடியும்.

வலிமை

வலிமை

காதலில், எவ்வளவு தூரம் கடந்திருந்தாலும், எவ்வளவு நாட்கள் பிரிந்திருந்தாலும், காதலின் வலிமை கூடுமே தவிர குறையாது.

காமத்தில், இடைவேளை கூடும் போது வலிமை இழந்துவிடுவார்கள். அடுத்தவர் மீது உணர்வு பாதை மாறத்தொடங்கிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Is The Difference Between Love And Lust?

love is soul of life. lust is foul of life. do you know the difference betewwn love and lust?
Please Wait while comments are loading...
Subscribe Newsletter