காதலியிடம் ஆண்கள் செய்யக் கூடாத செயல்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

காதலில் மட்டுமல்ல, எல்லா உறவிலும் சுதந்திரம் என்பது முக்கியமான தேவை. பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்கும் சுதந்திரம் தான் அவர்கள் மேலோங்கி வளர உதவுகிறது, மேலாண்மை ஊழியர்களுக்கு அளிக்கும் சுதந்திரம் தான் சிறந்த பலனை பெற உதவுகிறது.

நம்மை காதலிக்கிறாள் என்பதற்காக, பெண்கள் தலையாட்டும் பொம்மையாக இருக்க வேண்டும் என்பது ஒருவகையான குற்ற செயல். சுதந்திரம் அற்ற உறவில் சந்தோஷம் இருக்காது. கைதியை சிறையில் இருந்து வீட்டு சிறையில் மாற்றுவது எந்த வகையிலும் விடுதலை ஆகாது.

எனவே, காதலிக்கும் ஆண்கள் காதலிக்கு சுதந்திரம் அளிக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று. இது போக காதலில் ஆண்கள் செய்யக் கூடாதவை வேறென்ன இருக்கின்றன என இனிப் பார்ப்போம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மொபைல் நோண்டுதல்

மொபைல் நோண்டுதல்

உங்களை காதலிப்பதற்காக அவர் வேறு எந்த ஆணுடனும் பழகக் கூடாது என்றில்லை. சில ஆண்கள் மொபைல் ஃபோன்களை எல்லாம் சி.பி.ஐ போல நோட்டம் விடுவது மிகவும் தவறு. இது உங்கள் மீது இருக்கும் காதலை அரித்து விடும்.

உடை விஷயத்தில் மூக்கை நுழைத்தல்

உடை விஷயத்தில் மூக்கை நுழைத்தல்

கவர்ச்சியாக உடை உடுத்துவது தவறு தான். அதற்காக அவர்கள் விரும்பும் உடைகளை கூட அணியக் கூடாது என்று வலியுறுத்துவது தவறு.

சந்தேகம் வேண்டாம்

சந்தேகம் வேண்டாம்

ஓர் உறவில் எப்போது சந்தேகம் எழுகிறதோ, அப்போதே அந்த உறவு மெல்ல மெல்ல அழிந்துவிடும் என்பது உறுதி. எதுவாக இருந்தாலும் முகத்திற்கு நேராக கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். அதை மனதிற்குள்ளேயே வைத்து நீங்களும் புழுங்கிக் கொண்டு, அவர் மீதான காதலையும் கொன்றுவிட வேண்டாம்.

வெட்டி பந்தா

வெட்டி பந்தா

காதல் எனும் போது பெண்களுக்கு கெத்தாக இருக்கும் ஆண்கள் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படுவது உண்மை தான். ஆனால், அவர் உங்களை காதலிக்க தொடங்கிய பிறகும் கூட வெட்டியாக சீன் போடுவது, பந்தா செய்வது எல்லாம் உங்கள் மேல் ஒருவித வெறுப்பை ஏற்படுத்திவிடும்.

நீங்கள் மன்மதன் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்

நீங்கள் மன்மதன் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்

இங்கு எல்லா பெண்களும், மாதவன், அரவிந்த் சாமி போன்றவர்களை ரசித்தாலும், திருமணம் செய்துக் கொள்ள எல்லாம் விரும்புவது இல்லை. ஏதோ ஓரிரு பெண்கள் அழகை பார்த்து மயங்குவதால் எல்லாரும் அப்படி என்று நினைத்துவிட வேண்டாம். பெண்கள் சுமாரான ஆண்களை தான் காதலிக்க விரும்புகிறார்கள். எனவே, மன்மதன் என்று நினைத்துக் கொண்டு வீண் லீலைகளில் ஈடுபட வேண்டாம்.

மற்ற பெண்கள் பற்றி புகழ்வது

மற்ற பெண்கள் பற்றி புகழ்வது

காதலிக்கும் ஆண் நபர்களுக்கு பெண் தோழிகள் இருப்பது தவறல்ல (காதலிக்கு ஆண் தோழர்கள் இருப்பதும் தவறல்ல) ஆனால், காதலியை உசுப்பேத்தி, உங்கள் பெண் தோழிகள் அல்லது வேறு பெண்களை புகழ்ந்து பேசவது தவறு. காதலன் வேறு பெண்களுடன் பேசுவதே பெண்களுக்கு பிடிக்காது. இதில், அவர்களை புகழ்ந்து வேறு பேசினால்... மவனே நீ காலி!!!

மட்டம்தட்டி பேசுவது

மட்டம்தட்டி பேசுவது

காதலன், காதலி உறவு என்று மட்டுமல்ல, எந்த உறவிலுமே ஒருவரை மட்டம்தட்டி பேசுவது தவறு. இது, மனதில் பெரும் வலியை ஏற்படுத்திவிடும். மனதில் குடியிருக்கும் நீங்களே இவ்வாறு செய்வது அவர்களை பெருமளவில் பாதிப்படைய வைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things Men Should Not Do In Relationship

Do you know about the things men should not do in relationships? read here.
Story first published: Wednesday, September 30, 2015, 13:13 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter