இருபது முதல் அறுபது வரை உங்கள் இல்வாழ்க்கை சுப(க)மாக இருக்க வேண்டுமா???

Posted By:
Subscribe to Boldsky

திருமண வாழ்க்கையை இன்பமையமாக அமைத்துக் கொள்வதற்கு இறைவனின் அருள் துளியும் தேவையில்லை. கணவன் மனைவி இருவர் மத்தியில் நல்ல புரிதல் இருந்தாலே போதுமானது. நேர்மையாக நடந்துக் கொள்வது, விட்டுக்கொடுத்து போவது, ஒளிவுமறைவு இன்றி வெளிப்படையாக பேசுவது, இருவரது குடும்பத்தையும் ஒரே பார்வையில் பார்ப்பது என சிலவற்றை நீங்கள் சரியாக பின்பற்றி வந்தாலே உங்கள் வாழ்க்கை சொர்க்கமாக மாறிவிடும்.

கணவன், மனைவி எனும் இருவர் நல்லதோர் நண்பர்களாக இருந்தாலே போதுமானது. எவ்வளவு பெரிய சண்டை வந்தாலும் பொழுது விடிவதற்குள் அந்த சண்டை மறைந்துவிடும். உடல் உறவை தாண்டி, மனதின் உறவு வலுவாக இருக்க வேண்டும். ஒருவரின் மனநிலையை மற்றொருவர் கூறாமலேயே தெரிந்துக் கொள்ளும் அளவிற்கு புரிதல் இருக்க வேண்டும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேர்மை

நேர்மை

உங்கள் திருமண வாழ்க்கை நீண்ட காலம் நிலைத்து நிற்க, மகிழ்ச்சியாக அமைய வேண்டும் எனில் கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் நேர்மையாக இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் இருவரும் சிறந்த நண்பர்களாக இருக்க வேண்டும்.

விட்டுக் கொடுத்து போவது

விட்டுக் கொடுத்து போவது

சண்டை சச்சரவு இல்லாத இல்லறமே இல்லை, அதில் யார் ஒருவர் விட்டுக் கொடுத்து போகிறார்களோ அந்த வீடுகளில் தான் நல்லறமாக திகழ்கிறது. யார் யாருக்கோ விட்டுக் கொடுத்து போகும் நாம், வீட்டில் இருக்கும், கணவன், மனைவியிடம் விட்டுக்கொடுத்து போவதில் எந்த தவறும் இல்லை.

ஒளிவுமறைவற்ற பொருளாதரம்

ஒளிவுமறைவற்ற பொருளாதரம்

எவ்வளவு சம்பளம், எவ்வளவு செலவு என்பதனை, ஒரு ரூபாயாக இருந்தாலும் கூட கணவன், மனைவி மத்தியில் பொருளாதாரம் என்ற விஷயத்தில் ஒளிவிமறைவு இல்லாமல் இருக்க வேண்டும்.

உறவினர்களுடன் அனுசரித்துப் போவது

உறவினர்களுடன் அனுசரித்துப் போவது

மாமன், மச்சான், நாத்தனார் என உறவுகள் அனைவருடன் ஒன்றி வாழ்வது. உறவுகள் இல்லாத குடும்பம், தோரணம் அற்ற திருவிழா போல, வண்ணமயமாக காட்சியளிக்காது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

ரொமான்ஸ்க்கு குறைச்சல் இருக்க கூடாது

ரொமான்ஸ்க்கு குறைச்சல் இருக்க கூடாது

இருபதாக இருந்தாலும் சரி, அறுபதாக இருந்தாலும் சரி ரொமான்ஸ்க்கு குறைச்சல் இருக்க கூடாது. உடல்கள் இரண்டு இணைவது மட்டுமே ரொமான்ஸ் அல்ல. மனது இரண்டும் பிரியாமல் இருப்பது தான் ரொமான்ஸ். அதில் விரிசல் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் இல்வாழ்க்கை என்றும் இனிக்கும்.

தினமும் பேசுவது

தினமும் பேசுவது

கணவன் மனைவி இருவரும் திருமணம் நடந்த புதிதில் பேசிக் கொண்டே இருப்பார்கள். போக, போக நாளடைவில் இது குறைய ஆரம்பிக்கும். இது நடக்க கூடாது, என்ன தான் வேலை பளுவாக இருந்தாலும் உங்கள் இருவரின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் செயல்கள் அனைத்தும் இருவரும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். இது தான் உங்க இருவரையும் பிரியாமல் இணைக்கும் பாலம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Secrets To A Long-Lasting Marriage

Here we have discussed about the secrets to a long lasting marriage, in tami. Take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter