ஏன் வாரத்தில் ஒருமுறையாவது உடலுறவில் ஈடுபட வேண்டும்? - ஆய்வு தகவல்கள்!

Posted By:
Subscribe to Boldsky

இல்வாழ்க்கை சந்தோஷம் எதிலிருந்து ஏற்படுகிறது என்று தம்பதியினரிடம் கேட்டால் யாரும் பணம் மற்றும் உடலுறவு என்று கூறமாட்டார்கள். புரிதல் தான் முக்கியம் என்று கூறுவார்கள். ஆனால், நாற்பது வருடமாக நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் பணமும், உடலுறவும் தான் ஒருவரது இல்வாழ்க்கை சந்தோசத்தை ஏற்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆய்வில் இல்வாழ்க்கை மகிழ்சியில் உடலுறவு எந்தளவு, எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு

ஆய்வு

11,285 ஆண்கள் மற்றும் 14,225 பெண்கள் என ஏறத்தாழ 27,000 நபர்களை கொண்டு கடந்த 40 வருடங்களாக சிக்காகோ பல்கலைகழகம் நடத்திய இந்த ஆய்வில், தம்பதியர் மத்தியில் இல்வாழ்க்கையில் இன்பத்தை அதிகரிக்க உடலுறவு எப்படி உதவுகிறது. எத்தனை முறை உடலுறவில் ஈடுபடுபவர்கள் அதிகம் இன்பமாக வாழ்கிறார்கள் என்பதை பற்றி ஆய்வு நடத்தப்பட்டது.

இன்பம்

இன்பம்

இந்த ஆய்வில் சீரான முறையில் உடலுறவில் ஈடுபடுபவர்கள் இல்வாழ்க்கையில் அதிகம் சந்தோஷமாக இருக்கிறார்கள். இவர்கள் மத்தியில் பிரிவு, சண்டைகள் மிகவும் குறைவாக தான் ஏற்படுகிறது என்று கூறியிருக்கிறார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை

இந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் மத்தியில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. மிகவும் பெரிய அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பல நாடுகள், மதன், கொள்கைகள் கொண்டவர்கள் என அனைவரும் பங்கெடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரம் ஒருமுறை

வாரம் ஒருமுறை

இந்த மாபெரும் ஆய்வில் வாரத்திற்கு ஒருமுறை உடலுறவில் ஈடுபடும் தம்பதிகள் மிகவும் சந்தோசமாக வாழ்கிறார்கள் என கண்டறியப்பட்டது. மேலும் இதில் ஆண்கள் உடலுறவில் மிகவும் ஆர்வம் காட்டினாலும், போக போக இவர்களது ஆர்வம் குறைந்துவிடுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆண்டு வருமானம்

ஆண்டு வருமானம்

மேலும் இல்வாழ்க்கை இன்பத்தில் அவர்களது ஆண்டு வருமானம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்றும் இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உடலுறவு தான் ஒருவரது இல்வாழ்க்கை சந்தோசத்தை அதிகம் தீர்மானிக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

பாலினம் மற்றும் வயது

பாலினம் மற்றும் வயது

இது ஆண், பெண், எந்த வயதுக்குட்பட்டும் மாற்றத்தை ஏற்படுத்துவது இல்லை. அனைவரின் மத்தியிலும் ஒரே மாதிரி தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Intercourse Once In a Week Makes Happy Couple

Intercourse Once In a Week Makes Happy Couple
Please Wait while comments are loading...
Subscribe Newsletter