காதலியின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிய வைக்கும் வேண்டுமா???

Posted By:
Subscribe to Boldsky

எல்லா ஆண்களும் தனது மனைவி, காதலி முகத்தில் வெட்கமும், புன்னகையும் நிறைந்திருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். பெண்களுக்கு தாங்கள் தான் அழகாக தெரிய வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆண்களுக்கு பெண்களை அழகுபடுத்தி பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டு. இந்த இரண்டும் நிகழும் தருணம், கண்டிப்பாக ஓர் அமர காவியமாக தான் இருக்கும்.

உங்கள் மனைவியின் உச்சிக் குளிர நீங்கள் செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள்!!!

ஆனால், எப்படி இந்த தருணத்தை ஏற்படுத்திக் கொள்வது. இது தானாக அமையும், ஆனால் சில நேரங்களில் உங்களது செயல்களால், நீங்களாகவே அமைத்தும் கொள்ளலாம். அதற்கு உங்கள் காதல் மனைவியிடம் அந்த சூழலுக்கு ஏற்ப கொஞ்ச மாற்றி பேசினால் போதும், அவர்களது முகத்தில் பைசா செலவின்றி ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிய வைக்க முடியும்.....

பெரும்பாலும் இல்வாழ்க்கையை பாதிக்கும் அந்த மூன்று தவறுகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மற்றவர் முன்பு பெருமையாக பேசும்போது

மற்றவர் முன்பு பெருமையாக பேசும்போது

இந்த செயல் பெண்களின் முகத்தில் வெட்கத்தை மட்டுமின்றி, அவர்களது அகத்தில் உங்களுக்கு உயர்ந்த இடத்தையும் பெற்று தரும். ஒரு முறையாவது மற்றவர் முன்பு உங்கள் காதலியை பற்றி பெருமையாக பேசி பாருங்கள். அப்போது தான் அந்த கண்கொள்ளாக் காட்சியை பார்க்க முடியும்.

முத்தம்

முத்தம்

முத்தம் என்பது உறவின் ஆழத்தை வெளிப்படுத்தும் செயல். உங்கள் காதல் துணையின் முகத்தில் வெட்கம் வெள்ளமென வழிந்தோடுவதை காண வேண்டும் எனில், சரியான நேரத்தில் முத்தம் கேட்டு பாருங்கள். (சூழல் மிகவும் முக்கியம் அமைச்சரே!!!)

நடிகைகளோடு ஒப்பிடுதல்

நடிகைகளோடு ஒப்பிடுதல்

கோலிவுட்டில் மட்டுமல்ல, பாலிவுட், ஹாலிவுட் வரையிலும் கூட பெண்களை நடிகைகளோடு ஒப்பிடும் போது வெட்கம் விண்ணைத்தாண்டி வந்துவிடும்.

அழகு

அழகு

"பெண்கள் என்றாலே அழகு தானே.." காலம் காலமாக பெண்களை இப்படி உவமைப்படுத்தி கூறுவதற்கு கருவும், காரணமும் ஆண்கள் தான். அழகு என்றால் எடக்குமடக்காக பேசும் பெண்களுக்கு கூட நொடியில் வெட்கம் பூத்துவிடும்!!

அவர்களது பெயரில் கவிதை வாசித்தல்

அவர்களது பெயரில் கவிதை வாசித்தல்

அனைவராலும் வாலி, வைரமுத்துவாக இருக்க முடியாது. ஆனால், பட்டி... டின்க்கரிங்... வேலை எல்லாராலும் பார்க்க முடியும் அல்லவா. ஆம், அங்கே, இங்கே சுட்டு அதில் உங்கள் காதலியின் பெயரை சொருகி, அவர் முன்னே வாசித்து பாருங்கள், முத்தங்கள் கூட பரியாக கிடைக்கலாம். அது திருடியது என அவர் அறியாமல் இருந்தால்.

குழந்தைகள் பற்றி பேசுதல்

குழந்தைகள் பற்றி பேசுதல்

குழந்தை பெற்றுக் கொள்வது பற்றி பேசும் போது கண்டிப்பாக அனைத்து பெண்களின் முகத்தில் வெட்கம் எனும் பூ இதழ் விரியாமல் பூக்கும்.

திருமணம் ஆசையை தூண்டுதல்

திருமணம் ஆசையை தூண்டுதல்

காதலின் மிகுதியில் இருக்கும் நிலையில் திருமணத்தை பற்றிய பேச்சை எடுத்து பாருங்கள், வெட்கம் மட்டுமின்றி வண்ணத்துப்பூச்சி, ரோஜா தோட்டம் என பலவன பெண்களின் முகத்தில் பூக்கும், சிறகடித்து பறக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Make Her Feel Shy With In A Second

Do you know how to make your girl friend feel shy with in a second? read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter