For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இல்லற வாழ்க்கையில் ஆண்களுக்கு ஏற்படும் சில வினோத ஃபோபியாக்கள் - பயம்! பயம்!! பயம்!!!

|

காதல், பருவ வயது தொடங்கி அனைவரும் தங்கள் வாழ்வில் எதிர்பார்க்கும் ஓர் முக்கியமான அத்தியாயம். காதல் வயப்படுதல் ஏற்படாததால் மனம் நொந்து மற்ற வேலைகளிலும் கவனக் குறைவோடு செயல்படும் நபர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். காதல் என்று வந்துவிட்டால், "ஹல்க்" போன்ற பைல்வான் கூட பொல்லையாகிவிடுவான்.

பருவமெய்திய பெண்கள் பயமில்லாமல் கூறும் சில விஷயங்கள் - அம்மாடியோவ்!!!

இதற்கு காரணம் பயம், எங்கு அந்த பெண் நம்மை நிராகரித்துவிடுவாளே என்ற பயம். காதல் சொல்வதில் பயமிருப்பது ஒருபக்கம் இருக்க, காதலித்த பிறகு சிலருக்கு பற்பல பயங்கள் ஏற்படுமாம்.., அதை தான் காதல் சார்ந்த ஃபோபியா என்று கூறுகிறோம். காதலில் ஏற்படும் ஃபோபியாக்கள் நிறைய இருக்கின்றன.

முதல் டேட்டிங்கில் ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் - ஜல-புல-ஜங்க்ஸ்!!!

இவை மட்டும் உங்கள் காதல் வாழ்க்கையின் உள்ளே நுழைந்துவிட்டால் கூடி கும்மியடிக்காமல் போகாது.... பாத்து பத்திரம் பாஸ்....,

உங்களை ஒருவர் லவ்வுகிறாரா.. என்பதை இதை வைத்துக் கண்டுப்பிடித்துவிடலாம்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃபிலேமாஃபோபியா

ஃபிலேமாஃபோபியா "Philemaphobia"

ஃபிலேமாஃபோபியா "Philemaphobia" என்பது முத்தம் கொடுக்க பயப்படும் ஃபோபியா ஆகும். பாக்டீரியா, வாய் துர்நாற்றம் சார்ந்த காரணங்களால் அல்லது பொதுவாகவே பெண்களை கண்டால் முத்தம் கொடுக்க பயப்படுவதை ஃபிலேமாஃபோபியா "Philemaphobia" என்று கூறுகிறார்கள்.

சிராப்ட்டோஃபோபியா

சிராப்ட்டோஃபோபியா "Chiraptophobia"

காதலியை கட்டியணைக்கவோ, தொடவோ பயப்படுவது சிராப்ட்டோஃபோபியா "Chiraptophobia" எனப்படுகிறது. இந்த பயம் இருப்பவர்கள் காதலியின் அருகே செல்லவே அஞ்சுவார்கள். தோள்களில் கைபோட, கைகளை பிடித்துக்கொள்ள பயந்து அவர்களது பேன்ட் பாக்கெட்டுகளில் கையை வைத்துக்கொள்ளும் நபர்களும் இருக்கிறார்கள்.

மைசோஃபோபியா

மைசோஃபோபியா "Mysophobia"

கிருமிகளை எண்ணி பயப்படுவது தான் மைசோஃபோபியா "Mysophobia". உங்கள் நண்பர் வட்டாரத்தில் கூட சிலரை நீங்கள் பார்த்திருக்கலாம், பொது இடங்களில் சகஜமாக இருக்கமாட்டார்கள். ஏதேனும் ஓர் பொருளை தொடக் கூட யோசிப்பார்கள். பார்க், தியேட்டர் போன்ற இடங்களில் அமரும் முன்னர் கைக்குட்டையை வைத்து உதறி சுத்தம் செய்துவிட்டு அசௌகரியமான உணர்வோடு தான் அமர்ந்திருப்பார்கள்.

ஜீனோஃபோபியா

ஜீனோஃபோபியா "Genophobia"

இதற்கு பயந்தால் அம்புட்டு தான் சாமி. உடலுறவுக் கொள்வதில் பயப்படுவது தான் ஜீனோஃபோபியா "Genophobia". உண்மையாகவே இதற்கெல்லாம் பயந்தால் காதல் வாழ்க்கை என்ன இல்லற வாழ்க்கைக்கே மொத்தமாக மூடு விழாதான்.

அகோரஃபோபியா

அகோரஃபோபியா "Agoraphobia"

வீட்டை விட்டு வெளியே செல்ல பயப்படுவதை தான் அகோரஃபோபியா "Agoraphobia"என்று கூறுகிறார்கள். வீட்டை விட்டே வெளியே போக பயந்தால் எப்படி நீங்கள் காதல் வயப்பட முடியும்?? மிகுந்த கிண்டல் கேலிகளுக்கு ஆளாகும் நபர்களுக்கு இந்த அகோரஃபோபியா "Agoraphobia" வரும் வாய்ப்புகள் இருக்கிறது.

ஆம்ஃபாலோஃபோபியா

ஆம்ஃபாலோஃபோபியா "Ompholophobia"

தொப்புள் சார்ந்த பயம் தான் ஆம்ஃபாலோஃபோபியா "Ompholophobia" என்று கூறுகின்றனர். சில ஆண்கள் மேலாடை இன்றி வெளிவர தயங்குவார்கள். வீட்டிற்குள்ளேயே மேல் சட்டையின்றி இருக்க பயப்படுவார்கள். இதுப் போன்ற பயம் தான் ஆம்ஃபாலோஃபோபியா "Ompholophobia"

இத்திஃபல்லோஃபோபியா

இத்திஃபல்லோஃபோபியா "Ithyphallophobia"

ஆண்குறி விறைப்புத்தன்மை சார்ந்த பயம் தான் இந்த இத்திஃபல்லோஃபோபியா "Ithyphallophobia". எங்கு தங்களால் சரியாக உடலுறவுக் கொள்ள இயலாதோ அல்லது தங்களுக்கு சரியான அளவு விறைப்புத்தன்மை ஏற்படுவது இல்லையோ என்ற பயம் தான் இத்திஃபல்லோஃபோபியா "Ithyphallophobia".

மெட்ரோஃபோபியா

மெட்ரோஃபோபியா "Metrophobia"

கவிதை சார்ந்த பயம் தான் மெட்ரோஃபோபியா "Metrophobia" என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களுக்கு கவிதை எழுதுவது மட்டுமல்ல, கவிதை எழுத முயற்சிப்பதே பயம் தானாம்.

சர்மஸ்ஸஃபோபியா

சர்மஸ்ஸஃபோபியா "Sarmassophobia"

உடலுறவுக்கு முன்பு கொஞ்சி விளையாடுவதில் பயம் ஏற்படுவதை சர்மஸ்ஸஃபோபியா "Sarmassophobia" என்று கூறுகிறார்கள்.

அனுப்டஃபோபியா

அனுப்டஃபோபியா "Anuptaphobia"

தெரியாத அல்லது தவறான பெண்ணை திருமணம் செய்ய முனையும் போது ஏற்படும் பயம். பெரும்பாலும் நிச்சயித்த திருமணங்களில் தான் இந்த அனுப்டஃபோபியா "Anuptaphobia" ஏற்படுகிறதாம்.

கேமோஃபோபியா

கேமோஃபோபியா "Gamophobia"

திருமணம் செய்துக் கொள்ளவே பயப்படுவதை கேமோஃபோபியா "Gamophobia" என்று குறிப்பிடுகிறார்கள். "என்னம்மா இப்படி பண்றீங்களே'மா இதுக்கெல்லாமா பயப்படுவீங்க..."

அர்ரஹென்ஃபோபியா

அர்ரஹென்ஃபோபியா "Arrhenphobia"

இது முற்றிலும் வினோதமானது. தங்கள் பால் நபர்களை பார்க்கவே பயப்படுவதை அர்ரஹென்ஃபோபியா "Arrhenphobia" என்று கூறுகிறார்கள். நீங்களே கூட சில ஆண்களை பார்த்திருக்கலாம், ஆண்களோடு சேர்ந்து பழக பயப்படுவார்கள், ஆனால், பெண்களோடு சகஜமாக பழகுவார்கள். இதை தான் அர்ரஹென்ஃபோபியா "Arrhenphobia" என்கிறார்கள்.

ஃபில்லோஃபோபியா

ஃபில்லோஃபோபியா "Phillophobia"

காதலிக்கவே பயப்படுவது தான் ஃபில்லோஃபோபியா "Phillophobia". மிகவும் சோகமான ஒன்று இது, காதலிக்க மட்டுமல்ல காதல் என்றாலே பயப்படுவார்கள். இங்க நாம் பார்த்த ஃபோபியாக்கள் இருக்கும் நபர்களது காதல் வாழ்க்கை கொஞ்சம் டொங்கலாக தான் அமையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fourteen Phobias Destined To Ruin Your Love Life

Do you know about the fourteen phobias destined to ruin your love life? read here.
Desktop Bottom Promotion