நீங்கள் காதலிக்கும் பெண்ணை கவர்ந்திழுக்க இப்படி முயற்சிக்கலாமே...

Posted By:
Subscribe to Boldsky

இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் கவிதை வாசிப்பதும், ரோஜா மலரை நீட்டுவதுமாய் காதலை கூறிக் கொண்டிருக்க போகிறீர்கள். இன்றைய பெண்களுக்கு கவிதைப் படிக்கவும் தெரியாது, ரோஜாவை வைத்துக் கொள்ளவும் பிடிக்காது. புதியதாக ஏதாவது முயற்சிக்க வேண்டும் நண்பர்களே.

புதியதாக என்றவுடன் அறிவியல் ஆராய்ச்சியில் இறங்கும் அளவிற்கு நீங்கள் யோசிக்க தேவையில்லை. இன்றைய பெண்கள் மிகவும் ப்ராக்டிகலாக இருக்கிறார்கள். உண்மையில் நீங்கள் விரும்பும் பெண்ணிற்கு நீங்கள் ஓர் சிறந்த காவலனாக இருந்தாலே போதுமானது. ஓர் ஆணிடம் இருந்து பெண்ணை இன்னொரு ஆண் காப்பாற்ற வேண்டிய அவல நிலையில் தான் நாம் இருக்கிறோம்.

என்ன செய்ய கலிகாலம் என்பது நாளுக்கு நாள் நிரூபணம் ஆகிக் கொண்டே இருக்கிறது.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தன்னம்பிக்கை அளித்தல்

தன்னம்பிக்கை அளித்தல்

நீங்கள் காதலிக்கும் பெண்ணிடம் நீங்கள் தன்னம்பிக்கையுடன் பேசுதல், அவர் சோர்வடைந்து காணப்படும் போது தன்னம்பிக்கை அளித்தால் போன்றவை அவர்களை சுலபமாக கவர்ந்திழுக்க உதவும்.

சண்டையிடுவது

சண்டையிடுவது

சிலர் அவர்கள் காதலிக்கும் பெண்ணுடன் சண்டையே வரக் கூடாது என்று எண்ணுவது உண்டு. ஆனால், அவ்வப்போது சின்ன, சின்ன சண்டையிடுவது தான் இருவர் மத்தியில் ஓர் நெருக்கத்தை உண்டாக்கும்.

புதிதாக உணர வைக்க வேண்டும்

புதிதாக உணர வைக்க வேண்டும்

தினமும் ஒரே மாதிரி இன்றி, அவர்களை அவர்களே புதியதாக உணர வைக்க முயற்சிக்க வேண்டும். அவர்கள் உத்வேகம் அடைய நீங்கள் முயற்சிக்க வேண்டும். எப்போது பார்த்தாலும் கவிதை சொல்வது, ரோஜா கொடுப்பது என்றே காலத்தை கழிக்க வேண்டாம். இன்றைய பெண்களுக்கு கவிதை படிக்கவும் தெரிவதில்லை, ரோஜா பூவும் வைத்துக் கொள்வதில்லை.

நீயின்றி நானில்லை

நீயின்றி நானில்லை

நீங்கள் இல்லை எனில், ஏதோ பெரிதாய் இன்று இழந்தது போல அவர்கள் உணர வேண்டும். உங்கள் துணை அவர்களது ஒவ்வொரு நாட்களிலும் இருக்க வேண்டும் என்று அவர்கள் ஏங்க வேண்டும். நகைச்சுவையாக பேசுதல், அரவணைப்புடன் பழகுதல், புதிய விஷயங்களை எடுத்துரைத்தல், சமூக நிலையை பற்றி கூறுதல் என எதை வேண்டுமானாலும் கூறுங்கள்.

வெற்றிக்கு ஏனிப்படியாய் இருங்கள்

வெற்றிக்கு ஏனிப்படியாய் இருங்கள்

எத்தனை நாட்கள் தான் ஆண்களின் வெற்றிக்கு பின் பெண்கள் இருப்பது. ஓர் புதிய முயற்சியை நீங்கள் காதலிக்கும் பெண்ணின் வெற்றிக்கு பின் நீங்கள் இருந்து பாருங்கள். உங்கள் வாழ்நாள் முழுதும் அவர் உங்கள் பின் இருப்பார் உறுதுணையாக.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Are You Tried These Ways To Impress Your Girl

Do you know about the different ways to impress your girl? read here.
Story first published: Thursday, October 15, 2015, 16:00 [IST]