ஆண்களைக் கடுப்படிக்கும் பெண்களின் குணாதிசயங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

ஆசை மனைவியாக இருந்தாலும், பேரின்பம் தரும் காதலியாக இருந்தாலும் கூட பெண்களின் சில குணாதிசயங்கள் ஆண்களை தாறுமாறாக கடுப்படிக்கும். எத்தனை முறை கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல எடுத்து கூறினாலும் சில பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள் பெண்கள். தினந்தோறும் டி.வி. சீரியல் பார்த்து அழுவது, தலைவாரிய சீப்பை சிக்கெடுத்த முடியோடு அப்படியே வைத்துவிட்டுப் போவது, என அடுக்கிக்கொண்டே போகலாம் இந்த நெடுந்தூரம் செல்லும் முடிவில்லா பட்டியலை. பெண்களின் இந்த அரைகுறை பழக்கவழக்கங்களால், ஆண்கள் அவ்வளவு கோபம் கொள்ள காரணம். இவை அவர்களின் உடல்நலத்தையும் பதிப்பதனால் தான்.

ஆண்களால் புரிந்து கொள்ள முடியாத பெண்களின் 20 பழக்கங்கள்!!!

பெண்கள் பொதுவாகவே வீட்டில் இருக்கும் அத்தனை நபர்கள் மேலும் அக்கறைக் கொள்வார்கள், அவர்களை தவிர்த்து. ஆண்களின் உடல்நலத்தில் குறைப்பாடு ஏற்பட புகைப்பது, குடிப்பது என ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். பெண்களின் உடல்நலத்தில் குறைப்பாடு ஏற்படுவதற்கு காரணம் அவர்களது கவனக்குறைவும் மற்றும் சில தேவையற்ற குணாதிசயங்களும் மட்டுமே ஆகும். இதனால் தான் ஆண்கள் பல சமயங்களில் பெண்கள் மீது கடுப்பாகிறார்கள். சரி, இனி காலம் காலமாய் ஆண்களை கடுப்படித்துக் கொண்டிருக்கும் பெண்களின் குணாதிசயங்கள் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டி.வி. சீரியல்

டி.வி. சீரியல்

காலை பத்து மணியளவில் தொடங்கினால் இரவு பித்து பிடிக்கும் வரை ஓயாது டி.வி. சீரியலின் அலப்பறை. தினமும் சோகத்தை மட்டுமே மழை நீராய் பொழிந்துகொண்டிருக்கும் அவர்களை கண்டு, பெண்களுக்கு கண்ணீர் வடிப்பதே வேலையாக போய்விட்டது. இதனால், மன சோர்வும், மன அழுத்தமும், இரத்தக்கொதிப்பும் அதிகரித்தது தான் மிச்சம். பெரும்பாலான ஆண்கள் பெண்கள் மீது கடுப்பாவதற்க்கு டி.வி சீரியல் தான் காரணம்.

ஒப்பிட்டு பேசுதல்

ஒப்பிட்டு பேசுதல்

எதற்கெடுத்தாலும் அக்கம் பக்கத்து நபர்களில் இருந்து அமெரிக்கா, போலாந்து வரை உள்ள அனைவருடனும் ஒப்பிட்டு பேசுவது. ஆண்களுக்கு இது சுத்தமாக பிடிக்காத ஒரு குணாதிசயம் மற்றும் இது ஆண்களை பெருமளவில் எரிச்சலடைய செய்யும்.

 ஒரே சமையல்

ஒரே சமையல்

ஏதோ சமையலே தெரியாததைப் போல தினமும் ஒரே சமையல் செய்து ஆண்களின் வயிறைக் கொலை செய்வது பெண்களின் குலவழக்கம், அதுவும் அலுவலகம் செல்லும் ஆண்களுக்கு மதியம் ரசம் சாதம் தந்து அனுப்பும் போது அவர்களுக்கு ஏதோ விஷத்தை பார்ப்பது போல தான் இருக்கும்.

கூந்தல் சிக்கு

கூந்தல் சிக்கு

பெண்களின் கூந்தலில் சிக்கு இருப்பது எல்லாம் ஆண்களுக்கு கவலை இல்லை. ஆனால் சிக்கு எடுத்த சீப்பை அந்த சிக்கு முடியோடு ஆங்காங்கே அப்படியே வைத்துவிட்டு போவதுதான் ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத பழக்கம்.

நச்சரிப்பது

நச்சரிப்பது

ஆண்கள் அவர்களின் நண்பர்களிடம் பேசும் போதோ, அல்ல அலுவலக அதிகாரிகளுடன் முக்கியாமான விஷயங்கள் பேசி முடித்த பின்னர். அது என்ன, அது என்ன என ஆண்களை நச்சரிப்பார்கள். பெண்கள் அவர்களை போலவே ஆண்களும் ஓட்டை வாயாக இருக்க ஆசைப்படுவர். ஆனால், ஆண்கள் அப்படி இருப்பதில்லை. பெண்கள் அடிக்கடி நச்சரிப்பது ஆண்களுக்கு சுத்தமாக பிடிக்காத வழக்கம்.

ஆடைகளில் சாயம் பிடிக்க வைப்பது

ஆடைகளில் சாயம் பிடிக்க வைப்பது

இந்திய திருநாட்டில் பெரும்பாலான ஆண்களுக்கு இன்று வரை ஓயாத பிரச்சனையாக இருப்பது தங்களுக்கு பிடித்த ஆடைகளில், துணித்து வைகிறோம் என்ற பெயரில் பெண்கள் சாயம் பிடிக்க வைப்பது. அதுவும் சரியாக, ஆண்களுக்கு பிடித்தமான ஆடைகளில் சாயம் பிடிக்க வைப்பது பெண்களுக்கு பிடித்த பழக்கம். ஆண்கள் இதனால் பல சமயங்களில் நொந்துப் போவார்கள்.

அலங்காரம்

அலங்காரம்

முக்கியமாக எங்காவது செல்லும் போது, நேரம் குறைவாக இருக்கும் போது தான். பெண்கள் தங்களது அலங்காரத்தை பன்மடங்கு அதிகரித்துக் கொண்டிருப்பார்கள். பெண்களின் இந்த பழக்கத்தினால் ஆண்கள் கடுப்பின் உச்சத்திற்கு சென்றுவிடுவார்கள்.

உடல் நலம்

உடல் நலம்

வீட்டில் இருக்கும் அனைவரின் மீதும் அக்கறை கொள்ளும் பெண்கள் அவர்களின் உடல்நலன் மீது மட்டும் துளியும் அக்கறை எடுத்துக்கொள்ளமாட்டார்கள். காய்ச்சல், சளி, இருமல் என எந்த தொந்தரவு வந்தாலும் மருத்துவரிடம் அணுக மாட்டார்கள். இது ஆண்களை பல சமயங்களில் கடுப்படிக்கும் பழக்கமாகும்.

மாமியார், மருமகள்

மாமியார், மருமகள்

இது இந்திய ஆண்கள் பரம்பரை பரம்பரையாக எதிர்க்கொண்டு வரும் ஒரு பிரச்சனை. அலுவலகத்தில் தான் பிரச்சனை என்று வீட்டிற்கு வந்தால். வீட்டு வாசல் முன்பே வடம்பித்து நின்றுக் கொண்டிருப்பார்கள் மனைவியும், அம்மாவும். பேசாமல் எங்காவது சத்திரத்திற்கு சென்றுவிடலாம் போல் இருக்கும் அவர்களுக்கு. அந்த அளவுக்கு கடுப்பின் கடைநிலைக்கு கொண்டு போய்விடும் இந்த பிரச்சனை.

விரதம்

விரதம்

ஞாயிறில் இருந்து சனி வரை, வாரம் ஏழு நாட்களும் விரதம் இருக்க பெண்களினால் மட்டும் தான் முடியும். இதனால் உடல்நல கோளாறுகள் வரும் என்று கூறினால் கேட்கமாட்டார்கள். அதிலும், புரட்டாசி, மார்கழி போன்ற மாதங்களில் சொல்லவே வேண்டாம். பெண்களின் இந்த பழக்கவழக்கங்கள் அவர்களின் உடல்நலத்தை பதிக்கிறது என்பதால் தான் ஆண்கள் கடுப்பாகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Habits Of Women That Irritates All Indian Men

Do you know there are 10 habits of women, that irritates all Indian men
Subscribe Newsletter