மனசுக்குப் பிடித்தவரின் 10 முக்கிய குணாதிசயங்கள்!!!

By: Srinivasan P M
Subscribe to Boldsky

நமக்கு யாரையும் அவ்வளவு எளிதில் பிடித்துவிடாது. உங்களுக்கு நேர்த்தியாக பொருந்தத்தக்க குணாதிசயங்களுள் சிலவற்றை கொண்டிராத வாழ்க்கைத் துணைவருக்கும் மனதிற்குப் பிடித்த உங்களின் மறுபாதியாக இருப்பவர்க்கும் பெரிய வித்தியாசங்கள் உண்டு. உங்கள் மனதிற்கு இனியவர் உங்களை முழுமையானவராகவும், செப்பனிடுபவராகவும், எந்த பாதிப்புமில்லாதவராகவும், எந்த அம்சமும் குறையாதவராகவும் ஆக்க வல்லவர். உங்கள் வாழ்கைத்துணைவர், உங்களுக்கு ஒரு பெரும் பக்க பலமாகவும், நெடுநாள் துணையாகவும் இருக்கும் அதே வேளையில், உங்களுடைய ஆர்வத்தை முழு அளவில் வலுவடையச் செய்யும் பணியில் சற்று பின்தங்கியே இருப்பார்.

பெண்களே... உங்களை மனைவியாக்க விரும்புபவர் வெளிப்படுத்தும் 12 சூப்பர் அறிகுறிகள்!!

நீங்கள் எந்த ரகத்தை சேர்ந்தவராக இருந்தாலும், உங்களுக்கும் உங்கள் மனதிற்கு இனியவருக்கும் இடையே உள்ள நெருக்கத்தை வெளிப்படுத்தும் தெளிவான அறிகுறிகள் உள்ளன. நீங்கள் பின்வரும் பட்டியலை படிக்கப் போகும் அதே நேரம், உங்கள் வாழ்கைத்துணையையோ அல்லது அவ்வாறு வரக்கூடியவராக நீங்கள் கருதுபவரையோ நினைத்துக் கொண்டு, அவர்கள் உங்கள் மனதிற்கு இனியவராக இருக்கத் தகுதியானவரா என்பதை ஆராயுங்கள்.

உங்க துணைக்கு அடிக்கடி 'கட்டிப்பிடி' வைத்தியம் பண்ணுங்கப்பா...

இதோ மனதிற்கு ஏற்றவரின் பத்து முக்கிய அம்சங்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இது ஒரு உள்ளார்ந்த விஷயம்

இது ஒரு உள்ளார்ந்த விஷயம்

உங்கள் மனதிற்கு ஏற்றவர் உங்களை எவ்வாறு உணர வைக்கிறார் என்பதை விவரிப்பது கடினமான ஒன்று. அது ஒரு வலிமையான, ஆழமான மற்றும் நீடிக்கக்கூடிய வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒரு உணர்வு.

மலரும் நினைவுகள்

மலரும் நினைவுகள்

உங்களுடைய துணைவர் உங்கள் மனதிற்குப் பிடித்தவராக இருந்தால், அவர் நிச்சயம் உங்கள் கடந்த கால வாழ்கையில் முக்கிய நபராக உங்களுடன் இருந்திருப்பார். நீங்கள் தற்போது நடப்பவைகளை ஏற்கனவே வேறோரு விதத்தில் நடந்தவை போல உணரவும் வாய்ப்புண்டு.

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்பவர்கள்

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்பவர்கள்

நீங்கள் ஒரே நேரத்தில் ஒருவர் பேசுவதையொட்டியே மற்றொருவர் பேசி முடிப்பதைக் கண்டதுண்டா? பொதுவாக அவ்வாறான இருவரை அளவுக்கு அதிகமாக பழகுபவர்களாகக் கருதுவார்கள். ஆனால் அதை நான் மனதிற்குப் பிடித்துப்போன இருவரின் தொடர்பு என்று கூறுவேன். நீங்கள் இதுப்போன்ற ஒன்றை உங்களின் நெருங்கிய நண்பரிடமோ அல்லது உங்கள் தாயிடமோ உணரலாம். ஆனால் இதை உங்கள் துணைவரிடம் உணரும் போது அவர் உங்கள் மனதிற்குப் பிடித்தவராகிறார்.

அவர்களின் குறைகளால் நீங்கள் கவரப்படுவீர்கள்

அவர்களின் குறைகளால் நீங்கள் கவரப்படுவீர்கள்

எந்த ஒரு உறவும் முழுமையான ஒன்றல்ல. மனதிற்குப் பிடித்த உறவுகளிடையேயும் ஏற்ற இறக்கங்கள் வருவது சகஜமான ஒன்று. ஆனாலும், அந்த உறவுகள் பிரிவது மிகவும் கடினம். மனதிற்குப் பிடித்தவர்கள் தங்களுக்கு இடையே உள்ள குறைகளை ஏற்றுக் கொள்வதையும், அன்பை கற்றுக் கொள்வதையும் மிகவும் எளிமையாக உணர்கின்றனர்.

ஆழமான உறவு

ஆழமான உறவு

மனதிற்குப் பிடித்தவர்களுடனான உறவு நன்மையோ அல்லது தீமையோ, மற்றவர்களுடனான உறவுகளை விட மிகவும் ஆழமான ஒன்றாக இருக்கலாம். ஆனால் இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், கடினமான நேரங்களிலும், நீங்கள் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்பதையும், பிரச்சனையைத் தாண்டிய அணுகுமுறையிலும் கவனம் செலுத்துவீர்கள்.

உலகின் முன் நாம் இருவரும்

உலகின் முன் நாம் இருவரும்

மனதிற்குப் பிடித்த இருவர் தங்கள் உறவினை எப்போதும் உலகின் முன் தம்மை ஒன்றிணைத்த ஒரு பார்வையைக் கொண்டிருப்பார்கள். தங்களுக்குப் பிடித்தவர்கள் தங்களுடன் இருக்கும் வரை வாழ்கையின் எந்த ஒரு தருணத்தையும் எதிர்கொள்ளுமளவிற்கு அவர்கள் உறவு மிகவும் வலிமையானதாக இருக்கும்.

மனதினால் பிரிக்க முடியாதவர்கள்

மனதினால் பிரிக்க முடியாதவர்கள்

மனதிற்குப் பிடித்த இருவர் இடையே உள்ள மனத் தொடர்பு இரு இரட்டைக் குழந்தைகளுக்கிடையே உள்ள தொடர்பினை ஒத்தது. போன் செய்யும் போது கூட இருவரும் ஒரே நேரம் முயற்சி செய்வார்கள். வாழ்கை சில சமயம் உங்களைப் பிரித்தாலும், உங்கள் மனத்தில் இருக்கின்ற உணர்வு என்றும் ஒற்றுமையுடனே இருக்கும்.

நீங்கள் கவலையின்றியும், பாதுகாப்புடனும் உணர்வீர்கள்

நீங்கள் கவலையின்றியும், பாதுகாப்புடனும் உணர்வீர்கள்

உங்கள் துணையின் பாலினத்திற்கு அப்பாற்பட்டு, உங்கள் துணை உங்களை கவலையின்றியும், பாதுகாப்புடனும் உணரச் செய்ய வேண்டும். உங்கள் துணை தான் உங்களுக்கொரு பாதுகாக்கும் தேவதை போன்று உணரச் செய்ய வேண்டும். உங்களுடைய பலவீனங்களில் விளையாடுபவர்கள், தெரிந்தோ அல்லது தெரியாமலோ, ஒரு நல்ல துணையாக இருக்க மாட்டார்கள்.

உங்கள் துணையில்லாமல் ஒரு வாழ்கையை நினைத்துப் பார்க்க முடியாது

உங்கள் துணையில்லாமல் ஒரு வாழ்கையை நினைத்துப் பார்க்க முடியாது

உங்கள் மனதிற்குப் பிடித்த ஒருவர் அவ்வளவு சுலபமாக நீங்கள் பிரிந்து வர முடியாதவராக இருப்பார். அவர் இல்லாமல் உங்களால் வாழ முடியாது என்றால், நீங்கள் நம்பும் நபர் உங்களுடன் வாழத் தகுதியான, போராடத் தகுதியான ஒருவர் ஆவார்.

நீங்கள் இருவரும் உங்கள் நேருக்கு நேர் கண்களால் சந்தித்துக் கொள்ள முடியும்

நீங்கள் இருவரும் உங்கள் நேருக்கு நேர் கண்களால் சந்தித்துக் கொள்ள முடியும்

சாதாரண உறவுடைய இருவரை ஒப்பிடும் போது மனதிற்குப் பிடித்த இருவர், பெரும்பாலும் தங்கள் கண்களால் பேசக்கூடியவர்கள். அவர்களுக்கிடையே அமைந்துள்ள ஆழமான உறவின் மூலம் இது இயற்கையாகவே சாத்தியமாகிறது. பேசும் போது கண்களை பார்த்துப் பேசுவது மனதிற்கு உகந்த மற்றும் தன்னம்பிகையின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The 10 Elements Of A Soul Mate

As you go through this list, think about your partner or potential partner and evaluate whether they meet the soulmate criteria.
Story first published: Tuesday, August 19, 2014, 13:12 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter