For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உண்மையான காதலுக்கான 10 அறிகுறிகள்!

By Ashok CR
|

வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அனைவரும் ஒரு உறவில் நுழைகிறோம். டேட்டிங்கில் சில காலம் ஈடுபட்ட பிறகு உங்களுக்குள் எழும் பெரிய கேள்வி - "நீங்கள் காதலில் விழுந்து விட்டீர்களா?" என்பது தான். உங்கள் காதல் அல்லது உங்கள் காதலன்/காதலியின் காதல் மீது நீங்கள் கேள்வி எழுப்பலாம். ஆனால் எதுவுமே உறுதியாக தெரியாத வரைக்கும் இந்த கேள்வி இப்பவும் அப்பவும் எழவே செய்யும்.

இதில் ஒரு நல்ல விஷயம் ஒன்றும் அடங்கியுள்ளது - உங்கள் உறவில் உண்மையான காதல் உள்ளதா என்பதை கண்டறிய பல அறிகுறிகள் உள்ளது. உங்கள் உறவில் உண்மையான காதல் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள, இதோ உங்களுக்கான 10 அறிகுறிகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
10. பெருமையும் பொறாமையும்

10. பெருமையும் பொறாமையும்

உங்களைச் சுற்றி உங்கள் துணை எப்படி நடந்து கொள்கிறாரோ, அதை வைத்தே அவரின் காதலை கண்டு கொள்ளலாம். நீங்கள் வேறு ஒருவருடன் கடலை போட்டாலோ அல்லது உங்கள் பழைய காதலைப் பற்றி பேசினாலோ அல்லது எதிர் பாலினத்தவரைப் பற்றி சும்மா பேசினாலோ, அவர்களுக்கு பொறாமை ஏற்படுகிறதா? அப்படியானால் அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கமாக வீசுகிறது. இன்னொரு விஷயமும் கூட உள்ளது; நீங்கள் உடன் இருப்பதை உங்கள் துணை பெருமையாக கருதுகிறாரா? என்பதும் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களுள் முதன்மையானது.

9. சுமையை பகிர்ந்து கொள்வது

9. சுமையை பகிர்ந்து கொள்வது

உங்கள் துணையின் சுமையை நீங்கள் சுமக்க வேண்டும் என துப்பாக்கி முனையில் உங்களை அவர்கள் நிர்பந்தம் செய்வதில்லை. ஆனால் தன் ஆழ்மனதை அறியாமலேயே இது நடந்தால், அது தான் காதலுக்கான அறிகுறியாகும். உங்கள் துணை வலியால் அல்லது வேறு ஒரு பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதை உங்களால் காண முடியாது. இதை காண சகிக்காத நீங்கள் அவர்களது சுமையை போக்க எதை வேண்டுமானாலும் செய்ய முற்படுவீர்கள். அவர்களின் கஷ்டங்களை கேட்டறிந்து, அவர்களுக்கு உதவி கரம் நீட்டுவீர்கள்; தேவைப்பட்டால் அவர்களின் கண்ணீருக்கு தோள் கொடுப்பீர்கள். இதனால் தெரிந்து கொள்வது, என்னவென்றால் அவர்களுக்காக எப்போதும் நீங்கள் இருப்பீர்கள் என்பதாகும்.

8. 'நாம்' என்ற எண்ணம்

8. 'நாம்' என்ற எண்ணம்

ஒரு உறவில் 'நான்' என்ற பேச்சுக்கே இடமில்லை. அனைத்துமே உங்கள் இருவர் சம்பந்தப்பட்டதே. நீங்கள் தனிப்பட்டு எடுக்கும் அனைத்து முடிவுகளும் உங்கள் துணையின் மீது ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் முடிவுகளை எடுக்கும் போது அதீத சிந்தனையுடன் எடுக்க வேண்டும். நீங்கள் அப்படி செய்பவராக இருந்தால், உங்கள் உறவில் 'நான்' என்ற எண்ணத்தை நீக்கி 'நாம்' என்ற எண்ணத்திற்குள் அடியெடுத்து வைத்து விட்டீர்கள். இந்த உணர்வு ஏற்கனவே வந்துவிட்டால், நீங்கள் காதலில் விழுந்து விட்டீர்கள் நண்பரே!

7. சத்தியத்தை மீறாமல் இருத்தல்

7. சத்தியத்தை மீறாமல் இருத்தல்

பல பேர் தாங்கள் செய்து கொடுக்கும் சத்தியத்தைப் பற்றி கவலை கொள்வதில்லை. அதனால் சத்தியத்தை மீறுவதிலும், அவர்கள் கவலைப்படுவதில்லை. நீங்கள் உங்கள் துணையிடம் சத்தியம் செய்து அதை மீறவும் செய்திருக்கலாம். ஆனால் அப்படி செய்ததால், உங்கள் மனசாட்சி உறுத்துகிறதா? செய்து கொடுத்த சத்தியத்தை மீற முடியவில்லையா? சந்தேகேமில்லாமல் நீங்கள் காதலில் விழுந்துள்ளீர்கள். நீங்கள் செய்து கொடுத்த சத்தியத்தை மீறாமல் இருந்தால், வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். சத்தியமும், நம்பிக்கையும் தான் எல்லாம்.

6. அவர்களைக் காயபடுத்தாமல் இருத்தல்

6. அவர்களைக் காயபடுத்தாமல் இருத்தல்

என்ன நடந்தாலும் சரி, உங்கள் துணையை காயப்படுத்தும் எண்ணம் கூட உங்களை நெருடும். அவர்களை காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்கு ஏற்படாது. உங்களால் அதனை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. உடல் ரீதியாகவும் சரி, மன ரீதியாகவும் சரி, அந்த எண்ணம் உங்களிடம் அறவே இருக்காது. திருப்பி கொடுப்பதும், பழி தீர்ப்பதும் உங்களுக்கு ஆறுதலை அளிக்கலாம். ஆனால் காதல் என்பது இதையெல்லாம் கடந்த ஒரு உறவாகும்.

5. முயற்சி

5. முயற்சி

நீங்கள் உங்கள் உறவில் தவறான கட்டத்தில் இருக்கிறீர்களா? நடக்கும் அனைத்தும் தவறாக உள்ளதா? அப்படியானால் அதனை சரி செய்ய நீங்கள் முயற்சி செய்வீர்கள். கண்டிப்பாக அதற்கான தீர்வு சரியானதாக இருக்க வேண்டும். நிலைமையை சரி செய்ய உங்களாலான அனைத்து முயற்சியையும் எடுத்து, அதற்காக தீவிரமாக பாடுபட்டால், நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள்.

4. தியாகம்

4. தியாகம்

வாழ்க்கையில் சில பல தியாகங்களை நீங்கள் செய்ய வேண்டியிருக்கும். வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் ஏதாவது ஒரு வகையில் தியாகம் செய்து கொண்டு தான் இருக்கிறோம். இது தாங்க காதல். நீங்கள் காதலில் விழுந்து, அதனால் சந்தோஷமாக இருந்து, அது அப்படியே நீடிக்க வேண்டுமானால், நீங்கள் தியாகங்கள் செய்ய தான் வேண்டும். அப்படி செய்வதால் வருத்தமும் படமாட்டீர்கள். கவலை கொள்ளாதீர்கள்; உங்கள் நேரம் நன்றாக இருந்தால், உங்கள் காதல் இரு வழி பாதையாக மாறும். நீங்கள் மட்டுமே தியாகம் செய்ய வேண்டி வராது.

3. வலியும் கோபமும்

3. வலியும் கோபமும்

உங்கள் துணையின் செயலால் அல்லது ஏதேனும் சில நிகழ்வுகளால், சில நேரங்களில் நீங்கள் காயப்பட நேரிடலாம். நீங்கள் காயப்பட்டிருந்தாலும் கூட உங்கள் துணையின் மீது உங்களுக்கு கோபமோ வெறுப்போ ஏற்படாது. உங்களுக்கு கோபமும் எரிச்சலும் ஏற்படலாம், ஆனால் அது நீண்ட நேரம் நிலைத்திருக்காது. அவர்களை கண்டு கொள்ளாமல், முகம் கொடுத்து பேசாமல் இருப்பது அவர்களை விட உங்களுக்கு தான் அதிக காயத்தை உண்டாக்கும். இதுவும் காதலுக்கான அறிகுறி.

2. சந்தோஷம்

2. சந்தோஷம்

உங்களின் நாள் சரியில்லாமல் போனாலும் கூட, உங்கள் துணையை கண்டு சிரிக்கும் போது, உங்கள் கவலை அனைத்தும் பறந்தோடி போகும். அவர்களுடன் இருக்கும் போது, உங்களுக்கு சந்தோஷம் கரை புரண்டு ஓடும். அவருடன் இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தும்; அந்த சந்தோஷம் உங்களை அப்படியே தலைகீழாக புரட்டிப் போடும். ஆம், நீங்கள் காதலில் இருக்கிறீர்கள்.

1. ஏதோ ஒன்றை கொடுத்து, மற்றொன்றை பெற்றுக் கொள்வது

1. ஏதோ ஒன்றை கொடுத்து, மற்றொன்றை பெற்றுக் கொள்வது

காதல் என்பது இரு வழி பாதை நண்பர்களே! காதலில் ஒன்றை பெறுவதற்கு இன்னொன்றை எதிர்ப்பார்க்கக் கூடாது. காதல் என்பது எதையும் எதிர்ப்பார்க்காதது. அதற்கு எந்தவித நியாயப்படுத்தல்களும் தேவையில்லை. அதேப்போல் அதற்காக நீங்கள் எந்தவித உதவிகளையும் செய்ய வேண்டிய கட்டாயமில்லை. கடமையை செய்யுங்கள்; அதிர்ஷ்டம் இருந்தால் பலனை அனுபவிப்பீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ten Signs Of True Love In A Relationship

Everybody is in a relationship at some point in life. So the big question that follows after you have been dating for a while is whether you guys are actually in love? Here, we talk about ten signs of true love in a relationship.
Desktop Bottom Promotion