அழகான வழிகளில் மன்னிப்பு கேட்க சில டிப்ஸ்....

By: Ashok CR
Subscribe to Boldsky

யாருமே முழு நிறைவுடன் இருப்பதில்லை. நாம் என்ன செய்தாலும் சரி, கண்டிப்பாக அதில் தவறுகள் செய்வோம். இந்த தவறுகள் எல்லாம் அடிக்கடி நடைபெறாமல் எப்போதாவது நடந்தால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அப்படி இல்லையென்றால் அதை எப்படி நிவர்த்தி செய்யலாம், எவ்விதம் மன்னிப்பு கேட்கலாம் என்றெல்லாம் ஆழமாக சிந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் இந்த வகையின் கீழ் விழுபவரா?

அப்படியானால் மன்னிப்பை எப்படி எல்லாம் அழகாக கேட்கலாம் என்பதை நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் யாரிடம் மன்னிப்பு கேட்கிறீர்கள் என்பது முக்கியமல்ல; அது உங்கள் நண்பராக இருக்கலாம், உங்கள் கணவன் அல்லது மனைவியின் குடும்ப உறுப்பினராக இருக்கலாம். நடந்ததை சரி செய்ய அழகான வழிகளில் எப்படி மன்னிப்பு கேட்பது என்பதைப் பற்றி நாங்கள் விரிவாக கூறப்போகிறோம். படித்து மகிழுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படுக்கையில் காலை உணவு

படுக்கையில் காலை உணவு

பல நேரங்களில் இது சரியான வழியாக இருக்காது. ஆனால் உங்களுக்கு மிகவும் முக்கியமானவர்களிடம் இது கண்டிப்பாக சரியான வழியாக அமையும். உங்கள் துணைக்கு, படுக்கையிலேயே காலை உணவை பரிமாறுங்கள். இது சரியானதாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் மன்னிப்பு கேட்பது என்று வரும் போது, மிகவும் எளிமையான வழி இதுவாகும்.

ஷாப்பிங்

ஷாப்பிங்

சொல்லப்போனால் சுலபமாக மன்னிப்பு கேட்கும் வழிகளில் இதுவும் ஒன்றாகும். ஆனால் இந்த வழியால் உங்கள் பர்ஸ் காயப்படப் போவது உறுதி என்பதை மறந்து விடாதீர்கள். பெண்ணிடம் மன்னிப்பு கேட்பதற்கு மட்டுமே இந்த வழி சரியானதாக இருக்கும். அவர்களுக்கு நல்லதொரு பரிசு பொருள் மற்றும் க்ரீடிங் கார்டு வாங்கிக் கொடுத்து, அதனுடன் ஒரு மன்னிப்பு குறிப்பையும் கொடுங்கள். கண்டிப்பாக இது உங்களுக்கு பலனை அளிக்கும்.

பூக்கள்

பூக்கள்

பெண்களுக்கு பூக்கள் என்றால் பிரியம். அதனால் அவர்களிடம் மன்னிப்பு கேட்பதற்கு பூக்களும் உதவிடும். ஆனாலும் நிலைமையின் தாக்கத்தை பொறுத்தே இந்த வழியை பயன்படுத்த முடியும். ஒரு வேளை, இது ஒன்றும் பெரிய பிரச்சனையில்லை என்றால் இந்த வழி சரியானதே. அழகிய வண்ணங்கள் நிறைந்த, அதே சமயம் நல்ல நறுமணத்தை அளித்திடும் பூக்களை தேர்ந்தெடுங்கள். நீங்கள் வாங்கும் பூக்கள் நற்பதத்துடன் இருக்க வேண்டும். கூடுதலாக அவர்களின் வீடு அல்லது அலுவலகத்திற்கே அதனை நேரடியாக கொண்டு போய் கொடுத்தால் அது கூடுதல் பலனை அளிக்கும்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

நீங்கள் ஒரே அறையில் இல்லாத போது மாறுமே இந்த வழி சரிப்பட்டு வரும். நல்ல ஆடை ஒன்றை அணிவித்து, ஒரு அட்டையில் நீங்கள் மன்னிப்பு கேட்கும் விவரத்தை அழகாக எழுதி, அதனை தலைக்கு மேல் தூக்கி பிடித்து, ஒரு புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதனை மன்னிப்பு கேட்க நினைப்பவரிடம் அனுப்பி வையுங்கள். மன்னிப்பு என்று வரும் போது, இந்த வழி உங்களுக்கு முக்கியமான ஒன்றை அளிக்கும். அதாவது, செய்த தவறுக்காக நீங்கள் உண்மையிலேயே வருந்தி மன்னிப்பு கேட்கிறீர்கள் என அவர்களுக்கு உணர்த்தும்.

ஆடைகள்

ஆடைகள்

உங்களுக்கு பிடித்த அல்லது நீங்கள் மன்னிப்பு கேட்க போகும் நபருக்கு பிடித்த கதாபாத்திரத்தின் படத்தை கொண்ட ஆடையை அணிந்து கொள்ளுங்கள். அதை அணிந்து கொண்டு, அவர்கள் கண்ணில் படும் படி, அவர்கள் முன் செல்லவும். அப்படி செய்யும் போது, ஆடையில் உள்ள கதாபாத்திரத்தைப் போலவே அவர்களுக்கு நீங்கள் தெரிவீர்கள். அந்த கதாபாத்திரமே அவர்களிடம் மன்னிப்பு கேட்பதாக அவர்கள் உணர்வார்கள். கண்டிப்பாக உங்களை மன்னிக்கவும் செய்வார்கள்.

நாய்க்குட்டி கண்கள்

நாய்க்குட்டி கண்கள்

நாய்க்குட்டி கண்கள் என்றால் உண்மையான நாய்க்குட்டி கண்களின் வியப்பு உணர்வினை தான் குறிக்கிறது. உங்கள் வீட்டு நாய்க்குட்டியை திட்டும் போதோ அல்லது கத்தும் போதோ, அது உங்களை பார்த்து திரு திருவென விழிக்கும். அப்படிப்பட்ட உணர்ச்சியை அது வெளிக்காட்டும் போது, "அச்சோ" என கூறி அதை அன்புடன் அரவணைத்து கொள்வீர்கள். மனிதர்களிடமும் இது கண்டிப்பாக வொர்க் அவுட் ஆகும். ஆனால் அதற்கு நீங்கள் பெண்ணாக இருக்க வேண்டும். இது அனைத்து ஆண்களுக்கும் சரியாக வருமா என்று சொல்ல முடியாது.

விளையாட்டுத்தனமான தாக்குதல்கள்

விளையாட்டுத்தனமான தாக்குதல்கள்

விளையாட்டுத்தனமான தாக்குதல்கள் கூட குதூகலமே. ஆனால் அது நீங்கள் எப்படிப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்கிறீர்கள் என்பதை பொருத்தும் இருக்கு. இது குழந்தைகளிடமும் உறவினர்களிடமும் சரிப்பட்டு வராத வழியாகும். ஆனால் இதுவே உங்கள் மனைவி அல்லது கணவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் அவர்களை செல்லமாக ஒரு குத்து குத்தி, உங்களை மன்னிக்கும் வரை அவர்களை செல்லமாக அடிக்கலாம். ஆனால் அது விளையாட்டுத்தனமானதாக இருக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். அவர்களின் எதிர்வினையையும் கவனியுங்கள். ஒரு வேளை எதிர்மறையான விளைவுகள் கண்முன்னே தெரிந்தால், வேறு ஒரு வழியை தேர்ந்தெடுங்கள்.

கவிதை

கவிதை

பெரிய வார்த்தைகள் எல்லாம் பயன்படுத்தி கவிதை எழுதும் கவிஞராக நீங்கள் மாற வேண்டாம். நாங்கள் கூறுவது வேடிக்கையான கவிதையாகும். அதனால் அது ஒன்றும் சரியான அர்த்தத்தில் இருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை. ஆனால் நீங்கள் மன்னிப்பு கேட்க விரும்புகிறீர்கள் என்பதை மட்டும் அது தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். மன்னிப்பு என்ற வார்த்தைக்கு பல எதுகை மோனை வார்த்தைகளை நீங்கள் இணையதளத்தில் தேடி எடுத்து விடலாம். நீங்கள் எழுதும் கவிதை ஒன்றும் பெரிய புலமை வாய்ந்ததாக இருக்க கூடாது. அதை படிக்கும் போது உங்களை மன்னிக்க வேண்டியவர் வாய் விட்டு சிரித்து விட வேண்டும். அதுவுஅஎ உங்களை மன்னித்ததற்கு அடையாளமாகும்.

வேடிக்கையான விளையாட்டு

வேடிக்கையான விளையாட்டு

மன்னிப்பு கேட்பதோடு அதை வைத்து விளையாடுவது. உங்கள் தவறின் ஆழத்தை பொறுத்து இந்த விளையாட்டின் அளவை தீர்மானித்து கொள்ளலாம். ஒரு வேளை சின்ன தவறு என்றால், பொதுவாக நீங்கள் செய்ய விரும்பாத ஒரு விஷயத்தை, உங்களுக்கு நீங்களே வேடிக்கையான தண்டனையாக கொடுத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, அவர்கள் உங்களை மன்னிக்க தயார் என்றால், தண்ணீர் துப்பாக்கியை கொண்டு உங்கள் மீது தண்ணீரை அடிக்க சொல்லலாம். அல்லது அவர்களுடன் சேர்ந்து வீடியோ கேம்ஸ் விளையாண்டு, அதில் அவர்கள் கையால் அதிக்கடி மரணம் கொள்வது.

உணவு

உணவு

நீங்கள் மன்னிப்பு கேட்பவர் ஒரு ஆணாக இருந்தால் இந்த வழி சரியாக இருக்கும். மன்னிப்பு கேட்பதற்கு உணவு சரியான வழியாக விளங்கும். இதை தெரிந்து வைத்து கொள்ளாத அளவிற்கு இது ஒன்றும் சிதம்பர ரகசியமும் இல்லை. உணவு மூலம் மன்னிப்பு என்று வந்து விட்டால் பல க்ரியேடிவ் எண்ணங்கள் கரை புரண்டு ஓடும். அதில் சிறந்ததாக கருதப்படும் ஒன்று தான் ஆச்சரியத்தை அளித்திடும் காதல் உணர்வு கொண்ட இரவு உணவு. நீங்கள் எந்த வகையான பெண்/ஆணிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறீர்களோ அதற்கேற்ப ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். மன்னிப்பை கூறும் போது அதனுடன் மசாலாவையும் சேர்த்துக் கொள்ளலாம் தானே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Cute Ways To Say Sorry

Here are some of the cutest ways to say sorry to anybody. Read more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter