கேர்ள் பிரண்ட் உங்க மேல ரொம்ப கோவமா இருக்காங்களான்னு இதை வச்சு கண்டுபிடிக்கலாம் ப்ரோ!

By: Srinivasan P M
Subscribe to Boldsky

இந்த உலகத்தில் பல்வேறு விதமான மனிதர்கள் பல்வேறு விதமான குணாதிசயங்களுடன் வருகிறார்கள். சிலர் அமைதியாகவும், கட்டுப்பாடுடனும், இருந்தால் சிலர் அமைதியற்றும், பதறுபவர்களாகவும் இருக்கிறார்கள். பதறுதல் என்றால் அவர்கள் அமைதியற்றவர் என்று பொருளல்ல. ஆனால், அந்த பதற்றம் அவர்களை சற்று வித்தியாசப்படுத்திக் காட்டும். இந்த பகுதியில், உறவுகளைக் குறித்த விவாதத்தில் உங்கள் கேர்ள் ப்ரெண்ட் அதாவது பெண் நண்பர் கோபமாகவோ அல்லது பதற்றத்திலோ இருந்தால் தென்படும் அறிகுறிகளைப் பற்றிப் பார்க்கலாம்.

கேர்ள் ப்ரெண்டுகள் பல விதத்தில் பல எதிர்ப்பார்ப்புகளுடன் இருப்பவர்கள். உங்கள் கேர்ள் ப்ரெண்ட் கோபமாக இருப்பதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள அவருக்கு வேண்டியது என்ன என்பதை அறிய வேண்டியது தான்.

சரி, உங்கள் கேர்ள் ப்ரெண்ட் கடுப்பில் அல்லது கோபமாக இருக்கும் போது எப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள் என்பதைப் பார்ப்போம்.

Tangible Signs Your Girlfriend Is Crazy

அவங்க மன நிலை பயங்கரமா இருக்கு

உங்க கேர்ள் ப்ரெண்ட் கோபமாக இருந்தால் அவர்களின் மனநிலை மிகவும் உச்ச கொந்தளிப்பில் இருக்கும். இந்த சூழ்நிலையில் எல்லா கோபத்தையும் அவர்கள் உங்கள் மேல் கொட்டித் தீர்த்துவிடுவார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த நிலைமை மோசமாகிக்கிட்டே போவது தான்.

சும்மா போன் பண்ணுவாங்க இல்ல மெசேஜ் அனுப்புவாங்க..

அவங்க உங்களை நிம்மதியாக இருக்கவிடாமல் எப்போது பார்த்தாலும் போன் பண்ணிகிட்டோ இல்ல மெசேஜ் பண்ணிகிட்டோ இருந்தால், அவங்க அமைதியில்லாமலோ அல்லது கோபமாகவோ இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பொது இடத்தில் சண்டை போடுவாங்க..

பெரும்பாலான சமயத்தில் பெண்கள் கோபமாக இருந்தால் அவர்கள் பொது இடத்தில் அதை வெளிப்படுத்த முயற்சி செய்வார்கள். எந்த ஒரு உறவாக இருந்தாலும் பொது இடத்தில் சண்டை போடுவதோ அல்லது கோபத்தை வெளிப்படுத்துவதோ சரியல்ல. ஆணும் பெண்ணும் தங்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகளை நான்கு சுவற்றிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும், வெளியில் கொண்டு வரக்கூடாது.

பொய்

எந்த ஒரு காரணமும் இல்லாமல் அவர்கள் பொய் சொல்கிறார்களா? அப்படியெனில் அவர்கள் கோபமாக இருக்கிறார்கள். உறவில் பொய் எந்த விதத்திலும் நல்லதல்ல. இது நிலைமையை இன்னும் மோசமாக்கவே செய்யும். பொய் பேசுவது நம்பிக்கையை அழிப்பதுடன் தவறாக புரிந்து கொள்ள வழிவகுக்கும்.

சரி இப்போது புரிந்ததா? அவர்களை நன்கு புரிந்து கொண்டு நிலைமையை சரி செய்யுங்க.. பாவம் ஆம்பளைங்க..

English summary

Tangible Signs Your Girlfriend Is Crazy

Let us go ahead and look at these signs your girlfriend is crazy. Read on...
Subscribe Newsletter