பெண்கள் ஆண்களிடம் எப்போதும் வெளிப்படையாக சொல்லாத 5 விஷயங்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

உலகத்தில் அதி புத்திசாலியான ஆணால் கூட ஒரு பெண்ணின் தேவையை புரிந்து கொள்ள முடிவதில்லை. ஏனெனில் பெண்கள் என்பவர்கள் எப்போதுமே புதிரானவர்கள். அந்த புதிரின் முடிச்சை அவிழ்ப்பதை பிறகு பார்ப்போம். இப்போது பெண்கள் ஆண்களிடம் எப்போதுமே கூறாத சில அடிப்படை விஷயங்களின் மீது நாம் கவனத்தை செலுத்துவோம். சில விஷயங்களைப் பற்றி அவர்கள் வாயை திறக்காவிட்டாலும் கூட, அவர்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்ப்பார்ப்பார்கள். ஒரு ஆணாக, அவர்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் நாம் வாழ்ந்திட வேண்டும். அதற்கு அவர்களின் தேவைகளுக்கு நீங்கள் செவி சாய்ப்பவராக இருக்க வேண்டும்.

பெண்கள் உங்களிடம் கூறாத அந்த விஷயங்களை நீங்கள் தெரிந்து கொண்டால், உங்கள் வாழ்க்கை சுலபமாகி விடும். ஆனால் நீங்கள் அறியாமையோடு இருந்தால், சீக்கிரமாகவே உங்கள் பெண்ணை இழந்து விடுவீர்கள். அடிப்படையான விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ளவில்லை என்றால், உங்கள் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடியும். ஒரு பெண்ணையும், அவளின் தேவைகளையும் உண்மையிலேயே நீங்கள் காதலித்தால், உறவுகள் எல்லாம் உங்களுக்கு ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் இல்லை தான். கீழ்கூறிய அனைத்து விஷயங்களையும் நன்றாக படித்து இன்று முதல் அவர்களுக்கு ஆச்சரியங்களை அளிக்க தொடங்குங்கள். உங்களை அவர்களுக்கு இன்னும் அதிகமாக பிடிக்க தொடங்கும்.

சரி, விஷயத்திற்கு வருவோம்... உங்களிடம் பெண்கள் எப்போதும் கூற விரும்பாத 5 விஷயங்கள், இதோ!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்கள் ரகசிய முகம் அவருக்கு தெரியும்

உங்கள் ரகசிய முகம் அவருக்கு தெரியும்

உங்களுடன் வேலைப்பார்க்கும் பெண்களில் எந்த பெண் மீது உங்களுக்கு ஈர்ப்பு அதிகம் என்ற விஷயம் எல்லாம் உங்கள் காதலி/மனைவிக்கு தெரிந்தாலும் கூட, அதைப் பற்றி அவர் உங்களிடம் எப்போதுமே வாய் திறப்பதில்லை. அவர்களிடம் நீங்கள் பேசும் விதத்தை கவனிக்கும் அவர், தன் சொந்த முடிவுகளுக்கு வந்து விடுவார். இனி அவர் உங்களை கூர்ந்து கவனிக்க தொடங்குவார். நீங்கள் புத்திசாலியாக இருந்தால், ரகசியமாக நீங்கள் ஒரு பெண்ணின் மீது கொண்டுள்ள ஈடுபாட்டிற்கு, உங்கள் காதலி/மனைவி ஒரு நாள் பூகம்பமாக வெடிக்கும் வரை நீங்கள் காத்திருக்காதீர்கள். உங்களுடன் வேலைப்பார்க்கும் பெண்களுடன் சிரித்து பேசி கடலை போடுவதை உடனே நிறுத்துங்கள்.

குடும்பம் பெரிய விஷயம்

குடும்பம் பெரிய விஷயம்

உங்கள் தாயின் மீது அவர் அதிக அளவிலான அன்பை பொழிவார். ஆனால் வாய்ப்பு கிடைத்தால், அவர் தன் பெற்றோர்களுடன் நேரத்தை செலவழிக்க விரும்புவாரே தவிர உங்கள் பெற்றோருடன் அல்ல. இந்த விஷயத்தை அவர் கண்டிப்பாக உங்களிடம் எப்போதுமே கூற மாட்டார். ஆனால் அதனை நீங்களாகவே புரிந்து கொண்டு, அவரின் விருப்பத்திற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.

'பரவாயில்லை' என அவர் கூறினால்...

'பரவாயில்லை' என அவர் கூறினால்...

'பரவாயில்லை' என்று அவர் கூறினால். அவர் அனைத்திற்கும் ஆமோதிக்கிறார் என நினைத்து கொள்ளாதீர்கள். அவர் அப்படி சொல்கிறார் என்றால் அவரை திருப்திப்படுத்த நீங்கள் ஏதோ செய்ய வேண்டும் என்ற அர்த்தமாகும். அது என்ன என்பதை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு காரணம் அவர் உங்களிடம் கூறாத விஷயங்கள் சில உள்ளது.

பரிசுகளை எதிர்ப்பார்ப்பார்

பரிசுகளை எதிர்ப்பார்ப்பார்

பெண்களுக்கு அதிகளவில் பரிசுகள் பெறுவது என்றால் மிகவும் இஷ்டமாகும். பெண்கள் உங்களிடம் சொல்ல விரும்பாத விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால் அவர்கள் அடிக்கடி பரிசுகள் வாங்கிக் கொடுத்து அவர்களை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டியது உங்களின் கடமையாகும். ஆனால் அதற்காக நீங்கள் வாங்கி கொடுக்கும் பரிசுகளை பொறுத்து தான் உங்கள் காதல் மதிப்பிடப்படுகிறதா என்றால், கண்டிப்பாக இல்லை. அவர்களின் மீது நீங்கள் எந்தளவு அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பதையே இது குறிக்கும்.

சுத்தமாக இருக்கும் ஆற்றல்கள்

சுத்தமாக இருக்கும் ஆற்றல்கள்

உங்கள் மனைவி உங்களுடன் இருப்பதால் மட்டும் அவர் உங்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு விட்டார் என்றில்லை. அவர் உங்களை தொடர்ச்சியாக கவனித்துக் கொண்டே தான் இருப்பார். எப்போதும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருங்கள். நகங்களை வெட்டுங்கள், தலை முடியை ட்ரிம் செய்து கொள்ளுங்கள், தாடியை சீரான முறையில் ஷேவ் செய்திடுங்கள். முடி வெட்டாமல் தாடியுடன் திரிவதையும், இரவு உணவிற்கு பிறகு வெங்காயம் சாப்பிட்டதால் உங்கள் மீது வரும் துர்நாற்றம் ஆகியவற்றை அவர் வெறுப்பார். இவ்வகை விஷயங்களை அவர் உங்களிடம் கூற மாட்டார். இந்த விஷயங்களில் எல்லாம் நீங்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் உங்கள் வாழ்வில் பொக்கிஷமாக நீங்கள் கருதும் உங்கள் பெண்ணை இழந்து விடுவீர்கள். ஒரு ஆணாக இருந்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்யுங்கள். தர்மசங்கடமான விஷயங்களைப் பற்றி அவராக பேசும் வரை காத்திருக்காதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 Things She’ll Never Tell You

There are certain things she'll never tell you. Go through these points and get ready to surprise her from now on. She'll start liking you more.
Story first published: Monday, December 8, 2014, 14:57 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter