நீங்க இப்பத்தான் புதுசா காதலிக்கிறீங்களா? இதோ உங்களுக்கான 5 ரூல்ஸ்!!

By: Karthikeyan Manickam
Subscribe to Boldsky

உறவுகள் என்பது கூல்டிரிங்க்ஸ் மாதிரி தான். வயதாகி விட்டால் அவை காலாவதியான கூல்டிரிங்க் மாதிரி புஸ்ஸென்று போய்விடும். ஆனால் புதிய உறவுகள் தொடங்கும் போது முழு எனர்ஜியுடன் சுறுசுறுப்புடன் இருக்கும். அந்த உறவே காதல் உறவாக இருந்தால் சொல்லவே தேவையில்லை. மனதில் படபடவென்று பறக்கும் பட்டாம் பூச்சிகளைப் போல் இரு மனங்களும் துள்ளிக் கொண்டிருக்கும்.

இந்தக் காதல் உறவு தான் வாழ்க்கை முழுவதும் தொடரப் போகும் என்பதால், மிகவும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருப்பது அவசியம். அதற்கான 5 முக்கிய விதிமுறைகள் பற்றிக் கொஞ்சம் அலசுவோமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவை, ஆசைகளைக் குறையுங்கள்!

தேவை, ஆசைகளைக் குறையுங்கள்!

உங்களுக்கேற்ற துணையைத் தேடும் போது உங்கள் தேவைகளையும், ஆசைகளையும் குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் காதலின் வலிமையையும், அதில் ஆழ்ந்த நம்பிக்கையையும் மட்டும் அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் எதிர்காலம் சிறக்கும்.

சொல்ல வேண்டாம், செய்யுங்கள்!

சொல்ல வேண்டாம், செய்யுங்கள்!

உங்கள் துணையிடம் நீங்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் வெறும் வார்த்தைகளாகப் போய்விடக் கூடாது. அவற்றைச் செயல்படுத்தும் வரை அதற்கு ஒரு அர்த்தமே கிடையாது. உங்கள் செயல்பாடுகள் தான் உங்கள் துணையிடம் ஒரு பலத்த நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இரகசியத்தை உடைக்காதீர்கள்!

இரகசியத்தை உடைக்காதீர்கள்!

உங்கள் துணை எவ்வளவு தான் உங்களை நெருங்கி வந்து கொண்டிருந்தாலும், உங்களைப் பற்றிய சில அந்தரங்கமான இரகசியங்களை அவசரப்பட்டு உடைத்துச் சொல்லி விடாதீர்கள். நீங்கள் ஒரு சரியான 'அவசரக் குடுக்கை' என்று உங்கள் நினைத்துவிடலாம். பிற்காலத்தில் அதுவே உங்கள் உறவில் பிரிவை ஏற்படுத்தக் கூடும், உஷார்!

அவசரப் படுத்தாதீர்கள்!

அவசரப் படுத்தாதீர்கள்!

உங்களுடைய விருப்பங்களை உங்கள் துணையிடம் கூறி, அவர்களும் அவற்றை விரும்புமாறு கூறி அவர்களை அவசரப்படுத்த வேண்டாம். அவர்கள் வழியிலேயே விட்டு விடுங்கள். அவர்களிடமிருந்து பெறுவதை விட, அவர்களுக்கு நீங்கள் எவ்வளவு அதிகம் கொடுக்க முடியும் என்று பாருங்கள். கொடுத்துக் கொடுத்து உங்கள் கரங்கள் தான் சிவக்க வேண்டும்!

தள்ளி இருந்து வசப்படுத்துங்கள்!

தள்ளி இருந்து வசப்படுத்துங்கள்!

உங்கள் துணையிடம் அவ்வளவு எளிதாக நீங்கள் வீழ்ந்து விடாதீர்கள். அவர்கள் கூப்பிட்டதும் விழுந்தடித்துக் கொண்டு ஓடாதீர்கள். அவர்களிடமிருந்து பெரும்பாலும் விலகி விலகியே இருங்கள். நீங்கள் கொடுக்கும் அந்தத் த்ரில் மூலம் தான் காந்தம் போல் அவர்கள்பால் நீங்கள் அதிகம் ஈர்க்கப்படுவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 Rules For A Newly Blossoming Love

Relationships are like cold drinks. The older they get, the more the fizz escapes out of the bottle, and they end up falling flat! New relationships, on the other hand, have all the fizz that make it exciting and full of energy.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter