For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் காதலியின் பெற்றோரை சம்மதிக்க வைக்கும் எளிய வழிகள் என்னென்ன தெரியுமா?

அனைத்து பெற்றோர்களுக்குமே தங்கள் பிள்ளைகளுக்கு சரியான வாழக்கைத்துணையை அமைத்து தர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதனால்தான் தங்களின் பிள்ளைகளின் காதலை அனைத்து பெற்றோர்களும் பற்றி தெரிய வரும்போது முதலில்

|

அனைவருக்குமே வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைவது திருமணம்தான். அந்த திருமணம் காதல் திருமணமாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையும். ஆனால் அனைவருக்கும் காதல் திருமணம் நடக்கிறதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். காதல் பெரும்பாலும் தோல்வியில் முடிய காரணம் பெற்றோர்கள் ஒப்புக்கொள்ளாமல் போவதுதான்.

Ways To Impress Your Partners Parents

அனைத்து பெற்றோர்களுக்குமே தங்கள் பிள்ளைகளுக்கு சரியான வாழக்கைத்துணையை அமைத்து தர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதனால்தான் தங்களின் பிள்ளைகளின் காதலை அனைத்து பெற்றோர்களும் பற்றி தெரிய வரும்போது முதலில் அஞ்சுகின்றனர். உங்கள் காதலன்/காதலியின் பெற்றோரை சம்மதிக்க வைப்பது என்பது உங்களின் கடமையாகும். காதலியின் பெற்றோருக்கு உங்களை பிடிக்க வைப்பது என்பது அவ்வளவு கடினமான காரியமல்ல. சில விஷயங்களை சரியாக செய்தாலே போதும் அவர்களுக்கு உங்களை பிடிக்க வைத்துவிடலாம். இது பெண்களுக்கும் பொருந்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவர்கள் முன் செல்போன் உபயோகிக்காதீர்கள்

அவர்கள் முன் செல்போன் உபயோகிக்காதீர்கள்

பெற்றோர்களுக்கு பிடிக்காத ஒரு செயல் என்றால் அது அவர்கள் முன் இருக்கும்போது அதிகமாக செல்போன் உபயோகிப்பதுதான். குறிப்பாக அவர்களுடன் உணவு அருந்தும் போது செல்போனை நோண்டிக் கொண்டிருப்பது அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். உங்களுக்கு உங்கள் காதலியின் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிடும் வாய்ப்பு ஏற்பட்டால் இந்த தவறை ஒருபோதும் செய்துவிடாதீர்கள். அவர்களாக கேட்கும் வரையில் உங்கள் பாக்கெட்டை விட்டு செல்போனை எடுக்காதீர்கள். இது மிகவும் எளிமையானதாக இருக்கலாம், ஆனால் இது உங்கள் மீது நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தும்.

அவர்களின் ரசனைகளை தெரிந்து கொள்ளுங்கள்

அவர்களின் ரசனைகளை தெரிந்து கொள்ளுங்கள்

அவர்களை சந்திக்க செல்வதற்கு முன் அவர்களின் ரசனைகளைப் பற்றி ஒரு சிறிய ஆராய்ச்சி செய்துவிட்டு செல்லுங்கள். அவர்களின் அம்மாவுக்கு தோட்டக்கலையில் ஆர்வம் இருக்கலாம், அவர்க்ளின் தந்தைக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இருக்கலாம். அவர்களுடன் பேசும்போது அது தொடர்பான தகவல்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்வது உங்கள் மீதான மதிப்பை அதிகரிக்கும். யாராக இருந்தாலும் தங்களுக்கு வரப்போகிற மருமகன் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள் இல்லையா?

காதலியிடம் இருந்து விலகி இருங்கள்

காதலியிடம் இருந்து விலகி இருங்கள்

உங்கள் காதலி மீது உங்களுக்கு அனைத்து உரிமையும் இருப்பது உண்மைதான், ஆனால் அவர்களின் பெற்றோர்கள் முன் இருக்கும்போது அவர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். அவர்கள் இருக்கும்போதே காதலியை சீண்டுவது உங்கள் மீது அவர்களுக்கு ஒரு மோசமான பிம்பத்தை உருவாக்கும்.

MOST READ: இந்த ராசிக்காரங்க தோல்வியில் இருந்து பீனிக்ஸ் மாதிரி மீண்டு வருவாங்களாம் தெரியுமா?

மரியாதையான நடத்தை

மரியாதையான நடத்தை

நடத்தைத்தான் ஒருவரை உங்களை நோக்கி ஈர்க்கும் அடிப்படை மந்திரமாகும். திமிரான, முரட்டுத்தனமான நடத்தை உங்கள் காதலிக்கு வேண்டுமென்றால் பிடிக்கலாம் ஆனால் உங்கள் காதலியின் பெற்றோர் நிச்சயம் அதனை விரும்பமாட்டார்கள் . எனவே அவர்களிடம் பேசும்போது அமைதியாகவும், மரியாதையாகவும் பேசுங்கள். " ப்ளீஸ்", " நன்றி " போன்ற வார்த்தைகளை அடிக்கடி உபயோகியுங்கள்.

காதலியை பற்றி ஒருபோதும் குறைகூறாதீர்கள்

காதலியை பற்றி ஒருபோதும் குறைகூறாதீர்கள்

உங்கள் காதலி மீது உங்களுக்கு ஆயிரம் குறைபாடுகளும், புகார்களும் இருக்கலாம். ஆனால் அதனை ஒருபோதும் அவர்களின் பெற்றோர்களிடம் கூறக்கூடாது. அவர்கள் முன் உங்கள் காதலியை ஒருபோதும் விட்டுக்கொடுக்கக்கூடாது. அவர்களை சிரிக்க வைக்கிறேன் என்று உங்கள் காதலியை நீங்கள் கிண்டல் செய்வது உங்களுக்கே பிரச்சினையாகி விட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் காதலிக்கு அவர்கள் முன் சமஉரிமை கொடுக்க பழகுங்கள்.

இயல்பாக இருங்கள்

இயல்பாக இருங்கள்

ஒருபோதும் அவர்களிடம் உங்களை சிறந்தவராக காட்டிக்கொள்ள பொய்யான நடவடிக்கைகளில் ஈடுபடாதீர்கள். உங்களை விட அவர்களுக்கு அனுபவம் அதிகமிருக்கும், எனவே உங்களின் நாடகங்களை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். உங்களின் இயல்பான குணமே அவர்களுக்கு உங்களை பிடிக்க வைக்க போதுமானது.

MOST READ: பௌர்ணமி ராத்திரி பத்திரமா இருந்துக்கோங்க... நிலா ஆண்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்பு என்ன தெரியுமா?

பெற்றோராக பாருங்கள்

பெற்றோராக பாருங்கள்

அவர்களிடம் உங்களின் பெற்றோரிடம் பேசுவது போல அன்பாகவும், அக்கறையாகவும் பேசுங்கள். ஹாஸ்டல் வார்டனிடம் பேசுவது போல பேசாதீர்கள். அவர்களின் அனுபவங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள், அவர்கள் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை அவர்களுக்கு உணரவையுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Impress Your Partner's Parents

Here are some useful tips to impress your partner's parents.
Story first published: Saturday, October 12, 2019, 12:42 [IST]
Desktop Bottom Promotion