உங்களுக்கு பிடிச்ச பொண்ணு உங்கள காதலிக்கணுமா? இத பண்ணுங்க போதும்...!

நெருங்கிய தோழி காதலியாக கிடைப்பது என்பது வரம் போன்றது, ஆனால் அந்த வரம் அனைவருக்கும் கிடைத்துவிடாது.

நெருங்கிய தோழி காதலியாக கிடைப்பது என்பது வரம் போன்றது, ஆனால் அந்த வரம் அனைவருக்கும் கிடைத்துவிடாது. அனைவருமே தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது தங்களுக்கு மிகவும் நெருங்கிய பெண்ணை காதலிக்க நினைத்திருப்பார்கள். ஆனால் நட்பை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்திலேயே பலரும் தங்கள் காதலை வெளிப்படுத்துவதில்லை.

tips to avoid getting friend zoned by the girl you like

அவர்கள் உங்களை காதலிக்கிறார்களா? இல்லையா? என்ற சந்தேகம் உங்களுக்குள் கண்டிப்பாக எழும். உங்களை அவர்கள் நண்பராக மட்டுமே நினைக்கிறார்களா என்ற குழப்பத்தில் நீங்கள் பல தவறான முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். உங்களை நண்பராக நினைக்கும் தோழியை எப்படி உங்களை காதலிக்க வைப்பது என்பதற்கான சில உபயோகமான குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கெஞ்சுவதை முதலில் நிறுத்தவும்

கெஞ்சுவதை முதலில் நிறுத்தவும்

காதல் என்பது ஒரு அழகான உணர்வு, அது உங்களை முடக்குவதைக் குறிக்காது. அவளை உங்கள் காதலியாக மாற்ற முயற்சிக்கும் முன், காதல் என்பது பிச்சை எடுக்க வேண்டிய ஒன்றல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களை நேசிக்க வேண்டும் என்று ஒருபோதும் அவர்களிடம் கெஞ்சாதீர்கள். . ஒருவரிடம் காதல் உணர்வுகள் வைத்திருப்பது ஒரு நல்ல விஷயம், ஆனால் உங்களை காதலிக்க யாரையாவது கட்டாயப்படுத்துவது அல்லது கெஞ்சுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. உங்கள் உண்மையான உணர்வுகள் அவளை உன்னை காதலிக்க வைக்கட்டும்.

அழுமூஞ்சியாக இருக்கக்கூடாது

அழுமூஞ்சியாக இருக்கக்கூடாது

உணர்வுபூர்வமாக நிலையற்ற ஒருவரை யாரும் விரும்பமாட்டார்கள். நீங்கள் சிறிய விஷயத்திற்கு எல்லாம் அழுது உங்கள் தோழிதான் உங்களை சமாதானப்படுத்த வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் இது மிகவும் தவறான ஒன்றாகும். எப்போதும் அவர்களை சுற்றியே திரிந்து கொண்டிருப்பது தவறானது. எப்போதும் அவர்களுடன் ஒட்டிக்கொள்வதற்குப் பதிலாக, உங்கள் முக்கியமான வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. , பெண்கள் கடினமாக உழைக்கும் மற்றும் அவர்களின் தொழில் குறித்து தீவிரமாக இருக்கும் ஆண்களையே விரும்புகிறார்கள்.

எப்போதும் ஈஸியாக கிடைத்துவிடாதீர்கள்

எப்போதும் ஈஸியாக கிடைத்துவிடாதீர்கள்

எல்லா நேரத்திலும் அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதும், எப்போதும் அவர்களுக்கு உடனடியாக கிடைப்பதும் உங்களுக்கு வேறு வேலை இல்லை, நீங்கள் ஒரு செயலற்ற நபர் என்பதற்கான சமிக்ஞையை அவர்களுக்கு அனுப்பும். உங்கள் தோழி உங்களை ஒன்றும் செய்யாத சோம்பேறியாக கருதலாம். அவர்களின் கடினமான காலங்களில் அவர்களுக்கு உதவுவது ஒரு நல்ல விஷயம் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் உங்கள் வேலையை எல்லா நேரத்திலும் ஒதுக்கி வைப்பது அவர்களுக்கு தவறான சமிக்ஞையை அனுப்பக்கூடும்.

அடிக்கடி கால் பண்ணாதீர்கள்

அடிக்கடி கால் பண்ணாதீர்கள்

தினமும் காலையும், மாலையும் அவர்களுக்கு தினமும் குறுஞ்செய்தி அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தால் அதை தற்காலிகமாக நிறுத்த வேண்டியது அவசியமாகும். அவர்களை தினமும் வாழ்த்துவது நல்லதுதான் ஆனால் அவர்களும் அவ்வாறு செய்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும். இது அவர்கள் உங்கள் மீது ஆர்வமாக இருக்கிறார்களா என்பதை அறிய நல்ல சந்தர்ப்பமாகும். உங்கள் மீது அவர்களும் காதலில் இருந்தால் நிச்சயம் உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவார்கள். நீங்கள் அவர்களின் உடன்பிறந்தவர்களோ, பெற்றோரோ அல்ல இருப்பினும் உங்களுக்காக அவர்கள் தங்கள் நேரத்தை ஒதுக்கினால் அவர்களுக்கு நீங்கள் நிச்சயம் முக்கியமானவர்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் எதிர்காலத்தின் மீது ஆர்வமாக இருங்கள்

உங்கள் எதிர்காலத்தின் மீது ஆர்வமாக இருங்கள்

பெண்கள் கடின உழைப்பாளி ஆண்களை விரும்புகிறார்கள். உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் ஆர்வமாக இருக்கும்போது, பெண் நிச்சயமாக உங்களை தனக்கு ஏற்றக் கூட்டாளியாக கருதுவார்கள். இதுதான் நடைமுறைக்கு ஏற்றதாகும். பாதுகாப்பான வேலை எப்போதும் அவசியமாகும். ஒரு பெண் ஒரு நல்ல வேலையில் இருக்கும் ஒருவரைத் தேடுவார். அதனை நீங்கள் செய்யும்போது நீங்கள் ஒரு பொறுப்பான நபர் என்று அவர் உணருவார்.

சுவாரஸ்யமானவர்களாக இருங்கள்

சுவாரஸ்யமானவர்களாக இருங்கள்

நீங்கள் சுவாரஸ்யமானவர்களாக இருக்கும்போது உங்களால் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்க முடியும். உங்களுடன் அவர்கள் வெளியே வரும்போது நீங்கள் சுவாரஸ்யமாக பேசவில்லை என்றாலோ அல்லது அவர்களுடன் இருப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை என்றாலோ உங்களை தங்களுக்கு ஏற்றவர் இல்லை என்று அவர்கள் நினைக்கலாம். அவர்களை எப்படி சிரிக்க வைக்க வேண்டும், எப்படி மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். சில நல்ல புத்தகங்களைப் படிப்பதும் இதற்கு உதவும், சுவாரஸ்யமான அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் உண்மைகளைப் பற்றியும் பேசலாம்.

நன்றாக உடை அணியுங்கள்

நன்றாக உடை அணியுங்கள்

நீங்கள் காதலிக்க விரும்பும் பெண் உங்களை ஒரு தனக்கு ஏற்ற கூட்டாளியாகப் பார்க்க விரும்பினால், உங்கள் உடல் மற்றும் பேஷன் சென்ஸிலும் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக, நீங்கள் அற்புதமான பைசெப்ஸ் மற்றும் சிக்ஸ் பேக்குகளை வைத்திருக்க வேண்டியதில்லை மாறாக ஆரோக்கியமாகஇருக்க வேண்டும். அவர்களை சந்திக்க செல்வதற்கு முன் நன்றாக உடையணிந்து கொள்ளுங்கள், தலையை ஒழுங்காக சீவிக்கொள்ளுங்கள். விலை உயர்ந்த ஆடைகளைத்தான் பெண்கள் விரும்புவார்கள் என்றில்லை, அழகிய ஆடைகளே போதும் அவர்களை கவர்வதற்கு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, November 5, 2019, 15:45 [IST]
Desktop Bottom Promotion