Just In
- 2 hrs ago
புதன்கிழமைகளில் மறந்தும் இந்த விஷயங்களை செஞ்சுடாதீங்க... இல்லன்னா பண கஷ்டத்தை சந்திப்பீங்க...
- 3 hrs ago
உங்க நோயெதிர்ப்பு சக்திய பலமடங்கு அதிகரிக்க...தினசரி நீங்க இத பண்ணா போதுமாம்...!
- 9 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் சொத்துக்களை விற்பதில் கவனமாக முடிவெடுக்கவும்...
- 18 hrs ago
உங்களுக்கு முடி அதிகமா கொட்டுதா? அப்ப இந்த உணவுகள சரியா சாப்பிட்டு வந்தா இனி முடி கொட்டாதாம்!
Don't Miss
- Sports
மும்பை அணியில் அர்ஜூனுக்கு வாய்ப்பு ஏன் இல்லை.. மௌனத்தை கலைத்த சச்சின்.. அணி தேர்வு குறித்து கருத்து
- Movies
கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லலியா...இது தெரிஞ்சா கண்டிப்பா சொல்லுவீங்க
- News
டவுன் பஸ்ஸை நிறுத்த முடியாதா? உங்களுக்கு என்ன பிரச்சனை? ஓட்டுநரை வெளுத்து வாங்கிய தஞ்சை மேயர்!
- Technology
வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..
- Automobiles
ரயில்களின் கடைசி பெட்டியில் LV என்ற போர்டு தொங்கும்... இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய விஷயம் மறஞ்சிருக்கா?
- Finance
அதானி கொடுக்கபோகும் சர்பிரைஸ்.. யாருக்கெல்லாம் பலன் கிடைக்கலாம்?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உடலுறவு கொள்வதை நிறுத்தும்போது நீங்க நினைத்து பார்க்காத என்னென்ன விஷயமெல்லாம் நடக்கும் தெரியுமா?
உடலுறவு என்பது மிகவும் அற்புதமான இன்பம். இது உங்கள் உறவை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. தம்பதிகளின் பாலியல் வாழ்க்கை அவர்களின் உறவுக்கு மிக முக்கியம். இன்றைய பெரும்பாலான தம்பதிகள் பாலியல் வாழ்க்கையை சரியாக அமைத்துக்கொள்வதில்லை. இது திருப்தியற்ற உடலுறவு மற்றும் மகிழ்ச்சியற்ற வாழ்க்கைக்கு வழிவகுக்கும். ஆண், பெண் உறவில் உடலுறவு முக்கிய பங்கு வகிக்கிறது என்றால், அது மிகையாகது. ஏனெனில், உடலுறவு கொள்வது உங்கள் வழக்கமான வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளது. மேலும் மக்கள் தினசரி அல்லது வாராந்திர அடிப்படையில் எவ்வளவு திருப்திகரமான உடலுறவு கொள்கிறார்கள் என்பதை வைத்து தங்கள் உறவை அடிக்கடி அளவிடுகிறார்கள்.
உடலுறவால் நீங்கள் பல்வேறு நன்மைகளை பெறுவீர்கள். அத்தகைய முக்கியத்துவதும் வாய்ந்த உடலுறவை நீங்கள் தவிர்ப்பது என்பது ஆரோக்கியமானதல்ல. நீங்கள் உடலுறவு கொள்வதை நிறுத்திவிட்டீர்கள் என்றால், என்னென்ன பாதிப்புகளை சந்திப்பீர்கள் என்பதை இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.

மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும்
எப்போதும் மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு செக்ஸ் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், மன அழுத்தத்தை வெளியிடும் ஹார்மோன்களைக் குறைக்க உடலுறவு உதவுகிறது. நீங்கள் திடீரென்று உடலுறவு கொள்வதை நிறுத்தினால், மீண்டும் உங்கள் மன அழுத்தம்அதிகரிக்கலாம். நீங்கள் அதிக கவலை அடையலாம். சுறுசுறுப்பான செக்ஸ் வாழ்க்கை பெரும்பாலும் மக்களை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் உணர வைக்கிறது.

குறைந்த கலோரிகளை எரிக்கிறீர்கள்
உடலுறவு என்பது ஆரோக்கியமான மற்றும் நல்ல உடற்பயிற்சியாகும். மேலும் பலர் உடலுறவின் போது நிமிடத்திற்கு 5 கலோரிகளை இழக்கின்றனர். இது விறுவிறுப்பான நடைப்பயிற்சிக்கு சமம் என்று கூறப்படுகிறது. நீங்கள் உடலுறவு கொள்வதை நிறுத்தியவுடன், உங்கள் உடலின் வேகம் குறைகிறது. இதனால், உங்கள் உடல் எடை அதிகரிக்கலாம் அலல்து நிர்வகிக்க முடியாமல் போகலாம். பிறகு நீங்கள் வேறு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.

உங்களுக்கு மறதி அதிகமாகும்
சில ஆய்வுகள் மற்றும் கோட்பாடுகளின்படி வழக்கமான உடலுறவு உங்கள் நினைவகத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே, நீங்கள் உடலுறவு கொள்வதை நிறுத்தியவுடன் உங்களுக்கு மறதி அதிகம் ஏற்படலாம். உங்கள் நியாபக மறதி அதிகமாவதற்கு இதுவும் ஒரு காரணம்.

உறவில் மாற்றங்கள்
வாரத்திற்கு ஒரு முறையாவது நீங்கள் உடலுறவு கொள்ளும்போது, ஒரு ஜோடியாக நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அது உங்களை பிணைக்கவும், நம்பிக்கையை வளர்க்கவும், இருவரையும் மேலும் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. உடலுறவு உங்கள் உறவை வலுப்படுத்துகிறது. செக்ஸ் இல்லாமல், உறவுகள் பெரும்பாலும் முறிந்துவிடும். விரக்தியின் அளவு அதிகரிக்கிறது மற்றும் நீங்கள் எரிச்சலடைகிறீர்கள்.

தூக்கமின்மை
நல்ல தூக்கத்திற்கு ஹார்மோன்கள் உங்களுக்கு உதவும். நீங்கள் உடலுறவை நிறுத்தினால், ஆக்ஸிடாஸின் மற்றும் ப்ரோலாக்டின் போன்ற ஹார்மோன்களை நீங்கள் இழக்க நேரிடும். இதனால் நிம்மதியான தூக்கத்தை தொலைத்து, தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுவீர்கள்.

உடல் வலிகள்
திடீரென உடலுறவுக்கு முட்டுக்கட்டை போடுவதே உங்களின் தீவிரமான வலிகளுக்குக் காரணம் என்பதை பலர் உணரவில்லை. புணர்ச்சி எண்டோர்பின்களை வெளியிட உதவுகிறது மற்றும் அவை கால், தலை மற்றும் முதுகுவலிகளை எளிதாக்க உதவுகின்றன. எந்த உடலுறவும் கூட மாதவிடாய் பிடிப்புகள் மற்றும் மூட்டுவலி வலியை அதிகரிக்க வழிவகுக்கும்.

செக்ஸ் டிரைவை குறைக்கிறது
வழக்கமான உடலுறவு இல்லாமல் இருக்கும்போது யோனி சுருங்குவதற்கும், உலர்த்துவதற்கும் வாய்ப்புள்ளது. ஆண்களுக்கு, இது விறைப்புத்தன்மையை ஏற்படுத்தும். எனவே, உடலுறவில் நீங்கள் தொடங்கிய இடத்தை மீண்டும் தொடரலாம் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. உங்கள் பாலியல் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் பார்த்துக்கொள்ளுங்கள்.