Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இப்படி இருக்குறவங்க கூட நீங்க டேட்டிங் போகமா இருக்குறதுதான் நல்லதாம் தெரியுமா?
செக்ஸ் பற்றி பேசுவது என்பது டேட்டிங்கின் இறுதியில் வெளிவரும். அதே வேளையில், பெரும்பாலானவர்களுக்கு இது முதல் டேட்டிங் உரையாடலாக இருக்காது.
இன்றைய நவீன காலத்தில் ஆண், பெண் உறவு பலவகைகளில் மாற்றம் கண்டுள்ளது. லிவிங் டுகெதர், க்ரஷ், பெஸ்டி, ஒன் நைட் ஸ்டான்ட் மற்றும் பிரண்ட்ஸ் வித் பெனிபிட் என பல்வேறு வகையான உறவில் ஆண், பெண் இணைந்திருக்கிறார்கள். டேட்டிங் என்பது மிக சாதரணமாக உள்ளது. ஆனால், நீங்கள் திருமண உறவு அல்லது நீண்ட கால உறவில் இருக்க விரும்புகிறீர்கள் என்றால், டேட்டிங் செய்வது மிக அவசியமானது. நீங்கள் முதல்முறையாக ஒருவருடன் டேட்டிங் செல்வது, அவர்களை பற்றி நீங்கள் தெரிந்துகொள்வதற்கும், உங்களை பற்றி அவர்கள் தெரிந்துகொள்வதற்குமான ஒரு வாய்ப்பு. டேட்டிங் செல்வது பற்றி ஒவ்வொருவரும் ஒருவிதமான கனவு மற்றும் ஆசை இருக்கும். முதல் சந்திப்பு உங்கள் டேட்டிங் பற்றி நிறைய வெளிப்படுத்தலாம். அவர்கள் எப்படி உங்களை நடத்துகிறார்கள் என்பது முதல் அவர்களின் அணுகுமுறைகள் மற்றும் நடத்தைகள் வரை எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளலாம்.

தொலைபேசியிலோ அல்லது உரையிலோ நடக்கும் உரையாடல்கள் அந்த நபரைப் பற்றிய நியாயமான யோசனையை உங்களுக்குத் தரக்கூடும் என்றாலும், அது அவர்களின் உடல் மொழியை நேரில் தெரிந்துகொள்ளவும் நீண்ட நேரம் பேசவும் வாய்ப்பளிக்கும். சந்தித்து பேசும்போது மட்டுமே, அது ஒரு தீயை இருவருக்குள்ளும் ஏற்படுத்தும். இருப்பினும், முதல் டேட்டிங்கில் நீங்கள் காணக்கூடிய சில தெளிவான அறிகுறிகள் உள்ளன. அவை இரண்டாவது டேட்டிங்கை மறுபரிசீலனை செய்யக்கூடும். அவற்றைப் பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

எந்த விளக்கமும் சொல்லாமல் இருப்பது
நேரம் ஒருவரை பற்றி அறிவதற்கான வாய்ப்பாக உள்ளது. டேட்டிங்கில் நேரம் தவறாமல் இருப்பது உங்கள் ஜோடியை சிறப்பாக உணர வைக்கிறது. போக்குவரத்து நெரிசல் அல்லது பார்க்கிங் இடங்கள் இல்லாத காரணத்தால் சில நிமிடங்கள் தாமதமாக வர வாய்ப்புள்ளது. எந்த விளக்கமும் மன்னிப்பும் கேட்காமல் தாமதமாக வந்து, ஏதும் சொல்லாமல் இருப்பது சரியானதல்ல. மற்றொரு நபரின் நேரத்தை மதிக்காமல் இருப்பது தவறானது.

சுற்றிலும் உள்ள ஊழியர்களை மதிக்கவில்லை
ஒரு கவனக்குறைவான தனிநபருக்கு சேவை ஊழியர்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளும் போக்கு இல்லை. டேட்டிங்கிற்கு செல்லும்போது, ஒரு உணவகத்தில் பாதுகாப்புக் காவலர்கள், வேலட்கள், ஹோஸ்ட்கள் மற்றும் ஊழியர்களை அவமரியாதையாக நடத்தினால், அவர்கள் உங்கள் தலையில் ஒரு படிநிலையை உருவாக்கி அதன் அடிப்படையில் ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதேபோல டேட்டிங்கிற்கு செல்லும்போது, உங்களை அவர்களின் காரில் ஏற்றிக்கொண்டு, சாலையில் செல்லும் மற்ற ஓட்டுனர்களிடம் கோபமாக, தவறான நடத்தையை வெளிப்படுத்தினால், அவர்கள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புள்ளது. இவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

தங்களைப் பற்றி மட்டுமே பெருமை பேசுகிறார்கள்
அவர்கள் தங்களைப் பற்றி மட்டுமே பெருமையாக பேசுகிறார்களா? அவர்கள் கேள்விகளைக் கேட்கவில்லையா? உங்களுக்குப் பேச வாய்ப்பளிக்கிறார்களா? இப்படி செய்வது டேட்டிங்கில் உங்களுக்கு சிவப்பு கொடியை காட்டுவதுபோல. நீங்கள் நேர்காணல் செய்யப்படுவதைப் போல நீங்கள் உணரகிறீர்களா? டேட்டிங்கில் ஒருவர் பற்றி ஒருவர் தெரிந்துகொள்ள அதற்கான நேரமும் வாய்ப்பையும் இருவரும் கொடுக்க வேண்டும். டேட்டிங் மிகவும் ஆய்வுக்குரியது மற்றும் உண்மையாக பேசுவதற்கும் கேட்பதற்கும் இருவருக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பது முக்கியம். அவர்களின் ஆளுமைக்கு அவர்களின் ஆடம்பரமான கார் அல்லது வார இறுதி விருந்துகள் இருந்தால், டேட்டிங் செல்வதை நிறுத்துங்கள்.

முன்னாள் காதலைப் பற்றிய பேச்சு
அவர்கள் தங்கள் சொந்த முன்னாள் காதலன் அல்லது காதலியைப் பற்றி எதிர்மறையாகவும் நியாயமாகவும் பேசினால், அது ஒரு பெரிய சிவப்புக் கொடி. உணர்ச்சிவசப்பட்ட விஷயங்களை உங்கள் மீது திணிக்காத ஒருவருடன் பழகுவதற்கு நீங்கள் தகுதியானவர். அவர்கள் தங்கள் முன்னாள் காதலரை பற்றி எதிர்மறையாக நிறைய புகார் செய்தால், அது உணர்ச்சி ரீதியாக முதிர்ச்சியடையாத நபரின் அடையாளம். இவர்களிடம் நீங்கள் தள்ளி இருப்பது நல்லது.

உங்களை அசௌகரியமாக உணரவைக்கும்
உங்கள் டேட்டிங் நன்றாக இருந்தால், நீங்கள் இன்னும் சில நேரம் ஒன்றாகச் செலவிட விரும்புவீர்கள். ஒரு டேட்டிங்கில் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தை கவனத்தில் கொள்வது மிகவும் அவசியமானது. பாதுகாப்பற்ற சுற்றுப்புறத்தில் நடக்குமாறு பரிந்துரை செய்தல், மேலும் ஊரடங்குச் சட்டத்தை மீறுவதை ஊக்கப்படுத்துதல் போன்று பாதுகாப்பற்ற உணர்வை உங்களுக்கு தந்தால், நீங்கள் அவர்களுடன் டேட்டிங் செய்யாமல் இருப்பது நல்லது.

முதல் டேட்டிங்கில் செக்ஸ் பற்றி விவாதித்தல்
செக்ஸ் பற்றி பேசுவது என்பது டேட்டிங்கின் இறுதியில் வெளிவரும். அதே வேளையில், பெரும்பாலானவர்களுக்கு இது முதல் டேட்டிங் உரையாடலாக இருக்காது. அவர்கள் செக்ஸ் தலைப்பில் ஆர்வமாக இருந்தால் அல்லது மோசமாக பேசினால், முதல் டேட்டிங்கிற்கு பிறகு உங்களுடன் உடலுறவு கொள்ள விரும்பினால், அது ஒரு நல்ல அறிகுறி அல்ல. குறிப்பாக நீங்கள் நீண்ட கால இணைப்பைத் தேடுகிறீர்களானால், இவை உங்களுக்கு சரியானதல்ல. இவர்களிடம் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

தொலைபேசியை நோட்டம் விடுவது
அவர்களின் ஃபோனைப் பற்றிய சில எளிய பார்வைகள் நன்றாக இருக்கும். ஆனால் உங்கள் டேட்டிங்கை தொடர்ந்து அவர்கள் உங்கள் மொபைலைச் சரிபார்ப்பது, உங்களின் சமூக ஊடகங்களை ஸ்க்ரோலிங் செய்வது, தனியாக சென்று செல்போன் பேசுவது போன்றவை செய்தால், நீங்கள் அவர்களுடன் இரண்டாவது டேட்டிங் செல்ல வேண்டுமா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.



Click it and Unblock the Notifications