Just In
- 6 hrs ago
வார ராசிபலன் (17.01.2021 முதல் 23.01.2021 வரை) – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- 7 hrs ago
இன்றைய ராசிப்பலன் (17.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…
- 18 hrs ago
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- 20 hrs ago
காரமான... பெப்பர் மட்டன் வறுவல்
Don't Miss
- News
வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் போட்டு பார்த்திருப்பீங்க.. வாட்ஸ்அப்பே ஸ்டேட்டஸ் போட்டு பார்த்திருக்கீங்களா?
- Movies
மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ் இந்த புத்தகக் கதைதானாமே.. நடிகை கங்கனா மீது எழுத்தாளர் காப்புரிமை புகார்!
- Automobiles
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- Sports
அதிரடி மன்னர்களின் அதிரடி அரைசதங்கள்... ஏமாற்றம் அளிக்காத இந்திய அணியின் பேட்டிங்
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அதீத காதலால் ஆண்கள் செய்யுற இந்த முட்டாள்தனங்கள் பெண்களுக்கு வெறுப்பைத்தான் தருகிறதாம்...
காதலின் வெற்றியை பொறுத்தவரை அதில் ஆண், பெண் இருவருக்குமே சமமான பங்கு உள்ளது. காதலின் வெற்றிக்கு நிதானம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். பெண்களுடன் ஒப்பிடுகையில் காதலில் ஆண்களின் நிதானம் என்பது மிகவும் குறைவுதான். ஆழமாக காதலிக்கத் தொடங்கிய ஆணின் மனது ஆறு வயது குழந்தை போல இருக்கும்.
அதீத காதலில் இருக்கும்போது ஆண்கள் அவர்களுக்கேத் தெரியாமல் சில முட்டாள்தனங்களை செய்வார்கள். தங்களுக்கு பிடித்த பெண்ணின் அன்பையும், கவனத்தையும் பெறுவதற்காக அவர்கள் செய்யும் சில செயல்களும், பேசும் உண்மைகளும் அவர்களின் காதலுக்கு எதிரியாகத்தான் இருக்கும். ஆனால் ஆண்களால் கண்டிப்பாக இதனை செய்யாமல் இருக்க முடியாது. இந்த பதிவில் அதீத காதலினால் ஆண்கள் செய்யும் முட்டாள்தனங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

அவர்களின் அனைத்து பெண்தொடர்புகளையும் கூறுவார்கள்
ஆண்கள் தங்களின் பெண் தோழிகளை எப்பொழுதும் தங்களின் சாதனையாக பார்ப்பார்கள். தங்களை விரும்பிய பெண்களின் எண்ணிக்கையை தங்களின் பெருமையாக நினைப்பார்கள். தாங்கள் விரும்பும் பெண் முன் அதனை தற்பெருமையாகக் கூறுவார்கள். அவர்கள் இதைச் செய்வதற்கான காரணம் என்னவென்றால், அவர்கள் விரும்பும் மற்றும் எந்தவொரு பெண்ணையும் வெல்லும் திறனுள்ளவர்கள் என்பதை தங்களுக்கு பிடித்த பெண் அறிந்து கொள்ள வேண்டும் என்பதோடு, அவர்களோடு இருப்பதற்கு அந்த பெண் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று உணரவைக்கவும்தான்.

தன்னைப் பற்றியே பேசிக்கொண்டே இருப்பார்கள்
தனக்குப் பிடித்த பெண்ணுடன் பேசும்போது பதட்டமடையாத ஆண்கள் இருக்க வாய்ப்பே இல்லை. அவர்கள் சில சமயங்களில் தங்களைப் பற்றி பேசுவதை நிறுத்தாததற்கு இதுவே முக்கிய காரணம். தனக்குப் பிடித்தபெண் தன்னை விரும்பாத போது அது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் எனவே தன்னைப் பற்றிய அனைத்து சிறப்புகளையும் கூறவேண்டுமென்ற ஆர்வம் அவர்களுக்கு இருக்கும். இதில் வேடிக்கையானது என்னவென்றால் இதை அவர்கள் தனக்கே தெரியாமல் செய்கிறார்கள்.

தங்கள் ஆண்மையை காட்ட கடினமாக முயற்சிப்பார்கள்
தாங்கள் விரும்பும் ஒரு பெண்ணை வெல்வதற்கான ஒரே வழி, தங்களின் ஆண்மை எவ்வளவு என்பதைக் காண்பிப்பதே என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். அதனால்தான், அவர்கள் தங்களது ‘ஆண்மை'யை வெளிப்படுத்தவும், கவர்ச்சியாகவும் தோன்ற மிகவும் கடினமாக முயற்சி செய்வார்கள், ஆனால் இது அவர்களை கோமாளிகளாகத்தான் பெண்களுக்குக் காட்டும்.

பாலியல் தீண்டல்கள்
தனக்கு பிடித்தப் பெண்ணுடன் உடல்ரீதியான நெருக்கத்தை பல ஆண்கள் விரும்புவார்கள். அதனால் அவர்கள் அந்த பெண்ணை பார்த்தவுடன் கவர்ச்சியான சிறிய அறிகுறிகளை வெளிப்படுத்தத் தொடங்குவார்கள். பேசும்போதே தொட்டு பேசுவது, பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது போன்ற முட்டாள்தனங்களில் இறங்குவார்கள். சிலர் ஒருபடி மேலே சென்று கெஞ்சத் தொடங்கிவிடுவார்கள்.

தேவையற்ற விஷயங்கள் பேசுவதை நிறுத்த மாட்டார்கள்
தனக்கு பிடித்த பெண் அருகில் இருக்கும்போது ஆண்கள் இரண்டு விஷயங்களை செய்வார்கள். ஒன்று அவர்களை பற்றி நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள் அல்லது தேவையற்ற விஷயங்களை தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள். பொருத்தமற்ற மற்றும் அற்பமான விஷயங்களைப் பற்றிப் பேசுவது அவர்களின் ஆவேசமாக மாறும், மேலும் அவர்களின் பதட்டம் குறையும் வரை வரை, அவர்கள் அதைச் செய்வதை நிறுத்த முடியாது.

அதிகம் திணறுவார்கள்
தனக்குப் பிடித்த பெண்ணிடம் பேசுவதற்கு முன் அவர்கள் என்ன பேச வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என்று பலமுறை சிந்திப்பார்கள், தங்களுக்குள்ளேயே பலமுறை ஒத்திகை பார்ப்பார்கள். அந்த பெண்ணை நநேரில் பார்த்தவுடன் ஆண்கள் திணற முக்கியக் காரணம் இதுதான். சரியான சொற்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் உரையாடலைத் தொடர்வது குறித்து அவர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர், இதனால் அவர்கள் ஈர்க்கப்படுவதற்குப் பதிலாக தடுமாற ஆரம்பிக்கிறார்கள்.

அறிவைக் காட்டுவது
சில ஆண்கள் பெண்களின் மனதை வெல்வதற்கான எளிதான வழி அவர்களின் அறிவுத்திறனை காண்பிப்பதுதான் என்று நினைக்கிறாரார்கள். ஆனால் உண்மையில் இதனால் அவர்கள் பெண்களின் கண்களுக்கு புத்திசாலி ஆண்கழுதையாகவே தெரிவார்கள் தற்பெருமை பேசும் ஆண்களை விட பெண்களை எரிச்சலூட்டம் விஷயம் எதுவும் இல்லை. இது அவர்களுக்கு பெண்களின் முன்னிலையில் அவர்களுக்கு ஒரு தவறான பிம்பத்தையே உருவாக்கும்.
MOST READ: ஆண்கள் காதலில் ஏமாற்றுவதை அவர்களின் இந்த செயல்களே காட்டிக்கொடுத்து விடுமாம் தெரியுமா?

பாவப்பட்டவர்களாக காட்டிக்கொள்வது
ஆண்கள் ஒரு பெண்ணின் மீது வெறித்தனமான காதலில் இருக்கும்போது கொஞ்சம் பாதுகாப்பற்றவனாக உணருவது இயல்பானது. அனால் சில ஆண்களுக்கு இந்த உணர்வு அதிகமாகி ‘சாதாரணமாக' தோன்றுவதற்காகவும், தங்ககளுக்காக அவர்கள் வருத்தப்பட வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் தங்களைத் தாங்களே பாவப்பட்டவர்களாக காட்டிக்கொள்ள தொடங்குவார்கள். இவ்வாறு செய்வது அவர்கள் விரும்பும் பெண்ணை ஒருபோதும் அவர்களை நோக்கி ஈர்க்காது.