For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க காதலரிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவங்க உங்களை வேண்டா வெறுப்பாக காதலிக்கிறாங்கனு அர்த்தமாம்...!

உங்கள் உறவில் மகிழ்ச்சி தொடர்ந்து குறைந்து வரும்போது, உங்கள் துணை உங்களை மதிக்கவில்லை அல்லது உங்களுக்கு போதுமான முக்கியத்துவத்தை அளிக்கவில்லை என்பதைக் குறிக்கும் எச்சரிக்கை அறிகுறிகளை கவனிக்க வேண்டும்.

|

ஒரு ஆரோக்கியமான உறவு உங்களை உயர்த்தி வாழ்க்கையில் முன்னேற உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. ஆனால் உங்கள் உறவில் மகிழ்ச்சி தொடர்ந்து குறைந்து வரும்போது, உங்கள் துணை உங்களை மதிக்கவில்லை அல்லது உங்களுக்கு போதுமான முக்கியத்துவத்தை அளிக்கவில்லை என்பதைக் குறிக்கும் எச்சரிக்கை அறிகுறிகளை கவனிக்க வேண்டும்.

Signs Your Partner Doesnt Deserve You

சில சந்தர்ப்பங்களில், உங்கள் கணவர் அல்லது காதலர் உங்களை மறைமுகமாக அவமதிப்பதாக இருக்கலாம், இதனால் உங்களுக்கு சந்தேகம் மற்றும் இழிவான எண்ணம் தோன்றலாம். நீங்கள் காதலில் எப்போதும் பாதுகாப்பான பக்கத்தில் இருக்கவும் உங்கள் துணை உங்களை பெறுவதற்கு தகுதியற்றவராக இருப்பதையும் உணர்த்தும் சில அறிகுறிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவருடன் பேசும்போது அவர் எப்போதும் திசைதிருப்பப்படுவது

அவருடன் பேசும்போது அவர் எப்போதும் திசைதிருப்பப்படுவது

ஒவ்வொரு முறையும் நீங்கள் அவருடன் சில விஷயங்களைப் பற்றி விவாதிக்க விரும்பினால், அவர் விலகிப் செல்வார்கள். உங்கள் கணவர் எப்போதுமே இதுபோன்ற தொலைதூர நடத்தையைக் காட்டினால், அவர் உங்களுடன் உரையாட குறைந்த பட்சம் ஆர்வம் கூட காட்டவில்லை என்று அர்த்தம். நீங்கள் பேசும் முழு நேரமும் அவர் தனது தொலைபேசியைப் பார்க்கக்கூடும். எளிமையாகச் சொன்னால், அவர் உங்களிடம் கவனம் செலுத்த மாட்டார்.

தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது

தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது

உங்கள் கணவர் உங்களுக்கு அளித்த வார்த்தைகளையோ வாக்குறுதிகளையோ காப்பாற்ற முயற்சிக்க மாட்டார். மோசமான பகுதி என்னவென்றால், அவர் அவற்றைப் பற்றி எப்போதும் மறந்துவிடுவார். நீங்கள் அவருக்கு நினைவூட்டினாலும், அவர் உங்கள் வார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்பில்லை. வெளியே செல்வதை ரத்துசெய்வது, கால் செய்ய அல்லது மெசெஜ் செய்ய மறப்பது, முக்கியமான தேதிகளை மறந்துவிடுவது கூட அவர் உங்களுக்கு போதுமான அக்கறை காட்டவில்லை என்பதற்கான அறிகுறியாகும்.

MOST READ:நம் முன்னோர்கள் 100 ஆண்டிற்கும் மேல் வாழ காரணமாக இருந்தது இந்த ஆயுர்வேத உணவு தந்திரங்கள்தான்...!

தன்னைப் பற்றி மட்டும் சிந்திப்பது

தன்னைப் பற்றி மட்டும் சிந்திப்பது

தங்கள் கனவுகள், லட்சியங்கள், விருப்பு வெறுப்புகள் மற்றும் எல்லாவற்றையும் பற்றி மட்டுமே அவர் பேசுவதை நீங்கள் காணலாம். அவர் தனக்கும் தனது வேலைக்கும் மட்டுமே முன்னுரிமை அளிப்பார். கூடுதலாக, அவர் உங்களை விட தாழ்ந்தவராக உணர வைப்பார். மிக மோசமான பகுதி, நீங்கள் எப்போதாவது அவருடன் பகிர்ந்து கொள்ள நேர்ந்தால், அவர் உங்கள் கனவுகளையும் லட்சியங்களையும் கேலி செய்வார்.

மன்னிப்பு கேட்க மாட்டார்

மன்னிப்பு கேட்க மாட்டார்

‘மன்னிக்கவும்' என்று சொல்வது மற்றும் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பது அவருக்கு கஷ்டமான செயலாக தோன்றும். அவர் செய்த தவறுக்கு உங்களைக் குறை கூறுவதாக இருந்தாலும், விமர்சனத்தைத் தவிர்க்க அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார். அவர் தனது தவறுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார், மேலும் அவர் தவறு இல்லை என்பதை நிரூபிப்பதற்கான வழிகளைத் தேடுவார்.

 உங்களை மாற்றிக்கொள்ளும்படி கட்டயப்படுத்துவார்

உங்களை மாற்றிக்கொள்ளும்படி கட்டயப்படுத்துவார்

உங்கள் காதலர் உங்கள் தேர்வுகள் மற்றும் விருப்பங்களுக்காக உங்களை கேலி செய்வார், இதனால் உங்களை சந்தேகிக்க வழிவகுக்கும். சுயமரியாதை பிரச்சினைகள் அதிகரித்து வருவதால், உங்கள் காதலரின் கருத்துக்களுக்கு ஏற்ப நீங்கள் வடிவமைக்கப்படுவீர்கள். அவர் உங்கள் தனித்துவத்தை மதிக்க மாட்டார், மேலும் நீங்கள் உங்களை முழுமையாக மாற்றிக் கொள்ள விரும்புவீர்கள், இதனால் நீங்கள் அவருடன் எப்போதும் நிம்மதியாக இருக்க முடியும் என்று நினைக்கத் தொடங்குவீர்கள்.

MOST READ:பெண்கள் காதலிப்பதை விட சிங்கிளாக இருக்க விரும்புவதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா?

உங்களை குறைத்து மதிப்பிடுவது

உங்களை குறைத்து மதிப்பிடுவது

உங்கள் கணவர் உங்களை பொது இடங்களில் அல்லது அவரது பணி சகாக்கள் அல்லது நண்பர்களுக்கு முன்னால் மட்டம் தட்ட முயற்சிக்கலாம். நீங்கள் யார் என்பதில் அவர் பெருமைப்படுவதில்லை என்பதை அவர் தெளிவுபடுத்துவார். "உங்கள் உரத்த குரலைக் குறைத்துக்கொள்ளுங்கள்", "சரியாகச் சாப்பிடுங்கள்" என்பது அவரிடமிருந்து நீங்கள் கேட்கும் சில அவமரியாதைக்குரிய விஷயங்களைக் கூறிக்கொண்டே இருப்பார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs Your Partner Doesn't Deserve You

Here are some noticeable signs your partner doesn’t deserve you.
Story first published: Wednesday, March 24, 2021, 13:09 [IST]
Desktop Bottom Promotion