For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதையெல்லாம் உங்கள் பெற்றோரிடம் செய்திருக்கிறீர்களா? இதைப் படிங்க கட்டாயம் உதவியா இருக்கும்.

|

குழந்தையாக வளரும் போது நம்மிடம் என்ன பிழைகள் இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு நம்முடைய வளர்ச்சிக்கு பெற்றோர்கள் முக்கியக் காரணமாக இருக்கிறார்கள். அதே சமயம் நாம் வளர்ந்த பிறகு முதுமையின் காரணமாக அவர்கள் செய்யும் பிழைகளை ஒரு போதும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் பெற்றோர்களை வளர்ந்த பின்னும் எவன் மதிக்கிறானோ அவனோ வாழ்க்கையின் உன்னத படிநிலைகளை அடைவான்.

Essential Ways To Respect Your Parents

கேள்வி கேக்காதீர்கள்:

நீங்கள் குழந்தையாக இருக்கும் போது உங்கள் பெற்றோர் சொன்ன எல்லாத்தையும் வேதவாக்காகத் தான் இருந்திருக்கும். ஆனால் வளர்ந்த பிறகு உங்கள் பெற்றோரையே எதிர்த்து கேள்வி கேட்குமளவுக்கு வளர்ந்து விடுகிறார்கள். அந்த மாதிரியான சூழலில் உங்கள் பெற்றோர் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பீர்கள். ஆனால் அவர்கள் உங்களை புரிந்து கொண்ட அளவுக்குக் கூட உங்கள் பெற்றோரை புரிந்து கொள்ள நீங்கள் முயல்வதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெற்றோருடன் செலவிடுங்கள்:

பெற்றோருடன் செலவிடுங்கள்:

1.உங்கள் வாழ்க்கைச் சக்கரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போது நேரமின்மை என்ற காரணங்களால் உங்கள் பெற்றோருடன் நேரம் செலவிடுவதை குறைத்து விடாதீர்கள்

2.எப்போதாவது உங்கள் பெற்றோர் நோய்வாய் படும் போது அருகில் இருங்கள் அல்லது ஒரு நிமிடம் அவர்கள் கையைப் பிடித்து நம்பிக்கை கூறுங்கள்

3.உங்கள் வாழ்வு இவ்வளவு பிராகசமாக இருக்கிறதென்றால் அவர்கள் தான் காரணம் அதற்காக அவருக்கு நன்றி கூறுங்கள்

4.உங்கள் பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். உங்கள் இருவருக்குமான தலைமுறை இடைவெளியை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சரியாக இருந்தாலும் அவருக்கு கீழ்படிபவராக இருந்து பழகுங்கள்.

5.எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் குரலை அவர்களிடம் உயர்த்தாதீர்கள். அவர்கள் தவறே செய்திருந்தாலும் கூட.. பொறுமையாக அணுகுங்கள்.

Most Read:கல்யாண வாழ்க்கை சந்தோசமா அமைய இந்த 9 ஸ்டேஜை கம்ப்ளீட் பண்ணிருக்கனுமாம்

பெற்றோரை புரிந்துக் கொள்ளுங்கள்

பெற்றோரை புரிந்துக் கொள்ளுங்கள்

6.உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கும். அப்படி இருக்கும் போது நீங்களே முன்வந்து மன்னிப்பு கேட்கத் தயராக இருங்கள்.

7. அவர்களிடம் உண்மையாக இருங்கள். வெளிப்படையாக இருங்கள். உங்களின் குமுறல்களை வெளிப்படையாக முன்வையுங்கள்.

8.ஒருபோதும் அவர்களுக்கு கட்டளையிடாதீர்கள். ஏனெனில் அவர்கள் வாழும் காலத்தில் யாருடைய அதட்டலுக்கும் உள்ளாகியிருக்க மாட்டார்கள்.

9. நீங்கள் தவறுகளிலிருந்து உங்களை சரிசெய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அதற்கு அவரே காரணம் எனவே ஒருபோதும் அவர் மீது பழிகளை சுமத்தாதீர்கள்.

10. குழந்தைகளை நம்பி தான் தங்களின் வாழ்க்கையே அர்பணித்திருப்பார்கள் எனவே ஒரு போதும் அவரது நம்பிக்கையை உடைத்துவிடாதீர்கள்.

 கட்டளை இடாதீர்கள்

கட்டளை இடாதீர்கள்

11. நீங்கள் முடிவெடுக்கும் முன் அவர்களிடம் ஆலோசனைகளை கேளுங்கள். முடிவெடுத்தப் பின் கட்டளை இடாதீர்கள்.

12.அவர்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்.

13.முக்கியமான நாட்களை அவர்களுடன் கொண்டாடுங்கள். அவர்களின் பிறந்த நாள்களை ஒரு போதும் கொண்டாடி இருக்க மாட்டார்கள். அது போன்ற இனிமையான நினைவுகளை அவருக்கு வழங்குங்கள்.

14.பெற்றோர்களை கேலிப் பொருளாக எண்ணி அவர்களின் மனதை புண்படுத்தாதீர்கள்.

15. அவர்களிடம் பேசும் போது பொறுமையை கையாளுங்கள்.

தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்

தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்

16. தொலைவில் இருப்பவர்கள் உங்களிடம் பேசவாவது செய்வோம் என அலைபேசியில் அழைப்பார்கள். ஒருபோதும் அதை புறந்தள்ளிவிடாதீர்கள்.

17.உங்கள் நண்பர்களின் மத்தியில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஏனெனில் நீங்கள் சிறியதாக சாதித்தால் கூட ஊருக்கே தண்டாரம் போட்டவர்கள் உங்களுடைய பெற்றோர்கள்.

18. வாழ்க்கை முழுவதும் உங்களுக்காகவே வாழ்ந்தவர்கள் எனவே அவருக்கென்ற ஒரு வாட்ச் கூட வாங்கியிருக்க மாட்டார்கள். அவர் உங்களிடம் ஒரு போதும் எதிர்பார்க்க மாட்டார். ஆனால் அதையெல்லாம் கவனித்து வாங்கிக் கொடுங்கள்.

19. முதுமையின் கடைசி காலங்கள் மிகவும் கொடியது. அந்த சூழலில் அவர்களுடன் உங்களுடைய நேரத்தை ஒதுக்குங்கள்.

20. வீட்டிலேயே அடைந்திருப்பது அவர்களுக்கு ஒரு மாதிரியாக இருக்கும் குறைந்த பட்சம் அருகில் இருக்கக் கூடிய கோவிலுக்காவது அழைத்துச் செல்லுங்கள்.

Most Read:என்ன செஞ்சாலும் உங்க காதலர் கண்டுக்கவே மாட்டேங்கிறாரா? இதை செய்து பாருங்கள் உங்களை சுற்றி வருவார்

உங்கள் வேலைக்காரராக நடத்தாதீர்கள்:

உங்கள் வேலைக்காரராக நடத்தாதீர்கள்:

21.குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கான வேலைக் காரர்கள் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

22. உங்கள் பிரச்சினைகளை அவர்களிடம் எப்போதும் போல பகிர்ந்து கொள்ளுங்கள். நிச்சயம் உங்கள் துயரங்களுக்கு நல்லதொரு தீர்வு அவர்களிடம் இருக்கும்.

23.அவர்களுடைய கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஒருவேளை அந்தக் கருத்துக்கு நீங்கள் முரண்பட்டால் அவருடைய கருத்தை உதாசீணப்படுத்தாதீர்கள்.

24. மிக முக்கியமானது அவர்களை ஒருபோதும் காயப்படுத்தும்படி பேசவோ, நடந்துக் கொள்ளவோக் கூடாது. உங்களுக்குள் எவ்வளவு கசப்பான சம்பவங்கள் நடைபெற்றாலும் கூட அவர்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து ஒரு போதும் ஒதுக்கி வைத்துவிடாதீர்கள்.

25. இந்த உலகத்தில் உங்களை அதிகமாக நேசித்தவர்கள் உங்கள் பெற்றோராகத் தான் இருப்பார்கள். அதனால் தாவு தாட்சனையின்றி அவர்கள் மீது அன்பு செலுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Essential Ways To Respect Your Parents

Parents are a major factor in our growth as a child, accepting whatever errors we have. At the same time, as we grow older, we will never accept the errors they make because of old age. But whoever respects his parents after he grows up, will reach the highest stages of life
Desktop Bottom Promotion