Just In
- 48 min ago
அதிரடி தள்ளுபடி விலையில் வீட்டிற்கு தேவையான பொருட்களை இப்போதே அமேசானில் ஆடர் செய்யுங்கள்!
- 1 hr ago
அமேசானில் 60% தள்ளுபடி விற்பனையில் உடற்பயிற்சி மற்றும் வீட்டை நவீனமாக்கும் பொருட்களை வாங்குங்கள்...!
- 1 hr ago
வெஜ் சால்னா
- 2 hrs ago
மழைக்காலத்தில் உங்க முடி கொட்டாமல் இருக்க & பொடுகு தொல்லை இல்லாமல் இருக்க நீங்க இத பண்ணா போதுமாம்!
Don't Miss
- News
திமுக பிரமுகர் ஓடஓட விரட்டிக் கொலை.... விழுப்புரத்தில் மர்ம கும்பல் வெறிச்செயல்!
- Sports
"ஃப்ளவர்னு நினைச்சியா.. ஃபையரு".. ஆசியக்கோப்பை குறித்து இஷானின் ஆதங்க பதிவு..ஏன் சேர்க்கப்படவில்லை?
- Automobiles
தன்னுடையே போர்ஷே காருக்காக சில லட்சங்களை வாரி இறைத்த சச்சின் டெண்டுல்கர்... மனுஷனுக்கு ரசனை அதிகம்!
- Movies
விவாகரத்து பெற்ற கையோடு பாக்கியா செய்த அதிரடி.. அதிர்ச்சியில் எழில்!
- Technology
எதிர்பார்த்ததை விட ரூ.3,000 கம்மி விலைக்கு அறிமுகமான தரமான Camera Phone!
- Finance
பிக்சட் டெபாசிட் செய்ய திட்டமா.. இது தான் சரியான நேரம்.. !
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
ஆண்களை விட பெண்கள் எப்படி வித்தியாசமாக கள்ள உறவில் ஏமாற்றுகிறார்கள்? ஏன் ஏமாற்றுகிறார்கள் தெரியுமா?
பொதுவாக ஆண், பெண் உறவு என்பது மிகவும் சிக்கல் நிறைந்தாக உள்ளது. இது அவர்கள் புரிந்துகொள்வதிலும், பாலியல் வாழ்க்கையிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தற்போது, பெரும்பாலான மக்கள் கள்ள உறவில் ஈடுபடுவதாக நம்பப்படுகிறது. இதில், ஆண்களை விட பெண்கள் அதிகமாக அல்லது வித்தியாசமாக ஏமாற்றுகிறார்களா? என்ற கேள்வி எப்போதும் எழுகிறது. மகிழ்ச்சியற்ற தம்பதியினர், தங்கள் துணையுடன் இருப்பதில் திருப்தியடையாமல், மற்றவர்களுடன் தங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்ய கள்ள உறவில் ஈடுபடலாம். இந்த செயல்பாட்டில், சில ஆண்களும் பெண்களும் தங்கள் ஏமாற்று தந்திரங்களில் மிகவும் புத்திசாலியாக இருக்கிறார்கள்.
அதனால் அவர்கள் தங்கள் துணையிடம் பிடிபடக்கூடாது என்று கவனமாக இருப்பார்கள். இருப்பினும், பெண்கள் ஏமாற்றுவதைப் பற்றிய வித்தியாசமான வழியையும் கண்ணோட்டத்தையும் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. அதைப்பற்றி தெரிந்துகொள்ள இக்கட்டுரையை முழுவதுமாக படியுங்கள்.

ஆய்வுகள் என்ன பரிந்துரைக்கின்றன?
பெண்கள் தங்கள் கணவரை விட ஆரோக்கியமான, சிறந்த விருப்ப தேர்வுகளைக் கண்டால் ஏமாற்ற முனைகிறார்கள் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கென்று ஒரு ஜாலியான நேரம் மற்றும் அவர்களின் தற்போதைய திருமணத்தின் மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்கக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட வாய்ப்புகளை அவர்கள் தேடுகிறார்கள். அதேசமயம், ஆண்கள் வாய்ப்புகளை பரந்த அளவில் பார்க்க முனைகின்றனர். அவர்கள் அதிகமான மக்களிடம் பொருந்தக்கூடிய தன்மையைக் கண்டறிய முயற்சி செய்கிறார்கள்.

பெண்களை ஏமாற்றுவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன
ஆண்கள் பெண்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதில் மிகவும் விவேகமானவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் கணவரின் நடத்தை பற்றி ஆழமான புரிதலைக் கொண்டுள்ளனர். இது அவர்களின் துரோகத்தை மறைப்பதை எளிதாக்குகிறது. அவர்கள் தங்கள் வசதிக்கேற்ப, தங்கள் கணவரின் மனநிலையை சிறப்பாகக் கட்டுப்படுத்துவதையும் அறிந்து வைத்திருப்பார்கள். இது அவர்கள் மற்றொருவருடன் கள்ள உறவில் ஈடுபடுவதை எளிதாக்குகிறது.

பெண்கள் துரோகத்தில் ஈடுபடுவதற்கான காரணங்கள்
சில பெண்கள் உறவில் மிகக் குறைந்தளவே சுயமரியாதையைக் கொண்டுள்ளனர். பலர் தங்கள் சுயமரியாதையை முழுவதும் இழந்து உறவில் இருக்கிறார்கள். இதனால், பெண்கள் தங்கள் உறவுக்கு வெளியே அதற்கான சரிபார்ப்பைக் காண விரும்புகிறார்கள். சில பெண்கள் வெறுப்பு அல்லது கோபம் அல்லது உறவில் அதிருப்தி அடையும் போது ஏமாற்றுகிறார்கள். தனிமை மற்றும் உணர்ச்சி ரீதியான கைவிடுதல் ஆகியவை பெண்கள் பொதுவாக ஏமாற்றுவதற்கான வேறு சில காரணங்களாகும். இவை ஆண்களைப் போலவே இருந்தாலும், பெண்கள் பொதுவாக இதை உயர்ந்த தொனியில் உணர்கிறார்கள்.

பாலியல் பற்றாக்குறை
தம்பதிகள் ஏமாற்றுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பாலியல் வாழ்க்கையில் திருப்தி இல்லாமல் இருப்பது. அவர்களின் பாலியல் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை அவர்கள் உணராதபோது, அவர்கள் ஏமாற்றுவார்கள். ஆண்கள் பொதுவாக தங்களுக்குக் கிடைக்கும் எந்த வாய்ப்புகளையும் பார்க்கிறார்கள். ஆனால் பெண்கள் தங்கள் ரசனைக்கு மிகவும் நேர்த்தியான ஒரு நபரைத் தேடுகிறார்கள். சில நேரங்களில், பெண்கள் தங்கள் பாதையைக் கடக்கும் நபர்களுடன் அதிகம் தொடர்பு கொள்கிறார்கள். மேலும் இது அவர்களுக்கு ஏமாற்றுவதில் ஈடுபடுவதற்கான மற்றொரு வாய்ப்பை வழங்குகிறது.

ஒரு ஆணும் பெண்ணும் ஏமாற்றுவதற்கு என்ன வித்தியாசம்?
ஆண்கள் தங்கள் காதலிகளை தங்கள் மனைவிகளை விட தாழ்ந்தவர்கள் அல்லது உயர்ந்தவர்கள் என்று உணர்ந்தாலும், வாய்ப்பு கிடைத்ததால் ஏமாற்றுகிறார்கள். மறுபுறம், தங்கள் வாழ்க்கைத் துணையை விட உயர்ந்த காதலர்கள் கிடைக்கும்போது பெண்கள் ஏமாற்றுகிறார்கள்.

ஒரு பெண் உன்னை ஏமாற்றி இன்னும் காதலிக்க முடியுமா?
காதல் இருக்கிறதா இல்லையா என்பதில் பாலினம் தாக்கத்தை ஏற்படுத்தாது. புள்ளிவிவரங்களின்படி, பெண்களை விட ஆண்கள் ஏமாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 23% ஆண்கள் மற்றும் 19% பெண்கள் கள்ள உறவில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், எவரும் ஏமாற்றும் திறன் கொண்டவர்கள், எவரும் நேசிக்கக்கூடியவர்கள்.