For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலர் வாரம் 2019 - ரோஸ் டே, கிஸ் டே இன்னும் என்னென்ன தினம்லாம் இருக்கு தெரியுமா?

காதலர் வாரத்தில் 7 நாட்களும் என்னென்ன தினங்கள் என்னும் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. படித்து தெரிந்து கொள்ளுங்கள். அதில் இன்று தான் பிப்ரவரி 7 ஆம் நாள் தான் முதல் நாள் தோஸ் தினம்.

By Mahibala
|

பிப்ரவரி 14. இந்த நாளின் மீதான ஈர்ப்பு மட்டும் எப்போதும் குறைவதே இல்லை. காதலர் தினத்தின் மீது எப்போதும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்யும். ஏனென்றால் அந்த அன்பும் அன்பானவர்களிடம் கொண்டிருக்கிற ஈர்ப்பு, எதிர்ப்பார்ப்பு ஆகியவை தானே இன்னும் இந்த உலகத்தை உயிரோடு வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

Valentines Week Days

அப்படி எல்லா இளைஞர்களாலும் எதிர்பார்க்கப்படுகிற ஒரு தினம் தான் காதலர் தினம். ஏனென்றால் அந்த நாளில் தான் காதலிக்கிற பெண்ணிடம் பிரபோஸ் பண்ணவும் ஏற்கனவே புரபோஸ் செய்து காதலித்துக் கொண்டிருக்கிற பெண்ணுக்கு சர்பிரைஸ் கிஃப்ட் வாங்கிக் கொடுப்பதற்காகவும் தான் அந்த நாள் நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காதலர் வாரம்

காதலர் வாரம்

பொதுவாக நாம் பிப்ரவரி 14 ஐ மட்டும் தான் காதலர் தினமாக்க கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். ஒரே நாளில் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் ஒருவரை நாம் புரபோசல் செய்து, அதே நாளுக்குள் அவரும் முடிவு செய்து காதலித்து விட முடியுமா என்ன? அதனால் தான் காதலர் வாரம் என்று ஒன்று கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி 7 ஆம் தேதி இந்த காதலர் வாரம் தொடங்கும். தொடர்ந்து 7 நாட்கள் முடிந்ததும் 14 ம் தேதி காதலர் தினமாக இருவரும் கைகோர்க்கும் தினமாக கொண்டாடுகிறோம்.

MOST READ: பிரா அணியாமல் சிவப்பு சட்டையோடு காலண்டருக்கு போஸ் கொடுத்த ஹாட் சன்னி லியோன்...

அந்த 7 நாட்கள்

அந்த 7 நாட்கள்

காதலர் வாரம் பிப்ரவரி 7 ஆம் நாள் தொடங்கும். அன்றிலிருந்து 7 நாட்களும் ஏழு விதமான காதல் கொண்டாட்டங்கள் இருக்கும். ஏற்கனவே காதலர்களாக இருக்கிறவர்களும் காதலிக்கப் போகிறவர்களும் இந்த ஏழு நாட்களும் என்னென்ன நாட்கள் என்பதைத் தெரிந்து கொண்டு சர்பிரைஸ் பண்ணுங்க. என்ஜாய் பண்ணுங்க.

பிப்ரவரி 7 - ரோஸ் டே (ரோஜ் தினம்)

பிப்ரவரி 8 - பிரபோசல் டே

பிப்ரவரி 9 - சாக்லேட் தினம்

பிப்ரவரி 10 - டெடி டே (டெடி பியர்)

பிப்ரவரி 11 - பிராமிஸ் டே ( சத்தியபிரமான நாள்)

பிப்ரவரி 12 - கட்டிப்பிடி தினம் (கட்டிப்பிடிக்கும் நாள்)

பிப்ரவரி 13 - கிஸ் டே (முத்த தினம்)

பிப்ரவரி 14 - வேலன்டைன்ஸ் டே (காதலர் தினம்)

பிப்ரவரி 7 - ரோஸ் டே

பிப்ரவரி 7 - ரோஸ் டே

இன்று தான் காதலர் வாரத்தின் முதல் நானான ரோஸ் தினம். உங்களுடைய காதலன் அல்லது காதலிக்கும் சேிவப்பு நிற ரோஜாக்கள் மற்றும் பி மலர்கள் பரிசாகக் கொடுத்து அவர்களை இந்த வருட காதலர் தினத்துக்குத் தயார் படுத்தும் நாள். முதல் நாள் என்பதால் புத்துணர்ச்சியோடு ஒரு விஷயத்தைத் துவங்க வேண்டும் என்பதற்காக ரோஸ் தினம் கொண்டாடப்படுகிறது.

பிப்ரவரி 8 - பிரபோசல் டே

பிப்ரவரி 8 - பிரபோசல் டே

பொதுவாக எல்லோரும் பிப்ரவரி 14 ஆம் நாளான காதலர் தினத்தன்னு தான் தனக்குப் பிடித்த நபரின் சென்று புரபோஸ் பண்ணுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. காதலர் வாரத்தினுடைய அரண்டாம் நாளான பிப்ரவரி 8 ஆம் தேதி தான் புரபோசல் தினம். இந்த வருடம் உங்களுடைய காதலை சொல்ல திட்டமட்டிருக்கிற அனைவரும் 14 ஆம் தேதி வரை காத்திருக்காமல் நாளைக்கே சொல்லிவிடுங்கள். அப்போது தான் 14 ஆம் தேதி உங்களுக்கு ஒரு நல்ல முடிவு வந்து சேரும்.

பிப்ரவரி 9 - சாக்லேட் தினம்

பிப்ரவரி 9 - சாக்லேட் தினம்

காதலர் வாரத்தின் மூன்றாம் நாள் பிப்ரவரி 9 ஆம் தேதி. அன்று சாக்லேட் தினம். இந்த தினத்திலேயே உங்களுடைய காதல் வெற்றியா தோல்வியா என்பதை ஐம்பது சதவீதம் கண்டுபிடித்து விடலாம். சாக்லேட் பிடிக்காத பெண்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நீங்கள் தேர்வு செய்து வாங்கிக் கொடுக்கும் சாக்லேட்டைப் போலவே உங்களுக்கான பதிலும் இருக்கும். இதுபோன்ற நாட்களில் தரப்படும் சாக்லேட்டுகளை சாப்பிட்டுவிட்டு அந்த ரேப்பர்களை பத்திரமாக வைத்திருப்பார்கள் பெரும்பாலான பெண்கள்.

MOST READ: பிணத்தை எரித்து அதை வாழைப்பழத்தில் தொட்டு சாப்பிடும் விநோத பழக்கம்... எங்க நடக்குது தெரியுமா?

பிப்ரவரி 10 - டெடி டே

பிப்ரவரி 10 - டெடி டே

பொதுவாகவே பெண்களுக்கு டெடி பியர் என்றால் கொள்ளை பிரியம். எல்லா பெண்களின் அறைகளிலும் நிச்சயம் டெடி பியர் இருக்கும். அதுதான் அவருடைய துணையாகவே இருக்கும். சந்தோஷம், துக்கம் என எல்லா விஷயங்களையும் அதனுடன் பகிர்ந்து கொள்வார்கள். அப்படிப்பட்ட டெடிக்கு ஒரு நாள் இல்லையென்றால் எப்படி? அது தான் பிப்ரவரி 10. பிப்ரவரி 10 ஆம் நாள் டெடி பியர் டே. தங்களுடைய காதலித்துப்பிடித்த மாதிரி அழகிய டெடிக்களை பரிசளிக்கும் நாள் அது.

பிப்ரவரி 11 - பிராமிஸ் டே

பிப்ரவரி 11 - பிராமிஸ் டே

ரோஜா, சாக்லேட், டெடி என எல்லா பரிசுகளையும் வாங்கிக் கொண்டு உங்களுக்கு செவிசாய்ப்பதற்காக காத்துக் கொண்டிருக்கும் காதலியிடம் நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன். உன்னை என் கண் இமைகளுக்குள் வைத்து காப்பேன் என்பது போன்ற உறுதிமொழிகளைத் தெரிவித்து சத்தியம் செய்யும் நாள். சத்தியமும் பிராமிசும் ஆண்களுக்கும் சொல்லியா தர வேண்டும். அதுதான் வண்டி வண்டியாக வருமே!

பிப்ரவரி 12 - கட்டிப்பிடி தினம்

பிப்ரவரி 12 - கட்டிப்பிடி தினம்

கட்டிப்பிடி வைத்தியம், கட்டிப்பிடி கட்டிப்பிடி டா என்பது போன்று பிப்ரவரி 12 ஆம் தேதி கட்டிப்பிடிக்கும் நாள். தான் காதலிக்கும் நபரைக் கட்டிப்பிடித்து அன்பைத் தெரிவிக்கும் நாள். இந்த அணைப்பில் உங்களுடைய முழு அன்பும் அரவணைப்பும் தெரிய வேண்டும். அதில காமம் மட்டும் வெளிப்பட்டுவிடக் கூடாது. அதில் கவனமாக இருக்க வேண்டும். இது மயிரிழையில் உயிர் தப்பும் விளையாட்டு.

பிப்ரவரி 13 - கிஸ் டே

பிப்ரவரி 13 - கிஸ் டே

அப்பாடா நீங்கள் எதிர்பார்த்த நாள் வந்துவிட்டதா? ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 ஆம் நாள் வருவது தான் முத்த தினம். இந்த நாளில் நீங்கள் பிரபோஸ் செய்த காதல் துணை உங்களுக்கு முத்தம் கொடுத்தாலோ அல்லது உங்களுடைய முத்தத்தை அவர் ஏற்றுக் கொண்டாலோ 99 சதவீதம் உங்களுடைய காதல் வெற்றியை நோக்கிப் போய்விட்டது என்பது அர்த்தம். இந்த நாளில் காதலிக்கும் இருவரும் மாறி மாறி முத்த மழை பொழிந்து தங்களுடைய காதலை வெளிப்படுத்திக் கொள்வார்கள்.

MOST READ: 4 மாத கர்ப்பமாக இருந்த ஆட்டை கதறக் கதற பாலியல் வன்புணர்வு செய்த காமக்கொடூரன்...

பிப்ரவரி 14 - வேலன்டைன்ஸ் டே (காதலர் தினம்)

பிப்ரவரி 14 - வேலன்டைன்ஸ் டே (காதலர் தினம்)

ஒருவழியா எல்லா நாளும் முடிஞ்சிருச்சுப்பா. தூக்கு தண்டனை கைதி தண்டனையை நிறைவேற்றக் கூட இப்படியொரு டென்ஷனோட காத்திட்டு இருக்க மாட்டான். அப்படியொரு தவத்தில் விடிய விடிய தூங்காமல் காலையில் எழுந்து காதலியைப் பார்க்கச் சென்று, அவளுக்குப் பிடித்த பரிசுகளைக் கொடுத்து சந்தோஷப்படுத்தி விட்டு, சினிமா, பார்க், பீச் என அவளுக்குப் பிடித்த விஷயங்களா தேடித் தேடி செய்து மகிழ்ச்சியில் திளைக்கும் அந்த நாள் தான் வுலண்டைன்ஸ் டே என்று சொல்லப்படுகிற காதலர் தினம். அதுதான் பிப்ரவரி 14. என்ன வாசகர்களே! இந்த வரிசைப்படி கொண்டாடத் தொடங்குங்க. சந்தோஷமா இருங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Valentine's Week Days Full List 2019

Valentine Week 2019 is Here, So if you want to know which day in valentine’s week represents what, then you are in luck now. Below you can check the valentines week list 2019.
Story first published: Thursday, February 7, 2019, 15:26 [IST]
Desktop Bottom Promotion