For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரச்னையே இல்லாம ரொமான்ஸ் மட்டும் அதிகமாக வாஸ்து என்ன சொல்லுதுன்னு தெரியுமா?

|

திருமணத்தில் ஏற்படும் சிக்கல் குறித்து வாஸ்து சாஸ்திரம் என்ன கூறுகிறது எனத் தெரியுமா?. ஆம். வாஸ்துவில் கூட இதற்குத் தீர்வுகள் உண்டு. அவற்றைப் பற்றி இங்கே விரிவாகப் பார்க்கலாமா?

Problems in Marriage

திருமணம் என்பது எல்லோர் வாழ்விலும் வரும் முக்கியமான பந்தமாகும். இது இரண்டு மனங்கள் ஒத்துப் போகின்ற விஷயம் மட்டுமல்ல இரண்டு குடும்பங்களின் இணைப்பு என்றே கூறலாம். எனவே தான் குடும்பத்தில் ஏற்படும் ஒருவரின் மகிழ்ச்சியோ துக்கமோ எல்லாரையும் பாதிப்படையச் செய்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருமணம் என்னும் சொர்க்கம்

திருமணம் என்னும் சொர்க்கம்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்பார்கள். மரணம் வரை தொடருவது இந்த பந்தம் மட்டுமே. அதனால் திருமணம் குறித்து மக்கள் நிறையவே மெனக்கெடுகிறார்கள்.அதனால் தான் தேர்ந்தெடுக்கப் போகும் துணையின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள் குறித்து ஆராய்கிறார்கள். எனவே தான் ஜோதிட கூற்றுப்படி திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக ஆக்க சில விஷயங்களை ஆராய்கிறார்கள்.

MOST READ: இந்த ஏழு செடிகளும் வீட்டில் இருந்தால் வீட்டுக்கு கெட்ட சக்தியைக் கொண்டு வருமாம்...

திருமண அவசியம்

திருமண அவசியம்

கண்டிப்பாக இரண்டு நபர்களை நெருக்குவதில் காதல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. காதலைத் தவிர்த்து பொருத்தம் மற்றும் மரியாதையும் அவசியம். இவைகள் ஒரு நீண்ட சந்தோஷமான உறவிற்கு வழிவகுக்கின்றன.

பிரிவு

பிரிவு

இந்த அவசர காலத்தில் குடும்பத்தில் ஒரு அமைதி நிலவுவதே இல்லை. பணி அழுத்தம், துணையுடன் பேசுவதற்கு போதுமான நேரம் ஒதுக்காமல் இருத்தல் இது போன்ற பிரச்சினைகளால் திருமண உறவில் சிக்கலும், சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டு பிரிய நேரிடுகிறது.

இதர காரணங்கள்

இதர காரணங்கள்

இந்த பிரிவு ஏற்படுவதற்கு அவசர வாழ்க்கை மட்டும் காரணமாக அமைவதில்லை. நிறைய காரணங்களால் தற்பொழுது விவகாரத்து எண்ணம் வளர்ந்து கொண்டே வருகிறது. அதற்கு தான் வாஸ்து சாஸ்திரம் சில டிப்ஸ்களை உங்களுக்கு வழங்கிறது. இதன் படி நாம் ஒரு சந்தோஷமான இல்லற வாழ்க்கையை பெற முடியும்.

வாஸ்து டிப்ஸ்கள்

வாஸ்து டிப்ஸ்கள்

நீங்கள் காதலித்து திருமணம் கொண்டவரோ அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்தவரோ உங்களுக்கிடையே நேர்மறை ஆற்றல் முதலில் இருக்க வேண்டும் என்கிறது வாஸ்து சாஸ்திரம். ஒரு சந்தோஷமான வாழ்க்கைக்கு நேர்மறை எண்ணங்கள் மிகவும் முக்கியம்.

MOST READ: நைட்ல ரெண்டு சொட்டு கிளிசரின் தடவிட்டு படுங்க... கொஞச நாள்ல நீங்களும் இப்படி ஆயிடுவீங்க...

 பெட்ரூம் வாஸ்து டிப்ஸ்

பெட்ரூம் வாஸ்து டிப்ஸ்

பெட்ரூம் என்பது வீட்டில் உள்ள ஒரு அறை மட்டுமல்ல தம்பதியர்கள் அன்னோன்னியமாக இருக்க கூடிய இடமும் கூட. எனவே படுக்கை அறை நேர்மறை எண்ணங்களை தரக் கூடியதாக இருக்க வேண்டும்.

படுக்கை அறை திசை

படுக்கை அறை திசை

வாஸ்து சாஸ்திரம் படி படுக்கை அறையை அமைப்பது முக்கியம். படுக்கை அறை வடக்கு, வடமேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும். இந்த திசை அமைப்பு நேர்மறை ஆற்றலை உருவாக்கி துணைகளுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்தும்.

MOST READ: 12 ராசிக்கும் இந்த மாதம் அதிர்ஷ்டம் தரும் நிறங்கள் என்னென்ன தெரியுமா? இதோ தெரிஞ்சிக்கங்க

எலக்ட்ரானிக் பொருட்கள் வேண்டாம்

எலக்ட்ரானிக் பொருட்கள் வேண்டாம்

படுக்கை அறையில் தான் தம்பதிகள் தங்கள் தனிமை நேரத்தை கழிப்பார்கள். எனவே படுக்கை அறையில் எந்த வித எலக்ட்ரானிக் பொருட்களான : டீவி, கம்பியூட்டர், லேட்டாப் மற்றும் மொபைல் போன் போன்ற எதுவும் இருக்க வேண்டாம். இந்த எலக்ட்ரானிக் பொருட்கள் நேர்மறை ஆற்றலை குறைத்து எதிர்மறை ஆற்றலை உருவாக்கி கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவை ஏற்படுத்தி விடும்.

படங்கள்

படங்கள்

வீட்டில் தெய்வ படங்கள் இருப்பது நல்லது. ஆனால் படுக்கை அறையில் தெய்வ படங்கள் இருக்க கூடாது. முன்னோர்களின் படம், தெய்வ படங்க் போன்றவற்றை அங்கே மாட்டி வைக்கக் கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகிறது. அதற்கு பதிலாக லவ் பேர்ட்ஸ் போன்ற படங்களை மாட்டி வையுங்கள். நீங்களும் இணை பிரியாமல் இருப்பீர்கள்.

MOST READ: இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரர்களும் ஒரு புது டிரஸ் வாங்கினா நல்லது நடக்குமாம்...

செடிகள்

செடிகள்

பசுமையான செடிகளும் நேர்மறை ஆற்றலை தரக் கூடியது. ஆனால் முட்களையுடைய செடிகள் மற்றும் போன்சாய் தாவரங்கள் படுக்கை அறையில் வேண்டாம்.

படுக்கை விரிப்பு

படுக்கை விரிப்பு

திருமணமான தம்பதிகள் ஒரே படுக்கை விரிப்பில் படுப்பது நல்லது. தனித் தனி படுக்கை விரிப்பை தவிர்த்து விடுங்கள். நல்ல துவைத்த மணமான படுக்கை விரிப்பை பயன்படுத்துங்கள். கிழிந்த படுக்கை விரிப்புகள் வேண்டாம்.

எனவே சந்தோஷமான திருமண வாழ்விற்கு படுக்கை அறை தூய்மையாக இருப்பதும் முக்கியம். தம்பதிகள் உங்களைச் சுற்றி நேர்மறை ஆற்றலை அதிகரிக்குமாறு வீட்டை அமையுங்கள். உங்கள் திருமண உறவும் சந்தோஷமாக நீண்ட காலம் தொடரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Problems in Marriage? Vastu Shastra Can Give You an Answer

here we are talking about Problems in Marriage? Vastu Shastra Can Give You an Answer.
Story first published: Monday, January 7, 2019, 18:35 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more