For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீ வேஸ்ட்டு... உருப்படமாட்டன்னு இனியாவது சொல்லாதீங்க! my story # 158

ஒவ்வொரு முறை நீ வேஸ்ட்,உனக்கு ஒன்றும் தெரியாது என்று விமர்சனங்களை எதிர் கொள்ளும் பெண்ணொருத்தி தன் கதையை பதிவு செய்கிறார்.

|

உனக்கு என்ன தெரியும்... சும்மாயிரு என்ற வசனம் போதும் நம் தன்மானத்தை சீண்டிப்பார்க்க.... ஏன் எனக்கு தெரியாது என்று நினைக்கிறாய் உன்னை விட பல மடங்கு நிறைய விஷயங்களை கற்றுத் தேர்ந்திருக்கிறேன் என்று உரக்க கத்தினாலும் இவர்களுக்கு புரியப் போவதிலை.

எல்லாரும் நான் தான் மேதாவி என்று நினைத்துக் கொண்டு திரிகிறார்கள்... திரியட்டும் திரியட்டும்.வாசலில் உட்கார்ந்து உமியை பொறுக்கிக் கொண்டே இதைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

திரியட்டும் திரியட்டும்....

என்ன பாட்டி லூசு மாதிரி தனியா பேசிட்டு இருக்க என்று சொல்லும் பேரனுக்கும் தெரியாது என்னைப் பற்றி இவர்களை எல்லாம் செவுல்லயே ஒண்ணு விட்டா என்ன.. அது மனசுல வலு இருந்தா தான. அட அதவிட உடம்புல தெம்பு இருக்கணுமே நடக்கும் போதே தள்ளாடிக்கிட்டு கிடக்கேன்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மகளாகிய நான் :

மகளாகிய நான் :

வீட்டில் இரண்டாவது குழந்தை.எனக்கு முன்னால் ஒரு அக்கா இருக்கிறாள். எனக்கு அடுத்து ஒரு தம்பி. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தம்பி தான் எல்லாம். எல்லா குடும்பத்து கதைகள் தான் தீபாவளிக்கு என்ன பலகாரம் செய்வதிலிருந்து, வீட்டுக்கு எப்போ சுண்ணாம்பு அடிக்கலாம் என்பது வரை எல்லாமே தம்பியிடம் கேட்கப்படும்.

எங்களை விட பன்னிரெண்டு வயது இளையவன். அவனிடம், பெரியவளுக்கு இந்த வரன் முடிச்சிடலாமா டா என்று கேட்கிறார் அப்பா. காதுல கடுக்கன் மாட்டிட்டு சூப்பரா இருக்காருப்பா பெரிய அக்காக்கு முடிச்சிடலாம்ப்பா.... அவங்க கார்ல நானும் ரவுண்ட் போவேனே.... என்கிறான் எங்கள் வீட்டு அறிவாளி.

Image Courtesy

 நீயாவது சொல்லேன்ம்மா :

நீயாவது சொல்லேன்ம்மா :

அக்காவுக்கு சுத்தமாக அந்த வரன் பிடிக்கவில்லை, அக்காவிடம் காண்பிக்கவில்லையென்றாலும் அம்மாவிடமாவது காட்டி அபிப்ராயம் கேட்டிருக்கலாம். அதுவும் இல்லை,

நீயாவது சொல்லேன்ம்மா என்று அக்கா கேட்டபோது.... அம்மா சொல்கிறாள்.

எல்லாம் அவங்க பாத்துப்பாங்க.

Image Courtesy

 மருமகளாகிய நான் :

மருமகளாகிய நான் :

தம்பியின் அனுக்கிரகத்தால் பக்கத்தூருக்கு மணமாகிச் சென்றேன். காலையில் குடிக்கிற டீயிலிருந்து இரவு பாய் வரையிலும் எல்லா பணிவிடைகளையும் செய்யும் வேலைக்காரியாக இப்போது தான் தேர்ச்சி பெற்றிருக்கிறேன்.

வயலுக்கு மோட்டார் போட்டா தண்ணி நல்லா வருமாம், இன்னொரு கிணறு தோண்டுறதுக்கு பழைய கிணத்துலயே மோட்டார் மாட்டினா செலவு மிச்சமாகும்ல என்றேன் கணவனிடம்.

என்ன பெருசா பேச வந்துட்ட உனக்கு தான் எல்லாம் தெரியும்ன்னு தலைக்கனமா.... ஆம்புளைங்க பேசுறப்ப என்ன இது அதிக பிரசங்கித்தனம் போ வீட்டுக்குள்ள...

Image Courtesy

 தலைக்கனம் :

தலைக்கனம் :

இதில் என்ன தலைக்கனம் அங்கே இருக்கிற சூழலுக்கு இன்னொரு கிணறு வெட்டுவது என்பது வீண் விரையம் அதைச் சொன்னால் தலைக்கனமா? ஆண்களுக்கு முன்னால் பேசக்கூடாது என்கிறானே.... நீ என் கணவன் தானே கணவன் முன்னால் கூட பேசக்கூடாதா?

என் முன்னால் பேசக்கூட உனக்கு தகுதியில்லை கருதுபவன் எதற்கு திருமணம் செய்ய வேண்டும்.

அப்போதே என் மனதில் எழுந்த கேள்வியிது.

Image Courtesy

சண்ட கட்டாத :

சண்ட கட்டாத :

எதுக்கு எடுத்தாலும் வியாக்காயனம் பேசாத, வீட்டுக்காரர் சொல்றாருன்னா சரியாத்தான் இருக்கும். சரிங்க.... செய்றேங்கன்னு இருந்தா தான் உனக்கு வாழ்க்கை அவன் மட்டும் உன்னைய வீட்ட விட்டு வெளிய போன்னு சொல்லிட்டா அவ்ளோ தான்.

நீ நடுத்தெருவுல தான் நிக்கணும்.... அடுத்த வேல சோத்துக்கு வழியிருக்காது பாத்துக்கோ பிறந்து வீட்டிலும் புகுந்த வீட்டிலும் எனக்கு கிடைக்கிற அற்புத பொன்மொழிகள் இவை.

Image Courtesy

தாயாகிய நான் :

தாயாகிய நான் :

பெண் பிள்ளை பிறக்க வேண்டும் என்று வேண்டியே எனக்கு இரண்டுமே ஆண் பிள்ளைகளாய் வாய்த்தது. அப்பனுக்கு தப்பமல் பிறந்து தொலைத்திருக்கிறார்கள் .

உன் வயசு பசங்களோட விளையாடு... பெரிய பசங்களோட உனக்கென்ன பேச்சு அவன் தான் பள்ளி கூடத்துக்கும் போகாமா வேல வெட்டிக்கும் போகாம கிடக்குறான் அவனோட சேர்ந்து நீயும் உருப்படாம போகப்போற

‘எல்லாம் எங்களுக்கு தெரியும்... நீ மூடு'

Image Courtesy

காதில் தேன் வந்து பாய்கிறது மகனே :

காதில் தேன் வந்து பாய்கிறது மகனே :

கணவனின் பணிவிடைகளை செய்ய வேண்டும் என்பதோடு இப்போது கூடுதல் சுமையாக இவர்கள்.

என்ன காசு தரமாட்ற... அப்பாட்ட சொல்லவா?

அப்பா எங்கள போக சொல்ட்டாரு....

இப்படியாக, வீட்டில் அம்மா என்ற ஒரு கேரக்டர் வெறும் டம்மி பீஸ், அப்பாவிடம் சொன்னால் போதும், அப்பா சொல்வதைக் கேட்டால் போதும் என்று சிறுவயதிலேயே அவர்களின் மூளையில் ஏற்றப்பட்டது.

Image Courtesy

 சில காலம் தான் :

சில காலம் தான் :

சிறிது சிறிதாகவோ அல்லது ஒரே நாளிலோ அவர்களை எல்லாம் மாற்ற முடியவில்லை, வாயைத் திறந்தாலே ம்ம்மா.... உனக்கு என்ன தெரியும் சும்மா ஊடால வந்து பேசிட்டு கடுப்பேத்தாத போய் ஓரமா உக்காரு....

சோத்த பொங்கிப்போட்டோமா வீட்ட சுத்தமா வச்சிகிட்டோமா அதோட இரு சும்மா என்ன பண்ற, எங்க போற, காலேஜ் போனியான்னு எல்லாம் என்கிட்ட கேள்விக் கேக்காத இப்படிச் சொல்லி எரிந்து விழுவது எனதருமை மகன் தான்.

எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான் சொல்லிக் கொண்டேன்.

Image Courtesy

ஐந்து வயதிலிருந்து :

ஐந்து வயதிலிருந்து :

குல தெய்வ கோவில் வழிபாட்டிற்கு வண்டி கட்டி அழைத்துச் சென்றார் அப்பா. வழியில் பலரும் எதேதோ விற்றுக் கொண்டிருந்தார்கள். அப்பா அந்த கொலுசு வாங்கித்தாப்பா, அப்பா அந்த டிரஸ்ஸு வாங்கித்தாப்பா, அப்பா அந்த கார் பொம்ம வாங்கித்தாப்பா என்று எல்லாவற்றையும் கை நீட்டி கை நீட்டி கேட்டுக் கொண்டிருந்தேன்.

அப்பாவுக்கு கேட்கிறதா இல்லையா என்று அப்பாவை அண்ணாந்து பார்த்தேன்... கண்டு கொண்டதாக தெரியவில்லை வேட்டியை பிடித்து இழுக்க அப்பா நின்று விட்டார்.

என்ன பாப்பா.... இது வேணுமா?

ஆமாம் என்று தலையசைத்தேன்...

இதெல்லாம் தம்பிக விளையாடுறது நமக்கு வேண்டாம் என்று சொல்லி அழைத்துச் சென்றுவிட்டார்.

அப்போதிருந்து இதோ மகன்களுக்கு திருமண வயது நெருங்கிவிட்டது. இந்த காலம் மாறிடும், இன்னும் கொஞ்சம் காலம் என்று என்னை நானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன்.

Image Courtesy

 மாமியாராகிய நான் :

மாமியாராகிய நான் :

பெரிதாக என்ன செய்துவிடப்போகிறேன், இப்போது பெரிய கால மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது, பழைய காலமும் நவீனமும் ஒன்றிணையும் இந்த காலத்திற்கு ஈடு கொடுக்கவும் முடியாமல் வாழவும் முடியாமல் தவிக்கிற பலரில் ஒருத்தியாய் நானும் இருக்கிறேன்.

என் தலையீடு பெரிதாக இல்லாமல் இருவரின் திருமணம் நடைப்பெற்றது. கணவர் இருந்தவரை அந்த சிறையே போதுமானாதாக இருந்தது.

Image Courtesy

அவருக்குப் பிறகு :

அவருக்குப் பிறகு :

என் சேவைகளை ஒன்றுவிடாமல் பெற்றும்... என் உழைப்பை உறிஞ்சியும் வாழ்ந்த அந்த மாமனிதர் ஒரு நாளில் மறைந்தார்.

எனக்கு தான் ஒன்றும் தெரியாதே... இப்போது நான் என்ன செய்ய என்று மகன்களிடமே கையேந்தி நின்றேன். அறிவாளிக் கொழுந்துகள் பேசி விவாதித்து சொல்கிறார்கள்.

என் வீட்ல ஒரு மாசம் தம்பி வீட்ல ஒருமாசம்னு இரும்மா...

Image Courtesy

இந்த காலத்தில் பிறந்திருக்க கூடாதா? :

இந்த காலத்தில் பிறந்திருக்க கூடாதா? :

ஊரு முழுக்க இப்படித்தானே நடக்கிறது.... இதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை... ஆனால் மகன்களின் இந்த முடிவின் போது என் மருமகள்களும் உடனிருந்தார்கள், அவர்களும் பேசினார்கள், வேண்டும் என்றும் வேண்டாம் என்றும், என் சௌகரியத்திற்கு சரிபடாது என்றும் தங்களைப் பற்றி சுயநலமாய் நடு சபையில் பேசுகிறார்கள்.

அவர்களிடம் என் அறிவுக் கொழுந்துகள் வாலாட்ட முடியவில்லையே...

எது எப்படியோ.... இந்தக் காலத்திலாவது எங்களுக்கும் தெரியும் என்று ஒப்புக் கொண்டார்களே என்று மகிழ்ந்தேன்.

Image Courtesy

காலம் ஓடுகிறது :

காலம் ஓடுகிறது :

அங்கேயிங்கே என்று காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. மகிழ்ச்சியாக வாழ்கிறேன் என்றெல்லாம் சொல்ல முடியாது, அமைதியாக நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது.

அவ்வப்போது பேரன் பேத்திகள் வந்தும் பாட்டி உனக்கு இந்த கேம் தெரியுமா? நீ இத சாப்ட்ருக்கியா.... உனக்கு என்ன தான் பாட்டி தெரியும்... எதக்கேட்டாலும் தெரியாது தெரியாதுன்னு சொல்ற என்று சலித்துக் கொள்வார்கள்.

Image Courtesy

ஒரு கத சொல்லு :

ஒரு கத சொல்லு :

அடடா.... என் மருமகள்கள் சுயநலமாய் சிந்திக்கிறார்கள் என்று பெருமைகொண்டேனோ அதே வாயால் மீண்டும் சொன்னேன் உங்கள பத்தி மட்டும் யோசிக்காதீங்கம்மா என்னைய ஒரு மனுஷனா கூட இந்த வீட்ல மதிக்கிறதில்ல .

பாட்டி.... எனக்கு ஒரு சொல்லேன்.... என்று பேத்தி என்னருகில் வந்தாள்.

கதையா? என்ன கத... எப்டி சொல்ல.... நான் போய் கத என்று முழிக்க

போ... பாட்டி நீ வேஸ்ட் உனக்கு ஒண்ணுமே தெர்ல என்று எழுந்து ஓடி விட்டாள்.

அந்த வார்த்தைகள் காதில் கேட்டுக் கொண்டேயிருந்தது. கண்களை மூடிக் கொண்டேன். உயிரும் அப்படியே கரைந்திருந்தது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

you are waste! Emotional story

you are waste! Emotional story
Desktop Bottom Promotion