For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செத்தாலும் பரவாயில்ல... இனி! அவன் கை என்மேல படக்கூடாதுன்னு முடிவு பண்ணேன் - My Story #312

செத்தாலும் பரவாயில்ல... இனி! அவன் கை என்மேல படக்கூடாதுன்னு முடிவு பண்ணேன் - My Story #312

By Staff
|

சில அரசியல் பேட்டிகள்ல கேள்வி கணைகள் தொடுத்தார்னு நிறையா கேட்டிருப்போம். ஆனா, என் வாழ்க்கையில நிஜமாவே முதல் முறையா அத நேரெதிர்ல உட்கார்ந்து உணர்ந்தேன். அதுவும் என்னோட க்ளோஸ் ஃபிரெண்ட் கிட்ட இருந்து. எங்களுக்கு மத்தியில நிறைய இனிமையான நினைவுகள், தருணங்கள், பரிமாற்றங்கள் இருந்துச்சு. அது அத்தனையும் அந்த ஒரே இராத்திரியில மொத்தமா செத்துப் போச்சு.

Real Life Story: That Day I Decided, Even I Die I Would Not Let Him Beat Me

Image Source: aldiaargentina.microjuris

அன்னிக்கி ஞாயிற்றுக்கிழமைன்னு நினைக்கிறேன்... மதியம் ஒரு மணி இருக்கும். அப்ப தான் நான் எழுந்திருந்தேன். போன் ரிங் ஆச்சு, அவன்கிட்ட இருந்து தான் கால். சின்ன ஸ்மைலோட குட் மார்னிங் சொல்லி பேச ஆரம்பிச்சேன். இது தான் உனக்கு மார்னிங்கா இது மதியம்னு ஒரு மாதிரி ரஃப்பான குரல்ல பேச ஆரம்பிச்சான்.

சர்வீஸ் கொடுத்த என் பைக் இன்னிக்கி எடுக்க போறேன் கூட வரியான்னு கேட்டான். ஜன்னல் திரைய விளக்கி பார்த்தேன்.. ரொம்ப வெயிலா இருந்துச்சு. இல்லடா இப்ப என்னால வர முடியாது... நீயே போய் எடுத்துட்டு வான்னு சொன்னேன். உடனே அவனுக்கு எங்க இருந்து அத்தனை கோபம் வந்துச்சுன்னு தெரியல.. காச்சு, மூச்சுன்னு கத்த ஆரம்பிச்சான். இப்ப என் கூட வர முடியுமா, முடியாதான்னு கேட்டான்.

அவன் ஏன் அப்படி பிஹேவ் பண்றான்னு தெரியாம குழம்பி போனேன். இல்லடா முடியாது, உனக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி கத்துறன்னு கேட்டேன். கால் கட் ஆயிடுச்சு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நைட்!

நைட்!

ஏழு மணி இருக்கும் என் வீட்டுக்கு வந்தான். (என் வீட்டுல நான் மட்டும் தான் தனியா ஸ்டே பண்ணி இருக்கேன். அடிக்கடி என் ஃபிரெண்ட்ஸ் வந்து போவாங்க அவ்வளோ தான்).

அவன் வந்ததும், என்னடா கால் கூட பண்ணாம வந்திருக்க என்ன ஆச்சு. நான் திரும்ப தூங்கிட்டேன். சாயங்காலம் தான் எழுந்தேன். ஏன் மதியம் அப்படி லூசு மாதிரி கத்துனேன்னு நான் பேச, பேச கண்ணத்துல பளார்னு ஒரு அடி விழுந்துச்சு. அந்த ஒரு அடியிலேயே வாயில இருந்து இரத்தம் வர ஆரம்பிச்சிடுச்சு.

தொடர் கேள்விகள்..

தொடர் கேள்விகள்..

கேள்வி மேல கேள்வி கேட்டுட்டே இருந்தான். அவன் கேட்ட கேள்விகளுக்கு உடனே பதில் வேணும், அதுவும் அவன் நம்புற மாதிரியான பதில் வேணும்னு சொல்லிக்கிட்டே இருந்தான். அவன் கேட்ட கேள்விகள்ல நான் யாரையோ லவ் பண்றேன். நாங்க லிவ்-இன் இருக்கோம்ங்கிற சந்தேக தொணியில கேட்டான்.

எனக்கு அப்படியான எந்த ஒரு உறவும் இல்லை. அப்படியே இருந்தாலும்... இவன் எதுக்கு ஏன் இப்படி ரியாக்ட் பண்றான்னு எனக்கு தெரியல.

நடுக்கம்!

நடுக்கம்!

என் வாயில இருந்து வர எந்த ஒரு பதிலோ, நான் என்ன சொல்ல வரேன்னு எதுவுமே அவன் கேட்க தயாரா இல்ல. அடிமேல அடி, ஹால்ல ஒரு கார்னர்ல நான் உட்கார்ந்திருந்தேன். என் பக்கத்துல ஒரு ஸ்டூல் போட்டு நெருக்கமா, பயங்கரமா முறைச்சு பார்த்து உட்கார்ந்துட்டு இருந்தான்.

எனக்கு என் பதில் வேணும்.. எனக்கு என் பதில் வேணும்... இத தவிர அவன் வாயில இருந்து வேற எந்த வார்த்தையும் வரல. நான் என்ன சொன்னாலும் திரும்ப அதே கேள்விய கேட்க ஆரம்பிச்சான்.

உடம்பு முழுக்க பயமும், நடுக்கமும் பரவி கிடந்துச்சு.

இரத்தக்கசிவு...

இரத்தக்கசிவு...

இதெல்லாம் ஒரு பத்து நிமிஷத்துல நடந்த விஷயம்.

பேசாம வெளிய போயிடு... இல்ல, செக்யூரிட்டிய கூப்பிட்டுடுவேன்னு மிரட்டினேன். அதுனால் வரைக்கும் அவன் பலசாலின்னு தெரியும், ஆனா, இவ்வளவு வலிமையானவனா இருப்பான்னு தெரியாது. இதுக்குமேல அவன் கை என்மேல படக்கூடாது, எப்படியாவது அவன எதிர்த்து, வெளிய தப்பிச்சு ஓடிடலாம்னு முடிவு பண்ணேன்.

ஆனா, அவனோட வலிமைக்கு எதிரா என்னால ஒன்னும் பண்ண முடியல.

MOST READ: ஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா?

மோசமான வலி!

மோசமான வலி!

கதவு பக்கத்துல நடந்து போகும் போது, என்ன ஒரு செகண்ட்ல இழுத்து வீசுனான். தரையில சுருண்டு போய் விழுந்தேன். கதவ இழுத்து சாத்திட்டு, என் தலை முடிய பிடிச்சு இழுத்துட்டு போய், முன்னாடி உட்கார்ந்துட்டு இருந்த அதே கார்னர்ல உட்கார வெச்சான். முகத்துல இருந்து தோள்பட்டை வரைக்கும் முழுக்க இரத்தம்.

இதுக்கு முன்னாடி நான் என் வாழ்க்கையில இப்படியொரு மோசமான வலிய உணர்ந்ததே இல்ல.

சித்திரவதை!

சித்திரவதை!

என் போன எடுக்க ட்ரை பண்ணனே. அதையும் தூக்கி என் கைக்கு எட்டாத இடத்துல வெச்சுட்டான். அழுதேன், கெஞ்சுனேன்... உனக்கு என்ன ஆச்சு, என்ன பதில் தான் நீ எதிர்பார்க்குறன்னு கேட்டேன்.

நான் அம்மாவுக்கு தினமும் இந்த நேரத்துல போன் பண்ணி பேசுவேன். இல்லன்னா நான் தனியா இருக்குறதுனால என்ன ஆச்சோ, ஏதாச்சோன்னு பயப்படுவாங்கன்னு சொல்லி கெஞ்சி கேட்டதுனால போன கொடுத்தான்.

தழுதழுத்த குரல்!

தழுதழுத்த குரல்!

போன் பண்ணி நார்மலா அம்மாவ விசாரிச்சேன். என்னோட தழுதழுத்த குரல கேட்ட அம்மா, உடம்புக்கு என்ன ஆச்சு, ஏதாச்சும் அடிப்பட்டுடிச்சானு கேட்டாங்க. ஒண்ணுமில்ல உடம்பு சோர்வா இருக்கு அதனால தான். நான் அப்பறமா கூப்பிடுறேன்னு சொல்லிட்டு போன கட் பண்ணிட்டேன்.

இங்க நடக்குறத பத்தி சொல்லி, உதவிக்கு கூப்பிட சொல்லலாம்னு தான் நெனச்சேன். ஆனா, எங்க ஃபிரெண்ட்ஷிப், நாங்க எல்லாம் ஒண்ணா வெளிய போன அந்த தருணங்கள் எல்லாம் மனசுல ஓட ஆரம்பிச்சது. இவன் ரொம்ப நல்லவன். ஆனா, ஏன் இப்படி மிருகம் மாதிரி நடந்துக்கிறான்னு தெரியல.

எதையும் முழுசா தெரிஞ்சுக்காம அவன தண்டிக்கவோ.. இல்ல அவன் மேல புகார் கொடுக்கவோ மனசு வரல.

அழுதான்!

அழுதான்!

போன் பேசி முடிஞ்சதும், என் கால் ஹிஸ்டரி எடுத்து பார்த்தான். போன தூக்கி எறிஞ்சுட்டு உட்கார்ந்து அழ ஆரம்பிச்சுட்டான்.

ஏன்டா அழற.. என்ன ஆச்சுன்னு கேட்டேன்... திரும்பவும் பளார்னு ஒரு அடி... வாயில இருந்து இந்த முறை இரத்தம் கொட்ட ஆரம்பிச்சது. ஒருபக்கம் முகம் முழுக்க வீக்கம், வலி... மரத்து போன மாதிரியான ஒரு உணர்வு.

நான் வலி தாங்க முடியாம கத்தினேன்... என் கைய வெச்சே வாய இருக்க மூடி அழுத்தினான். வாயில ஏற்கனவே பட்ட காயம் அதிகமா வலிக்க ஆரம்பிச்சது.

பத்து மணி!

பத்து மணி!

தரையில செத்துப் போன மாதிரி விழுந்து கிடந்தேன். கால வெச்சு எத்தினான். என் வாயில இருந்து வந்த இரத்தத்த துடைக்க வந்தான். தடுத்தேன்.. திரும்பவும் பளார்னு அடிச்சான். அதுக்கு மேல அவன் என் இரத்தத்த துடைக்க வரத தடுக்க என் உடம்புல தெம்பு இல்ல.

இராத்திரி பத்து மணி பக்கம் இருக்கும்.

உன்ன இப்படி அடிக்கவோ, வலி ஏற்படுத்தி பார்க்கவோ எனக்கு விருப்பம் இல்ல. ஆனா, நீ எனக்கான பதில சொல்லாம மறைக்கிறன்னு சொல்லி அழுதான்.

MOST READ: எந்தெந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வளமான வாழ்க்கை வாழ போகிறார்கள் தெரியுமா?

காதல்!

காதல்!

நான் எந்த உண்மையும் மறைக்கல... உனக்கு என்ன ஆச்சு, ஏன் இப்படி எல்லாம் நடந்துக்குற... ஏன் அழறன்னு கேட்டேன்... இரத்தத்த மெல்ல துடைச்சு விட்டுட்டு... எல்லாம் காதலால தான். நான் உன்மேல வெச்ச காதலாலன்னு சொன்னான்.

எனக்கு அப்படியான ஒரு ஃபீலே அவன் மேல இல்ல. அதுமட்டுமில்லாம. இதுநாள் வரைக்கும் நாங்க ஒண்ணா தனியா கூட எங்கயும் போனது இல்லை. காதல் வர மாதிரி அவன் கிட்ட நான் பேசி, பழகினதும் இல்லை. இதெல்ல அவன்கிட்ட எடுத்து சொல்ல வாய திறக்க முடியாத அளவுக்கு அடிச்சிருந்தான்.

செக்யூரிட்டி!

செக்யூரிட்டி!

எப்பவும் நைட்டு என் அப்பார்ட்மெண்ட்ல செக்யூரிட்டி ரவுண்ட்ஸ் வரது வழக்கம். அன்னிக்கும் அப்படி வந்தாரு. அவரோட விசில் சத்தம் கேட்க ஆரம்பிச்சதும். நீ கிளம்பி போயிடு. உனக்கு எதுவும் நடக்க நான் காரணமா இருக்க விரும்பல. நீ இங்கயே இருந்தா நிச்சயமா நான் இருக்குற இந்த நிலைய அவரு பார்த்தா.. நீ போலீஸ் ஸ்டேஷன் தான் போவான்னு மிரட்டினேன்.

செக்யூரிட்டி வந்து கதவு கிட்ட இன்னு விசில் அடிச்சு பெயர் சொல்லி கூப்பிட்டாரு.

மறைச்சுட்டேன்!

மறைச்சுட்டேன்!

அவர்கிட்ட நான் ஏதாவது சொல்லிடுவேனோன்னு பயந்தான். ஹால்ல குறுக்க, மறுக்க பதட்டத்தோட நடந்துட்டே இருந்தான்.

ஒரு ஷால் ஒன்னு எடுத்து முகத்த மூடிட்டு... கதவ திறந்தேன். ஏதாவது வாங்கிட்டு வரணுமா.. சாப்பிட கூட இன்னிக்கி நீங்க வெளிய போன மாதிரி தெரியல. பார்சல் எதுவும் உங்க வீட்டுக்கு வரவும் இல்ல. என்ன ஆச்சுன்னு விசாரிச்சாரு செக்யூரிட்டி.

இல்லன்னா கொஞ்சம் உடம்பு முடியல அவ்வளோ தான்னு சொன்னேன். ஏதாவது மருந்து வாங்கிட்டு வரணுமான்னு கேட்டாரு. இல்ல வேண்டாம்னு சொல்லி அனுப்பிட்டேன்.

மறக்க முடியாத இரவு!

மறக்க முடியாத இரவு!

செக்யூரிட்டி கிளம்பினதும், அழுதுட்டே என்ன பார்த்தான்... ஏதோ சொல்ல வந்தான்... எதுவும் சொல்ல வேண்டாம்ங்கிற மாதிரி நான் கைய மட்டும் தூக்கி காமிச்சேன். அழுதுட்டே கிளம்பி போயிட்டான்.

இந்த சம்பவம் நடந்து பல மாசம் ஆச்சு. ஆனாலும், இன்னைக்கும் நான் தனியா என்னோட அப்பார்ட்மெண்ட்ல இருக்கும் போது, அந்த இரவு நடந்த கொடூரமான சம்பவம் என்ன பயமுறுத்திட்டே இருக்கு. நான் நிம்மதியா தூங்கி பலநாள் ஆச்சு.

ஒரு நல்ல ஃபிரெண்ட் அவன்... ஆனா, அவனுக்குள்ள வந்த ஏதோ சந்தேகம்... அவனுக்கு என்மேல இருந்த காதலால... கோபமா மாறி, மிருகம் மாதிரி ரியாக்ட் பண்ணி.. என் வாழ்நாள்ல மறக்க முடியாத வலிய ஏற்படுத்திட்டு போயிட்டான்.

கஷ்டம்!

கஷ்டம்!

அதுக்கப்பறம் நானோ, அவனோ ரெண்டு பேருமே பேசிக்க விரும்பல. ஒரு தடவ... எங்க காமன் ஃபிரெண்ட் ஒருத்தன்.. அவன் ஏன் முன்ன மாதிரி நம்ம கூட எங்கயும் வரதில்லன்னு கேட்டான். தெரியலன்னு சொல்லி அவாய்ட் பண்ணிட்டேன்.

ஆம்பளை, வீரம், வலிமை இருக்குங்கறதால... ஒரு பொண்ண எப்படி வேணாலும் ட்ரீட் பண்ணுவாங்கன்னு அப்ப தான் தெரிஞ்சுக்கிட்டேன். இங்க உண்மையான நட்பு கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அத புரிஞ்சுக்கிறதும் ரொம்ப கஷ்டம்.

MOST READ: பாலில் தண்ணிய தவிர வேற என்ன கலப்படம் இருக்குனு எப்படி வீட்லயே கண்டுபிடிக்கலாம்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: That Day I Decided, Even I Die I Would Not Let Him Beat Me

Real Life Story: That Day I Decided, Even I Die I Would Not Let Him Beat Me
Desktop Bottom Promotion