For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'கதவ திறந்து உள்ள போனா, ரெண்டு பேரும் நட்ட நடு ஹால்ல...' - My Story #310

'கதவ திறந்து உள்ள போனா, ரெண்டு பேரும் நட்ட நடு ஹால்ல...' - My Story #310

By Staff
|

தாயம்மா (52), பெரிய, பெரிய கட்டடுத்துக்கு பின்னாடி கரப்பான்பூச்சி மாதிரி தட்டையா அழுக்கு படிஞ்ச ஒரு ஸ்லம் இருக்குமே. அங்கயே பிறந்து வளர்ந்த ஒரு சுத்தமான உள்ளம் தான் தாயம்மா.

தாயம்மா நாலஞ்சு வீட்டுக்கு வீடு துடைச்சு, பாத்திரம் கழுவி, சாப்பாடு சமைச்சு வெச்சுட்டு வர வேலை பார்க்குறவங்க. சொல்லப் போனா ஒரு ஆள் இன் ஆல் அழகுராணி. ஒரு நாள் சோர்வா உட்கார்ந்திருந்த தாயம்மாவுக்கு நான் காபி போட்டுக் கொடுத்தேன்.

Real Life Story

அதக் குடிச்சுட்டு... அவங்க என் கிட்ட சொன்ன ஒரு கதை. இன்றைய வாழ்வியல்ல பெற்றோரா நாம எவ்வளவு தோத்து போயிட்டு இருக்கோம்கிற பயமும். வெஸ்டர்ன் கல்ச்சர்ங்கிற பெயருல நாம எதெல்லாம் இழந்துட்டு வரோம்ங்கிற அதிர்ச்சியையும் கொடுத்துச்சு.

இது தாயம்மா என்கிட்டே பகிர்ந்துகிட்ட கதை.. ஆனா, இது தாயம்மா கடந்து வந்த பாதைன்னு சொல்றத காட்டிலும், சிலர் தவறான பாதையில போறத பார்த்து தாயம்மா வருத்தப்பட்ட கதைன்னு சொல்லலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
4 மணி!

4 மணி!

கதை தாயம்மா கூறுவது போன்ற நடையில்...

எனக்கு அலாரம் எல்லாம் பழக்கம் இல்ல. கோழி கூவுறதுக்கு முன்னவே நான் எழுந்திருச்சிடனும்... இல்லன்னா... அன்னிக்கி நாலு கிழிஞ்சிடும். நான் மொத்தம் நாலு வீட்டுக்கு வேலைக்கு போயிட்டு வந்துட்டு இருக்கேன். காலையில நாலு மணிக்கு எழுந்து கிளம்பினா தான்.

சரியா எட்டு மணிக்குள்ள நாலு வீட்டுலையும் சமையல் சமைச்சு வெச்சுட்டு வர முடியும். ஒரு வீட்டுல மிஸ் ஆச்சுன்னா கூட, அடுத்தடுத்து எல்லா வீட்டுலையும் மிஸ் ஆயிடும். அப்பறம் அவங்க அன்னிக்கு சமையல் வேண்டாம்னு சொல்லிட்டா.. அன்னிக்கி கூலி காலியாயிடும்.

நாலு வீடு!

நாலு வீடு!

நான் போற நாலு வீட்டுல மூணு வீடு கம்ப்யூட்டர் கம்பெனியில வேலை பார்க்குறவங்க வீடு. நாலாவது வீடு காலேஜ் படிக்கிற புள்ளைங்களது. முதல்ல இருக்க மூணு வீடு கண்டிப்பா ஏழு மணிக்குள்ள முடிக்கணும். அப்ப தான் அவங்க கரக்ட் டைத்துக்கு கிளம்பி அவங்க குழந்தைங்கள ஸ்கூல்ல வுட்டு வேலைக்கு போக முடியும்.

நாலாவது வீடு பத்து நிமிஷம் லேட்டானாலும் ஒன்னும் தப்பில்ல. ஏன்னா, அவங்கள நான்தா போய் எழுப்பி விடனும். 7 மணி ஆனாலும், 8 மணி ஆனாலும் அந்த புள்ளைங்க தூங்கிட்டே தான் இருக்கும்.

சாவி!

சாவி!

இந்த நாலு வூட்டு சாவியும் ஒரு ஸ்பேர் என்கிட்ட இருக்கும். ஏன்னா.. ஒருவேளை சாயங்காலம் இவங்க வரதுக்கு நேரம் ஆயிட்டா.. நான் நேரா ஒவ்வொருத்தர் வூட்டுக்கும் போயிட்டு சமைச்சு வெச்சுட்டு, வீடு சுத்தம் பண்ணிட்டு கிளம்பிடுவேன். சில நேரம், நான் வேலை பண்றவங்க வூட்டுக்கு வர சொந்த காரங்க, இல்ல ஃபிரெண்ட்ஸ் என்னடா வூட்டுக்காரங்க இல்லாம, வேலைக்காரி மட்டும் உள்ள இருக்கான்னு சந்தேகமா பார்த்ததும் உண்டு.

ஒரு தடவ, ஒருத்தரு நான் திருட தான் வந்துட்டேன்னு நினைச்சு, வெளிய கதவ தாழ்பாள் போட்டுட்டு வூட்டுக்காரருக்கு போன் போட்ட கதையும் நடந்திருக்கு.

நாலாவது வீடு!

நாலாவது வீடு!

மத்த மூணு வீட்டுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. ஏன் நாலாவது வூட்டுலயும் அந்த ஒரு சம்பவம் நடக்குறதுக்கு முன்ன வரைக்கும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. வெளியூர்ல, நல்ல காலேஜ்ல பணத்த கொட்டி படிக்கி வைக்கிறோம்.. அதான் நம்ம கடமைன்னு சில பெத்தவங்க நினைச்சுட்டு இருக்காங்க. ஆனா, அங்க... அந்த ஊருல குழந்தைங்க என்ன பண்றாங்கன்னு ஏனோ அவங்க கண்டுக்குறதே இல்ல.

காலையில...

காலையில...

எப்பவும் போல அன்னிக்கி காலையில வேலைக்கு போனேன். அதுவொரு டபிள் பெட்ரூம் ஃப்ளேட்டு. மொத்தம் மூணு பொண்ணுங்க தங்கி இருந்தாங்க. மத்த வூட்டுல எல்லாம் கதவத் தட்டிட்டு தான் உள்ள போவேன். ஆனா, இங்க இந்த புள்ளைங்கள நாம தான எழுப்பனும்னு, பூட்டியிருக்க கதவ நானே திறந்துட்டு உள்ள நுழைஞ்சுடுவேன். அப்ப தான் அந்த அலங்கோலத்த பார்த்தேன்.

ச்சீ!!!

ச்சீ!!!

நட்ட நடு ஹால்ல.. ஒரு பொண்ணும் பையனும் கட்டி உருண்டு தூங்கிட்டு இருந்தாங்க. சுவத்தொரத்துல சரக்கு பாட்டில் எல்லாம் வேற கீழ உருண்டுகுனு கிடந்துச்சு. பேசாம அப்படியே கதவ பூட்டிட்டு போயிடலாமானு தான் நெனச்சேன். ஆனா, அதுக்குள்ள என் கண்ணுக்கு தெரியாம கீழ கிடந்த பாட்டில் ஒன்னு என் காலு பட்டு கீழ விழ அந்த புள்ளைங்க எழுந்திடுச்சுங்க.

பயம்!

பயம்!

நான் கூட, எங்கடா எனக்கு தெரிஞ்சுடுச்சேன்னு அவங்க பயந்துடுவாங்கனு பார்த்தா... ஒவ்வொரு பெட்ரூம்ல இருந்து ஒரு ஜோடி வெளிய வருது. அத பார்த்து பயந்து போனது என்னவோ நான்தான்.

சாதாரணமா ஒரு பொண்ணு, "தாயம்மா.. இன்னிக்கி சமைக்க எல்லாம் வேணாம்... காபி மட்டும் வெச்சுக் கொடுத்துட்டு போங்க"ன்னு சொல்லிட்டு திரும்ப போய் கதவ சாத்திக்கிடுச்சு.

இதென்ன கலாச்சாராம்...

இதென்ன கலாச்சாராம்...

எனக்கு பெருசா அறிவு கிடையாது தான், நான் ஸ்கூல் பக்கமே ஒதுங்கினது கிடையாது. ஆனா, மானம், மரியாதைய எப்படி காப்பாத்திக்கணும்னு எனக்கு தெரியும். அத என் புள்ளைங்களுக்கு சொல்லிக் கொடுக்குற அளவுக்கு கொஞ்சம் புத்தியும் இருக்கு.

அவங்க தப்பு பண்ணாங்ககிறத தாண்டி, அத வெளியல ஒருத்தவங்க பார்த்ததுல கூட அவங்களுக்கு கூச்சமோ, பயமோ எதுவுமே இல்லைங்கிறது தான் பெரிய பயத்த கொடுத்துச்சு.

கிழிஞ்சது!

கிழிஞ்சது!

அந்த காலத்துல கிழிஞ்சத கூட யாருக்கும் தெரியக் கூடாதுன்னு தெச்சு போட்டுக்குட்டு வாழ்ந்தாங்க. இப்ப அப்படியா... கிழிஞ்சத தான் ஊரே பார்க்கட்டும்னு போட்டுக்குட்டு சுத்துறாங்க. இது ட்ரெஸ்ல மட்டுமில்ல.. மனசுலயும் அப்படி தான் இருக்கு.

நான் ஒட்டு மொத்தமா எல்லாரையும் குறை சொல்லல. நான் வேலைக்கு போற மத்த வீடுகள்ல பிள்ளைங்கள நல்ல விதமா வளர்க்குற பெத்தவங்களையும் நான் பார்த்திருக்கேன்.

பக்குன்னு இருக்கு!

பக்குன்னு இருக்கு!

என்ன தான் நாம பெத்த பொண்ணுங்க இல்லைனாலும்.. அதே வயசுல எனக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்கு. ஒருவேளை இதனால எதாச்சும் பிரச்சனை வந்தா.. அது எப்படியான வலிய கொடுக்கும்னு எனக்கும் தெரியும்.

ஆனா, பெத்து வளர்த்து., நல்லா படிக்க வைக்க எல்லா ஏற்பாடும் பண்ணிக் கொடுத்து, மாசாமாசம் சரியா பணத்த அனுப்பி வைக்கிற சில பெத்தவங்களுக்கு இதெல்லாம் ஏன் தோண மாட்டேங்குது. அவங்களும் மத்த அப்பனாத்தா மாதிரி கஷடப்பட்டு தான் பெத்து வளர்த்திருப்பாங்க....

காபி குடிச்ச கையோட, டம்ளர கழுவி வெச்சுட்டு தாயம்மா கிளம்பி போயிட்டா. ஆன, அவங்க சொன்ன வார்த்தைங்கள் என் மனசவிட்டு நகரவே இல்ல. ஆமால, லைப் சேஞ்ங்கிற பேருல கிழிஞ்சு போனது நம்ம ட்ரெஸ் மட்டுமில்ல... மனசும், கலாச்சாரமும் கூட தான். இத ஏன் நாம புரிஞ்சுக்கல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: Just Sending Money or Joining Them in Highly Reputed Institution Did not mean That Your Job Done as a Parent!

Real Life Story: Just Sending Money or Joining Them in Highly Reputed Institution Did not mean That Your Job Done as a Parent!
Desktop Bottom Promotion