For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனசுக்கு பிடிச்ச ஒருத்தன், அடைய நெனச்ச ஒருத்தன், முழுசா புரிஞ்சுக்கிட்ட ஒருத்தன் - My Story #269

நான் விரும்பியது ஒருவர், என்னை விரும்பியது ஒருவர். ஆனால், என்னை முழுதாக புரிந்து கொண்டது? - My Story #269

By Staff
|

இதுவரைக்கும் என் வாழ்க்கையில நான் விரும்புன விஷயங்கள் நடந்தது இல்ல, எனக்கு கிடைச்சதும் இல்ல. நான் பத்தாவது எக்ஸாம் எழுதி முடிச்சதுல இருந்து என் வாழ்க்கையில சில ஆண்கள் கடந்து போனாங்க. ஒருத்தன நான் காதலிச்சேன், ஒருத்தன் என்ன முழுசா புரிஞ்சுக்கிட்டான், ஒருத்தன் என்னை அடைய முயற்சி பண்ணான், ஒருத்தன் என்ன இப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறான்.

இவங்கள போக, சிலர் அப்பப்போ சின்ன சின்ன ரோல் என் வாழ்க்கையில ப்ளே பண்ணியிருக்காங்க. உதாரணமா சொல்லனும்னா.. எங்க வீட்டு வேலைக் காரன்.

Real Life Story: I Loved My Cousin, My Fiance Love Me, But Only My Friend Understands Me Well

ஏறத்தாழ என் நினைவு தெரிஞ்சதுல இருந்து அவரு எங்க வீட்டுல தான் சமையல் வேலை பாக்குறாரு. ஆனா, கடந்த பத்து வருஷமா அவரே என்ன பலமுறை பின்தொடர்ந்து வந்திருக்காரு.

அவரு எதுக்கு வராரு, அவரோட பார்வை அப்ப மட்டும் ஏன் குரூரமான விதத்துல இருக்குன்னு நான் சந்தேகப்பட்டிருக்கேன். அப்பறம் உண்மை தெரிஞ்சு... முக்கால்வாசி ஆம்பளைங்க இப்படி தான் போலன்னு விட்டுட்டேன்.

சரி! நான் கடந்து வந்த பாதையில... முக்கியமான கதாப்பாத்திரங்கள் பத்தி இனி சொல்றேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போர்டு எக்ஸாம்!

போர்டு எக்ஸாம்!

நான் பெரிய புத்திசாலி எல்லாம் இல்ல. ஏதோ பாஸ் ஆகுற அளவு படிக்கிற பொண்ணு தான். அடிக்கடி செய்திகள்ல பேப்பர் ட்ரேஸ் பண்ணி பாஸ் பண்ணிட்டதா படிச்சிருக்கேன். அப்படி எல்லாம் பண்ணி கூட அதிக மார்க் வாங்க முடியுமான்னு சந்தேகம் இருக்கும். சரி! நாமளும் முயற்சி பண்ணி பார்ப்போம்ன்னு அரைவேக்காட்டு தனமா ஆன்லைன்ல போய் தேடிக்கிட்டு இருந்தேன்.

ஆன்லைன்!

ஆன்லைன்!

சில ஆன்லைன் தளங்கள்ல அதற்கான வாய்ப்புகளும் இருந்துச்சு. சிலரோட தொடர்பும் கிடைச்சது. ஆனா, அவங்க எல்லாம் நிஜமாவே அந்த வேலைய பண்றவங்களா, இல்ல என்ன மாதிரி யாராவது வந்தா பணம் புடிங்கிட்டு போறவங்களான்னு தெரியல.

அப்ப தான் ஒரு தளத்துல இருந்து, ஒருத்தன் எனக்கு மெசேஜ் பண்ணான். ரெண்டு நாள்ல என்ன லவ் பண்றேன்னு சொன்னனான்.

பிரபோசல்!

பிரபோசல்!

எனக்கு இந்த ஆன்லைன் காதல், பார்க்காமலே காதல்ல எல்லாம் நம்பிக்கை இல்ல. அதுமட்டுமில்லாம எங்க வீட்டுல 15 வயசுக்குள்ளயே நிச்சயம் பண்ணிடுவாங்க. அதுக்கப்பறம் மூணு, நாலு வருஷத்துல கல்யணம் ஆகிடும். முறைப்பையன தான் கட்டிக்கணும் அது தான் எங்க வழக்கம். இதுக்கு நடுவுல இதெல்லாம் எனக்கு அவசியமா படல.

அப்யூஸ்!

அப்யூஸ்!

ஆனா, அவன் என்னோட ஈ-மெயில் ஐடியா கண்டுபிடிச்சு பிளாக்மெயில் பண்ண ஆரம்பிச்சான். நான் பேப்பர் ட்ரேஸ் பண்ண முயற்சி பண்ணத சொல்லிடுவேன், என் கூட பேசுன்னு பயமுறுத்தி பார்த்தான். கொஞ்ச நாள் பேசுனேன். ஆனா, அவனால ஒன்னும் பண்ண முடியாதுன்னு தெரிஞ்சுக்கட்டதுக்கு பின்ன அவாய்ட் பண்ண ஆரம்பிச்சேன்.

அவன் என்ன விடுறதா இல்ல, அப்யூஸ் பண்ண ஆரம்பிச்சான், எப்ப எல்லாம் நான் பேசாம அவாய்ட் பண்றேனோ அப்ப எல்லாம் அவன் கைய பிளேடால அறுத்துக்கிட்டு அத போட்டோ எடுத்து அனுப்புவான். அவன் ஏதோ விதத்துல என்ன அடையும்ன்னு நெனச்சான்.

இராத்திரி...

இராத்திரி...

ஒரு கட்டத்துல இராத்திரி எல்லாம் அழுகிறதே என்னோட கதியா போச்சு. ஒரு நாள் முடிவு பண்ணேன், அவன பிளாக் பண்ணிடலாம்ன்னு. பிளாக் பண்ணிட்ட பிறகும் வேற, வேற ஐடியில இருந்து வந்து பேச முயற்சி பண்ணான்.

அப்பறம் ஒரு வருஷம் நான் இன்டர்நெட்டே யூஸ் பண்ணாம இருந்தேன். அவனும் போயிட்டான். அப்ப நான் 11வது படிச்சுட்டு இருந்தேன். எனக்கும் என் முறை பையனுக்கும் கல்யாணம் நிச்சயம் பண்ணாங்க.

நிச்சயம்!

நிச்சயம்!

சின்ன வயசுல இருந்தே எங்க ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம்ன்னு சொலி வைச்சதால, எனக்கே தெரியாம அவன் மேல ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு போச்சு. அவனுக்கும் அப்படி தான். நாங்களா சொல்லாமலே எங்க வீட்டுல நிச்சயம் பண்ணிட்டாங்க.

மூணு வருஷத்துக்கு அப்பறம் கல்யாணம். காலேஜ் முடிஞ்சதும் என் வாழ்க்கை முழுக்க அவன் கூட தான்னு நெனச்சேன். நான் கனவு கண்ட ட்ரீம் பாய் குணங்கள் எல்லாம் அவன்கிட்ட இல்லைதான். ஆனாலும், அவன் நல்லவன், எனக்கு ரொம்ப பிடிக்கும்.

மத்தவங்க மாதிரி காதலிக்க நாங்க பர்மிஷன் வாங்க தேவையே இல்ல. நான் எப்ப வேணாலும் அவன் வீட்டுக்கு போகலாம், அவன் எப்ப வேணாலும் எங்க வீட்டுக்கு வருவான்.

திருப்பம்...

திருப்பம்...

இந்த காதல் பயணம் சுபமா முடியல. திடீர்னு ஒரு நாள் இந்த கல்யாணம் கேன்சல் பண்ணிக்கலாம். எங்களுக்கு விருப்பம் இல்லன்னு அத்தை, மாமா சொல்லிட்டாங்க. அதுக்கான காரணம் என்னனு கடைசி வரைக்கும் எங்கக்கிட்ட அவங்க சொல்லவே இல்ல.

அப்ப நான் காலேஜ் முதல் வருஷ கடைசில படிச்சுட்டு இருந்தேன். நான் அவன்கிட்ட எவ்வளவோ பேசி பார்த்தேன், கெஞ்சி பார்த்தேன். எல்லா பசங்கள போல, என் அப்பா, அம்மா பேச்ச தட்ட முடியாதுன்னு சொலிட்டு போயிட்டான்.

மிஸ் பண்ணல...

மிஸ் பண்ணல...

வேண்டாம் சொன்னவனால, என் கூட பேசாம இருக்க முடியில. கல்யாணம் வேண்டாம் ஆனா பேசணும்ன்னு மட்டும் கேட்டான். பேசுனோம். என்னாலையும் அவன முழுசா வெறுக்க முடியல.

ஆனா, ஒரு கட்டத்துல நான் அவன விரும்புற அளவுக்கு, அவன் என்ன விரும்பல, நான் அவன மிஸ் பண்ற அளவுக்கு அவன் என்ன மிஸ் பண்ணலன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அப்போ இருந்து அவன் வாழ்க்கையில இருந்து கொஞ்சம், கொஞ்சமா விலக ஆரம்பிச்சேன். இப்பவும் நாங்க பேசுவோம். ஆனா எப்பயாவது.

பிஸ்னஸ்!

பிஸ்னஸ்!

இதுக்கு எல்லாம் நடுவுல தான் நான் சொந்தமா ஒரு ஆன்லைன் பிஸ்னஸ் ஆரம்பிச்சேன். பெரும்பால்லும் என்னோட கஸ்டமர்ஸ் எல்லாரும் எங்க சொந்த காரங்க தான். அப்படி தான் எங்க தூரத்து சொந்தக்கார பையன் ஒருத்தன் கஸ்டமரா அறிமுகம் ஆனான்.

ஒரு கட்டத்துல பிஸ்னஸ் தாண்டி நாங்க பேச, பழக ஆரம்பிச்சோம். என்னோட சிறந்த நண்பன் அவன். என்ன முழுசா புரிஞ்சுக்கிட்ட ஒரே ஆள் அவன்தான். என்னோட சந்தோஷம், துக்கம், நான் எதுக்கு அழுவேன், எதுக்கு சிரிப்பேன்னு அவனுக்கு மட்டும் தான் தெரியும்.

சொல்லாமலே...

சொல்லாமலே...

எங்களுக்குள்ள ஒரு காதல் இருக்குன்னு எங்க ரெண்டு பேருக்குமே தெரியும். ஆனா, அத நாங்க வெளிப்படுத்திக்கள. எனக்கு இன்னொரு காதல் உறவுல இணையிற ஆர்வமும் அப்ப இல்ல. ஆனா, நான் கனவு கண்ட வெச்ச அந்த ட்ரீம் பாய்க்கான எல்லா குணங்களும் அவங்ககிட்ட இருந்துச்சு.

பின்ன, காதலிக்கிறேன்னு சொல்லாம இருந்தாலும், எங்களுக்குள்ள ஒரு காதல் மலர்ந்துச்சு. பிரபோஸ் பண்ணிக்கல, காதலிக்கிறோம்ன்னு சொல்லல, வேற விதமா எதுவும் பேசல... ஆனா ரெண்டு பேர் வாழ்க்கையில நடக்குற எல்லா விஷயமும் பகிர்ந்துக்கிட்டோம்.

வேற ஒருத்தன்.

வேற ஒருத்தன்.

வீட்டுல எங்க ரெண்டு பேருக்கு நடுவுல இருக்க விஷயம் தெரிஞ்சு போச்சு. எல்லார் வீட்டுலையும் பொண்ண என்னெல்லாம் சொல்லி திட்டு அடிப்பாங்களோ, அதெல்லாம் எனக்கும் கிடைச்சது. மொத்தமா அவங்களே அந்த பையன பிளாக் பண்ணிட்டாங்க.

கொஞ்ச நாள் கழிச்சு தான் அவன் கூட பேசறதுக்கான வாய்ப்பு கிடைச்சது. ஆனா, அதுக்குள்ள வேற ஒரு முறை பையன் கூட எனக்கு நிச்சயம் பண்ணி, கல்யாண நாளும் குறிச்சுட்டாங்க. ஏழு மாசத்துல கல்யாணம். என்னால அந்த பிரெண்ட மறக்க முடியல, அவன் கூட இல்லாத வாழ்க்கைய நினைக்க முடியல.

வாய்ப்பே இல்ல...

வாய்ப்பே இல்ல...

எனக்கு தெரியும், சினிமாவுல வர மாதிரியான க்ளைமேக்ஸ் திருப்பம் எல்லாம் என் வாழ்க்கையில நடக்க வாய்ப்பே இல்ல. ஆனால், ஒரு அதிசயம் நடக்காதா.. அந்த கடவுள் என்மேல கருணை காட்ட மாட்டாரான்னு ஏங்கிட்டு இருக்கேன்.

ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது. நான் ஆசைப்படுற விஷயம் மட்டும் ஏன் கிடைக்க மாட்டேங்குதுன்னு நிறைய அழுதுருக்கேன், அம்மா, அக்காக்கிட்ட போய் சொல்லி கெஞ்சி பார்த்தேன். ஆனா, அப்பா வார்த்தைக்கும், முடிவுக்கும் எதிர்பேச்சே இல்லன்னு சொல்லிட்டாங்க.

எப்படியும் இந்த ஏழு மாசம் சொடக்கு போடுற மாதிரி கடந்து போயிடும். நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை, குட்டின்னு செட்டிலாகிடுவேன்.

ஆனா, அந்த காதல்... என்னைக்குமே என் மனசுல இருந்து விலகாது. ஏன்னா... என் வாழ்க்கையிலேயே என்ன முழுசா புரிஞ்சுக்கிட்ட ஒரே ஆள் அவன்தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: I Loved My Cousin, My Fiance Love Me, But Only My Friend Understands Me Well

Real Life Story: I Loved My Cousin, My Fiance Love Me, But Only My Friend Understands Me Well
Desktop Bottom Promotion