For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க லைஃப்ல நீங்களும் இப்படி ஒரு தப்பு பண்ணியிருக்கலாம்... - My Story #153

காதலைவிட கல்வி ரொம்ப முக்கியம்னு நான் லேட்டா தான் புரிஞ்சுக்கிட்டேன் - My Story #153

|

Recommended Video

காதலை விட கல்வி ரொம்ப அவசியம்ன்னு தெரிஞ்சுக்கிட்டேன்- வீடியோ

படிக்கும் காதலிக்கிறதோ, படிக்கிற வயசுல காதலிக்கிறதோ பிரச்சனை இல்லை. ஆனா, அந்த வயசுல படிக்காம சும்மா காதல் தான் கெத்துன்னு நெனச்சு ஊர் சுத்தி காதலிக்கிறது தான் பிரச்சனை. எப்படியோ அடிச்சுப்புடுச்சு காதல் ஃபெயிலியர் ஆகாம பார்த்துக்கிட்டேன். ஆனால், இப்போ வாழ்க்கையே ஃபெயிலியர் ஆயிடுமோன்னு பயமா இருக்கு.

எனக்கும் என் மனைவிக்கும் எந்த சண்டையும், பிரச்னையும் இல்ல. ஆனால், எதிர்காலத்துல நாங்க அடிக்கடி சண்டைப் போட்டுக்கவமோன்னு பயமா இருக்கு.

காதலை விட கல்வி ரொம்ப அவசியம்ன்னு காலம் கடந்த பிறகு தான் தெரிஞ்சுக்கிட்டேன் நான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கரக்டா முளைச்சது!

கரக்டா முளைச்சது!

அப்ப எனக்கு 17வயசு நெருங்கிட்டு இருந்துச்சு. +1 படிச்சுட்டு இருந்தேன். பத்தாவது வரைக்கும் பாய்ஸ் ஸ்கூல்ல படிச்சதுனால என்னவோ, +1 கோ-ஹெட்ல சேர்ந்ததும். எந்த பொண்ண பார்த்தாலும், இவதான் நம்மக்கானவளான்னு ஒரு சந்தேகம் வரும்.

ஜோதிய பார்த்தப்பவும் எனக்கு அதே சந்தேகம் ரொம்ப வலுவா வந்துச்சு. ஜோதிக்கும், மத்த பொண்ணுகளுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் இருந்துச்சு. மத்தவங்கள பார்த்தப்ப வராத தைரியம், எனக்கு அவள பார்த்தப்பின்ன வந்துச்சு. அதுனால, இதுதான் லவ்வுன்னும், ஜோதி தான் எனக்கானவன்னு மனசுக்குள்ள லாக் பண்ணிக்கிட்டேன்.

முதல்ல ஒத்துக்கல...

முதல்ல ஒத்துக்கல...

ஆரம்பத்துல ஜோதி என்னோட லவ்வ ஒத்துக்கல. எல்லாரையும் போல ஓவர் ரியாக்ட் பண்ணா. உனக்கெல்லாம் அக்கா, தங்கச்சி இல்லையான்னு சினிமா ஹீரோயினி பேசுற மாதிரி எல்லாம் நிறையா டயலாக் பேசியிருக்கா.

அவள பார்க்கணும்னுங்கிற ஒரே காரணத்துக்காக ட்யூஷன் எல்லாம் சேர்ந்தேன். நான் எப்பவுமே சுமாரான ஸ்டூடன்ட் தான். எவ்வளோ கஷ்டமான சப்ஜெக்ட்டா இருந்தாலும் ஃபெயிலாகாட்டியும் ஜஸ்ட் பாஸாவது ஆயிடுவேன். அப்படி தான் இந்த லவ்லயும் பாஸானேன்.

இம்ப்ரஸ்!

இம்ப்ரஸ்!

ஜோதிய இம்ப்ரஸ் பண்ண நிறையா ட்ரை பண்ணேன். ஆனா, எதுவும் செட் ஆகல. ஒரு நாள் டியூஷன் டெஸ்ட் முடிய நேரம் ஆயிடுச்சு. டெஸ்ட் முடிஞ்ச கொஞ்ச நேரத்துல மழையும் வந்துடுச்சு. அரைமணிநேரம் ஓயாம மழை அடிச்சு ஊத்துச்சு. எங்க சார் மழை நிக்கிற வரைக்கும் போகவேண்டாம். இங்கயே இருங்கன்னு சொல்லிட்டாரு. கிட்டத்தட்ட மணி நைட் 9.30 ஆயிடுச்சு.

ஜோதி 7.30க்கு கிளம்பினா தான் அவ வீட்டுக்கு 8.00க்காவது போக முடியும். நைட் லேட்டானதால அவளுக்கு கொஞ்சம் பயம் வேற. அவங்க வீட்டுல அன்னிக்கி ஜோதியோட பாட்டிய தவிர வேற யாரும் இல்லன்னு, அவ வீடு வரைக்கும் துணைக்கு போறது வரைக்கும் எனக்கு தெரியாது.

மாட்டிக்கிச்சு!

மாட்டிக்கிச்சு!

இது ஒரு சின்ன ஹெல்ப் தான். ஆனால், இது எப்படி அவளுக்கு என்மேல ஒரு இம்ப்ரஷன் கொண்டு வந்துச்சுன்னு இப்ப வரைக்கும் எனக்கு தெரியல. +2 பப்ளிக் எக்ஸாம் முடிஞ்சபின்ன கடைசி நாள் தான் அவ என்ன லவ் பண்றேன்னு சொன்னா. அன்னிக்கி நாங்க எல்லாரும் சினிமா போறதா பிளான் இருந்துச்சு. அவளும் கூட வந்தா.

சினிமா எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். யாராவது லேட்டா வந்த டாஸ் போச்சுன்னு விட்டுட்டு, தியேட்டர்குள்ள போயிடுவேன். அன்னிக்கி நான் சினிமாவே பார்க்கல. தியேட்டர்குள்ள போனதுல இருந்து படம் முடியிற வரைக்கும் ஜோதிய பார்த்துட்டு இருக்கிறதே ஜோலியா வெச்சிருந்தேன்.

வெட்கம்!

வெட்கம்!

முதல் தடவையா ஒரு பொண்ணோட வெட்கத்த ரசிக்கிறது இருக்கே... அதுவும் அந்த வெட்கத்துக்கு காரணம் நாம தாங்கிற அந்த மொமன்ட். நிஜமாவே வேற லெவல் தான்.

இன்னுமும் என்னோட மனசுல பெரிய கட்டவுட் சைஸ்ல ஜோதி வெட்கப்பட்ட அந்த முதல் தருணத்த ரொம்ப பத்திரமா சேமிச்சு வெச்சிருக்கேன்.

ஜோதிய நான் ஒரு பொண்ணா மட்டும் தான் முதல் தடவை பார்த்தேன். அப்பறமா அவ என்னோட துணையா வரணும்னு ஆசைப்பட்டேன். ஆனால், ஜோதி, என்னோட தோழியாவும், காதலியாவும், மனைவியாவும், அம்மாவும், என்னோட வாழ்க்கையாவும் வருவான்னு நெனைச்சு பார்க்கல.

விஸ்காம்!

விஸ்காம்!

நான் விஸ்காம் படிக்கும் போது, பலருக்கும் விஸ்காம்ன்னா என்னன்னே தெரியாது. சொந்தகாரங்க, ஃபிரண்ட்ஸ் எல்லாரும் என்ன படிப்புடா அதுன்னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க. விளக்கமா சொன்னா சினிமா எடுக்குற படிப்பான்னு கேட்பாங்க. விஸ்காம்ல நிறையா வாய்ப்பு இருக்குன்னு படிக்கும் போது எனக்கே தெரியாது. நானே கொஞ்சம் ஜாலியா படிக்கனும்ன்னு தான் விஸ்காம் சூஸ் பண்ணேன்.

சினிமா வாழ்க்கை!

சினிமா வாழ்க்கை!

என்னோட வாழ்க்கைய யார்க்கிட்ட சொன்னாலும் ஒரு சினிமா மாதிரி இருக்குன்னு சொல்வாங்க. ஏன்னா, நான் ஒரு சினிமா மாதிரி தான் என்னோட வாழ்க்கைய வாழ்ந்தேன். எனக்கு கொஞ்சம் நல்லா எழுத வரும். பாட்டெல்லாம் கூட எழுதியிருக்கேன். நாங்களே ஆல்பம் எல்லாம் பண்ணோம். கொஞ்சம் சுமாரா தான் அதோட அவுட்புட் இருந்துச்சு. கல்ச்சுரல்ஸ் எங்கன்னாலும் கிளம்பி போயிடுவோம்.

நான் எல்லாத்துலயும் அரைகுறையா இருந்தேன். டான்ஸ் ஆடுவேன் ஆனா, யாராச்சும் சொல்லிக் கொடுக்கணும். பாட்டு எழுதுவேன் ஆனா மியூசிக் பண்ண தெரியாது. இப்படி தான் என்னோட வாழ்க்கை அப்ப இருந்துச்சு.

கல்யாணம்!

கல்யாணம்!

படிச்சு முடிச்சு நல்ல வேலைக்கு போகணும்ன்னு எனக்கு தோணல. ஜோதிக்கு மாப்புள பாக்குறாங்கன்னு தெரிஞ்சதும்., அவள கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

எனக்கு இருந்த ஒரே தைரியம் ஜோதி. வாழ்க்கைக்கு தைரியம் மட்டும் போதாது கொஞ்சம் திறமையும் வேணும். என்கிட்டே திறமை இருந்துச்சு. ஆனால், அதை எப்படி வெளிப்படுத்தணும்ங்கிற விஷயம் தான் எனக்கு தெரியல. நான் கத்துக்கிட்ட அடிப்படை விஷயங்கள் தான் மொத்தமும்ன்னு நெனச்சுக்கிட்டு நான் ஒரு திறமையாளன்னு நம்பி ஏமார்ந்தேன்.

கல்யாணம் பண்ணிட்டு வேலை தேடி போனா, போற பக்கம் எல்லாம் எடுபுடி வேலை தான். மீடியாவுல எல்லாருக்கும் கிடைக்கிற முதல் வேலை எடுபுடி வேலைதான்னு தெரியாது. எடுத்ததும் டைரக்டர் ஆயிடலாம்ங்கிற ரேஞ்சுக்கு நெனச்சுட்டு இருந்தேன்.

முடிவு!

முடிவு!

ஜோதிக்கு ஐ.டில வேலை கிடைச்சதுனால... நான் கொஞ்சமாவது ரிலாக்ஸா இருக்க முடிஞ்சது. ஆனாலும், கூட இருக்கவன் எல்லாம்... உனக்கு என்னப்பா பொண்டாட்டி சம்பாதிச்சு கொட்டுறான்னு சொல்லு போதெல்லாம் நறுக்குன்னு இருக்கும். ஆனால், அதுதான உண்மை.

கடைசியா ஃபேஸ்புக்ல டி.பி மாத்த கத்துக்கிட்ட போட்டோகிராபி தான் கைக்கொடுத்துச்சு. கல்யாணம், காட்சின்னு போட்டோ எடுத்துக்கிட்டு இருக்கேன். கல்யாணமாகி ரெண்டு வருஷமாச்சு இன்னமும் ஒவ்வொரு மாசமும் கத்தி மேல நடக்குற மாதிரிதான் இருக்கு.

நேரம்!

நேரம்!

ஒருவேளை, நல்லா படிச்சு, ஜோதி வீட்டுல டைம் கேட்டு... செட்டிலாகாட்டியும், ஒரு நல்ல வேலை கிடைச்ச பிறகு கல்யாணம் பண்ணியிருந்தா... இன்னிக்கி குழந்தை பெத்துக்க கூட டைம் பார்க்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.

செட்டிலாகிட்டு தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நான் சொல்லல. அட்லீஸ்ட் ஒரு நல்ல வேலையாவது முக்கியம். திடீர்ன்னு கன்சீவ் ஆகி குழந்தை பிறந்து ஜோதி ஆறு மாசம் வேலைக்கு போக முடியாத நிலைமை வந்துச்சுன்னா... கொஞ்சம் கஷ்டம் தான்.

வாழ போறது ஒரே ஒரு வாழ்க்கை. அது பிரம்மாண்டமா இல்லாட்டியும்... குறைஞ்சபட்சம் நம்மளோட பஞ்சர் ஆகாத வண்டியாவாவது இருக்கணுமே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

I Realized Education is More Important Than Love - My Story!

I Realized Education is More Important Than Love - My Story!
Story first published: Tuesday, January 23, 2018, 16:05 [IST]
Desktop Bottom Promotion