பொண்ணுங்ககிட்ட எப்படி ஐ லவ் யூ சொன்னா உடனே ஓகே சொல்வாங்க...

Posted By: Sugumar A D
Subscribe to Boldsky

நீங்கள் ஒரு பெண்ணை துரத்தி துரத்தி காதலித்தாலும் ஒகே சொல்லாமல் போகும் நிலை ஏற்படலாம். நீங்கள் ஒரு பெண்ணிடம் உங்களை காதலை தரமான முறையில் வெளிப்படுத்தினால் அதை கண்டிப்பாக ஏற்கும் மனப்பக்குவத்துக்கு அந்த பெண் வந்துவிடுவார் என்பது உறுதி.

realtionship

வாழ்நாள் முழுவதும் உங்கள் காதலி உங்களை நினைவில் வைத்துக்கு கொள்ளும் வகையில் தரமான முறையில் காதலை வெளிப்படுத்தும் முறைகள் இங்கே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இது சாதாரண விஷயம் தான். எந்த செயலையும் காதலிக்காக மட்டும் செய்யாதீர்கள். இருவருக்கும் சேர்த்து செய்யுங்கள். இது உங்களது வாழ்க்கையில் ஒரு மைல் கல் என்பதை மறக்க வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காதல் சொல்வது எப்படி

காதல் சொல்வது எப்படி

யாராவது நண்பர்களை வைத்து புரபோஸ் பண்ண தூது அனுப்புவது அந்த காலம். தானே துணிந்து வந்து காதலை சொல்லும் ஆண்களைத் தான் பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும். வாழ்நாள் முழுவதும் உங்கள் காதலி உங்களை நினைவில் வைத்துக் கொள்ளும் சுவாரஸ்யமானதாக உங்கள் பிரபோஸல் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் உங்களுடைய நண்பர்களோ அல்லது சினிமாவில் ஏதாவதொரு ஹீரோ பண்ணுவது போல் பண்ண முயற்சி செய்யாதீர்கள். உங்கள் காதலிக்கு நீங்கள் தான் ஹீரோ. சோ காப்பி வேண்டாமே.

தனிமையான இடத்தில் டின்னர்

தனிமையான இடத்தில் டின்னர்

ஒரு பெண்ணும், ஆணும் ஒரு உணவகத்திற்கு சென்று ஒரு டம்பளர் ஒயினில் மோதிரத்தை போட்டு காதலை வெளிப்படுத்துவது என்பது வழக்கமான விஷயமாகும். இதை கொஞ்சம் மேம்படுத்துவோம். தரமான ஒரு உணவகத்தில் இருக்கையை முன்பதிவு செய்துகொள்ளுங்கள். நீங்கள் காதலை வெளிப்படுத்த போகும் தகவலை உணவக மேலாளரிடம் முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள்.

‘‘நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா?'' என்ற வாசகத்தை மேஜை கரண்டிகள், ஃபோர்க், கத்தி போன்றவற்றில் செதுக்கும்படி கூறுங்கள். உணவகத்திற்கு செல்லும் நாள் அன்று, இவற்றை உணவு பரிமாறும் போது வழங்குமாறு சர்வரிடம் தெரிவித்துவிடுங்கள். இது மிக அமைதியாகவும், தரமான மற்றும் ஆக்கப்பூர்வ வெளிப்பாடாக இருக்கும். இது நுட்பமாகவும், தரமான வகையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

நடனம் மூலம் வெளிப்பாடு

நடனம் மூலம் வெளிப்பாடு

நீங்கள் தினமும் ஒரு நடனக் குழுவை பார்க்க முடியாது. உங்களது காதலை நடனக் குழு மூலம் வெளிப்படுத்தினால் அந்த பெண் அதை அதிகபட்சம் என நினைக்கமாட்டார். அதனால் நடனமாடத் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை, ஒரு நடனக் குழுவை வாடகைக்கு பேசி அவர்களிடம் உங்களது திட்டத்தை கூறுங்கள். நீங்கள் உங்கள் காதலியுடன் இருக்கும் போது அந்த குழுவின் நடனம் தொடர வேண்டும்.

எதிர்பாராதவிதமாக அந்த பெண்ணின் கவனம் நடனத்தின் மீது செல்லும் போது நீங்கள் மண்டியிட்டு உங்களை காதலை வெளிப்படுத்தினால் நிச்சயம் வெற்றி தான். எனினும் இந்த முயற்சியை உங்களது நண்பர்களை வைத்தும் மேற்கொள்ளலாம். இந்த முயற்சி அந்த பெண்ணுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். ஏன் உங்களது நண்பர்கள் நடனக் குழுவாக மாறினார்கள்? என்று அவர் நினைக்கும் நேரத்தில் உங்களது காரியத்தை நீங்கள் சாதித்துவிடலாம்.

மரங்கள் நிறைந்த வழித்தடம்:

மரங்கள் நிறைந்த வழித்தடம்:

மரங்கள் நிறைந்த பகுதிகளில் புகைப்படம் எடுக்க அற்புதமாக இருக்கும். அதனால் ஒரு புகைப்படக்காரை வாடகைக்கு அமர்த்திக் கொள்ளுங்கள். மரங்கள் நிறைந்த அந்த வழித்தடத்தில் நீங்களும், உங்களது காதலியும் நடந்து செல்லும்போது மண்டியிட்டு உங்களை காதலை வெளிப்படுத்தி ஆச்சர்யம் ஏற்படுத்துங்கள்.

இந்த நேரம் வெறும் உணர்ச்சி நினைவாக கடந்துவிடாமல் வாழ்நாள் ஆதாரமாக்க புகைப்படக்காரம் மூலம் புகைப்படம் எடுத்துவிடுங்கள். புகைப்படக்காரரும் தனியாக நடந்து வந்து இந்த சரியான தருணத்தை படம் பிடிக்கும்படி முன்கூட்டியே கூறிவிடுங்கள். உங்களுக்கு புதையல் கிடைத்தது போல் இருக்கும் காதலியுடனான இந்த தருணத்தை தவறவிடக் கூடாது.

தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்துதல்

தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்துதல்

அனைத்து விஷயங்களை தனிப்பட்ட முறையில் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த ஆலோசனை சரியாக இருக்கும். நீங்கள் தங்கியிருக்கும் அறைக்கான வழித்தடம் பளிச்சென்று தெரியும் வகையில் அமைத்துக் கொள்ளுங்கள். அறை முழுவதையும் உங்களது ரசனையை கொண்டு அலங்கரியுங்கள். அந்த பெண் தீர்வு காணும் வகையில் ஒரு புதிர் போட்டியும் தயார் செய்யுங்கள். அந்த புதிருக்கு தீர்வு காணும் போது அங்கு மோதிரம் தெரிய வேண்டும். இதை கண்டு அவர் ஆச்சர்யப்படும் சமயத்தில் நீங்கள் மண்டியிட்டு உங்களது காதலை வெளிப்படுத்திவிடுங்கள். அவருக்கு ஒரு மோதிரத்தை அன்பளிப்பாக அணிந்துவிடுங்கள். அறையில் ஆங்காங்கே கேமராக்களை பொறுத்தி இதை பதிவு செய்ய மறந்துவிட வேண்டாம்.

புத்தகங்கள் மூலம் வெளிப்படுத்துதல்:

புத்தகங்கள் மூலம் வெளிப்படுத்துதல்:

உங்களது காதலி ஒரு புத்தக பிரியர் என்றால் அவருக்கு பிடித்த 2 புத்தகங்களை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் உங்களது காதலை வெளிப்படுத்தும் வகையிலான வார்த்தைகளை அடிகோடிட்டு வாக்கியத்தை அமையுங்கள். புத்தகத்தின் முதல் பாதியில் கோடிட்ட வார்த்தைகள் இருக்க வேண்டும். அடுத்த பாதி புத்தகத்தில் ஒரு துளை போட்டு அதில் ஒரு மோதிரத்தை வைத்துவிடுங்கள். அந்த இடத்தில் ஒரு புகைப்படத்தை வைத்து, அதன் பின்னால் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? என்ற வாசகத்தை எழுதி அவரிடம் கொடுத்துவிடுங்கள்.

காதலி ஓகே சொல்லும் தருணம்

காதலி ஓகே சொல்லும் தருணம்

இப்போது நீங்கள் ஒரு அதிசயத்தை பார்க்கலாம். முதலில் அவர் கோடிட்ட வார்த்தைகளை படிப்பார். பின்னர் துளை போட்ட பகுதிக்கு சென்று புகைப்படத்தை திறந்து அந்த துளையிட்ட பகுதியை பார்ப்பார். பின்னர் புகைப்படத்தை அகற்றிவிட்டு மோதிரைத்தை பார்ப்பார். இதன் பின்னர் புகைப்படத்தை திருப்பி அதில் எழுதியுள்ள வாசகத்தை படிக்க திருப்புவார். அந்த சமயத்தில் நீங்கள் மண்டியிட்டு காதலை வெளிப்படுத்தி விடுங்கள். கண்டிப்பாக ஓகே ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Classy Proposing Ideas: These Will Definitely Make Her Say A Yes

Put your own spin on one of these romantic, and foolproof, proposal ideas.
Story first published: Thursday, March 29, 2018, 19:20 [IST]