இந்த கேள்விக்கு பதில் சொன்னா நீங்க காதலிக்க தயார்னு அர்த்தம்... என்ன ரெடியா?...

Posted By: Haleetha Begum M
Subscribe to Boldsky

நமக்கான சரியான துணையை கண்டுபிடிப்பது மிக கடினமானது. அதனது முதல் படி நம்மை நாமே கேட்டு கொள்ள வேண்டும் அந்த உறவுக்கு உரிய முழு அர்ப்பணிப்பை நாம் கொடுக்க தயாரா இல்லையா என்று. புதிய உறவுகளுக்குள் நுழைவது மிக எளிதானது ஆனால் அதை கடைசி வரை தக்க வைப்பது என்பது மிக கடினமானது. நாம் பல மனிதர்களைப் பார்க்கிறோம், உறவுகளுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுக்காததால் அதை பாதியிலேயே இழந்து விடுகிறார்கள்.

எந்த எந்த விஷயங்கள் ஒரு ஆண் அல்லது பெண்னை சிறந்த வாழ்க்கை துணையாக ஆக்குகின்றது என்பதை பற்றி எல்லாரும் பொதுவாக பேசுகிறோம். ஆனால் ஒருவருடன் கடைசி வரை நிலைக்க கூடிய உண்மையான உறவுக்கு தேவையான அடிப்படை அம்சங்களை பொதுவாக கவனிக்காமல் விட்டு விடுகிறோம்.

love

நிலையான உறவுகளுக்கு தேவையான உண்மையான அர்ப்பணிப்புடன் செயல்பட நீங்க தயாரா என்பதை கண்டுபிடிக்க இதை தொடர்ந்து படியுங்கள். இது உங்களை தெளிவு படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேள்வி 1

கேள்வி 1

உள்ளதை உள்ள படியே ஏற்றுகொள்ளுதல்.

நாம் ஒருவரை முழுமையாக புரிந்து, அவர்களின் குறைகள் முழுவதும் அறிந்தும், அவர்களை நேசித்தோம் என்றால் கடைசி வரை நீடிக்க கூடிய கமிட்மென்ட்க்கு நாம் தயார் என்று அர்த்தம்.

நமக்கு பிடித்தமான குணங்களுடன் ஒருவரை நம்மால் உருவாக்க முடியாது. ஆனால் நமது துணையை அவர்களின் இயல்பான குணங்களுடன் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆரோக்கியமான உறவுக்கு இது தான் அடிப்படை. மனிதர்களின் இயல்பான குணங்களுடனே அவர்களை நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

கேள்வி 2

கேள்வி 2

சவால்களை சந்திக்க நீங்க தயாரா?

எல்லா உறவுகளை நிலைக்க செய்வதிலும் சில பல சவால்கள் வரும். நம்மால் அதை தவிர்க்க முடியாது. அதற்கு நீங்கள் ரெடியா என உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். இந்த சவால்கள் தாண்டி வருவதில் தான் வாழ்க்கையின் சுவாரசியங்கள் உள்ளது.

கேள்வி 3

கேள்வி 3

கடந்த காலத்தை மறந்து விடுங்கள்

பல பேர் தங்களுடைய முன்னாள் காதலருடன் நட்பு ரீதியான உறவு முறையில் இருப்பார்கள். கடந்த காலத்தின் நினைவுகளை விட முடியாமல், முன்னாள் காதலருடன் நேரம் செலவழிக்க முயற்சி செய்வார்கள். ஆனால் அவர்களிடம் இருந்து முழுமையாக விலகி இருந்தால் தான், வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நம்மால் போக முடியும்.

அவர்களுடனான பேச்சுவார்த்தை, அவர்களை சந்திப்பது என அனைத்தையும் தவிர்க்க வேண்டும். முன்னாள் காதலருடன் உள்ள தொடர்புகளை விட்டு முழுமையாக வெளிவராமல் நாம் எந்த புதிய உறவுகளுக்குள் நுழைவது பற்றி யோசிக்க கூட கூடாது.

கேள்வி 4

கேள்வி 4

உங்களை நீங்களே நேசியுங்கள்

நம்மை நாமே நேசிக்க ஆரம்பிக்கும் போது, நம்மை விரும்பும் உறவுகளையும் நம்மால் நேசிக்க முடியும். நமது உண்மையான சந்தோஷம் நம்மிடம் தான் உள்ளது. நம்முடன் நாமே நேரம் செலவழிக்க விரும்பும் போது, துணையுடன் நேரம் செலவழிப்பதையும் கண்டிப்பாக விரும்புவோம்.

கேள்வி 5

கேள்வி 5

துணை என்பது நம்மை முழுமைப்படுத்த அல்ல, நம்மை நேசிக்க

நம்மை முழுமைப்படுத்த துணையை தேடுவதற்கு, நாம் தனியாக இருப்பதே சிறந்தது. வாழ்க்கையின் கடைசி வரை ஒருவருடன் பயணிக்க விரும்பும் போது, ஒருவருடன் செலவழிக்கும் ஒவ்வொரு மணித்துளியையும் நாம் விரும்பும் போது,தைரியமாக வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு போகலாம்.

கேள்வி 6

கேள்வி 6

விட்டு கொடுத்து போக தயாராகுங்கள்

எந்த ஒரு உறவும் உறுதியாக நிலைத்து நிற்கவும், அது முழு மகிழ்ச்சியுடன் செழிக்கவும் அடிப்படையே விட்டு கொடுத்து அனுசரித்து போவது தான். நமது வாழ்க்கை என்பது அந்த உறவுகள் மட்டும் தான் என்று இல்லாவிட்டாலும், நமது வாழ்க்கையின் ஆழம் வரை அந்த உறவுகள் புகுந்து விடுகிறது. நமது துணையின் நண்பர்கள் முதற்கொண்டு அவர்களது குடும்பம், பழக்க வழக்கங்கள் ,வாழ்க்கை முறை ஏன்! வளர்ப்பு பிராணிகள் கூட நம்மிடம் நெருங்கி விடுகிறார்கள். அதே போல் நம்முடைய வாழ்க்கை முறைகளோடு துணையும் கலந்து விடுகிறார்கள். அதனால் அனுசரித்து விட்டு கெடுத்து போவது என்பது மிக முக்கியமானது. நாம் இதற்கு தயாராக இருந்தால், உறவுகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போவது பற்றி கண்டிப்பாக சிந்திக்கலாம்.

அதனால் நம்மை நாமே முதலில் அறிந்து கொள்ள வேண்டும். உறவுகளுக்கு தேவையான முழு அர்ப்பணிப்பு கொடுக்க நாம் தயாரா என்று நம்மை நாமே சுய பரிசீலனை செய்து கொள்ள வேண்டும். உறவுகளை நிலைக்க செய்வதற்கு இது தான் அடிப்படை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: love காதல்
English summary

Are You Ready For Commitment? 5 Steps To Find It Out

Finding your way for a perfect relationship is difficult, I understand. But first ask yourself, if you are ready for a commitment or not.
Story first published: Tuesday, April 3, 2018, 18:30 [IST]