காதலில் ஏமாற முக்கிய காரணங்கள்! இத எல்லாம் புரிஞ்சு நடந்துங்க!

Written By:
Subscribe to Boldsky

காதல் என்ற உறவிற்குள் நுழைவதற்கு முன்பு அதில் உள்ள சில நிசர்சனங்களை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். உங்களுக்கு தெரிந்த சில நண்பர்களின் காதல், திரைப்படங்களில் வரும் காதல் என சிலவற்றை கண்டு அதிர்ச்சியிலும், பயத்திலும் இருப்பீர்கள்.

அனைத்து விஷயத்திலும் சரியாக இருக்கும் மனிதர்களை காண முடியாது. உறவுகளில் சில் ஏற்ற இறக்கங்கள் இருப்பது இயல்பு தான். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. எதுவுமே நிலையில்லை!

1. எதுவுமே நிலையில்லை!

இந்த உலகில் எதுவுமே நிலையானது இல்லை. ஒரு சில சமயங்களில் ஒருவரை இழக்க வேண்டும் என்றால் இழந்து தான் ஆக வேண்டும். அதே போல ஒருவரால் எல்லா சூழ்நிலைகளிலும் உங்களுக்கு பிடித்த மாதிரியாகவே இருக்க முடியாது.

2. யாரையும் மாற்ற முடியாது!

2. யாரையும் மாற்ற முடியாது!

நீங்கள் எந்த அளவுக்கு சிரமப்பட்டாலும் சரி, உங்களால் யாரையும் மாற்ற முடியாது. ஒவ்வொருவருக்கும் அவர்களது தனித்திறன் என்று உள்ளது, அதை மாற்றிக்கொள்ள சொன்னால் அது அவர்களுக்கு மிக கடினமான ஒன்றாக இருக்கும்.

3. உங்களையும் மாற்ற முடியாது!

3. உங்களையும் மாற்ற முடியாது!

உங்களால் யாருடைய குணத்தையும் மாற்ற முடியாது என்பது போல, யாரலும் உங்களையும் மாற்ற முடியாது. என்னை நீ மாற்றிவிட்டாய், உன்னால் தான் நான் இப்படி செய்கிறேன் என்று கூறுவது தவறு.

உங்களது மாற்றத்திற்கு உங்களை தவிர வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது. உங்களை ஒருவர் வந்து மாற்ற வேண்டும் என்று நினைப்பதும் தவறானது, அது இயலாததும் கூட..!

4. இதை செய்யாதீர்கள்

4. இதை செய்யாதீர்கள்

உங்களது துணையின் நன்மைக்காக நீங்கள் ஒரு விஷயத்தை செய்கிறீர்கள் என்றால் முழு சந்தோஷத்துடன் செய்யுங்கள். அவராவது மகிழ்ச்சியாக இருக்கட்டும் என நினைத்து, எதையும் செய்ய வேண்டாம். இது பின்னாளில் உங்களது உறவில் விரிசல் உண்டாக காரணமாக அமையும்.

5. பொய் சொல்லாதவர்கள் இல்லை!

5. பொய் சொல்லாதவர்கள் இல்லை!

இன்று அனைத்து விஷயத்திலும் சரியானவர்கள் யாருமே இல்லை! உங்களது துணை ஒரு பொய் சொன்னால் அதன் பின்னால் உள்ள காரணத்தை பாருங்கள். அந்த பொய் உங்களது உறவை முறிப்பதற்காக சொல்லப்பட்டது என நினைக்காதீர்கள். உறவில் விரிசல் வர கூடாது என்பதற்காக சொல்லப்பட்டது என எடுத்துக்கொள்ளாமே!

6. ஏற்றுக்கொள்ளுங்கள்!

6. ஏற்றுக்கொள்ளுங்கள்!

உண்மையான காதல் நிறை, குறை என இரண்டையுமே ஏற்றுக்கொள்ளும். இதனை இருவருமே செய்ய வேண்டும். ஒருவரின் நிறைகளை மட்டுமே காதலிப்பது தவறு. நிறை இருக்கும் இடத்தில் குறையும் சேர்ந்தே இருக்க தான் செய்யும். இதனை ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

7. ஓடி விடாதீர்கள்!

7. ஓடி விடாதீர்கள்!

உண்மையான காதலில் சில சவால்கள் இருக்கத்தான் செய்யும்! அதை சமாளிக்க முடியாமல் ஒளிந்து ஓடுவது தவறான ஒன்று. எத்தனை தடைகள் வந்தாலும் நின்று போராடுவேன் என்று இருக்க வேண்டும். ஒளிந்து ஓடினால் உங்களை யாரும் நம்பமாட்டார்கள்.

8. உங்கள் மகிழ்ச்சிக்கு நீங்களே காரணம்!

8. உங்கள் மகிழ்ச்சிக்கு நீங்களே காரணம்!

உங்களது மகிழ்ச்சிக்கு நீங்கள் மட்டும் தான் காரணமாக இருக்க வேண்டும். உங்களது சந்தோஷம் உங்களது துணை தான் என்று நினைக்காதீர்கள். ஒருவேளை உங்கள் துணை ஒரு நாள் உங்களை விட்டு சென்று விடலாம், அப்போது உங்களுக்கு உலகமே இருண்டதாக தோன்றும்.

9. இது தான் காதல்!

9. இது தான் காதல்!

மற்றவர்கள் இப்படி காதலிக்கிறார்கள், அப்படி காதலிக்கிறார்கள், நமது காதல் ஏன் இப்படி இருக்கிறது என நினைப்பது தவறு...! உறவில் சில ஏற்ற இறக்கங்கள், மேடு, பள்ளங்கள் இருப்பது இயல்பு தான்.

அதை எல்லாம் கடந்து வர வேண்டும். எல்லாம் ஒருநாள் மாறும் என்ற நம்பிக்கை வேண்டும். அதை விட்டுவிட்டு என் காதல் மட்டுமே ஏன் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இல்லை என்று நினைக்க கூடாது!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

You should Know about relationship

You should Know about relationship
Story first published: Wednesday, August 2, 2017, 18:53 [IST]