கல்யாணம்னாலே இந்த பசங்க தெறிச்சு ஓடறாங்களே! இது தான் காரணமா?

Written By:
Subscribe to Boldsky

திருமணம் என்றாலே ஒரு பிரம்மாண்டமான கொண்டாட்டங்கள் தான் நமது நினைவுக்கு வரும். திருமண உறவு என்பது நமது கடைசி காலம் வரை உடன் வரும் ஒரு உறவு. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று எல்லாம் பல பழமொழிகள் இருக்கின்றன.

ஆனால் இந்த இளைய தலைமுறையினர்களிடம் திருமணம் எப்போது என்று கேட்டாலே அரிவாளை எடுத்து வெட்டி விடும் அளவிற்கு கோபம் அடைந்து விடுகிறார்கள். உறவினர்கள் வீட்டிற்கு வந்தாலே திருமணம் பற்றி ஏதேனும் சில பல கேள்விகள் மற்றும் வாய்க்கு வந்த அறிவுரைகளை எல்லாம் வீசி செல்வார்கள் என வீட்டு வாசலிலேயே என் திருமணம் பற்றி வீட்டிற்கு வரும் உறவினர்கள் யாரும் பேச வேண்டாம். அப்படி பேசினால் நடக்கறதே வேற என்று எல்லாம் போர்டு வைக்க ஆரம்பித்துவிட்டார்கள் இன்றைய இளைஞர்கள்.

அப்படி இந்திய இளைஞர்கள் திருமணம் என்ற பேச்சை கேட்டாலே தெறித்து ஓடும் அளவிற்கு என்ன தான் அவர்களுக்கு ஆனாது என்று தெரியாமல் பெற்றோர்கள் குழம்பி தவித்து கொண்டிருக்கிறார்கள்... நாங்களும் குழம்பிப் போய் சில இளம் சமுதாய ஆண், பெண்களிடம் கேட்ட போது பெற்ற பதில்களை இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருமண பேச்சு

திருமண பேச்சு

நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் காலம் தான் கல்லூரி காலம். ஒரு 20 வயது ஆனாலே போதும், கல்யாண வயசு ஆச்சு, அடக்க ஒடுக்கமாக இரு.. அங்க போகாத.. இங்க போகாத... அவங்க கூட பேசதா.. போன் பேசாத.. இந்த டிரஸ் போடாத.. அந்த டிரஸ் போடாத.. இவ்வளவு உடம்பு எதுக்கு கம்மியா சாப்பிடு.. தினமும் வாங்கிங் போ என ஆயிரத்தி எட்டு ஆடர்கள்.. கட்டுப்பாடுகள்... இதை எல்லாம் கேட்கும் போதே... கல்யாண வயசு வந்திருச்சுனு சொல்லியே இப்படி நம்மள அடங்கி வைக்கிறாங்களே... இனி கல்யாணம்னு ஒன்ன பண்ணிக்கிட்ட எத்தனை ஆடர் போடுவாங்கனு நமக்குள்ளேயே ஒரு எண்ணம் பிறந்துவிடுகிறது.

பொருப்பு வரல

பொருப்பு வரல

திருமணம்னு ஒன்ன பண்ணிகிட்ட போதுமா? பொருப்பா வாழ வேண்டாமா? என்ன பொருத்தவரைக்கும் இன்னும் குழந்தை தனமா.. விளையாட்டு தனமா தான் சுத்திக்கிட்டு இருக்க... நான் இன்னும் வளரனும்.. அதுக்கு இன்னும் கொஞ்சம் நாள் ஆகும். இப்பவே எனக்கு கல்யாணம் பண்ணி வச்சி என் வாழ்க்கைய கெடுத்தறாதீங்க... ப்ளீஸ் என்று கெஞ்சும் சில இளைஞர்களையும் இங்கு காண முடிகிறது..

சாதிக்கணும்

சாதிக்கணும்

என்ன படிச்சு வேலைக்கு போய், மாசம் ஒரு முப்பது ஆயிரம் ரூபாய் சம்பாதித்தால் போதுமா என்ன? குடும்ப செலவுக்கு இந்த பணம் எல்லாம் பத்தவே பத்தாது... கடன் எல்லாம் வாங்கி என்னால மாச மாச இ.எம்.ஐ கட்ட முடியாது.. அழகா ஒரு வீடு கட்டனும்... சூப்பரா ஒரு கார் வாங்கனும்.. அப்பறம் கல்யாணத்துக்கு நிறைய காசு சேர்க்கணும்.. அப்பறம் தான் கல்யாணம் எல்லாம்...! அதுக்கு முன்னடி எல்லாம் கல்யாணம்னு ஒரு பேச்சே எடுக்காதீங்க... எடுத்தீங்க... அப்பறம் நடக்கறதே வேற என்று கூறுகின்றனர் சிலர்...

எதுக்கு கல்யாணம்?

எதுக்கு கல்யாணம்?

ஆமா, எல்லாரும் கல்யாணம் பண்ணிட்டு எதை சாதிச்சுட்டாங்கனு என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லிட்டு இருங்கீங்க.. எப்போ பாத்தாலும் ஏதோ ஒரு பிரச்சனை.. கடன் தொல்லை... இதுல குழந்தைக வேற... கல்யாணம் பண்ணிட்ட கொஞ்ச நாள் தான் நல்லா இருக்கும் அப்பறம் எல்லாம் சளிப்பு வந்திரும். எவ்வளவு பேரு இந்த பிரச்சனை அந்த பிரச்சனைனு சொல்லிட்டு வராங்க... இதுல நாட்டுல கல்யாணம் பண்ணிட்டு பிரிந்து போறவங்க தான் அதிகம்.. இந்த சிக்கல்களை எல்லாம் நினைத்தாலே தலை சுத்துகிறது.. என்னால முடியாது... ஆள விடுங்க சாமி என்று ஓடுகின்றனர் சிலர்.

ஜன தொகை பத்தாதா?

ஜன தொகை பத்தாதா?

இப்பவே நாட்டுல ஜன தொகை பெருகிட்டே போகுது.. இதுல நான் வேற கல்யாணம் பண்ணிட்டு குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேணுமா? அது எல்லாம் வேணாம்.. நாடு போகுற போக்க பாத்தா, எனக்கே சோறு கிடைக்குமானு தெரியல.. இதுல கல்யாணம் வேற.. என்று அலுத்துக் கொள்கின்றனர் சிலர்.

ஜாலியா இருக்கணும்!

ஜாலியா இருக்கணும்!

இப்பவே கல்யாணம் பண்ணிட்டு என்னால எல்லாம் வீட்டுக்கு உள்ளேயே அடைந்து எல்லாம் இருக்க முடியாது. நல்லா, கை நிறைய சம்பாதிக்கணும்... ஜாலியா பிரண்ட்ஸ் கூட ஊற சுத்தனும். நாழு இடங்கள எல்லாம் வாழ்க்கைல பாக்கனும். இன்னும் வாழ்க்கைல அனுபவிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு.. இப்பவே கல்யாணம் எல்லாம் பண்ணிக்க சொல்லி என்ன கூட்டு கிளியா மாத்திராதீங்க என்று கூறுகின்றனர் சிலர்...

யாரு இருக்கா?

யாரு இருக்கா?

நானும் கல்யாணத்துக்கு எல்லாம் சரினு தான் முதல்ல சொன்னேன்.. ஆனா இவங்க ஜாதகம் சரி இல்ல.. பொண்ணு நல்லா இல்ல.. அது நல்லா இல்ல.. இது நல்லா இல்லைனு சொல்லி என் மனசையே கெடுத்துட்டாங்க... இதுக்கு மேல எல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். இனி மேல் யாராவது கல்யாணம் அது இதுனு என்கிட்ட பேசாதீங்க...

பொண்ணு இல்ல..

பொண்ணு இல்ல..

இப்ப எல்லாம் பொண்ணுக தொழில் அதிபரை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்லிட்டு இருங்காங்க... இங்க நாங்க படிச்ச படிப்புக்கே வேலை இல்லை.. அப்படியே ஏதோ ஒரு வேலைக்கு போனாலும் கூட சரியான சம்பளம் இல்ல... ஒரு பொண்ணும் திரும்பி பாக்கல. இதுல கல்யாணம் பண்ணிக்க சரினு சொல்லி.. பொண்ணு எல்லாம் பாக்க ஊரயே கூட்டிட்டு போயி என்னை அந்த பொண்ணு பிடிக்கலனு சொல்லற எல்லாரும் பாத்து சந்தோஷப்படனுமா... அது எல்லாம் என்னால முடியாது.. எனக்கு கல்யாணமே வேண்டாம்.. என்று கூறுகின்றனர் சிலர்..

காதல் பிரிவு

காதல் பிரிவு

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது ஒரு பொண்ண லவ் பண்ணுன.. அந்த பொண்ண தவிர வேற எந்த பொண்ணயும் திரும்பி பார்க்கனும்னா கூட எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. எனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணமே வேண்டாம்... நான் கடைசி வரைக்கும் அவளயே நினைத்து என் வாழ்கைய வாழ்ந்துட்டு போற.. என்ன விடுங்கனு சொல்லற சில குழந்தை தனமான வாலிபர்களும் இருக்க தான் செய்யறாங்க..

சண்டைகள்

சண்டைகள்

கல்யாணம் ஆன, மாமியார், மாமனார், கொழுந்தியா, நாத்தனார் என பலருடன் சண்டை போட வேண்டியிருக்கும்.. எனக்கு எதுக்கு இப்ப கல்யாணம்? நான் என் அம்மா வீட்டுல எங்க அம்மாக்கும் அப்பாக்கும் செல்ல பிள்ளையாவே இருந்துட்டு போறனே என்று கூறும் சில செல்ல குழந்தைகளும் இருக்க தான் செய்கிறார்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

why youngsters do not have interest in marriage

why youngsters do not have interest in marriage