கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் பெண்கள் என்ன செய்வார்கள் தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

வேலைக்கு சென்ற கணவன் எப்போது வீட்டுக்கு வருவான் என்று காத்திருந்தது அந்த காலம். ஆனால் இந்த காலத்தில் 80% இளம் பெண்கள் வீட்டில் கணவன் இல்லாத நேரத்தில் தனது விருப்பப்படி சில விஷயங்களை செய்கிறார்கள்.

இவ்வாறு அவர்கள் செய்வதற்கு காரணம் உங்கள் மீது அக்கறை, அன்பு எல்லாம் இல்லாமல் கிடையாது.. சில ஆண்கள் "என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா.. ஊருக்கு போயிட்டா" என்று மகிழ்ச்சியாக ஆட்டம் போடுவதை போல தான் பெண்களும் தனக்கென ஒரு தனிமை, சந்தோஷத்தை எதிர்பார்க்கிறார்கள். இதில் தவறு ஒன்றும் இல்லையே...!

பெண்கள் ஏன் கணவன் இல்லாத நேரத்தை கொண்டாடுகிறார்கள் என்பதற்கான சில காரணங்கள்..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெண் தோழிகளை வீட்டிற்கு அழைத்தல்

பெண் தோழிகளை வீட்டிற்கு அழைத்தல்

தனது பழைய பெண் தோழிகள் அல்லது நெருக்கமான பெண் தோழிகளை வீட்டுக்கு அழைத்து, சில சுவாரசியமான விஷயங்கள், மற்றும் சில கிசுகிசுக்களை ஒரு கப் காபி குடித்துக்கொண்டே பேசுவது போன்ற வேலைகளை செய்வார்கள். இது அவர்களது மன அழுத்தத்தை போக்குகிறது.

சமையல் தேவையில்லை!

சமையல் தேவையில்லை!

பெண்கள் தினமும் தனது கணவனுக்கு பிடித்த மாதிரி சுவையான உணவை சமைத்து கொடுத்தாக வேண்டும். கணவன் ஊரில் இல்லை என்றால் சமையல் அறை நீங்கள் வரும் வரை மூடப்பட்டுவிடும். இது அவர்களுக்கு பெரிய ரிலாக்ஸ் தானே! தனக்கு பிடித்த உணவுகளை வெளியில் ஆர்டர் செய்து சாப்பிட்டு, சந்தோஷமாக இருப்பார்கள்.

சூப்பரான தூக்கம்!

சூப்பரான தூக்கம்!

பெண்கள் அந்த வேலை, இந்த வேலை என ஓடாமல், நிம்மதியாக ரொம்ப நேரம் குறட்டை விட்டு தூங்குவார்கள். யார் கேட்க போறாங்க...!

டிவி பார்க்கலாம்!

டிவி பார்க்கலாம்!

ரிமோர்ட்க்கு சண்டை போடாமல் தங்களுக்கு பிடித்த சிரியலையோ, படத்தையோ எந்த தொல்லையும் இல்லாமல் பார்ப்பார்கள். இது எல்லாம் நீங்க வீட்டுல இல்லாத நேரத்துல மட்டும் தான நடக்கும்!

துணி துவைப்பது!

துணி துவைப்பது!

ஐயோ..! இத்தனை அழுக்கு துணியா..! என எந்த ஒரு டென்சனும் அவர்களுக்கு இருக்காது! அழுக்கு துணிகளை பற்றி கவலைப்படமாட்டார்கள். துணி துவைக்கு வேலையும் இருக்காது!

ஆபிஸ் வேலை!

ஆபிஸ் வேலை!

ஆபிஸ் முடித்து சீக்கிரமா போய் சமைக்கணும், அத செய்யணும், இத செய்யணும் என அவசர அவசரமாக வீட்டிற்கு ஓட வேண்டிய நிலை இருக்காது, எவ்வளவு நேரம் வேண்டுமானலும் ஆபிஸில் வேலை செய்துவிட்டு நிதானமாக வீடு திரும்புவார்கள்!

விவாதங்கள் இல்லை!

விவாதங்கள் இல்லை!

ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து ஜாலியா வேடிக்கை பார்த்துக்கொண்டு, பாடல் கேட்கலாம், யோகா செய்யலாம். உங்களோடு சண்டை போட வேண்டிய அவசியம் இருக்காது..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

when husband goes out of station

when husband goes out of station