ஒரு செல்ஃபியால் வாழ்க்கை இழந்த இரு பெண்கள் - My Story #117

Posted By:
Subscribe to Boldsky
We Created a Fake Facebook ID for Fun, It Killed Marriage Life!

ஃபேஸ்புக் ஃபேக் ஐ.டி எங்கள் வாழ்க்கையை சீரழிக்கும் என நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. விளையாட்டாக துவங்கிய ஒரு செயல், எங்கள் வாழ்க்கைக்கே வினையாகிப் போனது. நானும், ரேகாவும் நெருங்கிய தோழிகள்.

பொதுவாகவே பெண்களுக்கு வாழ்க்கை முழுவதும் உடன் இருக்கும் நிலையான தோழிகள் பெரிதாக இருக்க மாட்டார்கள் என்பார்கள். பள்ளி வரை சில தோழிகள், கல்லூரி வாழ்வில் சில தோழிகள், வேலை இடத்தில் வேறு தோழிகள்... திருமணத்திற்கு பிறகு தோழிகளுடன் பெரிய தொடர்பே இருக்காது என்பது தான் இந்த சமூகத்தின் கண்ணோட்டம்.

ஆனால், இந்த கண்ணோட்டத்திற்கு முரணாக அமைந்திருந்தது எனக்கும், ரேணுகாவிற்கும் இடையேயான தோழமை. நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது நியூ அட்மிஷனாக என் பள்ளியில் சேர்ந்தாள் ரேணுகா. என் நட்பு வட்டத்திலும் அவள் நியூ அட்மிஷனானாள்.

பழகிய ஒருசில மாதங்களிலேயே மற்ற தோழிகளை காட்டிலும் மிக நெருக்கமாக மாறினாள் ரேணுகா. எங்கள் நட்பு பள்ளி, கல்லூரி, வேலை என எல்லா பருவத்தையும் தாண்டி நிலைதிருந்தது.

எங்கள் குறும்புத்தனமும், விளையாட்டும் எங்கள் வாழ்க்கையில் பெரும் புயலாக வீசும் என நாங்கள் அப்போது நினைத்திருக்கவில்லை....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெருக்கம்!

நெருக்கம்!

எனக்கும் ரேகாவிற்குமான குணாதிசயங்கள் பெரும்பாலும் ஒன்றாக தான் இருந்தது. பிடித்த நிறத்தில் இருந்து, ஹீரோ வரை. சாப்பிடும் உணவுகளில் இருந்து பழகும் விதம் வரை. ஒரு நபரை கிண்டலடிப்பதில் இருந்து, திருட்டுத்தனமாக திரைப்படம் பார்க்க செல்வது வரை. ஏன், எங்கள் இருவரின் ராசியும் ஒன்று தான். இதுவெல்லாம் என்னையும், ரேகாவையும் இணைபிரியா தோழிகளாக மாற்றின.

கல்லூரி!

கல்லூரி!

பத்தாவது முடித்து பயலாஜி தேர்வு செய்ததில் இருந்து. கல்லூரியில் ஒரே பாடப்பிரிவில் இணைந்தது வரை, எங்கள் தேர்வுகளிலும், ஒரு சூழலில் நாங்கள் எடுக்கும் முடிவுகளிலும் மாற்றுக் கருத்தே இருந்தது இல்லை. எங்கள் வீட்டிலும் கூட, இவர்கள் இருவரும் ஒரு நாள் ஒருவனையே திருமணம் செய்துக் கொள்ள போகிறோம் என கூறாமல் இருந்தால் சரி என கிண்டல் செய்ததுண்டு. அதற்கு, இரட்டையர்களாக பார்த்து நாங்கள் திருமணம் செய்துக் கொள்வோம் என பதில் அளித்ததும் உண்டு.

ஃபேஸ்புக்!

ஃபேஸ்புக்!

எங்கள் கல்லூரி வாழ்க்கையின் போதுதான் ஃபேஸ்புக் எங்களுக்கு அறிமுகமானது. நானும், ரேகாவும் எங்களுக்கு தெரியாத எந்த ஒரு நபரையும் நட்பு வட்டத்திற்குள் ஃபேஸ்புக்கில் இணைத்துக் கொண்டது இல்லை. ஆகையால் எங்கள் நட்பு பட்டியலில் அதிகபட்சமாக 250 பேர் கூட இல்லை.

ஆனால், நாங்கள் ஜென்ம விரோதியாக கருதும் எங்கள் எதிரணி ஃபேஸ்புக்கில் லைக்ஸ் வாங்கினால் தான் கெத்து, எங்களுக்கெல்லாம் ஆயிரம் பேர்களுக்கு மேல் ஃபிரெண்ட்ஸ் உள்ளனர் என கூறி கடுப்பேற்றினார்கள். ஆனால் எனக்கும், ரேகாவிற்கும் அப்படியான லைக்ஸ் மீது பெரிய ஆர்வம் இல்லை.

ஃபேக் ஐ.டி!

ஃபேக் ஐ.டி!

ஆனால், நாட்கள் செல்ல, செல்ல எங்களுக்கும் அந்த லைக்ஸ் மீது மோகம் வந்தது. அதே போல எங்களுக்கு சமூக தளத்தில் எங்கள் படத்தை போடுவதற்கும் அச்சம் இருந்தது. ஆகவே, என்ன செய்யலாம் என்ற யோசனை. அப்போது தான் ஆண்கள் ஃபேக் ஐ.டி மூலம் பெண்களுடன் நட்பு வைத்துக் கொள்வார்கள் என்பது குறித்து அறிந்தோம். அதை ஏன் நாமும் செய்யக் கூடாது என, நானும் ரேகாவும் ஒரு ஃபேக் ஐடி ஆரம்பித்து, அதன் மூலமாக நட்பு வட்டத்தை பெரிதாக்கிக் கொண்டோம்.

நடிகைகளின் படம்!

நடிகைகளின் படம்!

அன்றைக்கு தமிழ் சினிமாவில் உச்சப்பச்ச நடிகையாக யார் இருக்கிறார்களோ, அவர்களது படம் தான் எங்கள் முகப்பு படமாக இருந்தது. இனிமேல், ஃப்ரெண்ட்ஷிப் ரெக்வஸ்ட் யாரும் அனுப்ப முடியாது என்ற அளவிற்கு நாங்கள் அனைவரையும் எங்கள் வட்டத்திற்குள் சேர்த்துக் கொண்டோம்.

நாங்கள் பதிவிடும் போஸ்ட்களுக்கு எக்கச்சக்க லைக்ஸ் மற்றும் கமெண்ட்டுகள் அளிக்க துவங்கினார்கள். எங்களது நண்பர்கள் சிலரே இது நானும், ரேகாவும் தான் என தெரியாமல் எங்களுக்கு ரெக்வஸ்ட் அனுப்பி, மெசேஜில் வலிந்து பேசியதுண்டு.

ஆர்வம்!

ஆர்வம்!

நாளுக்கு, நாள் எனக்கும் ரேகாவிற்கும் இந்த ஃபேக் ஐடி பயன்படுத்துவதில் ஆர்வம் அதிகரித்தது. நானும், அவளும் மாறி, மாறி அதை பயன்படுத்தி பலருடன் சாட்டிங் செய்திருக்கிறோம். வேலைக்கு சென்ற பிறகும் கூட இதை நாங்கள் நிறுத்தவில்லை. ஆனால், வேலைக்கு சென்ற ஆரம்பத்தில் இதன் பயன்பாடு குறைந்திருந்தது. அந்த தருணத்தில் எங்கள் இருவருக்கும் இருந்த ஒரு கேளிக்கை குறைந்தது போல இருந்தது.

எனவே, மீண்டும் அந்த ஃபேக் ஐடியை தூசுத் தட்டினோம்.

அரவிந்த்!

அரவிந்த்!

நாங்கள் பேசுவதை கேட்டு நிறையப் பேர் ஐ லவ் யூ சொன்னதுண்டு. சிலர் எடுத்த எடுப்பிலேயே கூறுவார்கள். சிலர் பேச ஆரம்பித்த சிறிது காலம் கழித்து கூறுவார்கள். எப்படியும் நூற்றில் தொண்ணூறு பேர் பிரபோஸ் செய்துவிடுவார்கள். ஆனால், அவன் அப்படியாக இல்லை. அவன் பெயர் அரவிந்த். சிங்கப்பூரில் வேலை செய்து வந்தான்.

மெசேஜ்!

மெசேஜ்!

ஒருமுறை நாங்கள் ஷேர் செய்த ஒரு சமூக பதிவுக்கு முதன் முதலில் தன்னுடைய நீண்ட கருத்தை பதிவு செய்திருந்தான். அதற்கு கீழ், பல கமெண்ட்டுகள் குவிந்தன. பிறகு எங்களுக்கு, இது போன்ற நல்ல பதிவுகளை நீங்கள் பகிர்ந்தால் பலரும் நன்மை அடைவார்கள். உங்கள் பதிவுக்கு நிறைய லைக்ஸ், ஷேர் எல்லாம் வருகிறது அதனால் தான் கூறுகிறேன் என மெசேஜ் அனுப்பினான்.

புதிதாக இருந்தது!

புதிதாக இருந்தது!

நாங்கள் அதுவரை பேசியதில் அரவிந்த் கொஞ்சம் தனித்து தென்பட்டான். அதற்கு நாங்கள் பதிலாக அனுப்பிய ஸ்மைலிக்கு கூட அவன் பதில் கூறவில்லை. ஒருவேளை நிஜமாகவே அரவிந்த் நல்லவன் தான் போல என கருதினோம். ரேகா அவளாக எங்கள் ஃபேக் ஐடியில் இருந்து அவனுக்கு மெசேஜ் அனுப்ப ஆரம்பித்தால். அவனும் பேசினான்.

அந்த 5000 பேரில், நாங்கள் உண்மையாக ஏற்படுத்திக் கொண்ட ஒரே நண்பனாக இருந்தான் அரவிந்த். ஆனால், அவனுக்கு நாங்கள் பயன்படுத்துவது ஃபேக் ஐடி என்பது தெரியாது. நிச்சயம் தமிழ்நாடு திரும்பினால் உங்களை வந்து சந்திக்கிறேன் என அடிக்கடி கூறுவான்.

ரேகாவிற்கு திருமணம்!

ரேகாவிற்கு திருமணம்!

இடையே, ரேகாவிற்கு மாப்பிளை பார்க்கும் படலம் ஆரம்பமானது. இந்த காலக்கட்டத்தில் நாங்கள் இருவரும் அதிகமாக அந்த ஃபேக் ஐடியை பயன்படுத்தவில்லை. எப்போதாவது நான் அதை ஓபன் செய்து பார்ப்பேன். நிறைய கமெண்ட்டுகள் இருக்கும். நாங்கள் பதில் அளிக்கவில்லை என்பதற்காக எங்களை தகாத வார்த்தையில் திட்டிய பல குப்பை செய்திகள் நிறைந்திருக்கும்.

பிஸி!

பிஸி!

இந்த செய்திகளுக்கு எல்லாம் நடுவே, "என்ன ஆச்சு, ஏன் ரொம்ப நாளா ஆளே காணோம், என்ன பிரச்சனை?" என அரவிந்த் அனுப்பிய மெசேஜ்களும் இருக்கும். எப்போதாவது நான் அரவிந்தின் செய்திக்கும் மட்டும் பதில் அளிப்பேன். இல்ல கொஞ்சம் பிஸி. வேலை நிறையா இருந்துச்சு... அப்பாவுக்கு உடம்பு சரியில்ல என சிலமுறை ரிப்ளை செய்துவிட்டு அந்த அக்கவ்ண்டை க்ளோஸ் செய்துவிடுவேன்.

புகைப்படம்!

புகைப்படம்!

ஒருமுறை தெரியாமல் அரவிந்துடன் பேசிக் கொண்டிருந்த போது, நாங்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட படத்தை சென்ட் செய்துவிட்டாள் ரேகா. அழகா தானே இருக்கீங்க. அப்பறம் ஏன் கண்ட நடிகை படம் முகப்பு படமா வெச்சிருக்கீங்க...? என அரவிந்த் கேட்டான்.

எங்களுக்கு ஒரே அதிர்ச்சி. அவன் இந்த செய்தி அனுப்பிய பிறகு, படம் அவனுக்கு பகிர்வானது குறித்து நான்கள் அறிந்தோம்.

சரி! அரவிந்த நல்லவன் தானே. அவன் நிச்சயம் யாருடனும் பகிர மாட்டான் என்ற குருட்டு நம்பிக்கை எங்கள் இருவருக்கும் இருந்தது.

அரவிந்திடம்., ஃபேஸ்புக்கில் உண்மையான படத்தை வைத்தால் மிஸ்யூஸ் செய்துவிடுவார்கள் என்ற அச்சம் . அதனால் தான் என் படத்தை வைத்துக் கொள்ளவில்லை என கூறினோம்.

அதுவும், சரி தான் என ரிப்ளை செய்தான் அரவிந்த்!

மாப்பிள்ளை!

மாப்பிள்ளை!

இது நடந்த ஓரிரு மாதங்களில் ரேகாவிற்கு பெங்களூரில் வேலை செய்து வரும் வரன் ஒன்று செட் ஆனது. இரு வீட்டாருக்கும் சம்மதம். ரேகாவும் ஓகே சொல்லிவிட்டாள். மாப்பிள்ளை ரேகாவுடன் ஒருமுறை பேச விரும்புவதாக மாப்பிள்ளை வீட்டார் கேட்டனர். அதற்கென்ன பேசட்டும் என மொபைல் எண்ணை பகிர்ந்தனர்.

மாப்பிள்ளை உடன் என்ன பேசுவது? எப்படி பேசுவது? என ரேகாவிற்கு ஒரே குழப்பம். நான் அவளை கேலி செய்து அவளது பதட்டத்தை எகிற செய்தேன்.

போன் கால்...

போன் கால்...

மாப்பிள்ளை கால் செய்த போது, நானும் ரேகா மட்டும் தான இருந்தோம். போன் ரிங்கானது. மிக பதட்டத்துடன் காலை அட்டன்ட் செய்தால் ரேகா. மாப்பிள்ளை என்ன கேட்டார் என தெரியவில்லை.

பேச துவங்கிய சில நொடிகளிலேயே ரேகாவிற்கு வியர்த்து கொட்டியது. "பயப்படாத டி" என அவள் எதிரே நின்று ஜாடை காண்பித்துக் கொண்டிருந்தேன். திடீரென ரேகாவின் கண்களில் கண்ணீர்.... அழுகையை அடக்கிக் கொண்டு, "இல்ல... ஹ்ம்ம்... அப்படி எல்லாம் இல்ல.." என அச்சத்துடன் பேச ஆரம்பித்தால். ஒருசில நிமிடத்தில் போன் கால் கட்டானது.

அத்துடன் அவளது திருமணமும் கட்டானது.

அப்படி என்ன பேசினார்...

அப்படி என்ன பேசினார்...

மாப்பிள்ளை கேட்ட முதல் கேள்வி..., " உங்களுக்கு ரேகாங்கிற பெயர் இல்லாம... சுகந்தின்னு எதாவது பெயர் இருக்கா?". சுகந்தி என்பது நாங்கள் பயன்படுத்தி வந்த ஃபேக் ஐடியின் பெயர். பிறகு அவர் கேட்டது எல்லாமே அந்த முகநூல் ஐடி குறித்து மட்டுமே. "உங்களை ஒருவன் மூடத்தனமாக காதலித்து வருகிறான் தெரியுமா?" என கேட்ட போது தான் ரேகா அழ துவங்கியிருக்கிறாள்.

அவன் தான்...

அவன் தான்...

மாப்பிள்ளை குறிப்பிட்டு கூறியது அரவிந்தை. அரவிந்தும் மாப்பிளையும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்த நண்பர்கள். அன்று ரேகா தெரியாமல் பகிர்ந்த படத்தை, அரவிந்த் தனது நண்பனான மாப்பிளையிடம் மட்டும் காண்பித்து, சுகந்தியை நேசிக்கிறான் என கூறியுள்ளான்.

தான் ஏற்கனவே நண்பன் காதலிக்கும் பெண்ணென பார்த்த முகம், தனக்கே மணமுடிக்க வரனாக வந்ததை கண்டு மாப்பிள்ளை அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆகையால், அரவிந்த் காதலிப்பதை கூறவே அவர் கால் செய்ததாகவும், இந்த திருமணம் நடக்காது. என்று கூறவே அழைத்ததாகவும் கூறிவிட்டு அவர் போனை கட் செய்துவிட்டார்.

கான்வர்ஷேஷன்!

கான்வர்ஷேஷன்!

உடனே, அந்த ஃபேக் ஐடியில் இருந்து அரவிந்துக்கு மெசேஜ் அனுப்பினோம். நடந்த அனைத்தையும் கூறினோம். இது ஃபேக் ஐடி என்றும், உங்கள் மீது விருப்பம் இல்லை. நாங்கள் தான தவறாக எதுவும் உன்னிடம் பேசவில்லையே. என்னை மறந்துவிடு என அனைத்தையும் கூறினோம்.

அனைத்திற்கும் சரியென தலை ஆட்டினான். இனிமேல், இப்படி ஃபேக் ஐடி எல்லாம் பயன்படுத்த வேண்டாம் என அறிவுரை கூறினான். அத்துடன் அவன் தனது முகநூல் கணக்கையும் முடக்கிவிட்டன.

சில மாதங்கள் கழிந்தன...

சில மாதங்கள் கழிந்தன...

அந்த வரன் அப்படியே நின்றுவிட்டது. மீண்டும் மாப்பிளை பார்க்கும் படலம் துவங்கியது. இனிமேல், இந்த ஃபேக் ஐடியே வேண்டாம். ஒருவழியாக விட்டொழியலாம் என முடிவு செய்தோம். சில மாதங்கள் கழிந்தன...

எனக்கு என் நண்பர் ஒருவரிடம் இருந்து ஒரு செய்தி வந்தது. அதில், அவர் ஒரு ஸ்க்ரீன் ஷாட் பகிர்ந்திருந்தார். அதில், நானும், ரேகாவும் அரவிந்துக்கு தெரியாமல் அனுப்பிய படம் ஒரு ஃபேஸ்புக் க்ரூப்பில் "தமிழ்நாட்டு அழகிகள்... எங்களுக்கு லைக் இல்லையா?" என பகிரப்பட்டிருந்தது.

எல்லாம் போச்சு!

எல்லாம் போச்சு!

அந்த அலுவலக நண்பருக்கு கால் செய்தேன். அந்த க்ரூப் மட்டுமல்ல, கடந்த ஓரிரு மாதத்தில் பல க்ரூப்புகளில் எங்கள் படம் பகிரப்பட்டிருந்த சம்பவம் அறிய வந்தது. தவறாக எதுவும் மார்பிங் எல்லாம் செய்யவில்லை எனிலும், வெவ்வேறு க்ரூப்புக்ளில் வெவ்வேறு கருத்துக்களுடன் எங்கள் படம் பகிர்வாகி இருந்தது. அதன் கீழ் இருந்த கமெண்ட்டுகள் எல்லாம் படிக்கவே அருவருப்பாக இருந்தது.

வினை!

வினை!

விளையாட்டாக துவங்கிய ஃபேக் ஐடி. எங்கெங்கோ சுற்றி, ஒரு திருமணத்தை நிறுத்தி, எங்கள் இருவரின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பல க்ரூப்புகளில் பகிர்வாக காரணமானது. இது போல பல பெண்களின் படங்கள் சமூக தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலான பெண்கள் எந்த தவறும் செய்யாதவர்கள். சிலருக்கு அவர்கள் படங்கள் இப்படி பகிரப்பட்டு வருகிறது என்பது கூட தெரியாது.

நாங்கள் செய்தது தவறு தான். அதற்கான வருத்தத்தை நாங்கள் பெரிதாக உணர்ந்துவிட்டோம். ஆனால், தவறே செய்யாமல் வருந்தும் பெண்கள் அதிகமானோர் இருக்கிறார்கள். இப்படி ஒரு சம்பவம் முகநூலில் நடக்கிறது என அறியாமல் இருப்பவர் எவ்வளவோ பேர். ஏன், முகநூலில் அக்கவுண்டே இல்லாத பலரது படங்களும் இப்படி அதிகம் பகிரப்படுகிறது.

டிஜிட்டல் யுகத்தில் திருட்டுக்கும், திருடர்களுக்கும் பஞ்சமே இல்லை!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

We Created a Fake Facebook ID for Fun, It Killed Marriage Life!

We Created a Fake Facebook ID for Fun, It Killed Marriage Life!