செஞ்ச தப்பிற்கு, உங்க லவ்வர்ட்ட எந்த மாதிரி ஸாரி கேட்டா வொர்க் அவுட் ஆகும்னு குழப்பமா?

Posted By:
Subscribe to Boldsky

காதலில் விட்டுக் கொடுப்பது எவ்வளவு முக்கியமோஅதே அளவுக்கு முக்கியம் இணையை மன்னிப்பது. நான் மன்னித்து விட்டேன் என்று நீங்கள் சொன்னாலும் அதனை ஏற்றுக் கொள்வது என்பது உங்கள் கையில் இல்லை. உங்களின் செயல்கள் தான் அதனை உணர்த்த வேண்டும்.

தவறை நீங்கள் கையாளும் விதமும், அதனை கடந்து செல்லும் உங்களின் மனம் தான் உங்களைப் பற்றிய அபிப்ராயத்தை இணையின் மனதில் அதிகரிக்கச் செய்திடும். மன்னித்துவிடு.. என்று ஒற்றை வார்த்தையில் கேட்பதை விட இதில் சொல்லப்பட்டிருக்கும் ஐந்து வழிகளை பின்பற்றி மன்னிப்பு கேட்டால் நிச்சயம் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்படும். சரி, காதலில் இருப்பவர்கள் மன்னிப்பதையும் அதை வெளிப்படுத்துவதற்கான வழிகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மொழி :

மொழி :

நீங்கள் பேசிடும் தொனியே இணைக்கு உங்களின் மனதை வெளிப்படுத்திவிடும். நீங்கள் செய்த ஏதோ ஓரு விஷயம் அல்லது சொன்ன வார்த்தைகள் அவரை காயப்படுத்தியிருக்க வேண்டும், அந்த காயத்தை நான் உணர்கிறேன். அந்த வலியை உணர்கிறேன் என்பது உங்கள் மொழியில் வெளிப்பட வேண்டும்.

ஏற்றுக் கொள்ளுங்கள் :

ஏற்றுக் கொள்ளுங்கள் :

தவறை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆம், நான் அப்படி பேசியிருக்கக் கூடாது. அப்படி நடந்திருக்க கூடாது என நீங்கள் செய்த தவறை ஒப்புக் கொள்ளுங்கள்.

ஆலோசனை :

ஆலோசனை :

உங்கள் சூழலை சொல்லுங்கள். உங்களை மீறி அந்த கோபம் வெளிப்பட்டதை உணர்த்துங்கள். இப்படிக் கோபப்பட்டதால் என் காதல் ஒன்றும் குறைந்திடவில்லை என்பதை புரியவைத்திடுங்கள். இது தவறு தான் இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேளுங்கள்.

இணை தான் உங்களுக்கு முக்கியம் என்று நினைப்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

பழக்க வழக்கம் :

பழக்க வழக்கம் :

என்னுடைய பழக்கங்களை உன்னை வருத்தப்படச் செய்யும் என்னுடைய பழக்கங்களை நான் மாற்றிக் கொள்கிறேன் என்று உறுதி கொடுங்கள். நான் இப்படி நடந்து கொள்வதால் நீ எவ்வளவு வருத்தப்படுகிறாய் என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். இனியும் இது தொடராது என்று உறுதியாக சொல்லுங்கள்.

அனுமதி :

அனுமதி :

தவறை உணர்ந்துவிட்டேன் என்பதை விட இனியும் தொடராது என்ற உங்களது வார்த்தைகள் தான் முக்கியம். நான் தவறை உணர்ந்துவிட்டேன் என்னை மன்னிப்பாயா என்று அனுமதி கேளுங்கள். உங்கள் மீதும் உங்களது வார்த்தைகள் மீதும் நம்பிக்கை ஏற்ப்பட்டிருக்கும் பட்சத்தில் நிச்சயமாய் உங்கள் இணை உங்களை மன்னித்து ஏற்றுக் கொள்வார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips to accept your loved ones apologies

Tips to accept your loved ones apologies
Story first published: Thursday, August 17, 2017, 13:09 [IST]
Subscribe Newsletter