ஏமாற்றங்களை எதிர்கொள்ள இதனை நடைமுறைப்படுத்துங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

எதிர்பார்ப்பு என்பது எல்லாருக்கும் எல்லாரிடமும் இருக்கும், அந்த எதிர்ப்பார்ப்பு தோற்றுப்போகும் போது அல்லது அதில் நீங்கள் நினைத்தது நடைபெறாத போது தான் கோபம் தலைக்கேறி பொல்லாதவராக உருவெடுக்கிறோம். காதலில் இந்த விஷயம் முக்கியப் பிரச்சனையாக இருக்கிறது.

யாரிடமும் வெளிப்படுத்தாத உங்களது எதிர்ப்பார்புகள் நினைத்தமாதிரியே நினைத்த நேரத்தில் நிறைவேறும் என்று சொல்ல முடியாது. இது உங்களையும் உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் அதிகமாக பாதிக்கச் செய்திடும்.

இதிலிருந்து மீள, தப்பிக்க சில எளிய வழிகள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அங்கீகாரம் :

அங்கீகாரம் :

உங்கள் மகிழ்ச்சியை பிறரது கைகளில் கொடுக்காதீர்கள். எப்போதும் பிறர் மூலமாகத்தான் நான் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று நினைககதீர்கள். பிறர் சொல்லும் கருத்துக்களே என்னை உற்சாகப்படுத்தும் என்று நினைககதீர்கள்.

அவர்கள் உங்களை நல்ல விதமாக அங்கீகரிக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்.

மரியாதை :

மரியாதை :

நீங்கள் கொடுப்பது தான் உங்களுக்கு திரும்ப கிடைக்கிறது. பிறர் உங்களை அதிகம் மதிக்க வேண்டும். நிறைய மரியாதை செலுத்த வேண்டும் என்று ஏங்காதீர்கள். எல்லாருக்கும் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்று நினைப்பதும் தவறானது.

யதார்த்தமாக நடப்பதைக் கூட வேண்டுமென்றே செய்ததாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள். அப்படியே செய்திருந்தாலும் அதனை மனதிலேற்றி அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்க வேண்டாம்.

விருப்பம் :

விருப்பம் :

முக்கியமான விஷயம் இது. எல்லாருக்கும் என்னை பிடிக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விருப்பங்கள் இருக்கலாம். சூழ்நிலைகள் வேறுபடும், அதனால் உங்கள் எதிர்ப்பார்பு உங்களுக்கு ஏமாற்றத்தையே கொடுக்கும்.

உங்களை நேசிப்பவரிடத்தில், உங்களை மதிப்பவரிடத்தில் மட்டும் நீங்கள் உங்கள் அன்பை காட்டலாம். உங்களுக்கு வரும் நெகட்டிவ் விமர்சனங்களை புன்னகையுடன் கடந்து செல்லுங்கள்.

நினைத்தாலே நடக்கும் :

நினைத்தாலே நடக்கும் :

வேடிக்கையான விஷயம். ஆனால் எல்லாரும் இதனை ஒரு முறையாவது கடந்து வந்திருப்போம். நான் நினைப்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்ற உங்களது எதிர்ப்பார்ப்பு.

மனிதர்களால் எல்லா நேரமும் உங்களை உங்கள் சூழலை நீங்கள் மனதில் நினைப்பதை புரிந்து கொள்ள முடியாது. வெளிப்படையாக இருங்கள். நினைப்பதை தைரியமாக வெளியில் சொல்லுங்கள்.

வேண்டியதை கேளுங்கள். பிடிக்காத ஒரு விஷயமோ அல்லது மனதில் காயம் ஏற்ப்பட்ட விஷயமோ அதனை வெளியில் யார் காரணமோ

அவர்களிடத்தில் வெளிப்படுத்துங்கள்.

உடனடி மாற்றம் :

உடனடி மாற்றம் :

அவர்கள் தவறு செய்திருக்கிறார்கள். அதனை நீங்கள் வெளிப்படையாக சொல்லிவிட்டீர்கள் உடனேயே அவர்கள் மாற வேண்டும், என்று நினைககதீர்கள். தவறு செய்த மறு கணமே அதற்கான தீர்வு உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்காதீர்கள்.

இணை நடந்து கொள்ளும் விதம் உங்களுக்கு பிடிக்கவில்லையா உடனேயே நீங்கள் மாற வேண்டும் என்று எதிர்ப்பார்க்காதீர்கள்.

எல்லா நேரங்களிலும் :

எல்லா நேரங்களிலும் :

நமக்கு வில்லனாய் இருக்கும் வார்த்தை இது.. எப்போதும்... ஆம், எப்போதும் இப்படியே இருக்க வேண்டும், எப்போதும் இப்படியே நடந்து கொள்ள வேண்டும், எப்போதும் கோபமே படக்கூடாது என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் காதலில் இது கொஞ்சம் அதிகம் தான்.

எல்லாரிடமும் நீங்கள் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற உங்களது எதிர்ப்பார்ப்பை நிறுத்தி வையுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Results for Your disappointments of expectations

Results for Your disappointments of expectations