துல்கர், பார்வதி மேனன் போல ஒரு காதல் அனுபவம் - ஏன் அவசியம்? - காரணங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

வாழ்க்கை என்பதே ஒரு பயணம் தான். ஆனால், அதிலும் நாம் எத்தனை பயணங்கள் மேற்கொள்கிறோம் என்பது தான், நமது அனுபவத்தை கூட்டுகிறது.

சிலர் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவது போல, பிறப்பு, வளர்ப்பு, இறப்பு என கடைசி காலம் வரை ஒரே ஊரில் இருந்து கழித்துவிடுவார்கள்.

இதை தவறு என கூறிட முடியாது. ஆனால், மற்றவரது அனுபவத்துடன் ஒப்பிடுகையில், இது கொஞ்சம் குறைவானதாக இருக்கும்.

ஏன் டிராவல் செய்யும் நபர்களை காதலிக்க வேண்டும்? அவர்கள் நம்முடன் இருக்கவே மாட்டார்கள், ஆவூன்னா பேக் ஒன்றை மாட்டிக் கொண்டு எங்கேனும் சென்றுவிடுவார்கள் என சிலர் எண்ணலாம். ஆனால், அதுதான் நீங்கள் செய்யும் பெரிய தவறு.

ஒரு டிராவலரை விட, உங்கள் வாழ்க்கையில் உண்மையான அழகையும், சுவராஸ்யத்தையும், மெய் மகிழ்ச்சியுடன் வேறு யாராலும் காட்டிட முடியாது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#சுவாரஸ்யங்கள்!

#சுவாரஸ்யங்கள்!

டிராவல் செய்யும் நபர்களை காதலிப்பதன் முதல் நன்மை, உங்கள் வாழ்க்கை சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும். அந்த உள்ளூர் மக்களே சென்று பார்க்காத இடங்களை கூட இவர்கள் டிராவல் செய்து பார்த்திருப்பார்கள். இவர்களது கண்களில் எல்லாமே அழகாக தெரியும். எனவே, வாழ்வில் மட்டுமல்ல, உறவிலும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது.

#சுதந்திரம்!

#சுதந்திரம்!

நீ இப்படி தான் இருக்க வேண்டும், இப்படி நடக்க வேண்டும், இதை மட்டும் தான் செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகள் இல்லாத ஒரு சுதந்திரமான வாழ்க்கை வாழ விடுவார்கள்.

ஏனெனில், அவர்கள் வாழும் வாழ்க்கை அப்படிப்பட்ட ஒன்று தான். சுதந்திரம் ஒன்று இருந்தால் போதாதா? வாழ்க்கை எப்பொழுதும் தித்திப்பாய் இனிக்கும்.

#அனுபவித்து வாழ்பவர்கள்!

#அனுபவித்து வாழ்பவர்கள்!

வாழ்க்கை என்பது அனுபவங்களால் தொடுக்கப்பட்ட பூமாலை, அதை சூடிக்கொள்ள மறவாத, மறுக்காத நபர்கள் டிராவலர்கள். எல்லா சூழலையும், நிகழ்வுகளையும் அனுபவித்து வாழும் பாக்கியசாலிகள் இவர்கள். ஆகையால், இவர்களுடனான் வாழ்க்கையில் இன்பம், துன்பம் என்ற வேறுபாடுகள் இன்றி, நிம்மதியாக வாழ முடியும்.

#பணம் பற்றிய கவலை இருக்காது!

#பணம் பற்றிய கவலை இருக்காது!

எந்த ஒரு பணமும் உங்கள் கையில் நிரந்தரமாய் இருக்காது, இன்று உங்கள் கையில் இருக்கும் அதே பணம், நாளை உங்களிடம் இருக்குமா என்பது நிரந்தரமல்ல.

டிராவலர்கள் பணத்தை பற்றி அக்கறைக் கொள்ள மாட்டார்கள். எவ்வளவு இருந்தாலும், அதை வைத்துக் கொண்டு வண்டி ஓட்ட அவர்களுக்கு தெரியும்.

#ஆரோக்கியமான உடல், உறவு!

#ஆரோக்கியமான உடல், உறவு!

நிறைய டிராவல் செய்வதால், இவர்களது உடலும், உறவும் இரண்டும் ஆரோக்கியமாக இருக்கும். ஆகையால், இவர்களது உறவு, உடல் இரண்டிலும் எளிதாக கோளாறுகள், தாக்கங்கள் உண்டாகாது. எனவே, நோய்வாய்படாத ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இவர்கள் சிறந்த துணையாக இருப்பார்கள்.

#மாற்றுவழி சிந்தனை!

#மாற்றுவழி சிந்தனை!

நம்மில் பெரும்பாலானோர் கூகுல் காட்டும் ஜி.பி.எஸ். பாதையில் பயணிப்பவர்கள். ஆனால், இவர்கள், காடு, மேடு, பள்ளங்களை கடந்து வருபவர்கள். நடுவில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் நாம் அங்கேயே நின்றுவிடுவோம். ஆனால், இவர்கள் வேறு வழி கண்டுபிடித்து பயணத்தை மேற்கொள்வார்கள்.

இது வாழ்க்கைக்கும் பொருந்தும்! இவர்கள் கற்கும், கற்பிக்கும் பெரிய பாடம் இது.

#இதுவும் கடந்து போகும்!

#இதுவும் கடந்து போகும்!

எவ்வளவு பெரிய சந்தோஷம் என்றாலும், எவ்வளவு பெரிய துன்பம் என்றாலும், இந்த பயணத்திற்கு அடுத்து எங்கே செல்லலாம், என்பது போல மிக எளிதாக கடந்து சென்றுவிடுவார்கள். இந்த ஒற்றை எண்ணம் தான் உங்களை வழியில் எதிர்கொள்ளும் தடைகளை தகர்த்து கனவு எல்லையை அடைய உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons Why You Should Love A Traveler!

Reasons Why You Should Love A Traveler!
Subscribe Newsletter