நுங்கம்பாக்கம் டூ செங்கல்பட்டு லவ் ஸ்டோரி நினைவிருக்கிறதா?

Posted By:
Subscribe to Boldsky

இன்னமும் இந்த ட்ரைன் வந்த பாடில்லை. இவர்கள் எல்லாம் இங்கேயே தங்கியிருக்கிறார்களா? அல்லது என்னைப் போல அசட்டுத்தனமாக காத்திருக்கிறார்களா? எத்தனை ட்ரயின் கடந்தாலும் அசராமல் இருக்கிறார்களே கூட்டம் குறையவேயில்லை ச்சை... மனசு அழுத்துக் கொண்டது.

அது நுங்கம்பாக்கம் எலக்ட்ரிக் ட்ரைன் வரும் வழித்தடம். முண்டியடித்துக் கொண்டு நிற்கும் கூட்டத்தினருக்கு மத்தியில் இவனும் நின்றிருந்தான். எல்லா வண்டியும் கூட்டம் நிரம்பி வழிந்தது. ப்ளாட்ஃபார்ம் பற்றி சொல்லவே வேண்டாம். அவ்வளவு நெருக்கடி. அவள் வருவாளா அல்லது அவள் சென்றது கூட தெரியாமல் கிறுக்குத்தனமாக காத்திருக்கிறேனா? ஒரு நாள் இங்கு இறங்கினால் தினமும் இங்கே தான் இறங்க வேண்டும் என்று என்ன நிச்சயம்.

எவ்வளவு நேரம் காத்திருப்பது? இப்போதே மணி 8 ஆகிவிட்டிருந்தது மாலை ஆறு மணியிலிருந்து நிற்கிறேன். ஒன்பது வண்டிகள் கடந்து விட்டது. இன்னமும் நிற்க வேண்டுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒத்திகை :

ஒத்திகை :

இன்றைக்கு எப்படியாவது கேட்க வேண்டும். காலை எட்டு மணி அவ்வளவாக கூட்டமில்லை பள்ளி மற்றும் கல்லூரி செல்பவர்கள் சிலர் மட்டுமே நின்றிருந்தார்கள். அத்தனை கோபம். ம்ம்... சரி அவள் வந்தவுடன் என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் எப்படி நிற்க வேண்டும், முகத்தை எப்படி வைத்திருக்க வேண்டும், எப்படி கோபப்பட வேண்டும் என்று எல்லாமே ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தான்.

நீ என்ன பெரிய இவளா? ரொம்ப அலட்டிக்காத... இந்த டயலாக்கை மட்டும் ஓராயிரம் முறை சொல்லிப் பார்த்திருப்பான். இனி அவள் வரவேண்டியது தான் பாக்கி.

வி.ஐ.பி :

வி.ஐ.பி :

ஊர்ல இருக்குறவன் எல்லாம் படிக்கிறான்னு என்னைய எல்லாம் எங்க வீட்ல இன்ஜினியரிங் எல்லாம் படிக்க வைக்கல. இது மட்டும் காரணமில்ல எனக்கு படிப்பும் ஏறல. என்ன செய்ய பையன்.... படிக்க வைக்கணுமேன்னு வீட்ல படிக்க வச்சாங்க நானும் படிச்சேன். எப்படியோ தத்தி தாவி எம்.காம் வரைக்கும் படிச்சுட்டேன்.

இப்போ வேலை தேடி ஒவ்வொரு ஆஃபிஸா ஏறி இறங்கிட்டு இருக்கேன். இன்னைலயிருந்த இல்ல இரண்டு வருஷமா தேடிட்டுத் தான் இருக்கேன். அப்பப்போ சின்ன சின்ன வேலை செஞ்சாலும் நிலையான வேலை வருமானம்னு இன்னும் எதுவும் சிக்கல. இரண்டு வருஷமா இந்த சிங்கார சென்னையில சோறு போட்டு வளர்க்குறது என்னோட பிரண்ட்ஸ் தான்.

கண்மை :

கண்மை :

வீட்டில் சமைத்து வைத்து விட்டு காத்திருந்தேன். அலுவலகம் சென்ற என்னுடைய நண்பர்கள் எல்லாம் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். துணியை ஊறப்போட்டுக் கொண்டிருந்தவனிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தேன்.

ஏண்டா மாமா இந்த பொம்பளப்புள்ளைக கண்மைக்கு மட்டும் ஒரு மாசம் எவ்ளோடா செலவு பண்ணுவாங்க?

ஏண்டா? வாங்கித் தரப்போறியா...

அதில்லடா.... இன்னக்கி கிண்டில இருந்து வர்றப்போ ஒரு பொண்ண பாத்தேண்டா கண்ணு அப்டியே கருகருன்னு இருந்துச்சு அதுல சோழியை உருட்டி விட்ட மாதிரி வெள்ளக் கண்ணு அதுல கோலிக்குண்டு மாதிரி அங்குட்டும் இங்குட்டும் உருட்டிட்டு யப்ப்பா....

டேய் டேய்... என்று ஒவ்வொவரும் சீண்ட..இல்ல மாப்ள லைட்டா பாத்தேன் அவ்ளோ தான் மத்தப்படி ஒண்ணுமில்ல.

அலாரம் :

அலாரம் :

பன்னாட்டு நிறுவனம் அது அக்கவுண்ட்ஸ் செக்ஷனுக்காக நேர்காணல் அழைத்திருந்தார்கள். பத்து மணியிலிருந்து காத்திருக்கிறேன் வயிறு மதிய சாப்பாடு கேட்டு அலாரம் அடிக்கத் துவங்கிவிட்டது.

வேலை கேட்டு வர்றவன பாத்தா இவனுங்களுக்கு எல்லாம் இளக்காரமாத்தான் தெரியுது. எரிச்சலாய் வந்தது. முந்தைய தினமே சார், கண்டிப்பா வந்திருவீங்கல்ல... 10.30 க்கு அப்பாயின்ட்மெண்ட்ன்னு என்னமோ கூப்ட்டு உடனே வேல கொடுக்குறவன் மாதிரி பேசானங்க இப்போ வந்தா ஒரு பய திரும்பி பாக்க மாட்டேங்கிறான்.

முதலில் அலாரமடிக்கும் வயிற்றை சமாதானப்படுத்துவோம் என்று வெளியேறினன். உட்கார்ந்து சாப்பிடும் ஹோட்டல் என்றால் காசு அதிகமா கேப்பான்.இங்க எங்கயாவது தள்ளு வண்டிக்கடைலயே சாப்ட்ரலாம் என்று தேடியலைந்து ஒரு கடையை கண்டடைந்தேன்.

மீன் குழம்பு :

மீன் குழம்பு :

அக்கா சாப்பிட என்ன இருக்கு?

பிரியாணி இருக்கு சோறு இருக்கு? என்ன வோணும்

பிரியாணி என்றால் விலை அதிகம் என்பார்கள் அப்போ நமக்கு சோறு தான் என்று நினைத்து சோறே போதும்க்கா என்றேன்.

சாம்பார ஊத்துங்க என்று தட்டை நீட்டினேன்...

என்னை ஏற இறங்க பார்த்தவர்... தம்பி இந்த கடையே மீன் குழம்புக்குத் தான் பேமஸ் நீ என்ன இங்க வந்து சாம்பார் கேக்குற என்று சொல்ல எனக்கு பகீரென்றது. மீன் என்றால் விலை?.... என்ன யோசனையை எப்படி கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை

ஒண்ணும் அதிகமா எல்லாம் கேக்கமாட்டேன் 35 ரூவா தான். எவ்ளோ வேணா திண்ணு என்று சொல்லிக் கொண்டே இரண்டு மீன் துண்டுகளுடன் குழம்பை ஊற்றினார் . மீன் குழம்பு வாசம் மூக்கைத் துளைக்க உடனேயே சாப்பிட வேண்டும் போலிருந்தது.ஒரு கையில் தட்டு இன்னொரு கையில் ஃபைல் இருந்தது என் கையில் இருந்த ஃபைலை வாங்கிக் கொண்டு இந்தா இங்க வைக்கிறேன் சாப்டு என்று கை காண்பித்தார் அந்த அக்கா.

என்ன வேலை தேடிட்டு இருக்கியா?

ஆமாக்கா.... காலைல 10 மணிக்கு வரச்சொன்னாங்க இன்னும் வரைக்கும் எதுவும் சொல்லல... காலைல இருந்து வெட்டியா உக்காந்திருந்தேன்.

ஒருத்தனுமா வர்ல.. அப்பறம் எதுக்கு வரச்சொல்லணும் என்று ஆர்வமாக என் கதையை கேட்டுக் கொண்டே முட்டையை உடைத்து ஊற்றி வெங்காயம் போட்டு ஆம்லெட் ஊற்றினாள்.

 உன் பையனுக்கு கண்டிப்பா வேலை கிடைக்கும் :

உன் பையனுக்கு கண்டிப்பா வேலை கிடைக்கும் :

பாதி தட்டு காலியாகும் போது அந்த ஆம்லெட்டை எனக்கு வைத்தாள். அக்கா... என்று முழித்துக் கொண்டே ஆம்லெட் எல்லாம் என்று ஆரம்பிக்கும் போதே தின்றா.. கடங்காரன் மாதிரி முழிச்சுட்டு, மீன் குழம்புக்கு ஆம்லெட் சூப்பரா இருக்கும் என்றார். சூப்பராத்தான் இருக்கும் ஆனா அதெல்லாம் துட்டு இருக்குறவன் தான் ருசி பார்த்து சாப்டணும் என்று மனதில் சொல்லிக்கொண்டேன்.

வயிறார சாப்பிட்டு விட்டு ஜக்கில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை குடித்தேன் . என்னிடமிருந்த 50 ரூபாய்த் தாளை எடுத்து நீட்டினேன் வாங்கி பெட்டியில் போட்டுக் கொண்டு இருபது ரூபாயை நீட்டினார்.

நான் நூறு ரூபாய் கொடுத்ததாய் நினைத்துக் கொண்டாரோ என்று நினைத்து அக்கா நான் 50 ரூவா தான் கொடுத்தேன் என்றேன். தெரியும்டா 5 ரூவா சில்ரையில்ல இந்தா... என்று நீட்டினார்.

அக்கா உன் பையன் என்ன மாதிரி வேலை கிடைக்காம கஷ்ட்டப்பட மாட்டான்.அவனுக்கு படிச்சு முடிச்சதும் சீக்கிரம் வேலை கிடச்சுரும் என்றேன்.

குலுங்கி குலுங்கி சிரித்தார்.

நெரிசல் :

நெரிசல் :

ஒரு வழியாய் அந்த பன்னாட்டு பன்னாடைகள் மாலை 4 மணிக்கு நேர்காணலுக்கு அழைத்தார்கள். நேர்காணலை முடித்துவிட்டு ஸ்டேஷன் வந்து ட்ரையின் ஏறும் போது மணி 6.30 ஆகிவிட்டிருந்தது.

ட்ரைனில் வாசலுக்கு அருகில் நின்று கொண்டேன், வண்டி கிளம்பும் தருவாயில் ஓடிவந்து சிலர் ஏறினர். அவர்களில் ஒருத்தி முன்னாடி போங்க வாசல்லயே எல்லாரும் நின்னா பின்னாடி ஏற்றவங்க என்ன பண்ணுவாங்க... கொஞ்சம் பின்னாடி.. வழி விடுங்க என்று கத்திக் கொண்டே நடுவில் சென்று விட்டார்.

எனக்கு ஆச்சரியமாய் இருந்தது நடுவில் போய் என்னதான் செய்கிறார் என்று சிறிது நேரம் கழித்து எட்டிப் பார்த்தால் கொய்யாப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

துடுக்கான பேச்சு துருதுருவென்று எதையோ தேடிக்கொண்டிருக்கும் கண்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

Image Courtesy

தீவிரம் :

தீவிரம் :

அவளும் நுங்கம்பாக்கத்திலேயே இறங்கினாள்.அடடே இங்க தானா என்று எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தினமும் வெளியில் செல்ல ஆரம்பித்தேன் அவள் வரும் நேரமும் போகும் நேரமும் தவறாமல் ஸ்டேஷனல் ஆஜராகிவிடுவேன்.

தினமும் வெளியில் செல்லும் பயனாக வேலை தேடும் படலம் கொஞ்சம் தீவிரமடைந்தது என்றே சொல்லலாம்.

Image Courtesy

ஞாயிற்றுக் கிழமை :

ஞாயிற்றுக் கிழமை :

அன்று ஞாயிற்றுக் கிழமை என்று கூட தெரியாமல் அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அரக்கப் பரக்க கிளம்பி ரயில்வே ஸ்டேஷன் வந்தேன். வழக்கத்திற்கு மாறாக அமைதியுடன் இருக்கவே சந்தேகப்பட்டு அங்கிருந்த கடையில் விசாரிக்க விவரம் புரிந்தது.

சரி இன்றைக்கு வரமாட்டாள் என்று நினைத்து அங்கேயே காலை உணவை முடித்துக் கொண்டேன். வார நாட்களில் கூட்டம் நிரம்பி வழியும் ட்ரைன் இன்று காலியாக சென்று கொண்டிருந்தது. எங்காவது செல்வோம் என்று நினைத்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் ட்ரைனில் ஏறிக் கொண்டேன்.

எப்போதும் அவளிருக்கும் இடம் இன்று இல்லாதது தான் இவ்வளவு வெறுமைக்கும் காரணமாய் தோன்றியது. எங்கு பார்த்தாலும் அவளே வருவது போல,நிற்பது போல, யாரையோ தேடுவது போலத் தோன்றியது.

Image Courtesy

பேசிவிட்டாள் :

பேசிவிட்டாள் :

என்ன இன்னக்கி ப்ளூ கலர் ஃபைல் காணோம்?

கற்பனை உருவம் பேசுமா? அவள் என்னிடம் எல்லாம் வந்து பேசுவாளா? என்று நினைத்துக் கொண்டே அவள் நிஜம் தானா என்று அறிய தொட முயன்றேன் விலகினாள்.

நிஜம் தான். ஆச்சரியம் தாங்காமல் என் பைல் கலர் உங்களுக்கு எப்டி தெரியும் என்றேன். தினமும் காலைலயும் சாயங்கலமும் அத தான வச்சிருப்பீங்க

அசடு வழிந்து கொண்டே உங்கள நான் டெய்லி பாப்பேன் தெரியுமா என்றேன்.

ம்ம்ம்.. தெரியும் அன்னக்கி நான் கிண்டில இருந்தே ஏறினப்போயிருந்து டெய்லி நான் வர்றப்பவும் போறப்பவும் பாக்குறீங்க. அன்னக்கி கூட நான் கொய்யாப்பழம் சாப்பிடும் போது ஏதோ பிடுங்கித் திங்கிற மாதிரி பாத்தீங்க தான...

ஆத்தாடி... எல்லாத்தையும் நோட் பண்ணிட்டு எப்டி கமுக்கமா இருந்தாளுக பாரேன் என்று மனதில் சொல்லிக் கொண்டேன்.மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியவில்லை.பேரைக் கேட்கலாமா என்று தோன்றியது ஆனால் ஏதேனும் தப்பாக நினைத்துக் கொண்டாள் என்ன செய்வது?

கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான் :

கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான் :

ஜாப் சேர்ச்சிங்கா?

ம்ம் ஆமாங்க என்று ஆரம்பித்து என்னுடைய வரலாற்றினை ஒப்பித்தேன். இரண்டு வருடங்களாக நான் அலைந்திடும் கதையையும் விவரித்தேன்.

சிரித்துக் கொண்டே கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான் என்றாள்.

வீடு வந்த சேர்ந்த போதும் அவள் என்னிடம் வந்து பேசிய ஆச்சரியம் ஒரு பக்கம் வேலை கிடைக்கிறது கஷ்டம் என்று சொல்லிய வருத்தம் என்று வதைத்தது. ஏன் என்று அவளிடம் காரணம் கேட்டிட வேண்டும் என்று நினைத்தேன்.எப்படிக் கேட்பது என்று ஒத்திகையும் பார்த்துக் கொண்டேன்.

போலிக் கோபம் :

போலிக் கோபம் :

போலியாக வரவழைத்த கோபத்தில் அவளிடம் கோபப்படவேண்டும். அவள் யார் எனக்கு வேலைக் கிடைக்காது என்று சொல்வதற்கு? உன்ன சைட் அடிச்சா நீ என்ன வேணா சொல்வியா? வேலை கிடைக்கிறதுக்காக தினம் தினம் எவ்ளோ கஷ்டப்படுறேன்னு தெரியுமா? அசால்ட்டா வந்து கிடைக்கிறது கஷ்டம்னு சொல்ற... வார்த்தைகள் சரளமாக மனதில் உதித்துக் கொண்டேயிருந்தது. அவளிடம் நிச்சயம் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒத்திகை பார்த்துக் கொண்டேன்.

வழக்கமாக 6 மணிக்கு வருபவள் இன்றைக்கு 6.45க்கு வந்தாள். யதார்த்தமாக அவளை எதிரில் சந்திப்பது போல ப்ளாட்ஃபார்ம் சுற்றி புகுந்து ஓடினேன். பின்னர் மொபைலை நோண்டிக் கொண்டே அவளின் எதிராக நடந்து வந்தேன். யதார்த்தமாக சந்திக்க 2 மணி நேரமாக காத்திருந்தது தனிக்கதை.

எப்டி ஆரம்பிக்க?... ஹே நீங்க அன்னக்கி என்று ஆரம்பிக்கலாமா ? மொக்கையா இருக்கே என்று நினைத்துக் கொண்டேன்.

சந்திப்பு :

சந்திப்பு :

இருவரும் எதிரெதிரில் சந்தித்துக் கொண்டோம்.

சிரித்தேன்.

இப்பதான் உங்கள நினச்சேன் நீங்களே நேர்ல வந்து நிக்கிறீங்க என்று சொன்னேன்.

ஹோ என்ன நினச்சனால தான் பின்னாடி ஓடிப்போய் சுத்தி வந்து நடந்து வர்றீங்களா? என்று கேட்டுவிட்டு அடக்க முடியாமல் வாயை மூடி சிரித்தாள்.

சொதப்பல் ராசாவே... என்று அசடு வலிந்து கொண்டே இல்ல அங்க பிரண்டு யாரையோ பாத்த மாதிரி... என்று ஆரம்பித்து சரி எப்டியும் கண்டுபிடித்து விடுவாளே என்று நினைத்து. அட ஆமாங்க உங்களப்பாக்கதான் சுத்தி வந்தேன். இரண்டு மணி நேரமா இங்க வெயிட் பண்றேன் என்று சொன்னேன்.

எதுக்கு?

ஆமா நீங்கபாட்டுக்கு வேலை கிடைக்கிறது கஷ்டம்னு சொல்லிட்டு போய்ட்டீங்க... எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா? அதான் ஏன் சொன்னீங்கன்னு கேக்கலாம்னு.... என்று நிறுத்தினேன்.

ஹோ..... அதுக்கா? ஆமா வேல தேடுறேன்னு ஆபிஸ் வாசலா தேச்சா மட்டும் போதுமா சும்மா ஏறி இறங்குறனால மட்டும் வேலை கிடைக்காது. தேடுற விதத்த மாத்தணும் அதான் வொர்க் அவுட் ஆகலைன்னு தெரியுதுல அப்பறம் அதையே பண்ணிட்டு இருந்தா என்ன அர்த்தம்.

அட ஆமால்ல... உண்மை விளங்கியது.

இப்போதாங்க புரியுது. ரொம்ப தேங்க்ஸ் என்றேன்.

ஆல் த பெஸ்ட் வேல கிடச்சதும் 96*** ***** இந்த நம்பருக்கு போன் பண்ணி சொல்லுங்க என்றாள்.

கிடச்சதும் சொல்லவா? யாரு எதுக்கு என்று புரியாமல் விழிக்க

அது என் நம்பர் என்றாள்.

தாலாட்டும் சாமி :

தாலாட்டும் சாமி :

அவள் சொன்னது போலவே எனக்கு அடுத்து பத்து நாட்களில் வேலை உறுதியானது.

வேலைக்கான கன்ஃபர்மேஷன் ஆர்டர் கிடைத்ததும் அவளின் எண்ணுக்கு போன் செய்தேன். இரண்டு மாதங்களாக சந்தித்துக் கொண்டும் பெயரைக் கூட கேட்கவில்லையே என்று அப்போது தான் உரைத்து.

முதல் ரிங்கிலேயே போன் எடுத்துவிட்டாள்...

ஹலோ..

எனக்கு வேல கிடச்சுருச்சுங்க.

வேலயா? யாரு??? என்ன வேல ....

அன்னக்கி ட்ரைன்ல பேசினோமே... நீங்க கூட வேலை கிடைக்காதுன்னு...

ஹ்ம்ம் ஆமாமா..... அவள் நினைவில் வந்துவிட்டேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Real life story of a guy who searching job and got a soul mate

Real life story of a guy who searching job and got a soul mate
Story first published: Friday, October 13, 2017, 15:16 [IST]