பிறக்கும் போது தாயை இழந்தேன்! வளரும் போது தந்தை! பருவ வயதில் காதலியையும் இழந்துவிட்டேன்!-My Story#83

By: Suresh
Subscribe to Boldsky

நான் என் தாயின் கருவறையில் இருக்கும் போதே, என் தாய் சற்று மனநிலை சரியில்லாதது போல் தான் இருந்தார்.. நான் பிறந்த பிறகு என் தாய் இறந்துவிட்டார்.. எனது தந்தையும் வேறோரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.. அதனால் எனது அப்பா தனியாக ஒரு வீட்டில் இருந்து கொண்டார். எனது பாட்டியும் தாத்தாவும் தான் என்னை வளர்த்தார்கள்..

காதல்

சிறிய வயதிலிருந்து நிறைய கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறேன். நான் படித்தது பெரிய பள்ளி.. என்னுடன் படித்தவர்கள் எல்லோரும் பணக்கார வீட்டு பிள்ளைகள்.. அவர்கள் முன்னால் நான் ரேஷன் சாப்பாடு சாப்பிட கூடாது என்பதற்காக நல்ல அரிசி போட்டு மதிய உணவுக்கு மட்டும் எனக்கு அளவாக சாப்பாடு போட்டு கொடுப்பார் எனது பாட்டி..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பள்ளிப்பருவம்

பள்ளிப்பருவம்

அப்போது எனக்கு 16 வயது.. எனக்கு அரும்பு மீசை முளைக்க தொடங்கிய காலம் அது.. அப்போது தான் எனக்குள் காதலும் அரும்பியது...! அவள் எனது வகுப்பு மாணவி.. அந்த இரட்டை ஜடையிலும், ஸ்கூல் யூனிபார்ம் போட்ட போதிலும் கூட, அவள் எனது கண்களுக்கு தேவதையாகவே தெரிந்தாள்.. அவளிடம் என் காதலை வெளிப்படுத்துவதற்கு முன்பாகவே அவள் எனது காதலை புரிந்து கொண்டாள்.. அவளை நினைத்தே பல பொழுதுகள் கடந்தன..

 காதலை வெளிப்படுத்தினேன்

காதலை வெளிப்படுத்தினேன்

ஒரு நாள் தைரியம் வந்து என் நண்பர்கள் மூலமாக என் காதலை சொல்லி அனுப்பினேன்.. அவளிடம் இருந்தும் ஒரு நல்ல தகவல் கிடைத்தது.. அன்று முதல் நான் அவளை என் உயிருக்கு உயிராக காதலித்து வந்தேன்.. நான் கோபத்தில் அவளை திட்டிவிட்டால் கூட என்னை ஒன்றும் கூறமாட்டாள்.. எனக்கு ஏற்ற ஒரு துணையாக இருந்து வந்தாள்.. எனக்கு அவளையும், அவளுக்கு என்னையும் மிகமிக அதிகமாக பிடித்திருந்தது...!

பிரிவு

பிரிவு

பள்ளிப்பருவம் முடிந்து, கல்லூரி பருவம் வந்தது... அப்போது தான் ஒரு பிரிவும் வந்தது. நான் சேர்ந்த கல்லூரியில் அவளுக்கு இடம் கிடைக்கவில்லை.. நான் கல்லூரிக்கு முழு பணத்தையும் செலுத்திவிட்டதால், என்னாலும் அவள் படிக்கும் கல்லூரியில் சேரமுடியவில்லை.. அதனால் இருவரும் வேறு வேறு கல்லூரிகளில் படித்து வந்தோம்.

பகுதி நேர வேலை

பகுதி நேர வேலை

நான் கல்லூரி நேரம் போக மற்ற நேரங்களில் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன்.. இரவு நேர வேலைக்கு சென்று கொண்டிருந்தேன்.. கிடைக்கும் சம்பளத்தை எனது படிப்பிற்காக பயன்படுத்திக் கொண்டேன். அவளுக்கு என் சம்பள பணத்தை கொண்டு முதலில் அவளுக்கும் எனக்கும் ஒரு போனை வாங்கினேன்.. அந்த போனை என் காதல் பரிசாக அவளுக்கு கொடுத்தேன். மேலும் அவளுக்கு மோதிரம், கம்மல் போன்ற பரிசுகளையும் எனது கல்லூரி காலத்தில் வாங்கி கொடுத்தேன்..

நல்ல வேலை!

நல்ல வேலை!

பின்னர் எனக்கு மும்பையில் வேலை கிடைத்தது.. அப்போது அவள் சென்னையில் ஒரு கல்லூரியில் தனது முதுகலை படிப்பை படித்து வந்தாள்.. நான் எனது சொந்த ஊருக்கு செல்லும் போது எல்லாம் அவளுடன் வெளியில் செல்வேன்.. கிட்டத்தட்ட ஒரு கணவன் மனைவியை போல தான் வாழ்ந்து வந்தோம் என கூறலாம்.

திடீர் அதிர்ச்சி

திடீர் அதிர்ச்சி

ஒருநாள் எனக்கு ஒரு போன் வந்தது.. அன்று மாலை நான் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். எனக்கு கால் செய்த அவன், நீங்க நித்யாவின் பிரண்டா என்று கேட்டான். பிரண்ட் எல்லாம் இல்லை.. நான் அவளது லவ்வர் என்று கூறினேன்.. அதற்கு அவன் நானும் அவளது லவ்வர் தான் என்று கூறினான்... எனக்கு கோபமாக வந்தது.. அவனை திட்டினேன்.. அவன் இருங்க பாஸ் நான் உங்களுக்கு மேல கோபமா இருக்கேன். நீங்க, நான் மட்டும் அவளது லவ்வர் இல்லை இன்னும் ஒருவரும் இருக்கிறார். உங்களுக்கு நான் சொல்வதில் ஏதாவது சந்தேகம் இருந்தால், நித்யாவின் ரூம் மேட் இடம் அவள் எத்தனை மொபைல் வைத்திருக்கிறாள் என்று மட்டும் கொஞ்சம் கேட்டுப்பாருங்கள் என்றான்.

உண்மையாக இருக்க கூடாது!

உண்மையாக இருக்க கூடாது!

எனக்கு இதயம் பதைபதைத்து போனது. இவன் சொன்னது எப்படியாவது பொய்யாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டேன்.. அவளது பிரண்டிற்கு போன் செய்தேன்.. அவளும் அவர் சொன்னது எல்லாம் உண்மை தான். நித்யா உங்கள் மூன்று பேரை காதலிக்கிறாள். அவளிடம் மூன்று மொபைல் போன் இருக்கிறது. உங்கள் மூவரிடமும் காசு வாங்கி அவள் நன்றாக செலவு செய்கிறாள். விதவிதமான ஆடைகள், மொபைல்கள், மேக்கப் பொருட்கள் என பலவற்றை அவள் வாங்கி வைத்திருக்கிறாள் என்று கூறினாள்..

போலிசில் புகார்

போலிசில் புகார்

எனக்கு கோபம் உச்சிக்கு சென்றது.. உடனே அவளது அம்மாவிற்கும் நித்யாவிற்கும் சேர்த்து கான்பிரன்ஸ் கால் செய்து பேசினேன்.. அவள் எனக்கு செய்த துரோகங்கள் பற்றி எல்லாம் அவளது அம்மாவிடம் கூறினேன். அவளது வீட்டிற்கும் அவளால் ஏமாற்றப்பட்ட நாங்கள் மூவரும் சென்றோம். எங்களை இப்படி ஏமாற்றிவிட்டாள் என்று கூறினோம். மற்ற இருவரும் போலிசில் புகார் செய்து விடலாம் என்று கூறினார்கள். அவரது அம்மா எங்களது காலில் விழுந்து கெஞ்சினார். மேலும் அவளுக்கு இன்னும் 2 வாரத்தில் வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாகவும் கூறி கெஞ்சினார்.. எனவே வேண்டாம் விட்டு விடலாம். போலிஸிடம் எல்லாம் செல்ல வேண்டாம் என்று நான் கூறிவிட்டேன்...

கண்ணீர் காலங்கள்

கண்ணீர் காலங்கள்

என்ன தான் அவள் எனக்கு இப்படி துரோகம் செய்து இருந்தாலும் கூட, அவளை நினைத்து நான் அழுகாத அழுகை இல்லை.. எனக்கு துரோகம் செய்து விட்டு சென்ற அவளை மறக்கவே எனக்கு ஒன்றரை வருடம் ஆனது..! அதன் பின் எனக்கு எந்த பெண்ணையும் நினைக்க தோன்றவில்லை..

பிறந்த நாள் வாழ்த்து

பிறந்த நாள் வாழ்த்து

எனது தோழி ஒருத்தி எனது பிறந்தநாளன்று எனக்கு வாழ்த்து கூறினாள். அப்போது அவளுடன் சேர்ந்து இன்னொரு பெண்ணும் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினாள். அவள் என்னுடன் பள்ளியில் படித்தவள். என்னை விட வயதில் சிறியவள் தான். அவளை பார்த்து இருந்தாலும் கூட, அவளுடன் அதிகமாக எல்லாம் பேசியது கிடையாது.

நட்பு

நட்பு

அவளுடன் என் நட்பு தொடர்ந்தது.. என் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு விஷயத்தை பற்றியும் நான் அவளிடம் கூறினேன். இதை எல்லாம் கேட்டு அவளுக்கு என் மீது காதல் வந்தது.. என்னிடம் கூறினாள்.. ஆனால் என்னால் மீண்டும் ஒருமுறை ஒரு பெண்ணை நம்பமுடியவில்லை.. ஆனால், அவள் என்னை ஒரு தாயாக இருந்து பார்த்துக்கொள்வேன் என்று கூறினாள்..

காதல் உதித்தது

காதல் உதித்தது

அவள் மீது கொஞ்சம் கொஞ்சமாக காதல் வந்தது.. எங்கள் காதல் வளர்ந்தது.. திருமணம் பற்றி வீட்டில் பேசினோம். அவளது வீட்டில் எனக்கு அப்பா, அம்மா, சொந்த வீடு, இடம் என எதுவுமே இல்லை என்று அவளது வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.. என்னால் இந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ளமுடியவில்லை. என் நண்பர்களிடம் கூறி அழுதேன்..

உழைப்பின் பரிசு

உழைப்பின் பரிசு

அந்த சமயத்தில் தான் எனது உழைப்பிற்கு வரமாக, நான் வெளிநாடு சென்று இரண்டு வருடங்கள் வேலை செய்ய வேண்டிய சூழல் உருவானது. என்னால் நிறைய பணம் சம்பாதிக்கவும் முடிந்தது.. அதனால் அவளது வீட்டில் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்கள். நான் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தவுடன் எங்களது திருமணம் நடக்கவிருந்தது.. திருமணத்திற்கான செலவுகள் அனைத்தையும் நானே பார்த்துக் கொண்டேன்.

தாயுமானவள்...!

தாயுமானவள்...!

இப்போது அவள் என்னிடம் கூறியது போலவே எனக்கு தாய்க்கு தாயாக இருந்து என்னை பார்த்துக் கொள்கிறாள். என் மனைவி என் வாழ்க்கையில் வந்தவுடன் தான் மனதில் எந்த ஒரு வலியும் இன்றி வாழ்ந்து வருகிறேன்...! இத்தனை ஆண்டு காலம் நான் சிரமப்பட்டதற்கு கிடைத்த பரிசாகவே என் மனைவியை நான் நினைக்கிறேன்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Now I am happy it is only because of my wife

Now I am happy it is only because of my wife
Subscribe Newsletter