ஏன் எனது மனைவி என்னிடம் இருந்து இதை எல்லாம் மறைக்கிறாள்!

Written By:
Subscribe to Boldsky

கணவன் மனைவி இருவருக்கும் இடையே இடைவெளி, இரகசியங்கள் என எதுவும் இல்லாமல் இருப்பதே உண்மையான உறவின் ஆணி வேர். சில சமயங்களில் கணவன், மனைவி இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக ஒருசில விஷயங்களை ஒருவரிடம் இருந்து மற்றொருவர் மறைக்க வேண்டியதாகிவிடுகிறது. அது நமக்கு வருத்தத்தை தரக்கூடியதாக இருந்தாலும் கூட, கோபப்படுவதை தவிர்த்து, என்ன காரணத்திற்காக உங்களது கணவன்/மனைவி உங்களிடம் இருந்து ஒருவிஷயத்தை மறைக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனைவியின் பாஸ்வேர்டு

மனைவியின் பாஸ்வேர்டு

எங்களுக்கு திருமணமாகி 22 வருடங்கள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் 18 மற்றும் 12 வயதில் இருக்கின்றனர். எனது மனைவி கடந்த 4 வருடங்களாக தனது மொபைலுக்கு பாஸ்வேர்டு போட்டு இரகசியமாக வைத்துள்ளார். எனக்கு இதனை நினைத்து ஒரே மனக்குழப்பமாக உள்ளது. என்னிடம் ஏன் ஒரு விஷயத்தை மறைக்க வேண்டும்? எதற்காக அவள் இப்படி நடந்துகொள்கிறாள் என்று குழம்பி கொண்டிருக்கிறேன். இந்த சூழ்நிலையில் இருந்து விடுபட நான் செய்வது?

இடைவெளி

இடைவெளி

என்ன தான் கணவன், மனைவியாக இருந்தாலும் கூட, சிலப்பல காரணங்களுக்காக தனக்கென ஒரு இடைவெளியே எதிர்பார்ப்பது சாதாரணம் தான். தனக்கென ஒரு வாழ்க்கை என்பது தேவையும் கூட...

பாஸ்வேர்டு

பாஸ்வேர்டு

ஒரு பெண் தனது மொபைல் பாஸ்வேர்டை தனது கணவனுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறாள் என்பதற்காக அவளை உடனடியாக சந்தேகப்பட்டுவிட முடியாது. அவள் இவ்வாறு செய்வதற்கு பின்னால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள கூடிய காரணம் கூட இருக்கலாம்.

உதாசினப்படுத்துதல்

உதாசினப்படுத்துதல்

நீங்கள் உங்களது மனைவிக்கு சில தடைகளையும், அவரது உணர்வுகளையும் உதாசினப்படுத்தி இருக்கலாம் அல்லது அவரை நோகடிக்கும் படி எதையாவது செய்திருக்கலாம். அதனால் உண்டான பயத்தில் கூட உங்களிடம் இருந்து அவர் ஒரு விஷயத்தை மறைப்பதாக இருக்கலாம்.

மனம்விட்டு பேசுங்கள்

மனம்விட்டு பேசுங்கள்

உங்களது மனைவியிடம் இதை பற்றி மனம் திறந்து நிதானமாக கேளுங்கள். நான் உன்னுடைய உணர்வுகளுக்கு எல்லாம் மதிப்பளிக்கிறேனா என்று..! அவரிடம் சந்தேகம் உள்ள பாணியில் பேசுவதை தவிர்த்திடுங்கள். அவரிடம் அன்பாகவும் நம்பிக்கையுடனும் பேசுவதன் மூலமாக தான் இதற்கான தீர்வு காண முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

my wife protected her phone with password

my wife protected her phone with password
Story first published: Saturday, October 7, 2017, 16:06 [IST]