நான் அழகாக இல்லை என்ற காரணத்தால், எனது ஆறு வருட காதல் முறிந்தது! - My Story #79

Written By:
Subscribe to Boldsky

எனக்கு படித்து முடிக்கும் காலம் வரை காதல் என்ற ஒன்று வரவில்லை.. வேலைக்கு சென்று கொண்டிருக்கும் போது தான் காதல் வந்தது.. அதுவும் இரு ராங்க் கால் மூலமாக... அவள் தேனி மாவட்டத்தை சேர்ந்தவள்.. நான் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவன்.. எங்களது இருவருக்குள்ளான நட்பு என்பது காதலாக மாற இரண்டு, மூன்று வாரங்கள் மட்டுமே ஆனது..

எனக்கு பள்ளி காலத்தில் இருந்தே ஒரு தங்கை இருந்தாள். அவள் பெயர் சிமா.. எனக்கு பள்ளியில் கிடைத்த தங்கை.. நாங்கள் இருவரும் உண்மையான அண்ணன் தங்கை போல தான் இருந்து வந்தோம்..

my story: she rejected me because i am not fair

அவள் அவளது வீட்டில் இருந்த நேரங்களை விட எங்களது வீட்டில் இருந்த நாட்கள் தான் அதிகம். என் காதலியின் பெயர் கவிதா.. கவிதா என்னை உறுக வைக்கும் படியாக பேசுவாள்... என்னை அன்பாக மாமா என்று தான் அழைப்பாள். உன் அக்கா, அம்மா, அப்பா எல்லோரையும் நன்றாக பார்த்துக் கொள்வேன் என்று எல்லாம் என்னிடம் பேசுவாள். எனக்கு இப்படி ஒரு பெண் நமது வாழ்க்கையில் கிடைக்கவே கிடைக்காது என்று தோன்றும்... அந்த அளவுக்கு என்னிடம் உருகி உருகி பேசும் திறமை கொண்டவள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புகைப்பட பரிமாற்றம்!

புகைப்பட பரிமாற்றம்!

எங்களது காதல் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது.. ஒரு நாள் அவளை பார்க்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது... எனவே அவளிடம் புகைப்படம் கேட்டேன்.. அவளுக்கு எனது புகைப்படத்தை அனுப்பினேன்.. நான் பார்க்க அவ்வளவு அழகாக இருக்க மாட்டேன்.. கருப்பாக தான் இருப்பேன்.. அவளும் சிறந்த அழகி எல்லாம் இல்லை.. ஆனால் நான் அழகை பார்க்கவில்லை.. மனதை பார்த்து தான் அவளை காதலித்தேன்.. அவளும் அப்படி தான் என்னிடம் கூறினாள்..

உரிமை எடுத்துக் கொண்டாள்

உரிமை எடுத்துக் கொண்டாள்

நான் அவள் என்னிடம் இது வேணும் மாமா... அது வேணும் மாமா என்று உரிமையாக கேட்பாள் நானும் அதை எல்லாம் வாங்கி தருவேன்... எனக்கு அவள் என்னிடம் உரிமை எடுத்து கேட்பது பெருமையாக இருந்தது.. அவளது வீட்டிலிருந்து அவளை எதையும் கேட்க விட்டதில்லை.. அவள் குளிக்கும் சோப்பில் இருந்து அனைத்தையும் நான் தான் அவளுக்கு வாங்கி கொடுத்தேன்... அவளுக்கு அதில் அத்தனை சந்தோஷம்...!

பயந்து கொள்வாள்!

பயந்து கொள்வாள்!

அடிக்கடி எங்களது வீட்டில் நமது திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுவாள். நாங்கள் இருவரும் ஒரே சாதி, மதத்தை சார்ந்தவர்கள் தான்.. அதனால் நமது திருமணத்தில் எந்த தடங்கலும் வராது என்று கூறினேன் ஆனாலும் அவள் என் பேச்சை சற்றும் கேட்கவில்லை... அடிக்கடி பிரிந்து விடுவோம் என்று பேசுவாள்.. நான் இறக்கும் வரை உன்னையே நினைத்துக் கொண்டு எங்கேயாவது போய் தனியாக வாழ்ந்து விடுவேன் என்று எல்லாம் கூறுவாள்....

நேரில் சந்தித்தோம்!

நேரில் சந்தித்தோம்!

ஒரு நாள் நாங்கள் நேரில் சந்தித்துக் கொண்டோம்.. அந்த தருணம் மிகவும் இனிமையான தருணம். அவள் என்னுடம் போனில் பேசியதற்கும் நேரில் பேசுவதற்கும் எந்த ஒரு வித்தியாசமும் தெரியாத மாதிரி தான் பேசினாள். இனிமையாக கழிந்தது அந்த நாள்...!

கஷ்டமாக இருந்தது

கஷ்டமாக இருந்தது

அவளை வீட்டில் விட வேண்டும் என்பதற்காக நான் அவளை பைக்கில் அழைத்து சென்று கொண்டிருந்தேன்... அப்போது அவளது மொபைல் என்னிடம் தான் இருந்தது.. அவளது மொபைலுக்கு டார்லிங் என்று மெசேஜ் வந்தது.. யார் உன்னை இப்படி கூப்பிடுவது என்று கேட்டேன். என் சொந்தக்கார பையன் என்னை அப்படி தான் கூப்பிடுவான் என்று கூறினாள். இனிமேல் அப்படி கூப்பிட வேண்டாம் என்று சொல் என்று கூறினேன்.. சரி என்று கூறினாள். இருந்தாலும் என் காதலியை என்னொருவன் இது போன்று கூப்பிடுவது எனக்கு வருத்தமாக இருந்தது.. ஆனால் அதனை நான் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை...

அக்காவின் திருமணம்

அக்காவின் திருமணம்

நாட்கள் கடந்தன... அவளது அக்காவிற்கு திருமணம் நடக்கவிருந்தது.. அந்த திருமணத்திற்கு என்னை அழைத்திருந்தாள்.. நானும் சென்றேன்... ஆனால் அங்கே அவள் என்னிடம் மற்றவர்கள் முன்னால் பேசாதே என்று கூறிவிட்டாள். சரி, பிரச்சனை வரக்கூடாது என்று தான் இப்படி சொல்கிறாள் என்று கூறுகிறாள் என்று விட்டுவிட்டேன்.. அவள் என்னை திருமணத்திற்க்கு அழைத்ததே மகிழ்ச்சியாக இருந்தது.. நான் அந்த திருமண வீட்டில் அவளை பார்த்துக் கொண்டே இருந்தேன்.. தனிமையாக இருந்தது.. அங்குள்ள குழந்தைகளுடன் விளையாடினேன்...

நீ எனக்கு வேண்டாம்

நீ எனக்கு வேண்டாம்

திருமணம் முடிந்து நான் எனது ஊருக்கு வந்ததும், அவள் என்னிடம் பத்திரமாக போய்ட்டியா என்று கூட கேட்கவில்லை.. அன்றிலிருந்து ஒரு மாதம் என்னுடன் பேசவே இல்லை... எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.. அவளுக்கு மெசேஜ் செய்தும் ரிப்ளே இல்லை... ஒரு நாள் அவள் எனது போனை எடுத்து பேசினாள்.. அப்போது நீ கருப்பா இருக்க.. உனக்கும் எனக்கும் ஜோடி பொருத்தமே சரியில்லைன்னு எல்லாரும் கல்யாண வீட்டுல சொன்னாங்க.. நீ எனக்கு வேண்டாம்.. இனி எனக்கு கால் செய்யாதே என்று கூறிவிட்டாள்...

ஏனடி காயம் செய்தாய்

ஏனடி காயம் செய்தாய்

அது எங்களது காதலின் இரண்டாவது வருடம், இரண்டு வருடங்கள் காதலித்து விட்டு இப்போது நான் கருப்பாக இருக்கிறேன் என்று என்னை வேண்டாம் என்று சொல்கிறாளே என்று எனக்கு அழுகையே வந்துவிட்டது.. உன் இந்த குணம் பிடிக்கவில்லை மாற்றிக் கொள் என்று கூறினால், கூட மாற்றிக் கொள்ளலாம். ஆனால் நிறம், அழகு எல்லாம் பிறப்பிலேயே வருவது அதனை எல்லாம் நான் எப்படி மாற்றிக் கொள்ள முடியும்? அவள் என்னிடம் கூறிய வார்த்தை என் நெஞ்சை ஊசியாக குத்தியது....!

எனது தோழி

எனது தோழி

எனக்கு அப்போது இருந்த ஒரு தோழி என் அத்தையின் மகள் தான்.. அவளிடம் இது பற்றி எல்லாம் நான் கூறினேன்..! என் காதலின் ஆரம்ப காலம் முதல் அவளுக்கு தெரியும்... கவிதா நம்பிக்கையானவளாக எனக்கு தெரியவில்லை.. நீ அவளை விட்டுவிட்டு உன் வேலையை பார்.. அவ மட்டும் ஒன்னும் தேவதை மாதிரி எல்லாம் இல்ல... அதுவும் இத்தன வருஷமா தெரியாத உன் நிறம் இப்போது தான் அவளது கண்களுக்கு தெரிகிறதா? உன்னை அவள் ஏமாற்றுவது போல தான் எனக்கு தெரிகிறது.. அவளுக்காக நீ பணம் செலவழிப்பதை முதலில் நிறுத்து என்று எனக்கு அறிவுறை கூறினாள்... எனக்கும் ஒரு தெளிவு வந்தது...

மறக்க இயலவில்லை

மறக்க இயலவில்லை

ஆனாலும் என்னால் அவளை மறக்க முடியவில்லை.. என் அம்மாவிடம் இந்த பொண்ணு எப்படி இருக்குனு அவ போட்டோவை காட்டிய போது என் அம்மா கூட இந்த பொண்ணு எனக்கு பிடிக்கலடா என்று தான் கூறினார்.. ஆனால் இதை எல்லாம் நான் அவளிடம் கூறவே இல்லை... இனிமேல் அவள் இல்லை என்று தெரிந்துவிட்டது.. அவளை மறந்து வாழ வேண்டும் என்று கொல்கத்தாவிற்கு புறப்பட்டேன்..

புதிய வாழ்க்கை

புதிய வாழ்க்கை

கொல்கத்தா வாழ்க்கை ... பிடிக்காத உணவு... தனிமையான உலகம்.. அவளை மறக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.. என் நண்பர்களிடம் பேசி எனது நேரத்தை கழித்தேன்... அவளை கொஞ்சம் கொஞ்சமாக மறக்க வேண்டும் என்று தோன்றியது.. ஆனால் எப்போதாவது அவள் அழைக்க மாட்டாளா என்று தோன்றும்... அவளை முழுமையாக என்னால் மறக்கமுடியவில்லை... மறந்து விட வேண்டும் என்று என்னை நானே ஏமாற்றிக் கொண்டிருந்தேன்...

அழைப்பு வந்தது

அழைப்பு வந்தது

ஒரு வருடம் ஆனது... அவளிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது... அதுவரை நான் அவளுக்கு போன் செய்யவே இல்லை... எனக்கு அவளது போன் வந்தது மிகவும் ஆனந்தமாக இருந்தது.. முடிந்து விட்டது என்று நினைத்த காதல் சேர்ந்து விட்டது என்று நினைத்தேன்.. அவள் என்னிடம் நன்றாக பேசினாள்.. மேல் படிப்பிற்காக சேர்ந்துள்ளதாக என்னிடம் தெரிவித்தாள்.. நான் ஏதேனும் உதவி வேண்டுமா என்று கேட்டேன்... இல்லை.. பரவாயில்லை என்று கூறினாள்... ஆனால் சிறிது நாட்கள் கழித்து உதவி வேண்டும் என்று கூறினாள்... நானும் செய்தேன்.. அவளுடம் பேசியதும் தான் ஒரு வருடம் கழித்து ஊருக்கு சென்றேன்... அவளையும் கண்டேன்.. அவளது தோழிகளை எல்லாம் எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள்...

எத்தனை பிரச்சனைகள்

எத்தனை பிரச்சனைகள்

இடைஇடையே பல பிரச்சனைகள் காதலில் வந்து கொண்டு தான் இருந்தன. நமது காதல் வீட்டில் தெரிந்து விட்டது என் பெற்றோர்கள் தற்கொலை செய்து விடுவேன் என்று கூறுகிறார்கள் என்று கூறி ஒரு நான்கு மாதங்கள் என்னுடன் பேசாமல் இருந்தாள்... என் அக்காவின் குழந்தை மீது சத்தியமாக உன்னுடன் பேசமாட்டேன் என்று கூறிவிட்டேன் என்று ஒரு ஆறு மாதங்கள் பேசாமல் இருந்தாள்.. பின் மீண்டும் பேசினாள்..

சொந்த ஊருக்கே சென்றேன்

சொந்த ஊருக்கே சென்றேன்

அவள் என்னை கொல்கத்தாவை விட்டு சொந்த ஊருக்கே வர சொன்னாள். நானும் அவளது பேச்சை நம்பி சொந்த ஊருக்கே வந்து ஒரு வேலையை தேடிக்கொண்டேன்... சுமாரான சம்பளம் தான் என்றாலும்... சொந்த ஊர் மகிழ்ச்சியை கொடுத்தது.. அதன் பின்னர் ஒரு வருடம் எங்களது காதல் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது.. அவளை நான் வெளியிடங்களுக்கு எல்லாம் அழைத்து சென்றேன்.. ஒவ்வொரு வாரமும் அவளை காண அவளது ஊருக்கு சென்று விடுவேன்....!

துணையாக இருந்தேன்

துணையாக இருந்தேன்

அவளது கல்லூரி படிப்பு முடிந்தது.. அவள் வேலை தேடுவதற்காக சென்னை சென்றாள்.. ஆனால் அவளுக்கு பல மாதங்களாக வேலை கிடைக்கவில்லை... அதனால், அவளது சென்னை செலவு அனைத்தையும் நானே ஏற்றுக் கொண்டேன்... அவளை வேலை கிடைக்கும் என ஊக்கப்படுத்தினேன்....

புதிய காதல்

புதிய காதல்

ஒரு நாள் என்னை சந்திக்க வேண்டும் என்று கூறினாள்.. நானும் சென்றேன்.. அவள் ஒரு புகைப்படத்தை காட்டி, இவனை தான் நான் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்னை மறந்துவிடு என்று கூறினாள்... நான் முதலில் நம்பவில்லை... ஆனால் அதற்கு பின்னரும் அவள் என்னுடன் பேசிக் கொண்டிருந்தாள்.. ஆனால் அவளது தோழிகள் என்னிடம் அவள் உண்மையிலேயே வேறு யாரையோ காதலிக்கிறாள் என்று கூறினார்கள்... எனக்கு தூக்கி வாரிப்போட்டது..

அழகு தான் வாழ்க்கையா?

அழகு தான் வாழ்க்கையா?

அன்று முதல் இனி எத்தனை கஷ்டம் வந்தாலும் சரி, அவளுடன் பேசக்கூடாது என்று முடிவு எடுத்து விட்டேன்... அவளுடன் பேசுவதே இல்லை... இத்தனை பார்த்தும் கூட... என்னை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டாள் அவள்... எனது ஆறு வருட காதல் தோல்வியடைந்தால் எனக்கு எத்தனை வலி இருக்கும்... அழகு என்றைக்கும் கூட வருவதில்லை... நல்ல மனது தான் என்றும் உடனிருக்கும் என்பதை ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி.. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

my story: she rejected me because i am not fair

my story: she rejected me because i am not fair
Story first published: Friday, November 24, 2017, 12:49 [IST]