தாய் தனது மகளிடம் மறந்தும் கூட இத எல்லாம் பேசக்கூடாது!

Written By: Lakshmi
Subscribe to Boldsky

தாய் மற்றும் மகள் இருவருக்கும் இடையே உள்ள பந்தம் மிகவும் வழுவானது. இவர்கள் இருவரும் நண்பர்கள் போல பழகுவார்கள். எல்லா உறவுகளையும் போல தாய் மகள் உறவிலும் சில தடுமாற்றங்கள் வரலாம். எல்லா அம்மாக்களுக்கும் தன் மகளிடம் சில எதிர்பார்ப்புகள் இருக்கும். அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாவிட்டால் அதற்காக தன் மகளை வேதனைப்படுத்தக்கூடாது. உங்களது நோக்கம் தவறாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது உங்களது மகளை காயப்படுத்துவதாக அமைந்துவிடலாம்.

இதோ ஒரு தாய் தனது மகளிடம் சொல்லக்கூடாத சில விஷயங்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழகு

அழகு

எல்லா குழந்தைகளும் தாயைப் போல அழகாகவே பிறப்பதில்லை. நீங்கள் அழகாகவும், உங்களது மகள் உங்களை விட அழகில் சற்று குறைவாகவும் இருந்தால் அதை பற்றி உங்கள் மகளிடம் பேசக்கூடாது. அல்லது அதை உணர்த்தும் விதமான செயல்களிலும் ஈடுபடக்கூடாது.

குறைத்து பேசுதல்

குறைத்து பேசுதல்

உங்கள் மகள் ஏதேனும் ஒரு விஷயத்தில் குறைவாக இருந்தால் அதை பற்றி பேசுவது கூடாது. உதாரணமாக படிப்பு விஷயத்தில் குறை சொல்லக்கூடாது. எதிர்காலத்தில் அவர் எந்த துறையில் சிறந்து விளங்கபோகிறார் என்பது உங்களுக்கு தெரியாது.

தியாகம்

தியாகம்

பெண் என்பவள் அனைவருக்கும் பனிந்து செல்ல வேண்டும் மற்றும் அன்பின் சின்னமாக விளங்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் எல்லா சூழ்நிலைகளிலும் இதே போன்று செயல்படுவது கடினம். எல்லா சூழ்நிலைகளிலும் மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து தனக்கு வேண்டியதை இழக்க கூடாது. தாய் தனது மகளுக்கு இதை சொல்லித்தர கூடாது.

திருமணம்

திருமணம்

ஒவ்வொரு அம்மாவிற்கும் தன் மகளின் திருமணத்தில் அதீத ஈடுபாடு இருக்கும். ஆனால் சில பெண்கள் பல காரணங்களினால் திருமணத்திற்கு தாயாராகி இருக்கமாட்டார்கள். உங்கள் மகளுக்கு திருமணத்தில் விரும்பம் வரும் வரை அமைதியாக இருங்கள். இதை விட்டால் வேறு ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைக்காது என்று உங்கள் மகளிடம் கூறாதீர்கள்.

பொது இடங்களில் திட்டுதல்

பொது இடங்களில் திட்டுதல்

உங்கள் மகளை மற்றவர்கள் முன்போ அல்லது பொது இடங்களிலோ திட்டாதீர்கள். அது குழந்தையாக இருந்தாலும் சரி பெரிய பெண்ணாக இருந்தாலும் சரி மற்றவர்கள் முன்பு திட்டுவது அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Mother Never Say These Things to Her Daughter

Mother Never Say These Things to Her Daughter
Story first published: Tuesday, June 20, 2017, 18:00 [IST]