அவள் ஒரு சிறு தேவதை, தான் சித்திரவதைக்கு உட்பட்டதை கூட அறியாதவள் - உண்மை கதை!

Posted By:
Subscribe to Boldsky

அது ஒரு அழகிய மழைக் காலம். ஏதுமறியாத ஓர் ஐந்து வயது சிறுமி தனது உறவுக்கார சகோதரனுடன் விளையாடி கொண்டிருந்தாள். உன்னை நான் பாதுகாப்பாக உணர செய்வேன் என சத்தியம் செய்த கைகள் அன்று அவரது உயிருள் கருநிறத்தை அள்ளித்தெளித்தது.

இது வெறும் விளையாட்டு என அவன் கூறினான். முதல் முறை, இரண்டாம் முறை, மூன்றாம் முறை என எண்ணிக்கையில் அடங்காத ஒவ்வொரு முறையும், அந்த சிறுமியை வெறும் விளையாட்டு என கூறி கற்பழித்து வந்தான் அந்த கயவன். அவள் மிகவும் சிறியவள், மிகுந்த அச்சம் கொண்டிருந்தவள். அவன் செய்யும் காரியம் என்னவென்று கூட அறியாத பேதை சிறுமி.

இதை யாரிடம் கூறுவது, இந்த விளையாட்டு என்னை மிகுந்த வலியை உணர செய்கிறது என்பதை எப்படி வெளிப்படுத்துவது என அறியாமல், தனது உறவுக்கார சகோதரன் தன்னை கற்பழிப்பதை தடுக்க முடியாத நிலையில் வாழ்ந்து வந்தாள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒரு நாள்...

ஒரு நாள்...

அது நாள் வரை தான் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்ததாய் அறிந்து வந்த அவளுக்கு, அன்று தான் தனது சகோதரியும் அந்த விளையாட்டால் பாதிக்கப்பட்டு வருகிறாள் என்பதை கண்டுபிடித்தாள். அவள் அந்த வலியை குறித்து வாய் திறந்து உரைக்கும் போது, அவளது தந்தை பளார் என கன்னத்தில் ஒன்று வைத்தான்.

அவன் உன்னை அப்படி தீண்டும் போது நீ என்ன செய்துக் கொண்டிருந்தாய், ஏன் அவனை அனுமதித்தாய் என தான் அறியாத செயலுக்கு, தண்டனை பெற்றாள் சொந்த தந்தையிடம் இருந்து. வெறும் அமைதி மட்டுமே அவளிடம் இருந்தது, அவளது சகோதரிகளும் அந்த உறவுக்கார சகோதரனின் விளையாட்டால் பாதிக்கப்படுவதை தடுக்க என்ன செய்வதன்று யோசித்து வந்தாள்.

தாயிடம்...

தாயிடம்...

தனது தாயிடம் இது குறித்து பேச, அந்த ஆறு வயது சிறுமிக்கு அப்போது தைரியம் இல்லை. அதன் பிறகு தனது விளையாட்டு நேரத்தை தவிர்க்க ஆரம்பித்தாள், அந்த உறவுக்கார சகோதரனுடன் பழகுவதை தவிர்க்க துவங்கினாள்.

தனது வலிகளை எல்லாம் தன்னுள்ளே புதைத்துக் கொண்டு, வெறும் பொம்மைகளோடு, பொம்மையாக ஐக்கியமாகி போனாள் அந்த சிறு தேவதை.

மிருகம்...

மிருகம்...

அந்த மிருகம் மீண்டும் தனது விளையாட்டை துவங்கியது. இம்முறை அந்த சிறு தேவதையின் ஒரு வயது சிறுமியை பலிக்கடாவாக்க நினைத்து ஓர் அறைக்குள் புகுந்தது. தனது சகோதரியை காக்க, சற்றும் தயங்காமல் ஓடிப்போய் அந்த அறையின் கதவை பலமாக தட்ட துவங்கினாள் அந்த சிறு தேவதை. வேறு வழியின்றி அந்த மிருகம் வெளியே வந்தது.

காக்கும் கடவுள்...

காக்கும் கடவுள்...

அந்த 15 வயது மிருகத்திடம் இருந்து தனது சகோதரிகளை காக்கும் கடவுளாக மாறினாள் அந்த சிறிய தேவதை. ஒவ்வொரு இரவும் அவர்களை பாத்காப்பாக பார்த்துக் கொண்டாள். இது எனது குற்றமல்ல, குற்றவாளி அவன் என்பதை எப்படி கூறுவது என அவளுக்கு தெரியவில்லை. சில வருடங்கள் ஓடின...

17 வயதில்...

17 வயதில்...

தனது 17 வயதில், தாயிடம் இதுகுறித்து கூற தைரியம் பிறந்தது சிறகு முளைத்த வளர்ந்த தேவதைக்கு. தனக்கும், தனது சகோதரிகளுக்கும் நடந்த கொடுமைகள் அனைத்தையும் கூறினாள். அவனது முகத்திரையை கிழித்தாள்.

தனது ஆண் தோழர்கள் மற்றும் தோழிகள் கொடுத்த தைரியம் காரணமாக வாய் திறந்து பேசினாள். தனது பிரச்சனைகள் என்று மட்டுமின்றி, மற்ற பெண்களின் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்க ஆரம்பித்தது அந்த தேவதை.

கற்பழிப்பு!

கற்பழிப்பு!

கற்பழிப்பு என்பது தெருக்களில் மட்டுமல்ல, வீடுகளிலும் நடக்கிறது. இது என்ன என்று கூற தெரியாத சிறுமிகளை, குழந்தைகளை சில மிருகங்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குகின்றன. தாலி கட்டிய மனைவியை அவளது விருப்பமின்றி தீண்டுதலும் கூட கற்பழிப்பு தான்.

நிறைய பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை பற்றி அறியாதிருக்கிறார்கள். சில பெண்கள் வாய் திறக்க பயந்து அந்த அச்சத்திலேயே வாழ்ந்து வருகிறார்கள்.

இன்று!

இன்று!

இன்று அந்த தேவதைக்கு வயது 23. தனது கதையை இந்த உலகிற்கு கூற அந்த தேவதைக்கு வெட்கம் இல்லை. ஏனெனில், உண்மையில் வெட்கப்பட வேண்டிய மிருகம் சந்தோஷமாக இருக்கும் போது அந்த தேவதை ஏன் வெட்கப்பட வேண்டும். தனது சொந்த சகோதரிகளை கற்பழித்ததற்காக அந்த மிருகம் தான் வெட்கப்பட வேண்டும்.

என் குடும்பம்!

என் குடும்பம்!

அந்த மிருகத்தின் பெயரை நான் கூற விரும்பவில்லை. இது எனது குடும்பத்தையும் பாதிக்கும். அந்த ஒருவனின் தவறான அணுகுமுறையால் எனது ஒட்டுமொத்த குடும்பத்தின் பெயரும் கெட்டுப்போவதை நான் விரும்பவில்லை.

இது வெறும் கதையல்ல. ஒவ்வொரு பெண்ணுக்கும் நடக்கும் கொடுமை. இது என் வீட்டில் மட்டும் நடந்துவிடவில்லை. நம் நாட்டில், இந்த உலகில் பெரும்பாலான வீடுகளில் நடக்கும் கொடுமை இது.

சக்தி!

சக்தி!

பெண்களே! நாம் இனியும் பொறுமையாக இருந்து எந்த தீர்வையும் கண்டுவிட முடியாது. உங்கள் வாழ்க்கை, உங்கள் கையில் தான் இருக்கிறது. தைரியமாக முடிவெடுங்கள். உங்களை நீங்கள் நம்புங்கள். உங்கள் சக்தி என்ன என்பதை காண்பியுங்கள். எதற்கும் தயக்கம் கொள்ள வேண்டும், அச்சம் கொள்ள வேண்டாம்.

உங்கள் பிரச்சனைகளை எதிர்த்து சண்டையிடுங்கள். இல்லையேல் உங்கள் மகிழ்ச்சியை சீர்குலைத்துவிட்டு அந்த மிருகங்கள் பசிதீர்த்துக் கொண்டு சென்றுவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

It was Happening To Most of the Girls, Victims are Muted But Not the Convict!

It was Happening To Most of the Girls, Victims are Muted But Not the Convict!
Subscribe Newsletter