திருமண வாழ்க்கை சிறக்க, உங்க ஜாதகத்திற்கு ஏற்ப நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?

Posted By:
Subscribe to Boldsky

திருமணம் என்பது ஒரு இரண்டாம் உலகம். அது அந்தந்த காலத்தில் அவரவருக்கு நடந்துவிட்டால் அதுவே பெரிய வரம் தான். அவரவர் வாழ்க்கை சூழல் ஒரு புறம் திருமண தடைக்கு காரணமாக இருந்தாலும். மறுபுறம் ஜாதக கட்டங்களும் கூட திருமணத்திற்கு தடையாக அமைகிறது.

Is Your Marriage is Getting Delay? Then Do this Accordingly as Parikaram

இதற்கு, அவரவர் ஜாதகத்தில் என்ன தோஷம் ஏற்பட்டுள்ளது என அறிந்து, அதற்கு ஏற்ப தனி பரிகாரம் செய்து, பரிகாரத்திற்கு உகந்த கடவுளை வணங்கி வர வேண்டும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குரு, சுக்கிரன்!

குரு, சுக்கிரன்!

திருமணத்தில் தடைப்பட்டுக் கொண்டே இருக்கும் ஆண், பெண் குரு, சுக்கிரனை வணங்கி வந்தால் நல்ல கணவன், மனைவி அமையும் பலன் கிடைக்கும்.

சூரியன்!

சூரியன்!

சூரியன் உங்கள் காதகத்தில் 7-ம் இடத்தில் அமர்ந்து நீச்சம் பெற்றிருந்தால் திருமணம் தாமதம் ஆகும். நீங்கள் சிவனை வணங்கி வந்தால் இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். இதுவே இந்த தோசதிற்கு உகந்த பரிகாரம் ஆகும்.

சந்திரன்!

சந்திரன்!

உங்கள் ஜாதகத்தில் சந்திரன் வலிமை குன்றி 7-ம் இடத்தில் இருந்தாலும் திருமண தடை ஏற்படும் அல்லது திருமண வாழ்வில் குறைகள் காணப்படலாம். நீங்கள் சந்திரனையும், பௌர்ணமி நாட்களில் அம்மனையும் வணங்கு வருதல் சிறந்த பரிகாரம் ஆகும்.

செவ்வாய்!

செவ்வாய்!

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறது என்றால், செவ்வாயை வணங்குவது உடன், முருகனையும் சேர்த்து வழிப்பட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும், சஷ்டி நாட்களில் கந்த சஷ்டி கவசம் படித்து வருதலும் நல்ல பலனளிக்கும்.

புதன்!

புதன்!

புதன் ஜாதகத்தில் வலிமை குறைந்து காணப்படுவதும் தோஷம் தான். நீங்கள் புதனையும், மகா விஷ்ணுவையும் வழிப்பாடு செய்து வர வேண்டும்.

குரு!

குரு!

குரு ஏழாம் இடத்தில் இருப்பதால் தோஷம் ஏற்படும். இதற்கு குருபகவான், தட்சிணாமூர்த்தியை வழிப்பட்டு வந்தால் திருமணம் வெற்றிகரமாக நடைபெறும் என ஜோதிட சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன.

சுக்கிரன்!

சுக்கிரன்!

ஜாதகத்தில் சுக்கிரன் காரணத்தால் தோஷம் இருந்தால் சுக்கிரன், இந்திரன், மகாலக்ஷிமி போன்ற கடவுள்களை வணங்கி வர வேண்டும். இதை சரியாக செய்து வந்தால் திருமண தடை நீங்கி, நல்ல வரன் அமைந்து திருமணம் உடனே நடைபெறம்.

சனி!

சனி!

சனி ஏழாம் இடத்தில் இருந்தாலும் அல்லது ஏழுக்கு உரியவர் இடத்தில் இருந்தால், ஏழாம் வீட்டை பார்த்தபடி இருந்தாலும் திருமண தடை உண்டாகலாம். இதற்கு நீங்கள் சனிபகவானை வணங்கி வர வேண்டும். சனி பகவான் கோவில்களுக்கு சென்று வர வேண்டும்.

ராகு, கேது!

ராகு, கேது!

ராகு அல்லது கேது ஏழாம் இடத்தில் இருந்தாலும், லக்னம் 2-ம் வீடு, 8-ம் வீடு இவற்றில் இருந்தாலும் நாக தோஷம் ஏற்படுகிறது. ராகு, சர்ப்பேஸ்வரன், விநாயகர், துர்க்கையம்மன் போன்ற கடவுள்களை வணங்கி வந்தால் கவலைகள் மற்றும் திருமண தடை நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is Your Marriage is Getting Delay? Then Do this Accordingly as Parikaram

Is Your Marriage is Getting Delay? Then Do this Accordingly as Parikaaram
Please Wait while comments are loading...
Subscribe Newsletter