காதல் தோல்விக்கு மருந்தாக சென்ற என்னை அவன் பசிக்கு இரையாக்கிவிட்டான்! - My Story #91

Written By:
Subscribe to Boldsky
காதல் தோல்விக்கு மருந்தாக சென்ற என்னை அவன் பசிக்கு இரையாக்கிவிட்டான்!- வீடியோ

நான் அப்போது பத்தாம் வகுப்பு தான் முடித்திருந்தேன்... நான் அனைவரிடமும் சகஜமாக பேசக்கூடியவள்.. என் உலத்திற்கு நானே ராணி...! எனக்கு தன்னம்பிக்கை என்பது அதிகம். நாங்கள் ஒரு அப்பர்ட்மெண்ட்டில் வசித்து வந்தோம்.. நான் நன்றாக பேசுவேன்.. எனக்கு துணிச்சல் மிக அதிகம்...! என் அக்கம்பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் எனக்கு நல்ல நட்பு இருந்தது...!

அப்போது கோடைவிடுமுறை என்பதால் என் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களது தங்கை அவர்களது வீட்டிற்கு வந்திருந்தாள்.. விடுமுறைக்காக தன் அக்காவின் வீட்டிற்கு வந்திருந்த சோனாவும் நானும் சந்தித்திக் கொண்டோம்.. பல கதைகளை பேசி எங்களது பொழுதுகளை ஒன்றாக கழித்தோம்.

I Was Just Helping Him Hold His Broken Heart

அப்போது தான் அவள் தனது பாய் பிரண்டை பற்றி சொன்னாள்.. அவனது பெயர் அனிஷ். அவனை பற்றி நிறைய விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டாள்.. அதுமட்டுமில்லாமல் எனக்கு அவனை அறிமுகம் செய்தும் வைத்தாள் அவள்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நண்பர்கள்

நண்பர்கள்

அந்த அறிமுகத்திற்கு பின்னர், நாங்கள் மூவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தோம்.. சோனா விடுமுறை எல்லாம் முடிந்து தன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டாள். எப்போது எல்லாம் சோனாவிற்கும் அனிஷ்க்கும் வாக்குவாதங்கள் வருகிறதோ அப்போது எல்லாம் நான் தான் இருவரையும் சமாதானப்படுத்தி வைத்துக்கொண்டிருந்தேன்...!

மூளைக்கோளாறு

மூளைக்கோளாறு

அனிஷ் தன் காதலில் மிகவும் உண்மையாகவும் உறுதியாகவும் இருந்தான்.. எனக்கு சோனா அனிஷ்க்கு சற்றும் பொருத்தம் இல்லாதவள் என்று தோன்றியது. சோனா அனிஷை அந்த அளவுக்கு உறுதியாக காதலிக்கவில்லை.. அவர்களது காதல் முறிந்தது..! அந்த சமயத்தில் தான் அனிஷ்க்கு ஒரு உடல்நலக் கோளாறு உண்டானது.. அவனுக்கு மூளையில் இரத்தம் கட்டியிருந்தது.. அதற்காக அவனுக்கு அறுவை சிகிச்சை நடந்தது.. அவனது அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று நான் இறைவனை வேண்டி கொண்டேன்..

விரதம் இருந்தேன்

விரதம் இருந்தேன்

தொடந்து 10 நாட்கள் அவனுக்காக நான் விரதம் இருந்தேன்.. அவனுக்கு உடல்நலம் சரி ஆனால், ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விரதம் இருக்கிறேன் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்.. என் வேண்டுதலின் படி அவனுக்கு உடல்நலம் சரியானது...! என் வேண்டுதலை பற்றி எல்லாம் நண்பர்கள் மூலமாக அவன் தெரிந்து கொண்டான்.. என்னை மிகவும் அன்புடன் பார்த்தான்...! என் மேல் உனக்கு இத்தனை பாசமா என்று கேட்டான்...!

உறவில் இணைந்தோம்

உறவில் இணைந்தோம்

என் மீதும் அவன் அன்பு காட்ட தொடக்கினான்.. நாங்கள் இருவரும் நமக்குள் இருக்கும் இந்த அன்பானது என்றுமே நட்பு ரீதியான ஒரு உறவாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்று நவம்பர் 24 ஆம் தேதி 2014 ஆம் ஆண்டு உறுதி செய்து கொண்டோம்.. ஆனால் கடவுளின் கணக்கு அது இல்லை.. நாங்கள் இருவரும் உறவில் இணைந்தோம்...!

நன்றாக சென்ற காதல்!

நன்றாக சென்ற காதல்!

டிசம்பர் 6- ஆம் தேதி அன்று நான் வியந்து போகும் அளவிற்கு என்னிடம் அவனது காதலை தெரிவித்தான்.. அவனது காதலை புறக்கணிக்க என்னால் முடியவில்லை...! அவனது முழு குடும்பத்திற்கும் என்னை பற்றி தெரியும். அனைத்து விஷயங்களுமே எந்தவிதமான பிரச்சனைகளும் இன்றி சென்று கொண்டிருந்தது...! ஆனால் திடிரென்று அவனது அப்பாவிற்கு மட்டும் எங்களது தொலைதூர காதல் ஒரு பிரச்சனையாக தெரிந்தது...!

கஷ்ட காலம்

கஷ்ட காலம்

ஜீன் 2 ஆம் தேதி அவன் என்னை சந்திக்க எங்களது நகரத்திற்கு வந்தான்.. அவனுடைய அண்ணன் தம்பிகளும் அவனுடன் இருந்ததால் அவனுடன் என்னால் சரியாக பேச முடியவில்லை... அந்த சமயம் தான் எங்களது குடும்பத்திற்கு மிக கடுமையான நாட்கள்.. என் பாட்டி கீழே விழுந்து கோமாவிற்கு சென்றுவிட்டார். என் அப்பாவிற்கு விபத்து ஏற்பட்டு அவருக்கு அப்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உண்டானது...! எனக்கு என் பாட்டியை இழந்துவிடுவோமோ என்ற பயம் அதிகமாக இருந்தது..

தவறான மெசேஜ்

தவறான மெசேஜ்

அன்றைய இரவு எனக்கு அனிஷ் உடைய போன் நம்பரில் இருந்து அவனது அண்ணன் அனுப்புவதாக பல கேவளமான மெசேஜ்கள் வந்து குவிந்தது...! என் பாட்டி மற்றும் அப்பாவை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் வந்த அந்த மெசேஜ்கள் எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.. இந்த மெசேஜ்கள் குறித்து நான் என் நண்பனிடம் கூறினேன்.. அவனும் அனிஷ்க்கு பல முறை தொடர்ந்து போன் செய்தான்...! ஆனால் முயற்சிகள் எல்லாம் வீண் ஆனது... அனிஷ் போனை எடுத்து பேசவில்லை...!

துயரத்தை அதிகரித்தான்

துயரத்தை அதிகரித்தான்

அடுத்த நாள் என் பாட்டி இறந்துவிட்டார்... அவன் என்னிடம் வழக்கம் போல பல மன்னிப்புகளை கேட்டான்.. அந்த சோகமான சூழ்நிலையில் அதை எல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. என் கஷ்ட காலங்களில் அவன் எனக்கு ஆறுதலாக இருக்கவில்லை.. மாறாக எனக்கு கூடுதல் வலியை தான் கொடுத்தான்..! இதை எல்லாம் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை...!

தற்காலிக பிரிவு

தற்காலிக பிரிவு

அக்டோபர் மாதத்தில் ஒருநாள் அவன் எனக்கு ஒரு இரண்டு மாதங்கள் தனியாக இருக்க வேண்டும். என்னுடன் இனிமேல் பேசாதே என்று கூறினான்..! சரி என்று கூறிவிட்டு நான் அவனுக்காக காத்திருந்தேன்.. ஒரு வருடம் நானும் அவனும் ஒன்றாக எங்களது காதல் வாழ்க்கையை கழித்துவிட்டோம்.. நான் அவனது போன் மற்றும் மெசேஜ்க்காக காத்திருந்தேன்.. ஆனால் அவன் என்னுடன் பேசவில்லை...!

என்னை கண்டுகொள்ளவில்லை

என்னை கண்டுகொள்ளவில்லை

அவன் மீண்டும் டிசம்பர் மாதம் என்னிடம் பேசினான்.. எனக்கு அவன் தேவையில்லை என்று தோன்றியது.. அவனிடம் காதலை முறித்துக் கொள்ளலாம் என்று கூறினேன்... அவன் என்னை ஒரிரு நாட்கள் சமாதானப்படுத்தினான் அவ்வளவு தான்...! அவன் எனது எண்ணை பிளாக் செய்தான்.. பிறகு ஜூலை மாதம் எனது நம்பரை அன்பிளாக் செய்தான்....!

கனவுக்காதல்

கனவுக்காதல்

அதனால் நான் அவனுக்கு கிறுக்குத்தனமாக மெசேஜ் செய்தேன்.. அதனால் அவன் மீண்டும் என்னுடன் பேச தொடங்கினான். நாங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து விட்டோம்.. அந்த காதல் உறவு ஒரு கனவு உலக காதலை போன்று மிகச்சிறப்பாக இருந்தது.. அவனும் நானும் இரவு பகலாக போனில் பேசிக்கொண்டோம்.. அவன் எனக்காக ஒரு பாடலையும் பாடினான்...! அவனது வாழ்க்கையின் இலட்சியமே என்னை திருமணம் செய்து கொள்வது தான் என்று கூறினான்.. அவனை நான் நம்பினேன்..

சுயமரியாதை பரிபோனது

சுயமரியாதை பரிபோனது

அவன் என்னிடம் பொசசீவ்வாக இருந்தான்.. எனக்கு பிடித்த நடிகர்களை பற்றி அவனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவன் என்னிடம் கோபப்பட்டு என்னுடன் பேசாமல் இருந்தான்.. நாங்கள் இருவரும் பல நாட்கள் பேசிக் கொள்ளவிலை.. அவனுக்காக நான் நிறைய செய்தேன்...! அதனால் என்னை என் அண்ணாவும் அம்மாவும் திட்டினார்கள்.. பல முறை அவனது குடும்பத்தினரும் என்னை எங்களது வீட்டிற்கு வந்து திட்டிவிட்டு சென்றார்கள்...!

நான் சரி இல்லை

நான் சரி இல்லை

நான் அனைவராலும் மிக கேவளமாக நடத்தப்பட்டேன்... எனக்கு எதிலும் பொறுப்பு இல்லை என்று திட்டினார்கள்.. ஆனாலும் நான் எதையும் பொருட்படுத்தாமல் அவனை காதலித்தேன்.. எனது தன்னம்பிக்கை சுத்தமாக குறைந்தது... நான் சரியாக இல்லை என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது...!

அதிர்ச்சி!!!

அதிர்ச்சி!!!

நான்கு மாதங்களுக்கு பிறகு நான் இதை பற்றி எல்லாம் அவனது நண்பனிடம் கூறி ஒரு நியாயம் கேட்கலாம் என்று முடிவு செய்தேன்..! அடுத்த நாள் எனக்கு அனிஷ் உடைய போனில் இருந்து ஒரு மெசேஜ் வந்தது.. நான் காதலித்த பெண்ணையே நான் திருமணம் செய்து கொண்டேன்.. அதனால் இனிமேல் நீ என்னுடைய வாழ்க்கையில் குறுக்கிடாதே என்று...! எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.. வெறும் 19 வயதில் எப்படி ஒரு பையனால் திருமணம் செய்து கொள்ளமுடியும்? அதுமட்டுமின்றி அவன் என்னை காதலித்துக் கொண்டிருக்கிறான் என்று தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்...!

சாபம்!

சாபம்!

அவனுடைய குடும்பத்தில் இருக்கும் எல்லோருடைய சாபத்தையும் நான் வாங்கிக் கொண்டேன்..! அவன் தான் என்னை மற்றவர்கள் சபிக்காமல் பார்த்துக் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவனால் தான் நான் எல்லோரிடமும் திட்டுக்களை வாங்கினேன்.. இருந்தாலும் அவன் என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை... எனக்கு அவனை எந்த விஷயம் இவ்வளவு சீக்கிரமாக மாற்றியிருக்கும் என்று ஒரே ஆச்சரியம்..! எனக்கு விடை தெரியாத கேள்விகள் நிறைய இருக்கின்றன... என்னுடன் ஆறுதலாக இருக்க தற்போது எந்த ஒரு நண்பனும் இல்லை..!

எனக்கு இது தேவையா?

எனக்கு இது தேவையா?

நான் அவனுடைய காதல் காயத்திற்கு மருந்தாக தான் சென்றேன்.. ஆனால் இன்று என் மனதில் இத்தனை வலிகள், காயங்கள்...! என் நிம்மதியே பறிபோனது..! இனி என் வாழ்க்கையில் அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று தெரியாமல் நான் குழம்பி போய் நிற்கிறேன்...! எந்த ஒரு ஆறுதலும் இன்றி...!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

I Was Just Helping Him Hold His Broken Heart

I Was Just Helping Him Hold His Broken Heart
Story first published: Monday, December 4, 2017, 14:00 [IST]