For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  என் கணவரின் ஆசைகளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை! பாலியல் தொழிலாளி போல தான் வாழ்கிறேன்! - My Story #88

  By Lakshmi
  |
  என் கணவரின் ஆசைகளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை! பாலியல் தொழிலாளி போல தான் வாழ்கிறேன்!- வீடியோ

  கஷ்டங்கள் எல்லாம் ஒரு காலக்கட்டத்தில் மறைந்து சந்தோஷம் பிறக்கும் என்று கூறுவார்கள்... ஆனால் என் வாழ்க்கையில் அப்படி எல்லாம் இல்லை.. என் கஷ்டங்களுக்கு எல்லாம் காரணம் இந்த காதலும், திருமணமும் தான்...! எனக்கு பள்ளி பருவத்திலேயே ஒரு காதல் இருந்தது..! காதலர்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்க கூடிய காதலாக தான் எங்களது காதல் இருந்தது..! அந்த இளம் பருவத்திலேயே காதலில் இணைந்த நான் சரியாக படிக்கவில்லை...!

  கல்லூரிக்கு என் பெற்றோர்கள் நிறைய பணம் செலவழித்து என்னை இன்ஜினியரிங் படிக்க வைத்தார்கள். ஆனால் நான் அவர்களது கஷ்டங்களை எல்லாம் புரிந்து கொண்டு நன்றாக படிக்கவில்லை.. ஏதோ ஒரு அளவுக்கு அரியர்கள் இல்லாமல் வெளியே வந்தது தான் மிச்சம்...! மற்றபடி காதல்... காதல்.. என்று தான் சுற்றிக் கொண்டிருந்தேன்...!

  ஆனால் அந்த காதலும் எனக்கு நிலைக்கவில்லை.. என்னை விட அளகான பெண் கிடைத்ததால் எனது 8 வருட காதலை தூக்கி எறிந்து விட்டு சென்று விட்டான் அவன்...! காலம் முழுவது என்னுடன் வருவான் என்று நினைத்து தான் அவனிடம் என்னை ஒப்படைத்தேன்..! ஆனால் அவனோ என்னை பயன்படுத்தி விட்டு, பழையது ஆனால் தூக்கி எறிந்து விடும் ஒரு செருப்பை போல தான் உபயோகப்படுத்தி இருக்கிறான் என்பது எனக்கு காலங்கள் கடந்த பின்பு தான் தெரிந்தது...!

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  உதறித்தள்ளிய காதலன்

  உதறித்தள்ளிய காதலன்

  நானும் அவனிடம் அழுகாத அழுகை இல்லை... கெஞ்சாத கெஞ்சலும் இல்லை.. அவனது காலில் விழுந்து நடு ரோட்டில் கதறினேன்.. என்னை விட்டு விட்டு போய்விடாதேடா என்று... துளியும் என்னை மதிக்கவில்லை அவன்...! மனதுடைந்து உக்கார்ந்து விட்டேன்..! என் தோழிகள் தான் எனக்கு ஆறுதலாக இருந்தார்கள்..! என் குடும்பம் கொஞ்சம் பெரிய குடும்பம்..! என் அப்பாவும் அம்மாவும் ஒரளவுக்கு வசதியானவர்களாக இருந்தாலும் கூட எங்களது சொந்தக்காரர்கள் நல்ல வசதியானவர்கள்...! அவர்களுடைய நிழலில் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..!

  திருமணம்

  திருமணம்

  என் காதல் தோல்வி எங்களது சொந்தங்கள் அனைவருக்கு தெரியும். சூட்டோடு சூடாக எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்..! என்னால் இது எல்லாம் வேண்டாம் என்றும் சொல்ல முடியவில்லை..! இனி என் காதலன் என்னை தேடி திரும்பி வரவே மாட்டான் என்பது உறுதியாகிவிட்டது..! இதற்கு மேல் நம் கையில் என்ன இருக்கிறது.. பெற்றோர்களின் சந்தோஷத்திற்காக திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்து திருமணத்திற்கு சம்மதித்து விட்டேன்..!

  மாப்பிள்ளை

  மாப்பிள்ளை

  எனக்கு பார்த்திருந்த மாப்பிள்ளை மும்பையில் ஒரு நல்ல வேலையில் இருந்தார். அவரது மாத வருமானமே லட்சங்களில் இருந்தது..! பார்க்கவும் என் முன்னால் காதலனை விட அழகாக தான் இருந்தார். ஆனால் எனக்கு அந்த அளவுக்கு அவரை திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லாமல் தான் இருந்தது...!

  போன் தொடர்பு

  போன் தொடர்பு

  நிச்சயதார்த்திற்கு பிறகு நாங்கள் இருவரும் போனில் பேசிக் கொள்ளும் சந்தர்ப்பம் உண்டானது. மிக நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொள்வோம்..! என் மீது மிகுந்த அக்கறை காட்டினார். எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்பது பற்றி எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார்...! எனக்கு அந்த அக்கறை எல்லாம் மிகவும் பிடித்திருந்தது என்பதை விட அவரது அக்கறை எனது முன்னால் காதலனினால் உண்டான வலியை போக்குவதாக இருந்தது...!

  பொறுப்பான பெண்

  பொறுப்பான பெண்

  எனது வருங்கால கணவராக போகும் இவரை முழு மனதோடு காதலிக்க வேண்டும் என்று தோன்றியது. அவருக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்று தெரிந்து நடக்க வேண்டும் என்றும், அவர் கோபப்பட்டு நாழு வார்த்தை திட்டினாலும் கூட நாம் கோபப்படாமல் ஒரு பொறுப்பான குடும்ப பெண்ணாக நடந்து கொள்ள வேண்டும் என்று என் மனதை தயார்ப்படுத்திக் கொண்டேன்...!

  திருமண கொண்டாட்டம்

  திருமண கொண்டாட்டம்

  எங்களுக்குள் ஒரு நல்ல காதல் உறவு உருவானது... எங்களது திருமணம் பல கொண்டாட்டங்களுடன் வெகு விமர்சையாக நடந்தது.. என் திருமணம் அனைவருக்கும் ஒரு ஆறுதலாக இருந்தது. என் முந்தைய காதலின் கசப்பான நினைவுகளை எல்லாம் ஓரம் கட்டி விட்டு எனது புதிய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் என்று பல கனவுகளோடு நான் என் கணவருடன் புறப்பட்டேன்..!

  ஆசைக்காதல்

  ஆசைக்காதல்

  மும்பை நகரம் பரப்பாக என்னை வரவேற்றது..! நல்ல பெரிய வீடு..! அந்த தனி வீட்டில் நானும் அவரும் மட்டும் தான் இருந்தோம்...! பலப்பல சேர்த்து வைத்த ஆசைகள் நிறைவேறின.. எனக்கு பிடித்தவற்றை எல்லாம் கேட்டுக் கொண்ட என் கணவர் வீட்டை எனக்கு பிடித்தவறே அலங்கரித்திருந்தார்... பால்கனியில் நிறைய ரோஜா செடிகள்... எனக்கு அவற்றை எல்லாம் அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது...! அது மட்டுமல்ல... என் ஆசைப்படி அவர் ஒரு ஊஞ்சலையும் பால்கனியில் மாட்டியிருந்தார்...! எனக்கு இவை எல்லாம் ஒரு பெரிய சர்ப்பிரைஸ் ஆக இருந்தன..!

  ஐ லவ் யூ சோ மச் மாமா

  ஐ லவ் யூ சோ மச் மாமா

  எனக்கு அவர் மீது காதல் பொங்கியது... ஓடிச் சென்று திரும்பி இருந்த அவரை கட்டிப்பிடித்துக் கொண்டேன்...! அவரும் திரும்பி என்னை அணைத்துக் கொண்டு என்ன ஆச்சுடா செல்லம் என்றார்... ஐ லவ் யூ சோ மச் மாமா என்றேன்....! அவர் கொஞ்சமாக சிரித்துக் கொண்டு மீ டூ என்று கூறி என்னை அணைத்துக் கொண்டார்...!

  தினசரி வாழ்க்கை

  தினசரி வாழ்க்கை

  அதன் பிறகு இருவரும் சேர்ந்து வீட்டில் எல்லாம் பொருட்களையும் அடுக்கி வைத்தோம்.. அந்த வீட்டில் எனக்கு பிடித்து போலவே அனைத்து பொருட்களும் இருந்தன...! நான் அவரை ஆழமாக காதலித்தேன்...! தினமும் அவருக்கு சமைத்து கொடுத்து விட்டு வீட்டு வேலைகளை பார்ப்பதும், அவர் வேலைக்கு சென்றவுடன் டிவி பார்ப்பதுமே தான் என் வேலையாக இருந்தது...! அவர் வேலையை விட்டு வந்தவுடன் என்னை வெளியில் அழைத்துச் செல்வார்.. பல நாட்கள் வெளியிலேயே தான் சாப்பிடுவோம்...! வார இறுதி நாட்களில் என்னை இயற்கை எளில் சூழந்த இடங்களுக்கு அழைத்து செல்வார்...!

  வெளியில் சொல்லாத சோகம்

  வெளியில் சொல்லாத சோகம்

  இப்படியே மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த எங்களது வாழ்க்கையில் திடிரென்று ஒரு திருப்பம் வந்தது...! என்னை அவர் படுக்கை அறையில் அதிகமாக வற்புறுத்த தொடங்கினார்... இது சாதாரணம் தான் என்று தான் நான் பல நாட்கள் நினைத்துக் கொண்டேன்... ஆனால் என்னை பாலியல் ரீதியாக அவர் அதிகமாக கொடுமைப்படுத்தினார். என்னால் தாங்க முடியாத வலிகளை அனுபவித்தேன்...! என்னால் இதை எல்லாம் வெளியில் யாரிடமும் சொல்லக் கூட முடியவில்லை...! என்னை இரவில் எல்லாம் தூங்க விடாமல் சித்திரவதை செய்தார் அவர்...!

  முன்னால் காதலின் நினைவு

  முன்னால் காதலின் நினைவு

  எனக்கு இந்த சித்திரவதைகளை எல்லாம் அனுபவிக்கும் போது, என் முன்னால் காதலனின் நியாபகம் வந்தது...! அவன் மட்டும் என்னை ஏமாற்றாமல் இருந்திருந்தால், என் வாழ்க்கை எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும் என்று தோன்றியது...! இரவு பகலாக அவனது நினைவுகள் என்னை கொன்றது...! என்னால் அவனை மறக்கவே முடியவில்லை... என் கணவரிடம் என் முன்னால் காதலை பற்றி சொல்லியே ஆக வேண்டும் என்று தோன்றியது.. அதனால் நானும் என்னுடைய முன்னால் காதலை பற்றி ஒரு நாள் கூறினேன்..!

  ஆறுதலான கணவர்

  ஆறுதலான கணவர்

  என் கணவரும் எனக்கு ஆறுதலாக இருக்க போவது போலவே என் கதைகளை எல்லாம் துருவி துருவி கேட்டு தெரிந்து கொண்டார்...! அதன் பின்னரான வாழ்க்கை எனக்கு மிகவும் கொடுமையாக இருந்தது..! தினமும் இரவு நேரங்களில் நீ அவனோடு மட்டும் அப்படி எல்லாம் இருந்தாய்.. என்னோடு ஏன் அப்படி எல்லாம் நடந்து கொள்ள மறுப்பு தெரிவிக்கிறாய் என்று என்னை கொடுமைப்படுத்த ஆரம்பித்துவிட்டார்....!

  பிறந்த நாள்

  பிறந்த நாள்

  எனக்கு அப்போது பிறந்த நாள் வந்தது.. என்னிடம் அன்று மிகவும் பாசமாக நடந்து கொண்டார்.. என்னை பியூட்டி பார்லர் எல்லாம் அழைத்து சென்றார்.. நானும் என்னை மிகவும் அழகாக அலங்கரித்துக் கொண்டேன்...! எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக என் அம்மா, அண்ணன், அப்பா அனைவரையும் எங்களது வீட்டிற்கு வரச்சொல்லி இருந்தார்... எனக்கு பரிசாக நிறைய நகைகளையும், புடவைகளையும் வாங்கி கொடுத்தார்....! எனக்கு அது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது...!

  சித்திரவாதை

  சித்திரவாதை

  எனது பிறந்தநாள் அன்று பல வெளியிடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்து களைப்படைந்து விட்டோம்...! நைட் போய் நல்லா தூங்கனும் என்று நினைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தேன்.. ஆனால் நான் நினைத்த படி நடக்கவில்லை... அன்றைக்கும் என்னை படுக்கை அறையில் சித்திரவதை செய்தார்...! என்னை அடித்து, உதைத்தார்... நான் எவ்வளவோ அழுகையை அடக்கிப் பார்த்தேன்... ஆனாலும் என்னால் முடியவில்லை..! என் அழுகுரல் கேட்டு என் அம்மாவும் அண்ணாவும் ஓடி வந்து விட்டனர்..! நான் பல்லியை பார்த்து கத்தினேன் என்று சமாளித்து விட்டேன்.. இருந்தாலும் அவர்கள் நம்பாதது போல சென்று விட்டார்கள்....!

  ஓடிப்போனேன்

  ஓடிப்போனேன்

  என் குடும்பத்தினர் பார்த்து பத்திரமாக, மாப்பிள்ளையை அனுசரித்து நடந்து கொள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்கள்...! அதன் பிறகு என் கணவரின் அட்டகாசம் தொடந்தது...! என் உடல் முழுவதும் காயங்கள் ஆனது...! நகங்களினால் உண்டான கீறல் காயங்களாக காட்சியளித்தது எனது உடல்...! என்னால் இந்த கொடுமைகளை எல்லாம் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. ஒரு நாள் நான் என்னை தேட வேண்டாம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு புனேவிற்கு சென்று ஒரு விடுதில் 10 நாட்கள் தங்கிவிட்டேன்...

  அழுது துடித்தேன்

  அழுது துடித்தேன்

  என் கணவர் அந்த சமயத்தில் என் வீட்டிற்கும் அவரது வீட்டிற்கும் நான் என் காதலனுடன் ஓடி விட்டதாக தகவல் கொடுத்துவிட்டார்.. நான் பத்து நாட்கள் கழித்து திரும்பி வந்தபோது எங்களது குடும்பம் முழுவதும் என் மீது கோபமாக இருந்தது...! என்னை போட்டு அடித்தார்கள்...! என்னால் உடல் முழுவதும் இருந்த காயங்களுடன் வலியை தாங்கவே முடியவில்லை...! அழுது துடித்தேன்..! பின் என் கணவருடன் என்னை சேர்த்து வைத்து விட்டு சென்றுவிட்டார்கள்...!

  கர்ப்பமானேன்!

  கர்ப்பமானேன்!

  இந்த சம்பங்களுக்கு பிறகு ஒரு ஆறு மாதங்கள் என் கணவர் என்னை சித்திரவதை செய்யாமல் இருந்தார்...! நான் அந்த சமயத்தில் கருவுற்றேன்...! நான் இப்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன்.. மீண்டும் என் கணவருடைய சித்திரவதைகள் தொடங்கிவிட்டன.. ஒவ்வொரு இரவும் எனக்கு இரணமாகவே கழிகிறது...! என் பிரச்சனையை யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை..! அதனால் தான் எழுதிவிட்டேன்...!

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  I can not satisfy my husband he always torturing me

  I can not satisfy my husband he always torturing me
  Story first published: Thursday, November 30, 2017, 14:03 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more