உங்கள் முன்னால் காதலியால் உங்கள் மனைவிக்கு இந்த பிரச்சனை வரும் என தெரியுமா?

Posted By: Lakshmi
Subscribe to Boldsky

உங்களது முன்னால் காதலி / காதலனை பார்த்து உங்களது துணை பொறாமைப்பட்டால் அது கடும் பொறாமை ஆகும். அது என்ன கடும் பொறாமை என கேட்கிறீர்களா? பொறாமையிலேயே இது தான் கடுமையான பொறாமை அதனால் தான்.

என்ன புரியவில்லையா? நீங்கள் காதலிக்கும் பருவத்தில், இருப்பதிலேயே அழகான பெண்ணாக பார்த்து காதலித்திருப்பீர்கள். உங்கள் துணை அழகாகவே இருந்தாலும் உங்களது முன்னால் காதலன் / காதலியின் புகைப்படத்தை பார்த்து அவர் அழகாக இருந்துவிட்டால் கடுமையாக பொறாமைப்பட ஆரம்பித்துவிடுவார்கள்.

சரி தெரியாத்தனமாக உங்களது முன்னால் லவ்வரின் போட்டோவை காட்டிவிட்டீர்கள். கடும் பொறாமையையும் உண்டாக்கிவிட்டீர்கள். இப்போது இந்த சூழ்நிலையை சமாளிப்பது என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. உண்மையான காரணம்

1. உண்மையான காரணம்

உங்கள் துணை அவ்வாறு பொறாமைப்பட்டால் அதற்கு உண்மையான காரணம், பாதுகாப்பின்மை தான். எங்கே மீண்டும் உங்கள் முன்னால் லவ்வர் உங்களது வாழ்வில் மீண்டும் வந்துவிடுவாரோ என்ற பயமாக தான் இருக்கும்.

உங்களது துணைக்கு உங்களை விட அழகான லவ்வர் இருந்திருந்தால் உங்களுக்கும் இதே மாதிரியான உணர்வு தான் ஏற்பட்டிருக்கும்.

2. பயத்தை போக்குங்கள்

2. பயத்தை போக்குங்கள்

உங்கள் துணைக்கு வயிற்று எரிச்சலோடு உங்களுடன் உறவில் இருந்தால், அது நல்லா இருக்குமா? கண்டிப்பாக அது சிறப்பான உறவாக இருக்காது. எனவே அவரது பொறாமைக்கு என்ன காரணம் என கண்டறிந்து அதை போக்க என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்தியுங்கள்.

3. என்ன செய்யலாம்?

3. என்ன செய்யலாம்?

நீங்கள் உங்களது துணையிடம் இருந்து ஏதேனும் ஒரு விஷயத்தை மறைக்க, மறைக்கத்தான் அவருக்கு பொறாமை அதிகரிக்கும். எனவே அனைத்து விஷயத்திலும் வெளிப்படையாக இருங்கள். அவரது பொறாமையால் பாதிக்கப்போவது உங்களது உறவும், நீங்களும் தான்.

எனவே அவரது பாதுக்காப்பின்மையின் காரணத்தை கேளுங்கள். அதை போக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் கேட்டு அதை அவருக்கு செய்யுங்கள்.

4. ஆன் லைன் செயல்பாடுகள்

4. ஆன் லைன் செயல்பாடுகள்

நீங்கள் பேஸ்புக்கில் உங்களது முன்னால் லவ்வரை பிரண்டாக வைத்திருப்பது, அவரது புகைப்படங்களுக்கு லைக் மற்றும் கமெண்ட் செய்வது போன்றவை உங்களது துணையின் சந்தேகத்தை அதிகப்படுத்துவது மட்டுமில்லாமல், உறுதியும் செய்துவிடும். எனவே உங்களது சமூக வலைதளங்களை உங்களது துணையிடம் இருந்து மறைக்க வேண்டாம்.

5. தொடர்பை முறிக்க வேண்டும்

5. தொடர்பை முறிக்க வேண்டும்

உங்களது முன்னால் லவ்வரின் தொடர்பை முதலில் முறிக்க வேண்டியது அவசியம். அவருடன் தொடர்பில் இருப்பது உங்களது தற்போதைய உறவுக்கு சரியானது அல்ல. எனவே உங்களது முன்னால் லவ்வரின் தொடர்பை முற்றிலும் முறித்துவிடுங்கள்.

6. இதை செய்யுங்கள்

6. இதை செய்யுங்கள்

நீங்கள் உங்கள் துணையிடன் பாதுக்காப்பின்மையை உணர்ந்தால், உங்களது துணையிடம், நான் இது போன்று பாதுகாப்பின்மையை உணருகிறேன். அதை போக்க நீ செய்ய வேண்டும் என்று வெளிப்படையாக கேட்டுவிடுங்கள்.

7. கடும் பொறாமை போகவில்லையா?

7. கடும் பொறாமை போகவில்லையா?

நீங்கள் உங்களது முன்னால் லவ்வரின் உறவை முற்றிலும் முறித்துக்கொண்ட போதும் கூட உங்களது துணையின் பொறாமை போகவில்லை என்றால், அவர் மீது உங்களுக்கு வெறுப்பு வருவது இயல்பு தான். இருப்பினும் நீங்கள் அவர் மீது வெறுப்படையாமல் அவரை ஒரு சிறந்த மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங் அழைத்து செல்லுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

how to stop retroactive jealousy

Here are the some steps to stop retroactive jealousy
Story first published: Wednesday, July 12, 2017, 18:17 [IST]