ராஜ்ஜியா பேகம், ஒரு செக்ஸ் தொழிலாளியின் சோகமாக வாழ்வும், சுகமான காதலும்!

Posted By:
Subscribe to Boldsky

இன்று காதல் என்ற பேரில் கொஞ்சி குலாவி, விடிந்ததும் முடிந்துவிடும் காதல் கதைகள் மத்தியில், வலி நிறைந்த வாழ்க்கையின் நடுவே நல்வழி தேடி இணைந்த இந்த காதல் ஜோடி உண்மை காதலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

ராஜ்ஜியா பேகம் ஒரு பாலியல் தொழிலாளி, அவர் அப்பாஸ் மியான் எனும் மாற்று திறனாளியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓர் நல்ல நாள்...

ஓர் நல்ல நாள்...

நம் வாழ்வில் எப்போது, யாரால் திருப்புமுனை ஏற்படும், யார் நம்முடன் வாழ்நாள் துணையாக இணைய போகிறார் என்பதை எல்லாராலும் ஊர்ஜிதமாக சொல்லிவிட முடியாது.

ராஜ்ஜியா பேகம் வாழ்வில் அது ஒரு நல்ல நாள்... அன்று தான் அவர் அப்பாஸ் மியனை முதன் முதலில் சந்தித்தார். அன்று அப்பாஸ் மியான் ராஜ்ஜியா பேகத்திற்கு 50 டக்காஸ் (வங்காளதேச பணம்) கொடுத்தார்.

இதில் என்ன ஆச்சரியம்?

இதில் என்ன ஆச்சரியம்?

அதற்கு முன் வரை ராஜ்ஜியா பேகம் பெற்ற பணம் எல்லாம் பாலியல் பணம் மூலமாக தான். முதல் முறையாக ஒருவர் ராஜ்ஜியாவிற்கு எந்த ஒரு தீண்டலும் இல்லாமல் பணம் கொடுத்து உதவினார். அவரது சூழலை புரிந்துக் கொண்டு.

"என் கண்களில் கண்ணீர் வற்றாத நதியாய் பெருக்கெடுத்த தருணம் அது. என் வாழ்வில் முதன் முறையாக ஒரு உண்மையான காதலை கண்டேன். முதன் முறையாக நான் காதலை உணர்ந்ததும் அந்த தருணத்தில் தான்"

வற்புறுத்தல் காரணமாக...

வற்புறுத்தல் காரணமாக...

இளம் வயதிலேயே ராஜ்ஜியா பேகம் வற்புறுத்தலின் பேரில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டார். அந்த இளம் வயதிலேயே அவர் ஒரு அழகிய மகளையும் பெற்றெடுத்தார்.

"நான் ஒவ்வொரு முறை இரவு வெளியே செல்லும் போதும், என் மகள் எங்கே போகிறாய் என ஒரு கேள்வி கேட்பாள். அதற்கான பதிலை கூற முடியாமல் நான் பலமுறை பரிதவித்து போயுள்ளேன். ஓர் அணைப்பை மட்டுமே என் மகளுக்கு பதிலாய் கொடுத்து நகர்ந்துவிடுவேன்..."

என் வயது என்ன?

என் வயது என்ன?

தனது வயது என்ன என்று ராஜ்ஜியாவிற்கே தெரியாது என்கிறார்.

"எனக்கான பிடியில் நானே தினமும் இரவில் சென்று சிக்கிக் கொள்வேன், இது தான் என் வாழ்க்கை..."

அப்பாஸை கண்ட பிறகு தான் அந்த வாழ்வில் இருந்து வெளியே வந்தார் ராஜ்ஜியா பேகம்.

விருப்பம் அல்ல...

விருப்பம் அல்ல...

எந்த ஒரு பெண்ணும் பாலியல் தொழிலை விரும்பி செய்வதில்லை. தங்கள் வாழ்வில் நேர்ந்த எதிர்பாராத ஒரு திருப்பமும், கயவர்கள் கையில் பிடிப்பட்ட சூழலும் தான் அவர்களை இந்த பூட்டப்பட்ட சிறைசாலைக்குள் தள்ளிவிடுகிறது.

வலிகள் நிறைந்த வாழ்க்கை...

வலிகள் நிறைந்த வாழ்க்கை...

அப்பாஸின் வாழ்க்கை மிகவும் வலிகள் நிறைந்தது. சர்கர நாற்காலியில் கட்டப்பட்ட வாழ்க்கை. ராஜ்ஜியா தனது வாழ்வில் இணையும் வரை அப்பாஸின் வாழ்வும் கட்டப்பட்ட சூழலில் தான் இருந்தது.

தனக்கான தேவைகளை தானாக தெருவில் தேடிக் கொள்ளும் வாழ்க்கையை தான் வாழ்ந்து வந்தார் அப்பாஸ். பிச்சை எடுப்பது எளிதல்ல... அது தரும் வலி, அதனால் ஏற்படும் மன உளைச்சல் சொல்லில் அடங்காதது.

ஒருவரிடம் பிச்சை கேட்டு அவரது ஏளன பார்வை, கடின சொற்களை எதிர்கொண்டு மீண்டும் ஒரு நபரிடம் பிச்சை கேட்பது மரணத்திற்கு நிகரானது.

அன்று தன்னிடம் இருந்தது...

அன்று தன்னிடம் இருந்தது...

ராஜ்ஜியாவை முதல் முறையாக கண்ட போது அப்பாஸிடம் இருந்தது அந்த 50 டக்காஸ் தான். ஆனால், அது ராஜ்ஜியா பேகத்திற்கு உதவும் என முழு மனதுடன் அளித்துவிட்டார் அப்பாஸ். அதை பெற்று கொண்டு ராஜ்ஜியா தனது குடிசைக்கு சென்று முதல் முறையாக காதலை உணர்ந்தார்.

மரத்தடியில்...

மரத்தடியில்...

மீண்டும் மறுமுறை அப்பாஸை ராஜ்ஜியா பேகம் ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பதை கண்டார். தனக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு...

ராஜ்ஜியா : "வாழ்நாள் முழுக்க உன் சர்கர நாற்காலியை நானே தள்ள விரும்புகிறேன் என கூறியுள்ளா..."

அப்பாஸ் : "காதல் இல்லாமல் யாராலும் என் சர்கர நாற்காலியை வாழ்நாள் முழுக்க தள்ள முடியாது...."

இப்படி தான் மலர்ந்தது ராஜ்ஜியா பேகம் மற்றும் அப்பாஸ் மத்தியிலான காதல்.

கஷ்டமும், இஷ்டமும்!

கஷ்டமும், இஷ்டமும்!

கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை எங்கே இருக்கிறது. ராஜ்ஜியா பேகம் மற்றும் அப்பாஸ் கண்டிராத கஷ்டதையா நாம் நமது வாழ்வில் கண்டுவிட்டோம்.

காதல் எப்போது, எப்படி, யார் மீது வரும் என தெரியாது. ஆனால், உண்மையான காதல் சொல்லிவிட்டு வராது. அதை உணர தான் முடியும்.

ராஜ்ஜியா பேகமும், அப்பாஸும் உண்மையான காதலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

Image Courtesy: GMB Akash

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Heartwarming Love Story of Sex Worker and Physically Challenged Beggar!

Heartwarming Love Story of Sex Worker and Physically Challenged Beggar!