காதலித்து ஏமாற்றியதற்காக, நான் அவனுக்கு இப்படி ஒரு தண்டனை கொடுத்திருக்க கூடாது - My Story #73

Written By:
Subscribe to Boldsky

நான் பள்ளி படிப்பில் நல்ல மதிப்பெண்களை பெற்றிருந்தேன்.. அதன் பின்னர் கல்லூரி படிப்பில் சேர்ந்தேன்.. கல்லூரி காலங்கள் இனிமையாக கழிந்தன.. நல்ல நண்பர்கள்.. நண்பர்களை போலவே பழகும் ஆசிரியர்கள்... நல்ல மதிப்பெண்கள் என எனது கல்லூரி காலம் சிறப்பாக தான் சென்று கொண்டிருந்தது.. எனக்கு கல்லூரியில் நிறைய நண்பர்கள் இருந்தார்கள்.. நான் அனைவருடனும் சரிசமமாக பழகும் ஒரு பெண்.. எனக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வது என்றால் மிகவும் பிடிக்கும்.

எனக்கு கொஞ்சம் இளகிய மனம்.. கல்லூரி படிப்பில் மட்டுமல்ல.. விளையாட்டு, பாடல், நடனம் என அனைத்திலும் நான் கெட்டிக்காரியாக இருந்தேன்.. எனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லி தருவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.

he cheated me so that i punished him

என்னுடன் சேர்த்து என் வகுப்பில் உள்ளவர்களுக்கும் நடனம், நாடகம் போன்றவற்றை சொல்லிக் கொடுத்து, அவர்களையும் அதில் சிறந்து விளங்க செய்தேன்.. எங்களது கல்லூரி ஆண்டு விழாவில் இதனால் எங்களது வகுப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது.. இதனால் நிறைய பெயரும் புகழும் வந்து குவிந்தன.. எனக்கு இந்த விஷயம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எனது ஆசை

எனது ஆசை

எங்களது வீட்டிலும் நான் செல்லப்பிள்ளை.. என் அப்பா, அம்மாவிற்கு நான் தான் ஒரே மகள்..! நாங்கள் பெரிய வசதியானவர்கள் எல்லாம் கிடையாது. நான் எடுத்த மதிப்பெண்களுக்கு பொறியியல் கல்லூரியிலேயே சேர வாய்ப்பு கிடைத்தது என்றாலும் கூட, அவ்வளவு வசதி இல்லாத காரணத்தால், அதற்கு சமமான படிப்பை கலை கல்லூரியில் படித்தேன். ஐ.டி துறையில் வேலை பெற வேண்டும் என்பது தான் எனது ஆசை...! அதற்கு தகுந்தது போல என் கல்லூரி படிப்பை நான் நன்றாக தான் படித்து கொண்டிருந்தேன்..!

சாதரணமான பழக்கம்

சாதரணமான பழக்கம்

இப்படி மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த என் வாழ்க்கையில் இடி விழுந்தது போன்று நிகழ்ந்த ஒரு நிகழ்வு தான் அவனது அறிமுகம்...! அவனை என் தோழியின் மூலமாக தான் தெரியும். நான் மற்ற ஆண், பெண்களுடன் பழகுவது போல தான் அவனுடனும் பழகினேன்... அவன் என்னை காதலிக்க ஆரம்பித்து விட்டான்...!

கல்வி கற்க உதவினேன்

கல்வி கற்க உதவினேன்

எனக்கு அவன் என்னை காதலிப்பது தெரியாது...! அவன் வேறொரு துறையை சேர்ந்த மாணவன்.. அவனுக்கு சரியாக ஆங்கிலத்தை படிக்க கூட தெரியாமல் இருந்தது.. மேலும் பரிட்ச்சையில் கேள்விகளுக்கு எப்படி விடையளித்தால் நல்ல மதிப்பெண்களை பெறலாம் என்பது கூட தெரியாமல் இருந்தது.. அவனுக்கு படிப்பில் உதவி செய்ய ஆரம்பித்தேன் நான்.. ஆங்கிலம் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன்...!

முன்னேற்றம்

முன்னேற்றம்

அவனது படிப்பில் சற்று முன்னேற்றம் தெரிய ஆரம்பித்தது...! எனக்கு அவனை நன்றாக படிக்க வைத்து விட வேண்டும் என்ற ஆசை இருந்தது... காரணம் என்னவென்றால், ஒன்றுமே தெரியாத மாணவனை நன்றாக படிக்க வைப்பது தானே ஒரு சிறந்த ஆசிரியருக்கு அழகு...? அதை மனதில் வைத்துக் கொண்டு தான் அவனுக்கு பாடம் கற்பிக்க ஆரம்பித்தேன்.. ஆனால் அவன் அப்போது என்னை காதலித்துக் கொண்டிருந்தான்..

திட்டினேன்

திட்டினேன்

அவன் என்னை காதலிக்கும் விஷயம் ஒரு நாள் எனக்கு என் தோழியின் மூலமாக தான் தெரிந்தது...! அன்று அவனிடம் நான் நேரடியாக சென்று கேட்டேன்.. நீ நல்லா படிக்கனும்னு உனக்கு பாடம் சொல்லிக் கொடுத்தது தான் என் தவறா? அதற்காக என்னை காதலிக்கிறாயா? உன்னை நம்பி பழகும் ஒரு பெண்ணிடம் நீ இப்படி ஒரு எண்ணத்துடன் இருக்கலாமா என்று கேட்டேன்.. அதற்கு அவன் சரி, இனி உன் கூட பேசல விடு என்று கூறி விட்டான்.. நானும் விட்டுவிட்டேன்...

மிரட்டல்

மிரட்டல்

ஆனால் அவன் என்னுடன் பேசாமல் இருந்தானே தவிர, அவனது நண்பர்கள் வரிசையாக, அவன் நல்லவன், அவனை காதலிக்க உனக்கு என்ன பிரச்சனை என்பது போல என்னை தொல்லை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இதற்கு எல்லாம் நான் அசறவில்லை.. சில நாட்கள் கடந்தன.. அவன் கைகளை வெட்டிக்கொள்வது போன்ற என்னை மிரட்டும் விதமான விஷயங்களை எல்லாம் செய்தான்..

விருப்பம் இல்லாத காதல்

விருப்பம் இல்லாத காதல்

நான் வளர்ந்த விதம் வேறு.. அவன் வளர்ந்த விதம் வேறு... அவனுக்கும் எனக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப்போகவில்லை... இருப்பினும் அவனது நல்லதுக்காக ஒரு முறை காதலிக்கிறேன் என்று சொல்லிவிடு என்று அவனது நண்பர்கள் என்னை வற்புறுத்தினார்கள்... நான் முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்தேன்.. ஆனால் தொடர் வற்புறுத்தலின் காரணமாக சரி காதலிக்கிறேன் என்று அவனிடம் கூறி விட்டேன்...

கஷ்டம்

கஷ்டம்

நான் காதலிக்கிறேன் என்று கூறியதும் அவன் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டான். தன் வருங்கால ஆசைகள் பற்றியும் என்னிடம் கூற ஆரம்பித்து விட்டான்.. எனக்கு நாம் ஏமாற்றுவது தெரியாமல் இப்படி பேசுகிறானே என்றாகிவிட்டது... எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.. நான் காதலிக்கிறேன் என்று பொய்யாக தான் சொன்னேன் என்று அவனிடம் கூறினால், என்ன செய்வானோ என்று பயமாக இருந்தது... அவனது நண்பர்களும் அதான் காதலிக்கிறேன்னு சொல்லிட்டயே... காதலிக்க வேண்டியது தானே என்று அசால்ட்டாக சொல்லிவிட்டார்கள்...

கவன குறைவு

கவன குறைவு

நான் நிலை தடுமாறி விட்டேன்.. எனக்கு படிப்பில் இருந்த கவனமும் குறைந்தது... எனக்கு அவனை ஏமாற்றவும் மனம் வரவில்லை... அவனை காதலிக்க தொடங்கினேன்.. அவனுக்கு ஏற்றாற் போல என்னை மாற்றிக் கொள்வது எனக்கு மிகுந்த சிரமமாக இருந்தது.. இருந்தாலும் மாற்றிக் கொண்டேன்.. சொல்லப்போனால் என் நிலையை விட்டு நான் கீழே இறங்கி வந்துவிட்டேன் என்று தான் கூற வேண்டும்.

கனவுகளை மறந்தேன்

கனவுகளை மறந்தேன்

இருந்தாலும் அவனுக்காக நான் என் ஐ.டி கனவுகளையும் விட்டுக் கொடுக்க தயாரானேன்... அவனை முழுமையாக காதலித்தேன்.. அப்போது தான் கல்லூரி விடுமுறை வந்தது. அவன் அவனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டான். அப்போது ஒரு நாள் அவனுடைய நெருங்கிய நண்பனும், அவனுடன் விடுதியில் இருப்பவனும் ஆன சிவா- வை எதற்ச்சையாக சந்தித்தேன்.. அவன் என்னிடம் உன் நம்பர் வேண்டும்.. உன்னிடம் நான் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் என்று கூறினான்.. நானும் என் நம்பரை கொடுத்தேன்...

நண்பன் கூறிய உண்மைகள்

நண்பன் கூறிய உண்மைகள்

அவன் அன்று இரவு என்னிடம் சொல்ல வந்த விஷயத்தை பற்றி சொல்ல, மிகவும் தயக்கம் காட்டினான்.. என்னவென்று விடாப்பிடியாக கேட்டேன்... அவன் நான் காதலித்த விமலின் உண்மை முகம் இது தான் என்று அவனுடைய முகத்திரையை கிழித்து காட்டினான்.. விமலின் உண்மையான குணம் மிகவும் கேவளமானது... அவன் இன்னொரு பெண்ணுடன் தவறான தொடர்பில் இருந்தது பற்றியும் கூறினான்.. நான் அனைத்தையும் அவனிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் நம்பவில்லை.. விமலிடம் கேட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்...

குடும்ப சூழல்

குடும்ப சூழல்

விமல் விடுமுறை எல்லாம் முடிந்து வந்ததும், அவனிடம் இது பற்றி கேட்டேன்.. விமல் இல்லை என்று மறுத்துவிட்டான்.. நானும் அவனை முழுமையாக நம்பினேன்.. அதன் பின் ஒருநாள் என் தந்தைக்கு உடல்நிலை சரி இல்லை என்று தெரிந்து அவரை காண எங்களது வீட்டிற்கு வந்தான்.. அப்போது எங்களது குடும்ப சூழ்நிலை அவனுக்கு புரிந்தது... ஏழ்மையான குடும்பம் என்று நினைத்து கொண்டான்...

என் மீது குற்றம்

என் மீது குற்றம்

நாட்கள் கடந்தன... சில நாட்களாக அவன் என்னுடன் சரியாக பேசுவதாக தெரியவில்லை... ஏன் என்று கேட்டேன்... நான் என்னுடன் படிக்கும் ஒரு மாணவனை காதலிப்பதாக அவன் நண்பன் கூறினானாம். அதனால் தான் என்னுடன் பேசுவதில்லையாம்.. நீ அதை நம்பிவிட்டாயா என்று கேட்டேன் ஆமாம் என்று கூறினான்.. நானும் முட்டாள் தனமாக என்னை நிரூபிக்க அவன் குற்றம் சாட்டிய பையனையே அழைத்து வந்து என் மேல் எந்த தவறும் இல்லை என்று கூற வைத்தேன்... அப்போது விமலின் கோபம் அதிகமானது...

செருப்படி

செருப்படி

எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.. அவன் என்னை செருப்பில் கூட அடித்தான்.. அனைத்தையும் வாங்கி கொண்டு அவன் என்னுடன் பேச வேண்டும் என்பதற்காக அழைந்தேன்... அப்போது தான் தெரிந்தது அவன் வேறு ஒரு பெண்ணை காதலித்து கொண்டு இருக்கிறான் என்பது... அவன் தனது நண்பனை வைத்து என் மீது வேண்டுமென்றே வீண் பழி சுமத்தியதும் எனக்கு தெரியவந்தது... எனக்கு அவன் இப்படி எல்லாம் என்னை அசிங்கப்படுத்திவிட்டானே என்று கேவளமாக இருந்தது...

சந்தேகம் எதற்கு?

சந்தேகம் எதற்கு?

அவனிடம் கொஞ்ச நாள் பேசாமல் தான் இருந்தேன்.. இருந்தாலும், அவனை என்னால் மறக்கமுடியவில்லை... அவன் காதலித்துக் கொண்டிருக்கும் பெண், ஏற்கனவே நிறைய பேரை ஏமாற்றியது தெரியவந்தது. இதை பற்றி அவனிடம் கூறினேன்.. என் காதலி அப்படி எல்லாம் செய்யமாட்டாள் என்று கூறிவிட்டான்.. அப்படி என்றால் நான் மட்டும் அப்படி எல்லாம் செய்வேனா? உன்னை பற்றி உன் நண்பன் தவறாக கூறிய போது, நான் நம்பவில்லை.. அப்படிபட்ட என்னை நீ இன்னொருவனுடன் சேர்த்து வைத்து பேசினாய்.. இது தான் நீ எனக்கு கொடுத்த பரிசா என்று கேட்டேன்.. அதற்கு அவன், என்னை காதலிக்க உனக்கு எந்த விதமான தகுதியும் இல்லை என்று கூறிவிட்டான்...

மறந்து விட்டேன்

மறந்து விட்டேன்

அன்று முதல் அவன் என்னுடன் வந்து பேசுவான்.. என்னை மீண்டும் காதலிப்பான் என்ற அனைத்து நம்பிக்கைகளையும் குழி தொண்டி புதைத்து விட்டு என் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.. என் வாழ்க்கை மெல்ல மெல்ல பழைய நிலைக்கு வந்தது... நான் இதுவரை படிப்பில் கவனம் இல்லாமல் இருந்ததற்கு எல்லாம் சேர்த்து நன்றாக படிக்க ஆரம்பித்தேன்..! கல்லூரியிலேயே முதலிடம் பிடித்தேன்...!

 வேலை!

வேலை!

எனக்கு நான் ஆசைப்பட்டபடி ஒரு பெரிய எம்.என்.சி கம்பெனியில் வேலை கிடைத்தது... மூன்று வருடங்களில் வெளிநாடு செல்ல வாய்ப்பும் கிடைத்தது.. ஒரு வருடம் வெளிநாட்டில் பணி புரிந்தேன்.. என் தோற்றம் மாறியது...! நான் வெளிநாட்டில் இருந்து வந்ததும், சில நாட்களில் எனக்கு விமலிடம் இருந்து போன் வந்தது... அன்று என்னுடைய பிறந்தநாள்... அவன் எனக்கு ஏதாவது பரிசு வாங்கி தர வேண்டும் என்று கூறினான்... அவனது காதலி பிரிந்து சென்று விட்டதாகவும் கூறினான்.. என்னை மீண்டும் காதலிக்க வேண்டும் என்று நினைத்தான்...

விலை உயர்ந்த ஆடை

விலை உயர்ந்த ஆடை

நான் அவனிடம் பலமுறை உன்னை சந்திக்க விருப்பம் இல்லை என்று கூறினேன்... ஆனால் நான் வந்தே ஆக வேண்டும் என்று கூறினான்.. அன்று அவனை நான் வர சொன்னேன்.. எனக்கு புது ஆடை வாங்கி தருவதாக கூறினான்... சரி என்றேன்... நான் வேண்டுமென்றே அவனிடம் விலை உயர்ந்த ஆடை ஒன்றை கேட்டேன்.. அவனிடம் அவ்வளவு பணம் இல்லை.. 1000 ரூபாய்க்குள் எடுத்துக் கொள் என்று கூறினான்.. எனக்கு ஆடை வேண்டாம் என்று கூறிவிட்டேன்...

அவமானம்

அவமானம்

சரி, நான் என் நண்பர்களுக்கு எல்லாம் டிரிட் தருகிறேன்.. என்னுடன் வா என்று அழைத்தேன்... அவனும் வந்தான்... நான் ஒரு ஸ்டார் ஹோட்டலில் தான் என் நண்பர்களுக்கு விருந்து கொடுத்தேன்.. வேண்டுமென்றே என் ஆண் நண்பன் ஒருவனுடன் சிரித்து பேசி நெருங்கி பழகுவது போல அவன் முன்னால் நடித்தேன்... அவன் கோபத்தில் இருப்பது தெரிந்தது... இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தான்.. அவனை அவமானப்படுத்துவது போல எனக்கு தோன்றியது... இருந்தாலும் எனக்கு எத்தனை காயம் கொடுத்தாய் அனுபவி என்றும் என் மனது சொல்லியது....!

நான் செய்தது சரியா?

நான் செய்தது சரியா?

என் பிறந்தநாள் அன்றே என்னை காதலிப்பதாக கூறினான்... என்னை காதலிக்கும் அளவிற்கு உனக்கு தகுதி இல்லை என்று கூறிவிட்டேன்.. என் வாழ்க்கையில் இருந்து உன்னை எப்பொழுதோ தூங்கி எறிந்துவிட்டேன் என்று கூறிவிட்டேன்.. நான் அவனை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருந்த ஒரே காரணத்திற்காக என்னை அப்போது உதாசினப்படுத்தி விட்டான் அவன்.. அந்த ஒரே காரணத்திற்காக தான் நான் அவனை இப்படி எல்லாம் அவமானப்படுத்தினேன்... நான் செய்தது தவறா...?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

he cheated me so that i punished him

he cheated me so that i punished him